PDA

View Full Version : பங்குனிப் பரவசம் - 1 & 2கீதம்
18-04-2011, 01:46 PM
ஏண்டி இவளே... இந்த இடத்தை ஒழுங்காப் பெருக்கலையா....? பாரு... குப்பை அப்படியே இருக்கு?

அட, இன்னாமா நீ? பேஜாரு பண்ணினுகீறே? நல்லாத்தான் பெருக்கீறேன்...சொம்மா... கூட கூட நின்னுகினு நோட்டம் வுடாத... போய் வேற வேல எதுனா இருந்தா பாரு...

ஆமாண்டி... எனக்கு நீ வேலைக்காரியா... உனக்கு நான் வேலைக்காரியான்னே தெரியமாட்டேங்குது... நல்லாத்தான் அதிகாரம் பண்றே... ஆமா... இந்த மேசையை கொஞ்சம் நகத்திப் போட்டு கூட்டினா என்ன?

நீ சொல்லவே இல்லியேம்மா...

வேலைக்காரி சொன்னாதான் செய்வாள்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26991)... ஜெகதீசன் ஐயா சும்மாவா சொல்லியிருக்காரு...

அட, நம்மளப்பத்தி கூட பாட்டு பாடினுகீறாரா? அப்புறம் என்னமா பாடினிருக்காரு...?

ம்! ரொம்ப முக்கியம். ஏதோ ஆர்வமாக் கேட்கிறியேன்னு தமிழ் மன்றம் பத்திச் சொன்னது தப்பா போச்சு.. முதல்ல வேலயப் பாருடி....

அது பாட்டுக்கு ஆயினுருக்கு.... நீ பாட்டுக்கு சொல்லினே இரு... காதுதான கேக்குது....சரி, கெடா வெட்டுனதுனல ப்ரைஸ் வெட்டுனது யாரு...?

இன்னும் சொல்லலையே... ஒண்ணா ரெண்டா.... பதினாலு கதைங்க. எல்லாத்தையும் பாத்து முடிவு சொல்றதுன்னா லேசுப்பட்ட வேலையா?

சர்தான்... கெடா வெட்டுனு பேர் வச்சினு.... வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லாம இன்னாத்துக்கு இந்த ஆதவா இய்த்தடிக்கிறாரு....?

உன்கிட்ட கொடுத்திருந்தா... தோ... வீடு பெருக்கிறியே லட்சணமா அது மாதிரி அங்க ஒண்ணு இங்க ஒண்ணுன்னு பார்வையை ஓட்டி கதையை முடிச்சிருப்பே.... அவர் பொறுமையா பாக்கவேண்டாமா?

ஏம்மா.... நெசமாலுமே ராஜாராம் கதையில வர மாதிரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26913)எல்லா ஆடுங்களும் ஆத்தாகிட்ட போய் பொலம்புச்சுன்னு வச்சுக்கோ.... என்னா நடக்கும் சொல்லு...

என்னா நடக்கும்? நீயே சொல்லேன்.

ஜெகதீசன் ஐயா எழுதினா மாதிரி ஆத்தா 'எனுக்கு கெடா வோணாம்.... சிங்கம் கொண்டாங்கோடா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27008)'ன்னு கேக்கும்...அப்பால அல்லாரும் துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடிப்புடுவானுங்கோ.... அல்லாம் நம்ம நாக்கு படுத்துற பாடுதானம்மா.... எம்மவன்…. இத்துணூண்டு இருந்துனு எதுனா துன்றதுக்கு புச்சா செஞ்சு குடுன்னு ஒரே ரவுசு பண்ணினு கெடக்கு....இன்னாத்த சொல்றது...போ...

பேசாம உன் பையனுக்கு ஜானகி அம்மா சொன்ன பொருள் விளங்கா உருண்டை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=521970&postcount=42)யை செஞ்சு குடுத்து கொஞ்சநாளைக்கு அவன் வாயை அடைச்சிடு....

ஏம்மா அத்தினி கொடுமயாவா இருக்கும் அது....?

அடிப்பாவி... அவ்வளவு ருசியா இருக்கும்டி... செய்யத் தெரியாம செஞ்சா கொடுமயாவும் இருக்கும்....

ஐயோ... அப்ப வேற எதுனா சொல்லுமா.... அந்தப் பயபுள்ள அதாலயே என் மண்டய ஒடச்சாலும் ஒடக்கும். அப்பாரு மாதிரியே ஒண்ணும் இல்லாத்துக்கெல்லாம் பிரச்சினை பண்ணுது..

சிமரிபா வீட்டுல நடந்த மாதிரியா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26828)?

ஆக்காங்... ஆனா.... என்னாண்டதான் அல்லா ரவுசும்... இஸ்கூலுல டீச்சர் இன்னாமா மெச்சிக்கிறாங்கோ தெரியுமா.... அல்லாத்துலயும் ஃபஸ்ட் வரானாம்... நல்லா படிக்கவைய்யின்னு சொல்றாங்கோ....

டீச்சரே சொல்றாங்கன்னா நிச்சயம் அவன் நல்லா வருவான். நல்ல ஆசிரியர்கள் அமையிறது பெரிய விஷயம். மாதா பிதா குரு தெய்வம்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26890)அப்படியொரு டீச்சரப் பத்தி தங்கவேல் சொல்லியிருக்காரு...... படிக்கிற புள்ளய படிக்கவை... ஆண்டாளு....உன் பரம்பரைக்கே பேரு கிடைக்கும்...

புள்ள நல்லாதாம்மா படிக்கிறான்... ஆனா... லேசா திக்குவாயி...... அதான் மத்த பசங்க கிண்டல் செய்யும்போது கோவம் வந்து சடார்னு கையை ஓங்கிடுது...

இதெல்லாம் ஒரு குறையில்லைன்னு நீதான் ஆண்டாளு சொல்லிப் புரியவைக்கணும்... ஊனம் ஒரு குறையே இல்லைன்னு உயர்வான சிந்தனையுள்ள தன் நண்பர் பத்தி ரங்கராஜன் பெண் பார்க்கும் படலத்தில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26901)எழுதியிருக்காருல்ல... இன்னைக்கு கிண்டல் பண்றவங்க முன்னாடி அவன் தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்டணும்னு நீதான் அவனை உற்சாகப்படுத்தணும்.

சர்தாம்மா.... இஸ்கூலுல மாறுவேசப் போட்டி வச்சிகிறாங்களாம்... எதுனா வேசங்கட்டி வுடும்மான்னு ஒரே தொணதொணப்பு... நா யாரக் கண்டேன்...இன்னாத்த கண்டேன்....

ஏண்டி இப்படி பொலம்புறே? என்னைக்குப் போகணுமோ அன்னைக்கு இங்க அழைச்சிகிட்டு வா... சமீபத்துலதானே அவனுக்கு மொட்டை போட்டிருக்கே... ஆளும் ஒடிசலா இருக்கான்... காந்தி வேஷம் போட்டுடலாம்... சரியா? என்ன ஒண்ணு.... கையில தடி இருக்கேன்னு எல்லாரையும் அடிக்காம இருந்தா சரி... முரட்டுப் பயல்னு சொல்றியே... அதான் பயமாயிருக்கு... அப்புறம் சுடர்விழி சொன்ன மாதிரி கண்டிராத கோலத்தில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26931)தான் காந்தியைப் பார்க்கணும்...

மொரட்டுத்தனத்ததான் எப்புடி கொறைக்கிறதுன்னே தெரியலமா.... எவ்ளோ அடிச்சாலும் திருந்தமாட்டேங்குது... இன்னாதான் பண்றதோ....

அடிக்காதடி....புள்ளைகளை அடிக்காமத் திருத்தணும்.... அடிக்க அடிக்க அடாவடிதான் அதிகமாகும். உனக்கொண்ணு தெரியுமா ஆண்டாளு... செல்லப்பிராணி வளர்த்தா மூர்க்கம் குறையுமாம்... நீயும் உன் மகனுக்கு ஏதாவது வளக்குறதுக்கு வாங்கி கொடேன்...

