PDA

View Full Version : விண்டோஸ் 98 உருவான கதை தெரியுமா? - பில்கேட்ஸ்



lavanya
07-12-2003, 03:03 PM
<span style='color:#001bff'>அது விண்டோஸ் 95 வெற்றி கொடியின் உச்சத்தில் பறந்து கொண்டிருந்த நேரம்...
அடுத்த விண்டோஸ் பதிப்புக்கான ஆயத்தில் இருந்தார் பில்கேட்ஸ். இதை விட அதை
இன்னமும் பிரம்மாண்டமாக கொண்டாட எண்ணிய பில்கேட்ஸ் அதற்கென திட்டத்
தலைவரை தேர்ந்தெடுக்க உலகமெங்கும் உள்ள கணிப்பொறி வல்லுனர்களை
அழைப்பு விடுத்தார். எல்லா நாட்டிலும் வல்லுனர் பெருமக்கள் படையெடுக்க நம்
நாட்டிலிருந்து வீர் சிங் ஏகமனதாக(???!!!) எல்லோராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு
சியாட்டில் போனார். எல்லா தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் இறுதி சுற்றுக்கு
பில்கேட்ஸை நேரடியாக பார்க்க தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் நம்ம வீர்சிங்கும்
ஒருவர்.மற்ற ஏனையோர் ரஷ்யர்,ஜப்பானியர்,ஜெர்மானியர்.

நால்வரையும் ஒன்றாக அமர வைத்த பில்கேட்ஸ் 'உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான்
கேட்பேன்..சரியான பதில் சொல்பவர் இந்த மெகா புராஜக்டின் லீடர்" என்று சொல்ல
எல்லோரும் ஆவலாய் சரி என்றனர்.

பில்கேட்ஸ் கேட்டார். 'விண்டோஸ் 95 ஐ விட அடுத்த பதிப்பு உலகப்புகழ் பெற
என்ன செய்யலாம்...?'

ரஷ்யர் சொன்னார் : " விண்டோஸ் 95 ன் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்து
இன்னும் கொஞ்சம் வேகம், இயங்கும் சக்தியை அதிகப்படுத்தலாம்

பில்கேட்ஸ் முகம் சிவக்க 'கெட் அவுட்' என்று கத்த ரஷ்யர் எழுந்து போய்விட்டார்.
மற்ற இருவரும் வியர்த்து போய் நிற்க நம்ம வீசிங்கோ எந்த கவலையும் இன்றி
ஜாலியாக இருந்தார். பில்கேட்ஸ் அடுத்து ஜப்பானியரை கேட்டார்.

ஜப்பானியர் சொன்னார் : " இன்னும் சில எளிமையான பயன்பாட்டு வசதிகளை சேர்த்து
புதிய தொழில்நுட்பத்தில் வெளியிடலாம்"

பில்கேட்ஸ் கோபமாகி 'அப்ப என்னோட பழைய விண்டோஸ் டப்பாங்கறியா..போய்யா
வெளியே என்று சொல்லி விட்டு ஜெர்மானியரை 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.."என்று
கேட்டார்.

ஜெர்மானியர் சொன்னார் : " பயனாளர் சினேகித (user friendly) பயன்பாட்டு வசதியை
அதிகமாக்கலாம். எல்லோர்க்கும் பயன்படும் மென்பொருள்
வசதிகளை சேர்க்கலாம்'

இந்த முறையும் பில்கேட்ஸ் சமாதானமாகமல் 'போய்யா வேற யோசனையே தோணலையா
உனக்கு...இடத்தை காலி பண்ணு ' என்று சொல்லிவிட்டு நம்ம வீர்சிங்கை பார்த்து
"நீங்க என்ன சொல்றீங்க வீர்சிங் .." என்று கேட்டார். நம்ம வீர்சிங்கோ அலட்டிக்
கொள்ளாமல் சொன்னார்.

"ரொம்ப சிம்பிள்...விண்டோஸ் 95- வை விண்டோஸ் 98 னு பேர மாத்தி வெளியிட்டிட
வேண்டியதுதான்..."

