PDA

View Full Version : கதவின் வீடு

சசிதரன்
19-04-2011, 01:16 PM
அந்த வீட்டின் கதவு
தனித்து தெரிந்தது.

மிகப் பழமையானதென்றும் இல்லாமல்
அபூர்வமான எந்த கலை வேலைபாடுகளும் இல்லாமல்
மிக சாதரணமாய் இருந்தபோதும்
அது வேறுபட்டே இருந்தது.

ஒவ்வொரு முறை கடக்கும்போதும்
அந்த கதவினை தீண்டாமல்
கண்கள் கடந்ததே இல்லை.

என் வீட்டின் கதவு குறித்து
ஒருபொழுதும் தோன்றாத ஏதோ
அந்த கதவினுள் ஒளிந்திருந்தது.

சுற்றிலும் சுவர்கள் இழந்து
பாதுகாக்க ஏதுமின்றி
யாருடைய கனவுகளிலோ
தினந்தோறும் தோன்றக்கூடிய

பூட்டியிருந்த அந்த கதவு
தனித்தே தெரிந்தது.

கீதம்
20-04-2011, 01:26 AM
வலியுணர்த்திய வரிகள் சசிதரன். சிதிலமடைந்த சுவர்களைப் பார்க்கும்போது என் மனதில் ஒரு சோகம் கப்பும். இதுபோன்ற கதவுகளை இதுவரை கண்டிருக்கவில்லை. எனினும் சோகம் தாண்டிய ஒரு வெறுமை பிரதிபலிக்கிறது மனதோரம்.

பல படிமானங்களை உள்ளடக்கிய அற்புதக் கவிதை இது. பாராட்டுகள் சசிதரன்.

ஜானகி
20-04-2011, 02:26 AM
ஒருவேளை உந்தன் மனக்கதவோ அது...?

எட்டிப் பாருங்களேன்...! தூசு

தட்டிப் பாருங்களேன்.....!

பொக்கிஷம் கிடைக்கலாம்...!

உமாமீனா
20-04-2011, 03:30 AM
அருமை - கதவின் வீடு தான்

ஜான்
20-04-2011, 04:08 AM
அந்த வீட்டின் கதவு
தனித்து தெரிந்தது.

மிகப் பழமையானதென்றும் இல்லாமல்
அபூர்வமான எந்த கலை வேலைபாடுகளும் இல்லாமல்
மிக சாதரணமாய் இருந்தபோதும்
அது வேறுபட்டே இருந்தது.

ஒவ்வொரு முறை கடக்கும்போதும்
அந்த கதவினை தீண்டாமல்
கண்கள் கடந்ததே இல்லை.

என் வீட்டின் கதவு குறித்து
ஒருபொழுதும் தோன்றாத ஏதோ
அந்த கதவினுள் ஒளிந்திருந்தது.

சுற்றிலும் சுவர்கள் இழந்து
பாதுகாக்க ஏதுமின்றி
யாருடைய கனவுகளிலோ
தினந்தோறும் தோன்றக்கூடிய

பூட்டியிருந்த அந்த கதவு
தனித்தே தெரிந்தது.
அருமை
நீங்கள் கி.ராஜநாராயணன் அவர்களின் கதவு சிறுகதை படிக்கவும்

Ravee
20-04-2011, 08:18 AM
நிலை மட்டும் நிலைத்திருக்க கதவும், சுவரும் ஒட்டிக்கொண்டு இருந்ததோ ... பாதுகாக்க ஏதும் இருக்கிறதோ இல்லையோ தன் கடமையை செய்யும் கதவு. சசியின் பார்வையின் மறுபக்கம் எப்போதுமே சிறப்பாக இருக்கிறது

இளசு
20-04-2011, 07:42 PM
சுவரின் ஆணியில் தொங்கும் தாலி போல்
வீடில்லாக் கதவும் ஓர் அதிர்வுக் காட்சிதான்..

பின்புலம் தொலைத்த அடையாளச் சின்னங்கள்
கதை புதைந்தவை
கவனம் ஈர்ப்பவை..

சசிக்குப் பாராட்டு!

சசிதரன்
21-04-2011, 11:00 AM
வலியுணர்த்திய வரிகள் சசிதரன். சிதிலமடைந்த சுவர்களைப் பார்க்கும்போது என் மனதில் ஒரு சோகம் கப்பும். இதுபோன்ற கதவுகளை இதுவரை கண்டிருக்கவில்லை. எனினும் சோகம் தாண்டிய ஒரு வெறுமை பிரதிபலிக்கிறது மனதோரம்.

பல படிமானங்களை உள்ளடக்கிய அற்புதக் கவிதை இது. பாராட்டுகள் சசிதரன்.

மிகவும் நன்றி கீதம்...:)

சசிதரன்
21-04-2011, 11:01 AM
ஒருவேளை உந்தன் மனக்கதவோ அது...?

எட்டிப் பாருங்களேன்...! தூசு

தட்டிப் பாருங்களேன்.....!

பொக்கிஷம் கிடைக்கலாம்...!

