PDA

View Full Version : நீயும் நானும்



ஜான்
18-04-2011, 05:28 PM
எதைக் காண
இங்கே
வந்திருக்கிறாய்!
உன்னிடம் இல்லாதது எது
என்னிடம் இருக்கிறது
என்னிடம் இல்லாதது எதுவும்
உன்னிடம் இருக்கிறதா
பின் எதற்காக இங்கே வந்திருக்கிறாய்
என்னைப் பற்றி நீ சொல்
உன்னைப்பற்றி நான் சொல்கிறேன்
உன்னிடம் இருப்பதும் என்னிடம் இருப்பதும்
ஒன்றென அறிந்தால்
கொஞ்சம் புன்னகைத்துவிட்டுப் போ

Nivas.T
22-04-2011, 06:50 AM
.....:)....

ஆதவா
22-04-2011, 06:55 AM
உன்னிடம் இருப்பதும் என்னிடம் இருப்பதும்
ஒன்றென அறிந்தால்
கொஞ்சம் புன்னகைத்துவிட்டுப் போ


.....:)....

:eek::eek:

Nivas.T
22-04-2011, 07:00 AM
:eek::eek:

....:D...

selvaaa
22-04-2011, 07:00 AM
புறத்தை திரும்பி பார்த்தேன்
அகத்தையும் திரும்பி பார்த்தேன்
சுற்றத்தையும் கூட திரும்பி பார்த்தேன்

திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டேன்

சிரிக்கிறேன்!

இப்படியும் படைத்தவன் எவனோ:smilie_abcfra:

ஜான்
23-04-2011, 03:29 AM
:eek::eek:

புரிந்துவிட்டால் நன்றிகள்

பூமகள்
23-04-2011, 04:11 AM
ஒரே அலைவரிசையில் மனிதம் பயணித்தால்..

உலகம் எவ்வாறிருக்கும்??

பூந்தோட்டம் ஆகுமோ?

அலைவரிசை அனைத்தும் ஒருங்கே நல்லவை நோக்கி அமையட்டும்..

கவிதை படைத்தவருக்கு பாராட்டுகள்.. :)

இளசு
23-04-2011, 04:17 AM
மரபியல் கூறுகளில் ஆப்பிரிக்கனுக்கும், தென்னிந்தியனுக்கும், ஐரோப்பியனுக்கும்
அரை சத பேதத்துக்கும் குறைவு..

ஆணுக்கும் பெண்ணுக்கும் அரவாணிக்கும் அதைவிட பேதக்கணக்கு குறைவு..

மிகக்குறைவான வேறுபாட்டில் மிக அதிகமான வித்தியாசங்கள்... அதுதான் உயிரினங்களின் நட்பு, காதல், அன்பு தேடலின் ஆரம்பப்புள்ளி.... பரிணாம வளர்ச்சியின் ஆதார சுருதி..

ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களிடமே ஒருவரை ஒருவர் அறிய தனிச்சிறப்புகள் இருக்கும்.

தேடல் மனம், அறிவு, திறன் சார்ந்த களம் என்றால்...
என்றும் அடுத்தவரிடம் புதிது காணலாம், கற்கலாம்.

இருளில் உடலில் தேடல் என்றால்?????????


----------------------------------------------

கவிதையும் பின்னூட்டமும் கண்ணுற்று எழுந்த எண்ணங்கள்.

திசை திருப்பியிருந்தால் கவிஞர் மன்னிக்கவும்.

ஜான்
23-04-2011, 04:05 PM
புறத்தை திரும்பி பார்த்தேன்
அகத்தையும் திரும்பி பார்த்தேன்
சுற்றத்தையும் கூட திரும்பி பார்த்தேன்

திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டேன்

சிரிக்கிறேன்!

