PDA

View Full Version : ஊருக்கு போயிருந்தேன்..



krishna1988
20-04-2011, 08:10 PM
அப்பா எத்தனை மாதகால ஏக்கம் "பிரசவத்தின் பாதிநாள் அல்லவா? ஆறு மாத கால தவம் "முதலிரவுக்கு நாள் தள்ளிப்போகும் புதுமணத்தம்பதிகள் எப்போ? "என்று கேட்கும் வேகத்துடன் காத்திருந்தேன் இந்த இரண்டு நாட்களுக்காக( ஹீ ஹீ...)


ஆறுமாதங்களின் பின் உண்மையான காற்றை சுவாசித்த ஆனந்தம் ,முதல்மார்க் வாங்கிய முன்பள்ளிமானவன் பேரின்பம் பிறந்தமண்ணை இவ்வளவுகாலம் பிரிந்திருந்தது இதுதான் முதல்தடவை ,தலைநகரில் நான் என் பெற்றோரைவிட அதிகமாக இழந்ததாக உணர்ந்தது இந்த மண்ணைத்தான் இருக்காத பின்னே? " இந்த மண்ணுக்குத்தான் என் உயிர் துடிக்கும் ஓசை தெரியும் ,என் கண்ணீரின் உப்பு தெரியும் ,யாவற்றுக்குமேல் என் உண்மைகளும் உண்மையான என்னையும் புரியும் ......"


நுழைவாயிலில் உரசிய மெல்லிய ஜிலு ஜிலு காற்றிலே ..இருபதுவருடகால சரித்திரமும் மணிரத்னம் படத்தொகுப்பு போல மனசில்


எங்கள் ஊருக்கு செல்வதும் அரைகுறையாய் படித்த ஒருவன் வேலைதேடுவதும் ஒன்றுதான் என்னவொன்று அங்கே கால்பிடிப்பது இங்கே பஸ் பிடிப்பது இரண்டுநாள் விடுமுறையில் அரைநாள் பஸ் பிரயாணம் இதில் கடைசி பேருந்தாலும் விட்டால் இரவுமுழுவதும் பிச்சைக்காரர்கள் வாழ்கை வரலாற்றை உணரவேண்டியதுதான்


நடுத்தர குடும்பப்பெண் ஒருத்தி அழுவழகத்தில் இருந்து கடைசி பஸ் பிடிப்பதற்கான வேகத்துடனும் பரபரப்புடனும் ஓடிக்கொண்டிருந்தேன் .....மகாராசன் பஸ் வண்டி 15 நிமிடம் தாமதம் ..எனக்கு எப்போதும் பிடித்த கடைசி இருக்கையின் கடைசி இருக்கையில் உலகத்தை வென்ற மகிழ்ச்சியுடன் அமர்ந்தேன் எதேச்சையாக யன்னல் நீராவியில் பெயர் எழுதிப்பார்க்கும் வழக்கமான என் குரங்குதனத்தில் திரும்பிய ஒருநிமிடத்தில் அந்த சம்பவம் நடந்து முடிந்தது


என்ன ஒரு அழகு ...ச்சே chance எ இல்ல இலவம்பஞ்சு என்றால் இதுதானோ? அந்த தோள்கள் ,காஷ்மீர் குளிருக்கு நாம் போடும் கம்பளிகூட இவ்வளவு பரிசுத்தமாக இருக்காது ...........அந்த கண்கள் அந்த கண்கள் அதேதான் ஆஹா யோகநிலையில் இப்படித்தான் பணிந்திருக்குமோ? அந்த அழகில் நான் உறைந்தே போய்விட்டேன்,அந்த கண்களின் அமைதியை கண்டு என்னையே மறந்துவிட்டேன் ....



என்னவொரு தைரியம் ...இந்த இரைச்சல்களை கொஞ்சமும் காதில் வாங்காமல் ,இந்த தெருவோர அங்காடிவிட்பனை பலகையிலா உறங்குவது ,இந்த கொள்ளை அழகுடன் ,பாதுகாப்பை பற்றிய துளி கவலையும் இன்றி இந்த வயதில் வயதுக்கு மீறிய துணிச்சல்தான் ....
பார்வையை திருப்பமுடியாமல் கஷ்டப்பட்டு பஸ் இல் இருந்த மற்றவர்களையும் பார்த்தேன் நான் நினைத்தது சரி என்னைமட்டுமல்ல அங்கிருந்த அத்தனைபெரினுடைய பார்வையையும் வசீகரித்திருந்தது அந்த "நாய்க்குட்டி"