எங்கூட்டாண்ட ஒரு பூனை குட்டி போட்டுருக்கு... நெத்தமும் குட்டிங்கள வாயிலக் கவ்வினு அங்கயும் இங்கயும் எடம் மாத்திட்டே திரியும்... இவன் அதுக்குப் பாலு வைக்கசொல்லோ... கொஞ்சநாளா ஒரு எடமா இருக்கு....அதத்தான் தூக்கினு... தோள் மேல போட்டுனு... மூஞ்சோட மூஞ்சி வச்சி கொஞ்சினு திரியிறான்.

நீ சொன்னதும் எனக்கு சசிதரன் வீட்டுப் பூனைக்குட்டிங்க ஞாபகம் வந்திட்டுது..

அவரு என்ன.... ரொம்பநாளைக்கப்புறம் வந்தாரு... வந்ததிலேருந்து பூனை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27031), கயுகு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26995), வண்ணாத்திப்பூச்சி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26994)... யானை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27019)ன்னு கவித எழுதினிருக்காரு....

அவருக்கு தோணுது... எழுதுறார்.... பெருங்கனவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27004)ன்னு ஒரு கவிதை எழுதியிருக்காரே... கனவின் முடிவில் வெட்டப்பட்ட தலை யாரோடதுன்னு தெரியலைன்னு சொல்லியிருக்கார்.

ராசாத்தியோடதோ என்னவோ?

என்னடி உளர்றே..?

கீதத்தோட நேர்த்திக்கடன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26919)ல அப்படித்தானே முடிச்சிருக்காங்கோ...

ஓ... அதைச் சொல்றியா? அதுல பாரு... அக்கா கொடுத்த பணத்தில சின்னக்குட்டி புருஷனுக்கு வைத்தியம் பாக்காம நேர்த்திக்கடன் நிறைவேத்தப் போறாளாம்... அக்காவை ஏமாத்துறதா நினைச்சு தன்னையே ஏமாத்திக்கிறா.. என்னைக்குதான் இந்த மூடநம்பிக்கைகள் ஒழியுமோ தெரியலை...

இப்படியே போனா.... ஜெகதீசன் ஐயா எழுதுனா மாதிரி போலிசாமியாரண்ட (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26967) சிக்கி கருப்பாயி புள்ளயக் காவு கொடுத்துட்டு குய்யோ மொறையோன்னு கதறினு கெடக்குற மாதிரி கதறினுக் கெடக்கவேண்டியதுதான்...

அவ மறுபடியும் அதே ஆள்கிட்டதானே போறா... என்ன சொல்லித்தான் திருத்துறதோ....

அல்லாரும் பிம்பிசாரன் மவராசா மாதிரி சொன்னா கேட்டுனு நடப்பாங்களா...?

சொல்றவங்க கருணைக்கடலான (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26983) புத்தரா இருந்தா ஒருவேளை இது நடக்கலாம்.

கருணையோட பொட்டலமா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26918) இருந்தாலும் பிரிக்காதீங்கோன்னு பயமுறுத்துறாரே கலாசுரன்... எதுக்கும் ஜாக்கிரதையாதான் இருக்கணும்...

இப்படித்தான் ஈரம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26986) கதையில் அஞ்சலியோட பாட்டி அவளுக்காக ரெண்டுநாள் மருத்துவமனையில் தங்கவே அத்தனை பிகு பண்ணிட்டு கடைசியில் அவ பிழைச்சு வந்ததும் தான் கடா வெட்டினதாலதான்னு வாய் கூசாம சொல்றாங்களே....

நெசம்தாம்மா... அப்புடியாப்பட்ட சனங்கோ நெறிய கீறாங்கோ......இந்தக் கதையில பாரு... பெத்து வளத்து ஆளாக்குன அப்பாருக்கு ஒருவேள சோறு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26937) போடாம வெரட்டி அடிச்சி பரலோகத்துக்கே அனுப்புன புள்ளங்களும் இருக்காங்கன்னு கலையரசி சொல்லிருக்காங்களே....

ஆண்டாளு.... சமீபத்துல முத்துக்கு முத்தாக (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26848)ன்னு ஒரு படம் வந்திச்சே... பாத்தியா.... அஞ்சு புள்ளைகளைப் பெத்தும் அவங்க ரெண்டுபேரும் கடைசி காலத்துல கஷ்டப்படுறதை....

இன்னும் பாக்கலம்மா... சரவணன் விமர்சனம் எயுதினுக்காரே.... அத்தப் படிச்சேன்.... இனிமேதான் பாக்கணும்... எங்கம்மா வெளிய தெருவ போவமுடிது.... எங்கூட்டுக்காருக்கு வாச்சிமேன் வேல.....எனுக்கும் ரொம்பநாளா எங்கியாச்சும் டூரு போணுமுனு ஆசதான்... இந்தப் பயலும் புடுங்குறான்... துட்டு வோணாமாமா?

இப்படி சேத்துவச்ச ஆசையெல்லாம் தான் கனவுல வருமாம். சிமரிபாவுக்கு மானசரோவர் போன கனவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26950)வந்திருக்கே...

கெனவுலயாவது நெறவேறுதே.... இப்படிக் கல்யாணக் கெனவோட சந்தோசமா இருந்தவரோட கல்யாணம் நின்னுபோனா அவரு மனசு என்னா பாடுபடும்... ஜார்ஜ் கதையில என்னமா சொல்லினுக்காரு....

இதுவும் கடந்துபோகும்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26942) மனசைத் தேத்திக்கவேண்டியதுதான். நிவாஸும் இப்படிதான் சலனப்படுத்திய சில தருணங்களைத் தவிர்க்க விரும்பறார் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26943). தவிர்க்க முடிஞ்சிதா என்னன்னு தெரியலை.

எப்புடி முடியும்? காதலுதான் கண்ணக்கட்டிப்பூடுதே... திவ்யாவுக்கு வாயையும் கட்டிப்பூட்டுதாமே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27022)...?

அதாண்டி காதல்... ஆனா... ஜெகதீசன் ஐயா ஊருக்குப் போனாலும் போனார்.... காதல் கவிதைகள் பக்கம் ஒரே வறட்சிதான்.

இந்த வயசிலயும் இன்னா ஜோரா காதல் கவிதைங்கோ பாடுறாரு....

காதலுக்கு ஏதுடி வயசு? ரங்கராஜன் எழுதின made for each other (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26878) கிற திரியைப் படிக்கலையா? வயசான காலத்தில் அந்தக் கணவன் மனைவிக்குள் இருக்கிற அன்னியோன்னியத்தையும் அந்திமப் பொழுதுகளையும் கண்கூடாப் பார்க்கிற பாக்கியம் அவருக்குக் கிடைச்சிருக்கே... படிக்கிற நமக்கே மனசைப் பிசையுதே... பார்த்தவருக்கு எப்படி இருந்திருக்கும்?

எத்தினி வயசானா இன்னா? ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற பாசம் எப்புடி கொறையும்? வயசான கலத்துல தேவரையா பாசம் வெச்சினுருந்த கருப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27010) ஊருக்காக தன் உசிரையே வுட்டுடுச்சே...

இந்தக் கதையை ரவீதானே எழுதியிருக்கார்?

ஆமா...அதே மாதிரி பாசம் வெச்சினு இருந்த புள்ள ராகுலு சிரிச்ச சிரிப்பால அதோட கெடா பலியாப்பூடுச்சின்னு ஆத்தா சம்மதம்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27001...)சிவாஜி எழுதிக் கெலங்கடிச்சிட்டாரே...மாடன (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26954)சந்தக்கி இட்டாந்துட்டு அந்தக் குட்டிப்பய மாணிக்கம் சொல்லுற கத கண்ணுல தண்ணி வரவக்கிது... டெல்லாஸு எய்தினுகீறாரு.......


சின்னப்பசங்க ஆசை ஆசையா வளர்த்த பிராணிகளை அவங்ககிட்டயிருந்து பிரிச்சாலே அவங்களோட பிஞ்சுநெஞ்சம் தாங்காது....அதிலயும் தனக்காகத்தான்னு சொல்லி தன் கண் முன்னாடியே பலிபோட்டா எந்தக் குழந்தையாலதான் தாங்கமுடியும்? பாபுவோட நிலையை நினைச்சுப் பாக்கவே முடியலை... சுரேஷ் எழுதினது இது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26927) .