நன்றி ஜானகி... :)

சசிதரன்
21-04-2011, 11:03 AM
நன்றி உமாமீனா...:)

நன்றி spja.. :)

நன்றி ரவி அண்ணா,,, :)

நன்றி இளசு அண்ணா... :)

கலாசுரன்
26-04-2011, 03:31 AM
ஒவ்வொரு முறை கடக்கும்போதும்
அந்த கதவினை தீண்டாமல்
கண்கள் கடந்ததே இல்லை.
என்னவொரு நிதர்சனமான உண்மை ...!!
நல்ல வரிகள் சசிதரன்

பூமகள்
26-04-2011, 06:03 AM
பூட்டிய கதவும்..
சுவரோடிப் போன பாசியும்..

வேர் பிரிந்த கதை பல பின்னியிருக்கும் ஊரெங்கும்...

சுவரற்ற கதவு இது போலவே பல சொல்ல முற்பட்டுக் கொண்டே இருக்குமோ??

நல்லதொரு கவிதை சசி.. வீடில்லா கதவைக் கடந்து சென்ற உணர்வு..

--

மான்ஸ்டர் இன்கார்பரேசன் என்ற ஒரு ஆங்கில கார்டூன் படம் பார்த்திருக்கிறீர்களா??

அதில் இப்படியான வீடில்லா பூட்டிய கதவுகள் பல அந்தரத்தில் வந்த வண்ணமே இருக்கும்.. அதைத் திறந்து பார்த்தால் ஓர் வீட்டின் குழந்தைகள் அறை தெரியும்..

ஏனோ உங்கள் கவிதை அந்தப் படத்தை நினைவூட்டியது.. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.. குழந்தைகளுக்கான நல்ல படம். :)

சசிதரன்
02-05-2011, 02:09 PM
ஒவ்வொரு முறை கடக்கும்போதும்
அந்த கதவினை தீண்டாமல்
கண்கள் கடந்ததே இல்லை.
என்னவொரு நிதர்சனமான உண்மை ...!!
நல்ல வரிகள் சசிதரன்

நன்றி கலாசுரன்... :)

சசிதரன்
02-05-2011, 02:12 PM
பூட்டிய கதவும்..
சுவரோடிப் போன பாசியும்..

வேர் பிரிந்த கதை பல பின்னியிருக்கும் ஊரெங்கும்...

சுவரற்ற கதவு இது போலவே பல சொல்ல முற்பட்டுக் கொண்டே இருக்குமோ??

நல்லதொரு கவிதை சசி.. வீடில்லா கதவைக் கடந்து சென்ற உணர்வு..

--

மான்ஸ்டர் இன்கார்பரேசன் என்ற ஒரு ஆங்கில கார்டூன் படம் பார்த்திருக்கிறீர்களா??

அதில் இப்படியான வீடில்லா பூட்டிய கதவுகள் பல அந்தரத்தில் வந்த வண்ணமே இருக்கும்.. அதைத் திறந்து பார்த்தால் ஓர் வீட்டின் குழந்தைகள் அறை தெரியும்..

ஏனோ உங்கள் கவிதை அந்தப் படத்தை நினைவூட்டியது.. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.. குழந்தைகளுக்கான நல்ல படம். :)

மிகவும் நன்றி பூமகள்... :)

அந்த திரைப்படம் என்னுடைய அனிமேஷன் டாப் 10-ல் இடம்பெற்ற படம்... மிகவும் ரசிக்கும் படம் அது... :)

M.Jagadeesan
03-05-2011, 04:32 AM
பல கற்பனைகளைத் தூண்டிய கவிதை. இக்கவிதை பிறிதுமொழிதல் அணி வகையைச் சார்ந்தது.

அக்னி
03-05-2011, 11:49 AM
இதிலென்ன புதுமை கண்டீர்...

சிதையாத பலதில்
சிதைந்த ஒன்றின்
சிதையாத கதவு,
கருத்தைக் கவர,
வந்த கவிதை கண்டு..,

சிதைந்த இடத்தில்
சிதையாத ஒன்றேனும்
கண்ணிற்படாதோ
என்ற ஏக்க வலியோடு
ஏங்கிக் கேட்கின்றது...

போர்ப் பூமி ஒன்று...

*****

முரண்கள் எப்போதுமே இலகுவாக காட்சி தந்துவிடும்.
இந்தக் கவிதை அப்படியான ஒரு முரணை அழகாகச் சொல்கின்றது.

கவிதையை வாசிக்கும் போது ஏற்படும்
ஏகாந்த உணர்ச்சி,
கவிதையின் அடர்த்தியைச் சொல்கின்றது...

பாராட்டு...

கீதம்
03-05-2011, 10:34 PM
இதிலென்ன புதுமை கண்டீர்...

சிதையாத பலதில்
சிதைந்த ஒன்றின்
சிதையாத கதவு,
கருத்தைக் கவர,
வந்த கவிதை கண்டு..,

சிதைந்த இடத்தில்
சிதையாத ஒன்றேனும்
கண்ணிற்படாதோ
என்ற ஏக்க வலியோடு
ஏங்கிக் கேட்கின்றது...

போர்ப் பூமி ஒன்று...

*****

அக்னியின் உருவில்
அட்சரங்கள் உருவாகுமானால்
நாட்டின் அவலம் உணர்த்த
நான்கே வரிகள் போதும்.

மனம் கனக்கிறது.