PDA

View Full Version : நிறப் பிரிகை..!!

பூமகள்
19-04-2011, 04:04 PM
http://img40.picoodle.com/i54j/poomagal/1cx0_a97_u4a4u.jpg

வானவில்லின் நிறம்
பற்றி ஆயிரமாயிரம்
கேள்விகள்..

ஊதா துவங்கி
சிவப்பு வரை விடைகள்
முற்று பெற்றாலும்
முற்று பெறாத
கேள்வியின் நிறங்கள்..

வானவில்லில்
ஊஞ்சல் ஆடி,
ஒரு முனையேறி
மறுமுனை விழுந்து
கதை பல புனைந்தும்
விடுவதாய் இல்லை
கேள்விகள்..

வண்ணங்கள் குழைத்து
அறிவியல் தெளித்து
புதிர் உடைக்கையில்
உதிர்ந்து போனது
சின்ன இதயத்தில்
வளர்ந்த வானவில்…!!

அமரன்
19-04-2011, 04:10 PM
ஒளி முறிவும், ஊடு புக விடும் தன்மையும் இருந்தால் வானவில்லுக்கு ஏது தட்டுப்பாடு என்ற விடை கிடைத்த பிறகு கேள்வி எதுக்கு?

சிறுவயது நம்பிக்கைகள் உடைந்து விடுவதும்..
நீறு பூத்த ஒரு நொடியில் உடைந்தது ஞாபகத்துக்கு வந்து அலைக்கழிப்பதும்..
அடிக்கடி நிகழட்டும்.

Nivas.T
19-04-2011, 04:11 PM
உதிக்கும் ஆசைகள் அனைத்தையும்
உடுத்திக்கொள்ள முடியாது
உதறித்தள்ளவும் இயலாது
காலத்தினால் பல நிறமிழக்கும்
சில நிறம் வலுக்கும்

அழகான் கவிதை
பாராட்டுகள்

கீதம்
20-04-2011, 01:21 AM
வானவில்லின் நிறம்
பற்றி ஆயிரமாயிரம்
கேள்விகள்..

வண்ணங்கள் குழைத்து
அறிவியல் தெளித்து
புதிர் உடைக்கையில்
உதிர்ந்து போனது
சின்ன இதயத்தில்
வளர்ந்த வானவில்…!!

எதிர்க்கேள்விகள் எழுப்பப்படும்போதே
புதிரவிழ்க்கும் விடைகளுக்காய்
இதயம் தேற்றுதல் அவசியமென்று
புதியசேதி சொல்லும் பூமகள் கவிதை.

பாராட்டுகள் பூமகள்.

மனப்பிரிகை பற்றிய என் பார்வையொன்றை ஒத்திருப்பதால் மகிழ்வோடு பகிர்கிறேன் இங்கு:

வானவில்லின் வண்ணங்களில்
எண்ணம் மயங்கியபடி
என்னையிழந்திருக்கும் வேளை...
நிறப்பிரிகை பற்றியொரு
நீண்டவகுப்பு எடுக்கிறாய்!
நீ விளக்கிமுடித்தபோது
வானம்விட்டும் என்னைவிட்டும்
விலகிப்போயிருந்தது வானவில்!

இளசு
20-04-2011, 07:35 PM
சாண்ட்டா க்ளாஸ்
அஞ்சு கண்ணன்
குதிரையில் வரும் இராசகுமாரன்...

ஏக்கமோ பயமோ விருப்பமோ...
பிம்பத்தின் மூலம் நிர்மூலமாகும்போது
மனவெளியின் ஒரு பாகம் வெற்றிடமாகிறது..

நிறைய வெற்றிடம் சேர்த்ததும்..
''பெரியவர்'' ஆகிறோம்!

பாமகளுக்கு வாழ்த்து!

சசிதரன்
21-04-2011, 10:58 AM
நாம் வளர்கையில் நம்மோடு சேர்ந்து எல்லாம் வளர்கிறது...

பால்யம் மட்டும் எதிர்மறையாய்...

வாழ்த்துக்கள் பூமகள்... :)

ஷீ-நிசி
21-04-2011, 01:07 PM
படம் ரொம்ப அழகா இருக்கு..

கவிதை... நிஜமாவே என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியவேயில்லை.. எனக்கு உட்கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும்...

ஷீ-நிசி
21-04-2011, 04:31 PM
ம்ம்ம்ம்ம்....

ஒரு குட்டி அம்மாகிட்ட கேட்டுட்டே இருக்குது... அம்மா வானவில்னா என்னம்மா?? அம்மா வானவில்னா என்னம்மா?

வானவில்னா அது வானத்துல இருக்கற ஊஞ்சல்மா..... அதுல ஊஞ்சல்லாம் ஆடலாம்.. அம்மா நாம அதுல ஆட முடியாதாம்மா.... ம்ம்ம்.. அது வானத்துல உன்னைமாதிரி குட்டி தேவதைகள்லாம் வந்து ஆடுவாங்க... தேவதைன்னா?? ஆஹா இவ விடமாட்டா போலிருக்கே.... அம்மா சொல்லும்மா.....