அதுக்கே அப்புடி சொல்றியே... முத்துராசுவுக்கு அவன் செல்லக் கெடா கருப்பையே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26922) சூப்பு வெச்சிக்குடுத்தா அதும்மனசு படுற பாட்ட இன்னான்னு சொல்றது? நிவாஸ் அப்படியே மனசத் தொட்டுட்டாரு....

அகிம்சையை பேசுறோம், படிக்கிறோம், யாரு அதுப்படி நடக்கிறா? தெருநாய்களைக் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26969) கூட விட்டுவைக்காம தங்களோட சுயநலத்துக்காகக் கொல்ற மனுஷங்களும் இந்த உலகத்துலதான் இருக்காங்கன்னு சுரேஷ் எழுதியிருக்கரே...

நானும் எங்க கொலசாமிக்கு படையலுக்கு நேர்ந்துனு கெடா வெட்டுறது பயக்கம்தான். இந்தக் கதைங்கள பாக்க சொல்லோ.... எனுக்கே பாவமா கீதும்மா.... இன்னாத்துக்கு அப்புடி செய்யுறோம்... அல்லாம் நாம் துன்னத்தானேன்னு அல்பமா கீதும்மா... கோயிலுக்கு போனா சாமி கும்புட்டோமா வந்தோமான்னு இருக்கோணும்... பலியெல்லாம் கொடுக்கத்தாவலன்னு நெனைக்கவெக்கிது...

நீ கோவிலுக்குப் போய் சாமி கும்புடுறதைப் பத்திப் பேசுற...ஆனா... கோவிலுக்குப் போயும் கடவுள்கிட்ட எதை வேண்டப் போனோமோ அதை மறந்திட்டு சக்திமான் நினைப்பிலயும், பிரியாணி நினைப்பிலயும் இருந்த குழந்தைகளைப் பத்தி ஆளுங்க கதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27009)எழுதியிருக்காரே....

கொயந்தைங்கதானம்மா.... அல்லாம் பெருசானா தானா சரியாப்பூடும்.

கடவுளை கால் செருப்பா நினைக்கிறேன்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26854)ரவீ சொன்னா நீ என்னன்னு நினைப்பே....?

அடக்கடவுளே... நல்லாத்தானே இருந்தாரு.... இன்னாத்துக்கு ராங்காப் பேசினிகீறாரு....?

ராங்கெல்லாம் ஒண்ணும் இல்ல.. முழுசா படிச்சா உனக்குப் புரியும்...

அட... ஆமாம்... நான் தான் ராங்கா நெனச்சிட்டேன்... அல்லா கோயிலும் நமக்கு ஒண்ணுதாம்மா... எம்மவனுக்கு மொத மொட்ட நாகூர்லதான் போட்டது... என்னவோ எங்கூட்டுக்காரு வயில அத்தான் பயக்கமாம். ரெண்டாவது கொலசாமிக்கி... தோ... மூணாவது வேளாங்கண்ணி.... நாங்க அதெல்லாம் பாக்குறதில்லம்மா...

எறும்புளும் துரும்புளும் தளும்பும் இறைமை
சிறும்பெரும் கருதாமல் வணங்கு.

மனிதமே மதமாகும் உயிரெலாம்நம் சாதியாகும்
சமரசம் செம்மையுறச் செய்.

இறங்கட்டும் கடவுள் மனிதனுக்குள் நிரம்பட்டும்
இரங்கட்டும் எல்லா உயிர்க்கும்.

எத்தனை அற்புதமா நாகரா ஐயா சொல்லியிருக்கார் பார். உன்னை மாதிரி எல்லாரும் இருந்தாதான் பிரச்சனையே இல்லையே.... கோவிலில மட்டும்தான் சாமின்னு இல்ல.... எல்லா இடத்திலயும் கடவுள் இருக்கார்னு ஜானகி அம்மா எடுத்துப் பதிக்கிற திருமந்திர (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26501)விளக்கத்தில் தாமரை அழகாச் சொல்லியிருக்கார்.

காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுல் நாற்றமும் போல் உளன் எம் இறை
காவலன் எங்கும் கலந்து நின்றான் அன்றே.

கடவுள் எல்லா இடத்திலயும் இருக்காருன்னு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=519357&postcount=74) விளக்கம் சொல்லியிருக்கார். அது மட்டுமில்ல.... நம்மால் செய்யமுடிகிற உதவியை மத்தவங்களுக்குச் செய்தாலே போதுமாம், கடவுளை அடைஞ்சிடலாமாம்.

யாவர்க்கும் ஆம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

கடவுளை அடைய மிகவும் எளிய வழி இதானாம். (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=519018&postcount=54)

இதெல்லாம் நீ சொல்றதால தெரியிது.... இல்லனா... இந்த மரமண்டைக்கு எங்க புரியப்போவுது...?

மனுஷங்களை மரம்னு திட்டுறது தப்புன்னு குணமதி சொல்றார் தெரியுமா?

அய்யே.... அதுல இன்னா தப்பு? மரம் மாதிரி நின்னுகிறான்.... மரம் மாதிரி ஃபீலிங்ஸே இல்லாம கீறான்னு சொன்னா தப்பாமா?

மரமும் உணர்வுடைத்து மாந்தரை வைய
மரமென் றுரைப்பதுவும் மாசு.

மரத்துக்கும் உயிர் இருக்கு... உணர்வுகள் இருக்குன்னு சொல்றார்... இனிமே உன்னை மரமண்டைன்னு சொல்லிக்காதே... என்னாடி..?

சர்தாம்மா... படிச்சவுங்கோ பதவிசா சொல்லிப்பூடுறாங்கோ... படிக்காத நானெல்லம் வேஸ்டுதாம்மா....

படிச்சா மட்டும் போதுமா? பண்பு வேணாமா?

இன்னாமா பலய படத்து டைட்டில சொல்றே?

உண்மைதாண்டி.... பாடம் சொல்லிக் கொடுக்கிற ஒரு வாத்தியாரே மாணவிகள்கிட்ட வழிஞ்சா அவரை என்னன்னு சொல்றது?

ம்? ஜொள்ளு வாத்தின்னுதான் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26836)சொல்லோணும்...

அட... இப்படிதான் ஜெகதீசன் ஐயா அந்த வாத்தியாருக்குப் பேர் வச்சிருக்கார்... நீயும் சரியா சொல்லிட்டியே... லொள்ளுதாண்டி உனக்கும்....

லொள்ளுவாத்திக்கு இல்லாத லொள்ளா.... ஆமா... லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26836) படம் எடுத்துனுருந்தாரே.... எப்புடிக்கீது?

ஜோராக் கீது....ச்சீ.... உன்கிட்ட இன்னும் கொஞ்சநேரம் பேசினா உன்னை மிஞ்சிடுவேன் போல இருக்கு.... வேலைதான் முடிஞ்சுபோச்சில்ல.... கெளம்பும்மா தாயே.....

அட.... இன்னாமா... இன்னைக்கிதான் கொஞ்ச டைம் கெடச்சிது... உன்னாண்ட பேசி நாலு மேட்டரு தெரிஞ்சிக்கலாம்னா தெரத்தினுகீறியே....

அப்ப சரி...உக்காரு...

sarcharan
18-04-2011, 01:54 PM
அட அட அட கதம்பம் அருமை..

கீதம்
18-04-2011, 02:17 PM
பங்குனிப் பரவசம் - 2

கிரிக்கெட்டுல இந்தியா கெலிச்சப்போ எங்கூட்டாண்ட அல்லாப் பயலுகலும் டப்பாஸு வெடிச்சி இன்னா களேபரம் பண்ணிட்டாங்கோ....

இந்தியாவே அழுததுன்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26951) ஆதவா நெகிழ்ச்சியோட எழுதியிருக்கார். இருக்காதா பின்னே....? எத்தனை வருஷக் கனவு?

பரிச்ச நேரத்துல வேற வந்துச்சா.... பெத்தவுங்கெல்லாம் வயித்துல நெருப்பக் கட்டினுதான் இருந்தாங்கோ...

அனுவும் இதைப் பத்தி ஒரு கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26906) எழுதியிருந்தாங்களே... என்னைக் கேட்டால் படிக்கவும் செய்யணும். விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்கணும்.... மேட்ச் நடக்கும்போது அவனை மட்டும் அறையில் தள்ளி படி படின்னு சொன்னா அவன் கவனம் முழுசும் படிப்புல இருக்குமா?