பில்கேட்ஸ் ரொம்ப சந்தோஷமாகி வீர்சிங்கை கட்டி அணைத்து "நீதான் நமக்கு வேண்டிய
ஆள்" என்று உடனே வேலைக்கு சேர்த்து விட்டார்</span>.

----------------------------------------------------------------------------------------------

<span style='color:#ff00ff'>அடுத்து பில்கேட்ஸ் ஒரு பெரிய கார் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சிறப்பு விருந்தினராக
போனார். அங்கு கார் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த வல்லுனர்கள் 'ஐயா நீண்ட தொலைவு பயணிக்கும் போது சட்டென கார் நின்றுவிட்டால் என்ன பிரச்னை என்று உபயோகிப்பார்
கண்டறிய ஏதும் சாப்ட் வேர் உண்டா..என்று கேட்க பில்கேட்ஸ் உடனே உற்சாகிமாகி 'இது கேள்வி... ரொம்ப நேரமா போய்கிட்டிருக்க கார் திடீர்னு நின்னு போனா என்ன பண்ணனும்...?எல்லா விண்டோவையும் ஷட்டவுன் பண்ணிடனும்.கொஞ்ச நேரம் காரை
நிப்பாட்டி வெளியே வந்துட்டு திருப்பி கதவை ஓப்பன் பண்ணி உள்ளே போய் ஸ்டார்ட் பண்ணா போதும் எல்லா பிராப்ளமும் சால்வாகி விடும்" என்றார்.

----------


இன்னும் வருவார்...
</span>

பாரதி
07-12-2003, 04:02 PM
ஹஹஹா... லாவ்... தூள் கிளப்புறீங்க...ரொம்ப நன்றி.

Mathu
07-12-2003, 05:01 PM
வாவ்.. லாவ்..... ஆனா இது ரொம்ப அனியாயம்.
அது சரி இப்போ வீர்சிங் வேல காலி எண்டு நினைக்கிறன்.

முத்து
07-12-2003, 05:25 PM
லாவண்யா அவர்களே ..
அசத்துறீங்க ...
பில்கேட்ஸ் பாவம் ..
இவ்வளவு அப்பாவியா இருக்காரே... :D

mayuran
07-12-2003, 07:17 PM
ஹ ஹா ஹ ஹா...

ஆனால் லாவண்யா உண்மையாவகவே பில் கேட்ஸ் நிறுவனத்தார்
கார்களிலும் சாப்ட் வேயர்களை உபயோகிக்க போகிறார்களாம்..

தற்போது முன்னணியில் இருக்கும் பென்ஸ்,பி.எம்.டபில்யு போன்ற
வாகனங்களில் இருப்பதாக கதை அடிபடுகிறது....

இளசு
07-12-2003, 11:48 PM
லாவ், ஜுரம் அடிக்கும்போதே இப்படி ஒரு ஜிலுஜிலு பதிவா?
ஜூரம் நீ....டிக்க வாழ்த்துகள் லாவ். :D

சேரன்கயல்
08-12-2003, 03:21 AM
அதானே பார்த்தேன்...
வீர்சிங் இருந்தா அங்கே எல்லாம் சுகமே...
லாவ்ஸ்...கலக்கல்ஸ்...தொடரட்டும்...

mania
08-12-2003, 02:25 PM
:lol: :lol: கலக்கல் லாவ்ஸ்
அன்புடன்
மணீயா

poo
09-12-2003, 06:33 AM
பில்கேட்ஸ்கூட இருந்தவர் இப்போ என் தலைகூட இருக்கிறார்னு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா!!

நன்றி யக்கோவ்...அடிக்கடி சிரிக்கவைச்சா சூப்பர்க்கா!!

poornima
25-01-2009, 05:37 AM
இப்ப விஸ்டா வரைக்கும் இந்த கதைதான் தொடருதுன்னு நினைக்கிறேன்,, :-)