"தன்னை மறந்த முழுமை உறக்கம் அது .......தொப்பி களவு போவது தெரியாத வியாபாரியின் உறக்கம் அது ..........நான் உற்பட எம்மில் பலரும் ஆறுவயதிலேயே தொலைத்துவிட்ட நிஜ உறக்கம் அது ......""ஒரு குழந்தையை கொஞ்ச ஆசைப்படும் தகப்பன் இடத்தில் நின்று அந்த நாய்க்குட்டியை ரசித்துக்கொண்டிருந்த "என் கண்ணுக்கும் அந்த குட்டிக்கும் இடையிலான கோட்டுக்குள் நுழைந்தது ஒரு தாடிக்கார தடிமாடு (மனுஷேதாங்க )

ஒரு அறுபது வயதிருக்கும் ,நல்ல திடகாத்திரமான வயோதிப வாலிபன் ஒருவன்(ர்ர்ர்) அந்த ஐந்தறிவு மழலையை தூக்கி முன்னும் பின்னுமாக திருப்பி எதோ ஆராய முற்பட எங்கிருந்தோ வந்த அதன் தாய் அவன் மீது பாய தடம் தெரியாமல் ஓடிய அவனை கண்டு அந்த பேருந்தே சிரித்தது

"ஆணாதிக்கமும் ,ஆணுக்கே முதலிடம் கொடுக்கும் கேவலங்களும் உங்க ஆறறிவுக்குள்ள இருக்கட்டும் எங்களுக்குள்ளும் அந்த கேவலங்களை புகுத்தினால் இப்படித்தான் நடக்கும் என்பதுபோல் "
விடாமல் குரைத்துக்கொண்டிருந்த அந்த நாயை பார்த்து சின்ன புன்னகையோடு இருந்த என்னோடு பேருந்து ஊர் பாதையில் நகர்ந்தது "ச்சே சூப்பர் குட்டிடா ஆண்குட்டி யா இருந்தா இப்பவே கொண்டு போய்டுவேன்" என்ற என் முன்னிருக்கைகாரனுக்கு ஆறறிவாம்?

crisho
20-04-2011, 09:27 PM
சுவாரசியம் கொஞ்சமும் குறையாத வர்ணணை! ரசித்தேன்..... ஆண் ஆதிக்கம் நிறைந்த சமூகத்துக்கு பாடம் புகட்டும் சம்பவம் அருமை!

ஆறறிவு காரருக்கு ஆப்பு வைச்சிட்டிங்க போங்க!

தொடர்ச்சியாக தாருங்கள் உங்கள் படைப்புகளை.....

krishna1988
20-04-2011, 09:58 PM
பெண்மையை போற்றுவோம்.. தாய்மையை தொழுவோம் நன்றி க்ரிஷோ

selvaaa
21-04-2011, 02:25 AM
கரு படித்திருந்தாலும்.....

அதனை நீங்கள் சொல்லிய நடை மிகவும் அருமை... உங்களுக்குத்தான் எனது பாராட்டுக்கள்!

:aktion033:

Nivas.T
21-04-2011, 05:48 AM
நல்ல கரு
கதை கூறியவிதம் அருமை
பாராட்டுகள் கிருஷ்ணா

கீதம்
21-04-2011, 06:07 AM
மாடாய் இருந்தால் கிடேரி வேணும். தெருநாய்களெனில் ஆண் வேண்டும். உயர் ரகமெனில் பெண் வேண்டும். பலனடைவதிலேயே பாழும் மனம் குறியாய் இருக்கிறது.

வரதட்சணை என்னும் வழக்கம் ஆதிகாலம் போல் தலைகீழாய் மாறினால் ஆசைகளும் புரட்டிப்போடப்படும். நடப்பு நிகழ்வை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

அன்புரசிகன்
21-04-2011, 06:35 AM
ஊரோட ஒத்தோடுறான். அவனை குறைசொல்லி பயனேது?

அவன் அந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துச்சென்றால் வீட்டில அம்மா அக்கா மனைவி (அட அப்பா அண்ணன் தம்பி இதுகளப்பற்றிக கவலைப்படமாட்டாங்கள்) என்ன சொல்வார்கள் என்று நினைக்கிறீங்கள். (அது தான். அதே தான்...) இத சொல்லி வேறு தெரியணுமா........... :D :D :D

உங்கள் ஆதங்கம் நியாயமானது. ஆனால்....................
வாழ்த்துக்கள்.

< 6 அறிவு மனுசன்.

நாஞ்சில் த.க.ஜெய்
21-04-2011, 06:28 PM
அழகான வர்ணை உண்மை வரிகளில் .மனித ஆசையின் தொகுப்பு ....

அக்னி
21-04-2011, 06:58 PM
தலைப்பிலும் முதல் வரியிலும்,
நான் மனதுக்குள் கட்டிப்போட்ட தாயக உணர்வு திமிறிப் பார்த்தது...