இப்படியும் படைத்தவன் எவனோ:smilie_abcfra:




புரியவில்லையா
எனக்கும்தான் --நீங்கள் புரிந்து கொண்டது

ஜான்
23-04-2011, 04:08 PM
மரபியல் கூறுகளில் ஆப்பிரிக்கனுக்கும், தென்னிந்தியனுக்கும், ஐரோப்பியனுக்கும்
அரை சத பேதத்துக்கும் குறைவு..

ஆணுக்கும் பெண்ணுக்கும் அரவாணிக்கும் அதைவிட பேதக்கணக்கு குறைவு..

மிகக்குறைவான வேறுபாட்டில் மிக அதிகமான வித்தியாசங்கள்... அதுதான் உயிரினங்களின் நட்பு, காதல், அன்பு தேடலின் ஆரம்பப்புள்ளி.... பரிணாம வளர்ச்சியின் ஆதார சுருதி..

ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களிடமே ஒருவரை ஒருவர் அறிய தனிச்சிறப்புகள் இருக்கும்.

தேடல் மனம், அறிவு, திறன் சார்ந்த களம் என்றால்...
என்றும் அடுத்தவரிடம் புதிது காணலாம், கற்கலாம்.

இருளில் உடலில் தேடல் என்றால்?????????


----------------------------------------------

கவிதையும் பின்னூட்டமும் கண்ணுற்று எழுந்த எண்ணங்கள்.

திசை திருப்பியிருந்தால் கவிஞர் மன்னிக்கவும்.
சத்தியமாக உடல் சார்ந்தது அல்ல
என்ன ஒற்றுமை சார்ந்தது
மீண்டும் படியுங்கள்

ஜான்
25-04-2011, 11:49 AM
மன்னிக்கவும்
என்ன அல்ல எண்ண

ஆதி
25-04-2011, 12:33 PM
புறவயமான அகத்தேடல்
அகவயமான புறத்தேடலென இரு தளத்திலும் பயணிக்கிறது கவிதை..

//உன்னிடம் இல்லாதது எது
என்னிடம் இருக்கிறது
என்னிடம் இல்லாதது எதுவும்
உன்னிடம் இருக்கிறதா
பின் எதற்காக இங்கே வந்திருக்கிறாய்
என்னைப் பற்றி நீ சொல்
உன்னைப்பற்றி நான் சொல்கிறேன்
உன்னிடம் இருப்பதும் என்னிடம் இருப்பதும்
ஒன்றென அறிந்தால்
//

இதை உடல்ரீதியான தேடலாக எடுத்துக்கொள்ள* இயலவில்லை..

கவிதை சமத்துவம் குறித்த தர்க்கம் செய்கிறது..

மொழி, இனம், மதம், சாதி என்று அவை வேறெந்த பேதம் குறித்த தர்க்கமாகவுமிருக்கலாம், அல்லது எங்கும் நிறைந்திருக்கும் இறைக்குறித்தனவாகவும் இருக்கலாம்...

இது விரகம் குறித்தனவாய் இருப்பினும் அது விடிவு கொள்வது இறையிடமென்று சொல்லவியலும்...

திருவருட்செல்வர் படத்தில்...

நாயகன் ஆடலணங்கின் மீது ஆசை கொள்வான், அவனாசைக்கு இணங்க மறுக்கும் அவள், அரசனான அவனின் இச்செயலால் விளையப்போகும் நெறிப்பிறழ்வை குறித்தும், அதனால் அவனுக்கு உண்டாக போகும் பழிச்சொல்லைக் குறித்தும் எடுத்துச் சொல்வாள், ஆனால் அவன் புரிந்து கொள்ள மறுப்பான்..

சரி தற்போது நான் உங்களுக்காக சமைத்திருக்கும் ஒன்பது வகை இனிப்பு பதார்த்தையும் சுவையும், பிறகு இது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்பாள், அவனும் ஏற்று இனிப்பு பதார்த்தங்களை சுவைக்க ஆரம்பிப்பான். மூன்று பதார்த்தங்களை சுவைத்தவிட்ட அவனைப்பார்த்து, இதுவரை நீங்கள் சுவைத்த பதார்த்தங்களின் வேறுபாட்டை சொல்ல முடியுமா என்று கேட்பாள்..