சரி வானவில்னா..

மழை பெய்யும்போது அதோட துளிகள் உள்ள சூரிய ஒளியோட வெளிச்ச கதிர் பாய்ந்து உள்ளே சின்ன சின்ன மாற்றம் ஆகி ஒளி ஏழு கலர்ல பிரியுது... தண்ணியிலயும் சூரிய ஒளி பட்டு பிரதிபலிக்கும் இல்ல.... அப்பவும் இந்த மாதிரி வானவில் வரும்

மொத்தம் ஏழு கல
சிவப்பு: . ஆரஞ்சு: . மஞ்சள்: . பச்சை: . நீலம்: . கருநீலம்: . ஊதா:

காலையில, மாலையில் வானவில் வரும்... எப்பவும் அது சூரியனுக்கு எதிர் திசையில தான் வரும்... வானத்தில் இருந்து பார்த்தா அது வட்டமா தெரியும்... புரிஞ்சுதா..

அம்மா.... எனக்கு வானவில் வானாம்மா... பிடிக்கலம்மா... தூக்கம் தூக்கமா வருது...

பூமகள்... சில கவிதைகள் புரிஞ்சிகிட்டு மறுபடியும் படிக்கறதுல நிஜமாவே சுகம் தான்.... :icon_b:

உட்கருத்தை கோட்டிட்டு காட்டியமைக்கு நன்றி!

ஏன் இது போல அழகு கவிதைகளை இன்னும் எளிமையா தரக்கூடாது.... எங்களை மாதிரி கத்துக்குட்டிங்களுக்கு சுலபமா புரியும் இல்ல... :)

கலாசுரன்
26-04-2011, 03:38 AM
அறிவியல் தெளித்து
புதிர் உடைக்கையில்
உதிர்ந்து போனது
சின்ன இதயத்தில்
வளர்ந்த வானவில்…!!

ரொம்ப நல்லா இருக்கு பூமகள் ....!!
வாழ்த்துக்கள் :)

ஜான்
29-04-2011, 01:38 AM
அறிவியல் தெளித்து
புதிர் உடைக்கையில்
உதிர்ந்து போனது
சின்ன இதயத்தில்
வளர்ந்த வானவில்…!!

ரொம்ப நல்லா இருக்கு பூமகள் ....!!
வாழ்த்துக்கள் :)

வழிமொழிகிறேன்

அமரன்
30-04-2011, 08:27 AM
ம்ம்ம்ம்ம்....

ஒரு குட்டி அம்மாகிட்ட கேட்டுட்டே இருக்குது... அம்மா வானவில்னா என்னம்மா?? அம்மா வானவில்னா என்னம்மா?

வானவில்னா அது வானத்துல இருக்கற ஊஞ்சல்மா..... அதுல ஊஞ்சல்லாம் ஆடலாம்.. அம்மா நாம அதுல ஆட முடியாதாம்மா.... ம்ம்ம்.. அது வானத்துல உன்னைமாதிரி குட்டி தேவதைகள்லாம் வந்து ஆடுவாங்க... தேவதைன்னா?? ஆஹா இவ விடமாட்டா போலிருக்கே.... அம்மா சொல்லும்மா.....

சரி வானவில்னா..

மழை பெய்யும்போது அதோட துளிகள் உள்ள சூரிய ஒளியோட வெளிச்ச கதிர் பாய்ந்து உள்ளே சின்ன சின்ன மாற்றம் ஆகி ஒளி ஏழு கலர்ல பிரியுது... தண்ணியிலயும் சூரிய ஒளி பட்டு பிரதிபலிக்கும் இல்ல.... அப்பவும் இந்த மாதிரி வானவில் வரும்

மொத்தம் ஏழு கல
சிவப்பு: . ஆரஞ்சு: . மஞ்சள்: . பச்சை: . நீலம்: . கருநீலம்: . ஊதா:

காலையில, மாலையில் வானவில் வரும்... எப்பவும் அது சூரியனுக்கு எதிர் திசையில தான் வரும்... வானத்தில் இருந்து பார்த்தா அது வட்டமா தெரியும்... புரிஞ்சுதா..

அம்மா.... எனக்கு வானவில் வானாம்மா... பிடிக்கலம்மா... தூக்கம் தூக்கமா வருது...

பூமகள்... சில கவிதைகள் புரிஞ்சிகிட்டு மறுபடியும் படிக்கறதுல நிஜமாவே சுகம் தான்.... :icon_b:

உட்கருத்தை கோட்டிட்டு காட்டியமைக்கு நன்றி!

ஏன் இது போல அழகு கவிதைகளை இன்னும் எளிமையா தரக்கூடாது.... எங்களை மாதிரி கத்துக்குட்டிங்களுக்கு சுலபமா புரியும் இல்ல... :)

அசத்திட்டீங்க அற்புதரே!!!
கவிதை உங்களில் ஏற்படுத்திய சலனங்களையும் பதிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

தான் செய்யும் லட்டுப் போலத் தன் கவிதைகளும் இருக்க வேண்டும் என்று பூ ஆசைப்படு்தோ என்னவோ:)