ஊருக்குப் போனதைச் சொல்ல வந்து, ஊர்ப்பிரிவை உணர்வாய்ச் சொல்லியிருக்கின்றீர்கள்...

பேருந்தின் தாமதத்தில் திசைமாறிய (12பி யோ) பார்வை,
நாய்க்குட்டி மீது ரசிப்பாய்ப் பட்டு (நாய்க்குட்டி என்று சொல்லும்வரைக்கும் ஊகிக்க வைக்காத எழுத்து),
ரசிக்க வைத்தது...

சட்டென்று ஒரு சாட்டை இறுதியிற் சுழர, கதை நன்று...

ஆனால் கொஞ்சம் தொடர்பு தொட்டும் தொடாமலும்...
கவனித்திருந்தால் சிறந்த படைப்பொன்று பதிவுசெய்யப்பட்டிருக்கும்...

ஆங்காங்கே இருக்கும் எழுத்துப்பிழைகள் அல்லது தட்டச்சுப் பிழைகள் நிச்சயம் களையப்படவேண்டும்.
அழுவழகம் என்ற சொல் ஏதோ ஒரு வர்ணனையோ என எண்ணத் தோன்றியது.
பதிவு செய்தபின் நீங்களே ஒருதரம் வாசித்துப் பார்த்தால் பிழைகளைக் களைந்துவிடலாம்.

குன்றிமணிக் குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால்,
கதையும், கொண்ட கருவும், விவரிப்புக்களும், திருப்பங்களும், சாட்டை சுழற்றும் சேதியும்...
நல்லதொரு எழுத்தாளராக உங்களைச் சொல்கின்றது.

பாராட்டுக்கள்...

இளசு
21-04-2011, 09:03 PM
Saltatory Conduction என நரம்பியல் சொல் உண்டு..

கணுவுக்குக் கணு எனத் தாவிப்பாயும் மின்செய்தி..


அப்படி ஒரு வேகம் உங்கள் கதை சொல்லும் பாணியில்..

இறுதியில் ( 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பறைசாற்றிய) ஆண் பெரும்பான்மை மனோபாவம் சொல்லிய நச் - சிறப்பு.

பாராட்டுகள் கிருஷ்ணா..


பண்பட்டவர் பட்டம் விரைவில் வர வாழ்த்துகிறேன்!

ஓவியன்
23-04-2011, 08:20 AM
கருவினைக் கையாண்ட விதம் அருமை நண்பரே, மட மடவென மதகு நீராக திரண்டு வரும் வெள்ளம் போன்ற வார்த்தையாடல்கள் அருமை...

அக்னி கூறியது, படைப்புக்களை எழுதி முடித்தது ஒரு தடவை எழுத்துப் பிழைகளை களைந்தால் படைப்பின் வேகத்திலிருக்கும் சிறிய நெருடல்கள் அகலும்...

அழகானதோர் சம்பவப் பகிர்வுக்கு என் வாழ்த்துகளும்....

-----------------------------------------------------------------------------------------------

உலகத்தில் மனிதருடன் நட்புக் கொள்ளவென கடவுள் படைத்த அருமையான படைப்பு நாயினம். பலதடவைகள் நான் நினைப்பதுண்டு மனிதரை விட எத்தனையோ மடங்கு மேலான பண்புள்ள இவற்றினை நாம் ஏன் கேவலமாக நினைக்கின்றோம் என....

அன்பாக, பாசமாக நாய்களை வளர்க்க விரும்பும் ஒவ்வொருவரும் அவற்றில் ஆண் பெண் பேதம் பார்க்க மாட்டார்களென்பது என் எண்ணம்...

krishna1988
23-04-2011, 12:11 PM
உலகத்தில் மனிதருடன் நட்புக் கொள்ளவென கடவுள் படைத்த அருமையான படைப்பு நாயினம். பலதடவைகள் நான் நினைப்பதுண்டு மனிதரை விட எத்தனையோ மடங்கு மேலான பண்புள்ள இவற்றினை நாம் ஏன் கேவலமாக நினைக்கின்றோம் என....சாட்டையடி !

அமரன்
23-04-2011, 06:33 PM
விலை உயர்ந்த நாயினம் என்றால் நிலமை தலை கீழாகி இருக்கும்..

நான்கு பெண்கள் உள்ள எங்கள் வீட்டில் கூட பெண் நாய்க்கு மதிப்பில்லை. ஏன் என்றால் அது போடும் குட்டிகளைப் பேணிக் காக்கும் வசதி எங்களிடம் இல்லை.

நல்ல நடையுடன் தொடங்கிய மன்றப் பயணம் இனிதே தொடரட்டும் கிருஷ்ணா.