ஒருவழியா கிரிக்கெட்டு காய்ச்சல் வுட்டுப்போச்சு சனங்களுக்கு..

எங்க முழுசா விட்டுது? இப்பவும் ஐபிஎல் பத்தி பக்கம் பக்கமா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19974&page=26)அலசிகிட்டுதான் இருக்காங்க... கிரிக்கெட்டுக்காக சச்சினுக்கு பாரதரத்னா கொடுக்கிறதெல்லாம் அநியாயம்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26968) சிவாஜி ஒருபக்கம் ஆதங்கப்பட்டு எழுதியிருக்கார்.. தாமரை சொல்வது போல் அந்த விருதை அடைய சச்சினுக்கு இன்னும் நாள் இருக்கு. அவசரப்பட வேண்டாம்னுதான் தோணுது...

இன்னாமா நீயி? இன்னா ஜோரா வெளையாடி கப்பு கெலிச்சாரு.... அவருக்கு குடுத்தா இன்னாவாம்?

கப் ஜெயிச்சது மட்டுமே அந்த விருதுக்கான தகுதி இல்லை.நிறைய சேவைகள் செய்திருக்கணும்...

இன்னாமோ சால்ஜாப்பு சொல்ற போ....நமக்கின்னா தெரியும் அத்தப் பத்தியெல்லாம்...? ஒலகக் கோப்பையில இந்தியாதான் கெலிக்கும்னு அன்னிக்கே அட்ச்சி சொன்னேன்ல... எப்புடி கெலிச்சிது பாத்தியா.....?

உன்னய மாதிரிதான் நம்ம ரவுசு ராஜாவும் முன்கூட்டியே இப்படிக் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=520900&postcount=2475) கணிச்சி சொன்னாரு...

சூப்பர் இஸ்டாருன்னா சொம்மாவா....?

சூப்பர் ஸ்டாரைப் பத்திப் பேசுறியே.... சூப்பர் மூன் பத்தி ஏதாவது தெரியுமா?

ஆங்.... சொன்னாங்கோ.... எங்க குப்பத்து சனமே கூடி நெலாவப் பாத்தோம்...அது எப்புடிம்மா அன்னிக்கு மட்டும் பெருசா தெரீது?

அதைப் பத்தி தாமரை இங்க (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=518844&postcount=228) விவரமா எழுதியிருக்கார்... இன்னொருநாள் சாவகாசமா அதப்பத்தி சொல்றேன்...

சர்தாம்மா... நீ ஓட்டுப் போட்டியா?

ம்... ஆச்சு... நீ?

ஆங்... தோ பாரு வெரலாண்ட மையி....

கண்ணுக்கு மட்டுமல்ல, விரலுக்கும் மை அழகுன்னு ஷீ நிசி சொல்லியிருக்கார். உன் விரலும் அழகா இருக்கு...

என் வூட்டுக்காருதான் இட்டுனு போனாரு..... போறதுக்கு முன்னால...அத்த அமுக்கு.... இத்த அமுக்குன்னு ஒரே பாடம்.... நானும் போய் எத்தயோ அமுக்கினு வந்தேன்.

பரவாயில்ல.... எப்படியோ ஓட்டுப் போட்டியே.... இல்லைனா... உன் ஓட்டை வேற யாராவது போட்டுட்டுப் போயிருப்பாங்க...

முதல்லே போவேணாம்னுதான் நெனச்சேன். அப்பால ஓட்டுப் போடப் போகாத வூட்டாண்ட வெட்டியா குந்தினுகீறவுங்கோ ஆடு மாடு மாதிரின்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26982) ஷீ நிசி பாடினுகாருன்னு சொன்னியா... அதான் போய்ட்டேன்.

நல்லாயிருக்குடி.... யோசிக்காம எதிலயோ முத்திரைக் குத்தினாக் கூட அவுங்களும் ஆடு மாடு மாதிரிதான். யோசிச்சு ஓட்டு போடணும்

ஐய்யே.... இன்னாமா.... நீயுந்தானே மன்றத்துலயே குந்தினு தேர்தல் பத்தி யாரு யாரு இன்னான்ன சொல்றான்னு பாத்தே.... எதானும் முடிவுக்கு வரமுடிஞ்சிது உன்னால?

நீ சொல்றது சரிதான். ஒரு மாசமா தேர்தல் தேர்தல்னு அரசியல் பக்கம் ஏகப்பட்ட அலசல்கள். பழையகால வாக்களிக்கும் முறை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27002) பத்தி சொ.ஞா. ஐயா அழகா சொல்லியிருக்கார். அதிலிருந்து முறைகேடுகள் எல்லாக்காலத்திலயும் இருக்குன்னு தெரியிது. தேர்தல் கமிஷனோட நடவடிக்கைகள் ரொம்ப ஓவரோன்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26873) தாமரை சந்தேகப்படுறார். தேர்தல் அறிக்கைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26839)பத்தி முரளிராஜா சொல்றார்... யாரு அதிக இலவசங்கள் கொடுக்கிறாங்கன்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26880)அலசுறார் நிவாஸ்.

புல்லர் உறுதிமொழி பொய்யாம் இலவயங்கள்
அல்ல நமைஉயர்த்தும் ஆறு.

அப்படின்னு குணமதி ஐயா சொன்னதுபோல் இலவசங்களை வெறுத்து ஒதுக்க எல்லாரும் முன்வரணும்.

இதில இன்னாமா தப்பு? நம்மளாண்ட புடுங்குனத தானே நம்மளுக்கு தராங்கோ....

நல்லாயிருக்குடி.... உன் வீட்டை நான் ஏமாத்திப் பிடிங்கிட்டு அப்புறமா ஐயோ பாவம்னு சொல்லி உனக்கு ஒரு சேலை எடுத்துக் குடுத்தா சந்தோஷப்படுவியா?

அதெப்புடிம்மா...?

அது மாதிரிதான்.

தலைகொடுத்தும் தன்மானம் காத்திடுவார் மேலோர்
விலையேதும் உண்டோ அவர்க்கு.

அப்படின்னு ஜெகதீசன் ஐயா சொல்றார்.

இந்த தடவை கூட்டணியெல்லாந்தான் ஒரே கொளறுபடியாச்சேம்மா.... விஜயகாந்த பத்தி என்னென்னமோ கெனவு கண்டவங்களையெல்லாம் ஏமாத்திட்டாரே... ஆதன் கூட கடுதாசி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26953)போட்டினுகாராமே....

ஆற்றின் சுவைநீரும் ஆழ்கடலில் உப்பாகும்
மாற்றார் திறமறிந்து சேர்.

ஜெகதீசன் ஐயா சரியாதான் சொல்லியிருக்கார். யாரு யார் கூட சேர்ந்தா என்ன? ஆத்துத் தண்ணீர் கடலில் கலந்தா உப்புத்தண்ணீர்தானே.... அரசியலும் ஒரு கடல்தான். மக்களோட வியர்வையும் கண்ணீரும் அதில்தானே சங்கமம். அதனால்தான் எதையும் சிந்திச்சு செயல்படுத்தணும்னு தேர்தல் நேர சிந்தனைகள்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26990) கலையரசி ஒரு கட்டுரை எழுதியிருக்காங்க... 49 ஓவின் அவசியம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26978) பத்தி நாஞ்சில் த.க.ஜெய் எடுத்துவைக்கிறார். தேர்தல் வெற்றி யாருக்குன்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26626) உமாமீனா ஒரு திரி தொடங்க.. எல்லாரும் அலசு அலசுன்னு அலசுனாங்க...

எத்தினி அலசி இன்னா பிரயோசனம்? யாருதான் யோக்கியம்! அல்லாரும் குட்டையில ஊறுன மட்டைங்களா பூட்டாங்கோ....நல்லாத்தான் சொல்லினுக்காரு ராஜாராம், அரசியல்வாதிங்களுக்கு மூளையே இல்லன்னு... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26883)

அடி... போடி... இவளே... அவங்களுக்கா மூளை இல்ல.... நமக்குதான் மூளை இல்லாம மாத்தி மாத்தி அவங்களைப் பதவியில் வச்சிட்டு அப்புறமா குத்துதே குடையுதேன்னு வருத்தப்படறோம்....