அதற்கு அரசன் சொல்வான், மூன்றுமே இனிப்பு பண்டம் தானே இதில் என்ன வேறுபாட்டை சொல்ல என்பான்..

அப்படித்தானே நானும், மாகராணியும், நாங்கள் இருவரும் பெண்கள் தானே, எங்களில் என்ன வேறு பாட்டை காணப்போகுறீர் என்று கேட்பாள்...

இந்த கேள்வியில் நிதானிக்கும் அரசன் தனக்கு நேரவிருந்த பழிச்சொல்லில் இருந்து தன்னை காப்பாற்றிய அவளுக்கு நன்றி சொல்லி..

அவளிடம் விடைப்பெறுவான், பின் ஆன்மீக வழியின் தேடலைத்துவங்குவான்..

இப்படி ஒரு கருத்திருக்குமாயினும் இக்கவிதையின் பொருளில் பிழையிருக்க போவதில்லை...

பாராட்டுக்கள் spja

ஆதவா
25-04-2011, 01:17 PM
சத்தியமாக உடல் சார்ந்தது அல்ல
என்ன ஒற்றுமை சார்ந்தது
மீண்டும் படியுங்கள்

கவிதைக்கான தர்க்கத்தில் முடிவு மட்டும் என்றூமே கவிஞனின் சார்பாக இருக்கக் கூடாது, இருக்கவும் கூடாது. இது பொதுவாக நான் கருதிக் கொள்வது. ஆதி சொன்னதபடி, புற, அகவயத் தேடல்கள் இக்கவிதையினுள்ளே இருப்பதைத்தான் இளசு அண்ணா சுட்டுகிறார்!!

கவிதைக்கான பின்னூட்டங்கள் பிரமாதமாக வந்திருக்கின்றன. ரோடு நல்லா இருந்தா வண்டி நல்லாயிருக்கும் என்பார்கள். கவிதை அருமையாக இருப்பதால் கருத்துக்களும் அப்படியே!!

வாழ்த்துக்கள்!

ஜான்
26-04-2011, 02:09 AM
எனக்கு sufi வகை கவிதைகளும் பாடல்களும் பிடிக்கும்
நானும் அதுபோல முயற்சி செய்தேன்

ஜான்
29-04-2011, 01:29 AM
ஒரே அலைவரிசையில் மனிதம் பயணித்தால்..

உலகம் எவ்வாறிருக்கும்??

பூந்தோட்டம் ஆகுமோ?

அலைவரிசை அனைத்தும் ஒருங்கே நல்லவை நோக்கி அமையட்டும்..

கவிதை படைத்தவருக்கு பாராட்டுகள்.. :)


மிகத் துல்லியமான புரிதலுக்கும் உங்கள் ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்துக்கும் நன்றியும் பாராட்டும் ,நல்மனமே

ஜான்
29-04-2011, 01:31 AM
கவிதைக்கான தர்க்கத்தில் முடிவு மட்டும் என்றூமே கவிஞனின் சார்பாக இருக்கக் கூடாது, இருக்கவும் கூடாது. இது பொதுவாக நான் கருதிக் கொள்வது. ஆதி சொன்னதபடி, புற, அகவயத் தேடல்கள் இக்கவிதையினுள்ளே இருப்பதைத்தான் இளசு அண்ணா சுட்டுகிறார்!!

கவிதைக்கான பின்னூட்டங்கள் பிரமாதமாக வந்திருக்கின்றன. ரோடு நல்லா இருந்தா வண்டி நல்லாயிருக்கும் என்பார்கள். கவிதை அருமையாக இருப்பதால் கருத்துக்களும் அப்படியே!!

வாழ்த்துக்கள்!


வழிகாட்டலுக்கு நன்றிகள்