குற்றம் புரிந்தோரே கோலோச்ச வேட்கின்றார்
உற்றறிந் தன்னார் ஒதுக்கு.

அப்படின்னு குணமதி ஐயா சொல்லியிருக்கார்.

எப்புடி ஒதுக்குறதாம்?

49 ஓவை வச்சிதான்.

அடுத்த நடை பாப்போம்....

இப்படிதான் ஒவ்வொரு நடையும் பாக்குறோம்... சரி... ஆண்டாளு.... நேரமாச்சே...சாப்புடுறியா?

ரசம் இருந்தா குடிக்க குடும்மா.. உன்வூட்டு ரசம் சூப்பரா கீது. நான் என்னா வெச்சாலும் நல்லாவே வரமாட்டேங்குது...

என்னடி ரங்கராஜன் மாதிரி புலம்புறே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26891)?

நெசந்தாம்மா... அதில ஏதோ சூச்சுமம் இருக்கு...

அதான்... எல்லாரும் நிறைய செய்முறை சொல்லியிருக்காங்களே... அதுப்படி ஒவ்வொருநாளும் வச்சிப்பாரு... பழகிடும்.

சரி... டி வி போடு.... எதுனா சேதிகீதான்னு பாக்கலாம்...

சேதி பாக்கவா...? சேலை பாக்கவாடி?

அட, இன்னாமா.... அதுக்கெல்லாம் பலய ஆளுங்கோதான்... சோபனா ரவின்னு ஒரு அம்மா இருந்துதே... இன்னா ஜோரா சேலை கட்டிவரும்... அப்புறம்.... சந்தியா...

ம்... உன்னை மாதிரிதான் சர்சரண் அப்போ இருந்த செய்தி வாசிப்பாளர்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26860) பத்தி ஏக்கமா எழுதியிருக்கார்...

சர்தாம்மா.... தோ பாரு.... வெளம்பரத்தப்போ இன்னா கண்றாவியா போட்டுனு ஆடுதுங்கோ.... பாக்க சொல்லோ பத்தினு வருது...

இதைத் தடுக்க யாருமே இல்லையான்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27014) நம்மளை மாதிரிதான் ஆத்மாவும் ஆதங்கத்தோடு எழுதியிருக்கார். மகளிர் அமைப்பு என்ன பண்ணுதுன்னு கேள்வி கேட்கறார்.... நியாயம்தானே....?

மெய்யாலுமா மகளிர் அமைப்பு எங்க கீது? போராட்டத்துக்குப் போசொல்லோ மூஞ்சி டிவியிலே தெரியும்னு அர அங்குலத்துக்கு மேக்கப் போட்டுனுதானே போறாங்கோ....

மேக்கப் இந்தக் காலத்தில் மட்டுமில்ல.... பழங்காலத்திலேயே இருந்திருக்குன்னு (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=522826#post522826)குணமதி ஐயா எடுத்துக் காட்டியிருக்கார் பாரு....

ஏம்மா... நீயே சொல்லு.... எது அயகு? மேக்கப்பா? இல்ல நல்ல ஆரோக்கியமான ஒடம்பா? எதுக்கு முக்கியத்துவம் குடுக்கணுமோ அத்த வுட்டு.... இன்னா பொண்ணுங்கோ.....

ஆரோக்கியமான உடம்புதான் அழகு. அதிகமான எடையைக் குறைக்க தங்கவேல் ஒரு உணவுக்கட்டுப்பாட்டு வழிமுறை சொல்லியிருக்கார்... அவருக்கு 60 நாளில் 30 கிலோ குறைஞ்சிதாம்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26956)

நெசமாவா? ஒடம்பு ஏறாம கச்சிதமா இருந்தா அதான் அயகு.

அதுசரி... அழகுன்னு சொல்லு...

அழகு.

நல்லாத்தானே சொல்றே.... பின்ன எதுக்கு அயகு... பயக்கம்னு சொல்றே?

இன்னாமா பண்ணுறது.... வர்சக்கணக்காப் பேசி பேசி பயகிப்பூடுச்சி....

நல்லாப் படிச்ச நாங்களே தமிழ்ல சரின்னு நினைச்சு எவ்வளவு தப்பு பண்றோம்னு பாரதியோட மொழிப்பயிற்சி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26989)யைப் படிக்கும்போதுதான் புரியிது. உன்னைச் சொல்லி என்ன ஆகறது?

சர்தாம்மா... சின்னப்புள்ளயிலேந்தே பயகுனத எப்புடி மாத்த முடியும்?

முடியாதுங்கறியா? இங்க பாரு.... நேத்துவரைக்கும் 'அங்க்கிள்'னு கூப்பிட்ட பக்கத்து வீட்டுச் சிறுமி தாவணி போட்டதும் அவங்க அம்மா சொல்லி 'அண்ணா'ன்னு கூப்பிட்டாளாம்... கார்த்தி வருத்தப்பட்டிருக்கார் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26915)..

என்னம்மா பண்றது? சின்னப் புள்ளைங்களுக்கு சில சமயம் வெவரம் தெரியாது..

ஜெகதீசன் ஐயா கூட…

அடுப்பில் வைத்த பாலும், ஆளான பெண்ணும் ஒன்று
இரண்டையும் கவனத்துடன் காக்கவேண்டும் என்பதால்னு பாடியிருக்காரே....

சரியான பேச்சும்மா....இந்தக்காலத்துல யார நம்புறது யார நம்பக்கூடாதுன்னே புரியலையே...எதுக்கும் உஷாரா கீறது நல்லதுதாம்மா... பைத்தியக்காரியக் கூட வுட்டுவெக்காத ஒலகம்மா இது...

சிவப்பி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27024) கதை படிச்சப்போவே எனக்கு அது புரிஞ்சுபோச்சு...

எங்கூட்டுகிட்ட ஒரு பையன் இப்புடிதாம்மா கிறுக்குப் புடிச்சிபோயி சுத்தினுருந்தான். போனமாசம் மெயின்ரோட்டுல லாரியில அடிபட்டுப் பூட்டான். அன்னிலேருந்து அந்தப்பக்கம் போசொல்லவே பயமாகீது...

மனிதர்கள் என்னைக்கிருந்தாலும் சாவைச் சந்திச்சுதான் ஆகணும்... சாகாமலேயே இருந்தா என்னவாகும்னு லென்ராம் ஒரு கேள்வி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=519120&postcount=601)எழுப்பி தாமரை பதில் சொல்லியிருக்கார் பாரு.... ஆனா.... நமக்குத் தெரிஞ்சவங்க... உறவுக்காரங்க... இப்படி யாரோட எதிர்பாராத விபத்துன்னு வரும்போது அது ரொம்பவே நம்மை உலுக்குது... இது மாதிரி ஒரு விபத்தைப் பத்தி ரசிகன் எழுதின மரணம் பயணிக்கும் சாலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26850) படிக்கும்போது நமக்கும் அதே உணர்வு வரும்...

விபத்துன்னாலே மனசு நோவுதும்மா... பாடகி சித்ராவோட கொயந்தையும் கொஞ்சம் மன வளர்ச்சி சரியில்லாதாமே... ஆட்டிசமோ என்னவோ சொல்லிகிறாங்கோ.... கொளத்தில வுயுந்துடுச்சே....நெனைக்கும்போதே பகீர்ங்குது.

யாராலயும் ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு அது. காலம்தான் அவங்களுக்கு அதை ஏற்றுக்கிற பக்குவத்தைத் தரணும்... எந்தச் சோகத்தையும் மறக்கச் செய்யும் மாய எந்திரம் காலம்தான் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27027)னு கார்த்திகேயன் சொல்லியிருக்கார்.

அதிகமா ஒருத்தர் மேல அன்பு வெச்சிட்டா அது அவஸ்தைதாம்மா....

நெஞ்சுளே விழித்துள அன்பின் பார்வை
கண்களில் எழுந்திடக் கனி.

கனியட்டும் நெஞ்சம் அன்பின் சாற்றைப்
பிழியட்டும் மெய்யெங் கும்

மெய்யெங் கும்உயிர்க் கட்டும் இன்பம்
சொர்க்கம் மண்ணில் இறங்கட்டும்.

அறிவோம் உணர்வோம் பெருகும் அன்பினை
அருந்துவோம் அமரரா வோம்.

இவையும் நாகரா ஐயா சொன்னதுதான். அன்புக்கு தோல்வியே இல்லை அப்படிங்குற விஷயத்தில் அமரனுக்கு சந்தேகம் வந்து இப்படி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=519696&postcount=605)ஒரு கேள்வி எழுப்பி தாமரையிடமிருந்து பதில் வாங்கியிருக்கார்.

முரண் படாதபோது
முரண் படுவது
முரண்படுவதா...
முரண்படாததா...

புரியலியேம்மா....

இது அக்னியோட கவிதை. கவிச்சமரில் வந்தது...கவிதைகள் தனியா பதியும்போது எல்லாருக்கும் கவனத்துக்கு வருது... ஆனா கவிச்சமரில் பதியும்போது பல பேர் பார்வைக்கு வராமப் போயிடுதில்ல... அர்த்தமுள்ள வியக்கவைக்கும் வரிகள் கவனிப்பாரில்லாமலேயே போற குறையைப் போக்கதான் கவிச்சமரின் அழகு தெரிய... ஆழம் அறிய... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26960) ன்னு ஒரு திரி தொடங்கியிருக்கார் அக்னி... நல்லா இருக்கு... இன்னும் சூடு பிடிக்கத் தொடங்கலை..

நிச்சயம் நல்லா வரும்... எத்தினி கவிஞருங்கோ இருக்காங்க... வேற எதுனா நல்ல சேதி மன்றத்திலகீதா?

கீது...கீது.... இளசு வந்திருக்கார்... 16000 பதிவுகள் தொட்டுவிட்டார்... இதை விட நல்ல சேதி வேறென்ன வேணும்... ரொம்பநாளைக்கப்புறம் சிவாஜி, கலையரசி, ரவீ இவங்களோட கதை வந்திருக்கு.... கெளதமன், ஜெகதீசன் ஐயா, தலை இவங்களோட பிறந்தநாள் கொண்டாடியிருக்கோம்.

எல்லாம் நல்ல விசயம் தான். கேக்கவே சந்தோசமாகீது. சரிம்மா...நான் கெளம்புறேன்... உன்னாண்ட நூறு ரூவா இருக்குமா? நாளக்கி ரேசனுக்குப் போவணும்... சம்பளத்துல கயிச்சிடு... இல்லனா பரவாயில்ல.... சேட்டு வூட்டுல கேட்டுப் பாக்குறேன்...

இருடி... என்கிட்ட இருக்கு.... இந்தா...

மவராசி கேக்கும்போதெல்லாம் பைசா குடுக்குறே... நீ நல்லா இருக்கணும்......... அய்யே... இன்னாத்துக்கு இப்புடி சிரிச்சினே தார? அட... மெய்யாலுமே ரேசனுக்குதான் கேக்குறேன்..

அதில்லடி... ஜெகதீசன் ஐயா எழுதின இடம் மாறிய கொடை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26958)கதை ஞாபகத்துக்கு வந்திட்டு... அதான்..

அய்யே…… நல்ல ஆளுதான்...போ...

********************************************

ஆதவா
18-04-2011, 03:04 PM
அம்மா தாயே..... உங்களை நினைக்கையில பொறாமைதாங்க வருது.. இந்தவாட்டி வேற ஒருத்தர் தான் செய்வார்னு எதிர்பார்த்திருந்தேன். திரும்பவும் நீங்க்ளே???

( இன்னும் படிக்கலை... ) படிச்சுட்டு கருத்து சொல்றேனுங்க

ஜானகி
18-04-2011, 04:24 PM
அப்பப்பா........என்ன சொல்வது..? பங்குனிப் பரவசம்....பரவலாக,...... மேலோட்டமாக,...... ஆழமாக, ....என்று எப்படிப் பார்த்தாலும்...ரசமாகவே இருக்கிறது, எப்போதும்போல..!

நீடூழி வாழ்க...வளர்க..!

இதுபோல படைப்புகளைத் தருக !

கீதம்
19-04-2011, 12:41 AM
அம்மா தாயே..... உங்களை நினைக்கையில பொறாமைதாங்க வருது.. இந்தவாட்டி வேற ஒருத்தர் தான் செய்வார்னு எதிர்பார்த்திருந்தேன். திரும்பவும் நீங்க்ளே???

( இன்னும் படிக்கலை... ) படிச்சுட்டு கருத்து சொல்றேனுங்க

நன்றி ஆதவா.... அந்த இன்னொருத்தர் யாரும் எனக்குத் தனிமடலில் அறிவிப்பு எதுவும் தராததால் நானே எழுதிவிட்டேன். குறைந்தபட்சம் என்னால் முடிந்த பங்களிப்பாக இருக்கட்டுமே...

கீதம்
19-04-2011, 12:42 AM
அட அட அட கதம்பம் அருமை..

நன்றி சரவணன்.

கீதம்
19-04-2011, 12:44 AM
அப்பப்பா........என்ன சொல்வது..? பங்குனிப் பரவசம்....பரவலாக,...... மேலோட்டமாக,...... ஆழமாக, ....என்று எப்படிப் பார்த்தாலும்...ரசமாகவே இருக்கிறது, எப்போதும்போல..!

நீடூழி வாழ்க...வளர்க..!

இதுபோல படைப்புகளைத் தருக !

நன்றி ஜானகி அம்மா...

இளசு
19-04-2011, 05:34 AM
கீதம் அவர்களே...


என்ன சொல்லி இப்பதிவைப் பாராட்ட?

ஈடுபாடு, உழைப்பு, கவனிப்பு, இரசிப்பு, எழுத்துவளம் எல்லாம் அமைந்த உங்களைப் போன்ற ஒருவர்தாம் இப்படி ஓர் அரும்பதிவை அளிக்க இயலும்.

அபாரம் என்ற சொல்லைச் சிறிதாக்கி விட்டது உங்கள் திறம் சாற்றும் இத்திரி..

Nivas.T
19-04-2011, 09:55 AM
:aktion033::icon_03::music-smiley-012::music-smiley-008::sport-smiley-018::medium-smiley-080::music-smiley-009::whistling::music-smiley-010::musik010::4_1_8::icon_clap::shutup::huepfen024::icon_good::062802photo_prv::icon_b::D

பூமகள்
19-04-2011, 11:06 AM
பெரியண்ணாவின் வாய்மொழியை வழிமொழிகிறேன் கீதம் அக்கா..:icon_good:

அசர வைக்கும் திறன்.. பாராட்ட வார்த்தைகளின்றி நிவாஸைப் போல் நானும்.. :aktion033::icon_03:

அமரன்
19-04-2011, 02:11 PM
சொல் புதிது கேட்டானாம் பாரதி, கவி படிக்க.

அவனைப் போலவே நானும், இப்போது..

ஆதவா
19-04-2011, 03:11 PM
சொல் புதிது கேட்டானாம் பாராதி, கவி படிக்க.

அவனைப் போலவே நானும், இப்போது கேட்கிறேன்... புதுசா இருந்தா சொல்லுங்கள்!

என்னா ஒரு வில்லத்தனம்?!! :eek:

கீதம்
20-04-2011, 02:30 AM
கீதம் அவர்களே...


என்ன சொல்லி இப்பதிவைப் பாராட்ட?

ஈடுபாடு, உழைப்பு, கவனிப்பு, இரசிப்பு, எழுத்துவளம் எல்லாம் அமைந்த உங்களைப் போன்ற ஒருவர்தாம் இப்படி ஓர் அரும்பதிவை அளிக்க இயலும்.

அபாரம் என்ற சொல்லைச் சிறிதாக்கி விட்டது உங்கள் திறம் சாற்றும் இத்திரி..

மிகவும் நன்றி இளசு அவர்களே.

கீதம்
20-04-2011, 02:33 AM
:aktion033::icon_03::music-smiley-012::music-smiley-008::sport-smiley-018::medium-smiley-080::music-smiley-009::whistling::music-smiley-010::musik010::4_1_8::icon_clap::shutup::huepfen024::icon_good::062802photo_prv::icon_b::D

:icon_blush::icon_b::)

கீதம்
20-04-2011, 02:35 AM
பெரியண்ணாவின் வாய்மொழியை வழிமொழிகிறேன் கீதம் அக்கா..:icon_good:

அசர வைக்கும் திறன்.. பாராட்ட வார்த்தைகளின்றி நிவாஸைப் போல் நானும்.. :aktion033::icon_03:

நன்றி பூமகள்.

கீதம்
20-04-2011, 02:36 AM
சொல் புதிது கேட்டானாம் பாரதி, கவி படிக்க.

அவனைப் போலவே நானும், இப்போது..

கிடைத்தவுடன் சொல்லியனுப்புங்கோ... வாறன்.:)

கீதம்
20-04-2011, 02:45 AM
என்னா ஒரு வில்லத்தனம்?!! :eek:

:icon_nono: :sport-smiley-019: :)

meera
20-04-2011, 10:33 AM
நான் மன்றம் வரும் நேரம் மிக குறைவு. அனைத்தையும் படிக்க ஆர்வம் உண்டு ஆனால் நேரம் இல்லை. அரக்க பறக்க ஒரு நோட்டம்விட்டுவிட்டு செல்லும் என்னையும் பதிவிட வைக்கும் பதிவுகளுக்கு சொந்தக்காரர் கீதம்.

பொறுமையாய் படித்து,அழகாய் உயிர்கொடுத்து ...

அருமை தோழி. :lachen001::lachen001:

சிவா.ஜி
20-04-2011, 12:04 PM
திரும்பத் திரும்ப....மன்றத்தின் வீதிகளில் எந்தத் திருப்பத்திலும், திரும்பத் திரும்ப....திறமை கொட்டிக்கிடக்கிறது. எழுத்துக்களின் வளமை விரவிக்கிடக்கிறது.

நுனிப்புல் மேய வருபவர்களையும், அடிவரை ருசிக்க ஆயத்த பலகாரமாய் ஆக்கிக்கொடுக்கும், எங்கள் தங்கை கீதத்தை....திரும்பத் திரும்ப அதிசயிப்பதைத்தவிர என்ன செய்ய...?

மனம்நிறைந்த வாழ்த்துக்களும், மனமார்ந்த நன்றிகளும் தங்கையே.....!!!

கலையரசி
20-04-2011, 05:43 PM
மூன்று மாதங்களாய் அடுத்தடுத்து மன்றத்தின் அனைத்துப் பதிவுகளையும் ஒரு சேரக் கோர்த்துக் கதம்ப மாலையாக்கி மன்றத்தை அலங்கரிக்கும் கீதத்தை என்ன சொல்லிப் பாராட்ட? ”வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றித் தவிக்கிறேன்”

பாராட்டுக்களுடன் வாழ்த்துகிறேன் கீதம்!

கீதம்
21-04-2011, 12:24 PM
நான் மன்றம் வரும் நேரம் மிக குறைவு. அனைத்தையும் படிக்க ஆர்வம் உண்டு ஆனால் நேரம் இல்லை. அரக்க பறக்க ஒரு நோட்டம்விட்டுவிட்டு செல்லும் என்னையும் பதிவிட வைக்கும் பதிவுகளுக்கு சொந்தக்காரர் கீதம்.

பொறுமையாய் படித்து,அழகாய் உயிர்கொடுத்து ...

அருமை தோழி. :lachen001::lachen001:

ஆகா என்ன ஆச்சர்யம்! அவசரப் போக்கிலும் அழகாயொரு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திச் செல்கிறீர்கள். மிகவும் நன்றி மீரா... நேரம் கிடைக்கும்போது மன்றவலம் வாருங்கள். :icon_b:

கீதம்
21-04-2011, 12:25 PM
திரும்பத் திரும்ப....மன்றத்தின் வீதிகளில் எந்தத் திருப்பத்திலும், திரும்பத் திரும்ப....திறமை கொட்டிக்கிடக்கிறது. எழுத்துக்களின் வளமை விரவிக்கிடக்கிறது.

நுனிப்புல் மேய வருபவர்களையும், அடிவரை ருசிக்க ஆயத்த பலகாரமாய் ஆக்கிக்கொடுக்கும், எங்கள் தங்கை கீதத்தை....திரும்பத் திரும்ப அதிசயிப்பதைத்தவிர என்ன செய்ய...?

மனம்நிறைந்த வாழ்த்துக்களும், மனமார்ந்த நன்றிகளும் தங்கையே.....!!!

உங்கள் வாழ்த்துகளும் ஊக்கமிகு வார்த்தைகளும் எனக்குப் புத்துணர்வு அளிக்கின்றன. நன்றி அண்ணா.

கீதம்
22-04-2011, 08:40 AM
மூன்று மாதங்களாய் அடுத்தடுத்து மன்றத்தின் அனைத்துப் பதிவுகளையும் ஒரு சேரக் கோர்த்துக் கதம்ப மாலையாக்கி மன்றத்தை அலங்கரிக்கும் கீதத்தை என்ன சொல்லிப் பாராட்ட? ”வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றித் தவிக்கிறேன்”

பாராட்டுக்களுடன் வாழ்த்துகிறேன் கீதம்!

உங்கள் மனந்திறந்த பாராட்டுகளும் வாழ்த்துகளுமே என் மனக்குளிரப் போதுமானவை. மிகவும் நன்றி அக்கா.

உமாமீனா
24-04-2011, 06:57 AM
:aktion033::aktion033::icon_clap::icon_clap::4_1_8::music-smiley-009::music-smiley-009::food-smiley-004:

கீதம்
24-04-2011, 09:21 AM
:aktion033::aktion033::icon_clap::icon_clap::4_1_8::music-smiley-009::music-smiley-009::food-smiley-004:

:icon_03: :icon_b: :)

M.Jagadeesan
25-04-2011, 04:35 AM
பங்குனிப் பரவசம்
படிப்பதற்கு அதிரசம்

கீதம்
25-04-2011, 06:35 AM
பங்குனிப் பரவசம்
படிப்பதற்கு அதிரசம்

ரசித்துச் சுவைத்ததற்கு நன்றி ஐயா.

நாஞ்சில் த.க.ஜெய்
25-04-2011, 10:11 AM
எத்தன தடவைதான் பாராட்டுறது என்று தெரியவில்லை ஆனால் எத்தனைதடவைதான் பாராட்டினாலும் அந்த பாராட்டுக்கு சொந்தகாரர் கீதம் அவர்கள் ..மார்கழி தேரோட்டமாக உங்கள் பங்குனி பரவசம்...தொடருங்கள்....

கீதம்
27-04-2011, 01:00 AM
எத்தன தடவைதான் பாராட்டுறது என்று தெரியவில்லை ஆனால் எத்தனைதடவைதான் பாராட்டினாலும் அந்த பாராட்டுக்கு சொந்தகாரர் கீதம் அவர்கள் ..மார்கழி தேரோட்டமாக உங்கள் பங்குனி பரவசம்...தொடருங்கள்....

மிகவும் நன்றி ஜெய்.

ஆதவா
27-04-2011, 06:56 AM
அருமை தோழி. :lachen001::lachen001:

அதெல்லாம் சரி.... எதுக்காக சிரிச்சீங்க??? :D:D:lachen001::lachen001:

சசிதரன்
27-04-2011, 03:19 PM
ஒவ்வொரு பதிவையும் ஆழமாக கவனித்து பின்னபட்டிருக்கும் கதம்பம்.... அருமையான பதிவு கீதம் அக்கா,,, அசத்தறீங்க நீங்க... :)

கீதம்
28-04-2011, 09:19 AM
ஒவ்வொரு பதிவையும் ஆழமாக கவனித்து பின்னபட்டிருக்கும் கதம்பம்.... அருமையான பதிவு கீதம் அக்கா,,, அசத்தறீங்க நீங்க... :)

நன்றி சசிதரன்.:)

ஆதி
28-04-2011, 01:52 PM
தொடர்சியாக நீங்கள் பதித்த மூன்றாவது நிழற்படம் இது...

நிழற்படம் எழுதல் அசாத்தியமான ஒன்று, அயர்ச்சியின்றி எல்லா பதிவுகளையும் வாசித்து, நினைவில் வைத்து, நிழற்படம் சொல்ல அதற்கு ஏதுவான சுவையான* ஒரு கதையை உருவாக்கி, அதில் தகுந்த இடங்களில் தேர்ந்த படைப்புக்களை கோர்த்து சொல்தல் சாதார்ண ஒன்றல்ல...

பிரம்மித்து பார்க்கிறேன் அக்கா...


வாழ்த்துக்கள்

கீதம்
30-04-2011, 02:19 AM
தொடர்சியாக நீங்கள் பதித்த மூன்றாவது நிழற்படம் இது...

நிழற்படம் எழுதல் அசாத்தியமான ஒன்று, அயர்ச்சியின்றி எல்லா பதிவுகளையும் வாசித்து, நினைவில் வைத்து, நிழற்படம் சொல்ல அதற்கு ஏதுவான சுவையான* ஒரு கதையை உருவாக்கி, அதில் தகுந்த இடங்களில் தேர்ந்த படைப்புக்களை கோர்த்து சொல்தல் சாதார்ண ஒன்றல்ல...

பிரம்மித்து பார்க்கிறேன் அக்கா...


வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு நன்றி ஆதன். இந்தமுறை நீங்கள் தயாரிப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். :)

இது மூன்றாவது அல்ல. நான்காவது நிழற்படம்.:icon_b:

Ravee
30-04-2011, 08:39 AM
free youtube downloader and converter (http://www.savetubevideo.com/ ), limewire (http://www.musicfrost.com/ )நீ சொன்னதும் எனக்கு சசிதரன் வீட்டுப் பூனைக்குட்டிங்க ஞாபகம் வந்திட்டுது..

அவரு என்ன.... ரொம்பநாளைக்கப்புறம் வந்தாரு... வந்ததிலேருந்து பூனை, கயுகு, வண்ணாத்திப்பூச்சி... யானைன்னு கவித எழுதினிருக்காரு....

அவருக்கு தோணுது... எழுதுறார்.... பெருங்கனவுன்னு ஒரு கவிதை எழுதியிருக்காரே... கனவின் முடிவில் வெட்டப்பட்ட தலை யாரோடதுன்னு தெரியலைன்னு சொல்லியிருக்கார்.

ராசாத்தியோடதோ என்னவோ? :eek: :eek: :eek:

என்னடி உளர்றே..?

கீதத்தோட நேர்த்திக்கடன்ல அப்படித்தானே முடிச்சிருக்காங்கோ...


ஆஹா உண்மையிலேயே இதை படிக்கும் போது சிரிச்சுட்டேன் .... ரொம்பவே அசத்துறீங்க அக்கா ... :icon_b: :icon_b: :icon_b:

கீதம்
01-05-2011, 10:26 AM
free youtube downloader and converter (http://www.savetubevideo.com/ ), limewire (http://www.musicfrost.com/ )நீ சொன்னதும் எனக்கு சசிதரன் வீட்டுப் பூனைக்குட்டிங்க ஞாபகம் வந்திட்டுது..

அவரு என்ன.... ரொம்பநாளைக்கப்புறம் வந்தாரு... வந்ததிலேருந்து பூனை, கயுகு, வண்ணாத்திப்பூச்சி... யானைன்னு கவித எழுதினிருக்காரு....

அவருக்கு தோணுது... எழுதுறார்.... பெருங்கனவுன்னு ஒரு கவிதை எழுதியிருக்காரே... கனவின் முடிவில் வெட்டப்பட்ட தலை யாரோடதுன்னு தெரியலைன்னு சொல்லியிருக்கார்.

ராசாத்தியோடதோ என்னவோ? :eek: :eek: :eek:

என்னடி உளர்றே..?

கீதத்தோட நேர்த்திக்கடன்ல அப்படித்தானே முடிச்சிருக்காங்கோ...


ஆஹா உண்மையிலேயே இதை படிக்கும் போது சிரிச்சுட்டேன் .... ரொம்பவே அசத்துறீங்க அக்கா ... :icon_b: :icon_b: :icon_b:

நன்றி ரவீ.

தாமரை
22-06-2011, 02:00 PM
சித்திரையைக் காணோமே.. சித்திரை வைகாசியில் கத்திரி என்பதை மிகச் சரியா தப்பா புரிஞ்சிகிட்டாங்களோ?

யாராச்சும் சொல்லுங்கப்பா! சித்திரையில் என்ன நடந்தது?

கீதம்
22-06-2011, 10:47 PM
சித்திரையைக் காணோமே.. சித்திரை வைகாசியில் கத்திரி என்பதை மிகச் சரியா தப்பா புரிஞ்சிகிட்டாங்களோ?

யாராச்சும் சொல்லுங்கப்பா! சித்திரையில் என்ன நடந்தது?

அதானே! யாராச்சும் சொல்லுங்கப்பா.... என்ன நடந்ததுன்னு!:)

vynrael
11-10-2020, 01:16 PM
Обры (http://audiobookkeeper.ru/book/703)132.8 (http://cottagenet.ru/plan/703)XIII (http://eyesvision.ru)PERF (http://eyesvisions.com/eyesight/7)Вита (http://factoringfee.ru/t/1110342)Наум (http://filmzones.ru/t/838236)Rave (http://gadwall.ru/t/832402)Feli (http://gaffertape.ru/t/889732)прод (http://gageboard.ru/t/935938)соде (http://gagrule.ru/t/787227)Буто (http://gallduct.ru/t/1151991)Отеч (http://galvanometric.ru/t/760791)инос (http://gangforeman.ru/t/852082)колл (http://gangwayplatform.ru/t/1083521)Crys (http://garbagechute.ru/t/1143608)Лиса (http://gardeningleave.ru/t/847699)230А (http://gascautery.ru/t/1143303)Grad (http://gashbucket.ru/t/481624)Ecli (http://gasreturn.ru/t/1143597)Guil (http://gatedsweep.ru/t/664746)
прак (http://gaugemodel.ru/t/1160981)запи (http://gaussianfilter.ru/t/1152625)Tesc (http://gearpitchdiameter.ru/t/922983)Автв (http://geartreating.ru/t/881878)Пипу (http://generalizedanalysis.ru/t/831010)Пост (http://generalprovisions.ru/t/813849)печа (http://geophysicalprobe.ru/t/810364)совр (http://geriatricnurse.ru/t/837715)Глад (http://getintoaflap.ru/t/830911)Laur (http://getthebounce.ru/t/338447)Viva (http://habeascorpus.ru/t/1083080)XXXL (http://habituate.ru/t/1089397)Шумо (http://hackedbolt.ru/t/673298)Ther (http://hackworker.ru/t/1106733)Ayve (http://hadronicannihilation.ru/t/1101046)Outr (http://haemagglutinin.ru/t/1060388)Ипат (http://hailsquall.ru/t/675745)Иллю (http://hairysphere.ru/t/811879)Gore (http://halforderfringe.ru/t/662463)Livi (http://halfsiblings.ru/t/820742)
Коню (http://hallofresidence.ru/t/593158)Жуко (http://haltstate.ru/t/732368)псих (http://handcoding.ru/t/925637)Impe (http://handportedhead.ru/t/1028956)Lave (http://handradar.ru/t/563331)Anan (http://handsfreetelephone.ru/t/771122)Пору (http://hangonpart.ru/t/814965)серт (http://haphazardwinding.ru/t/566073)Push (http://hardalloyteeth.ru/t/566206)Coto (http://hardasiron.ru/t/567530)Губи (http://hardenedconcrete.ru/t/567991)Ионц (http://harmonicinteraction.ru/t/654027)Буян (http://hartlaubgoose.ru/t/474058)Limi (http://hatchholddown.ru/t/624541)Суво (http://haveafinetime.ru/t/831526)Juan (http://hazardousatmosphere.ru/t/636749)Диче (http://headregulator.ru/t/847770)Иллю (http://heartofgold.ru/t/1348593)Дерб (http://heatageingresistance.ru/t/560615)Four (http://heatinggas.ru/t/1183639)
Разм (http://heavydutymetalcutting.ru/t/1181789)Pali (http://jacketedwall.ru/t/604320)Koff (http://japanesecedar.ru/t/607706)авто (http://jibtypecrane.ru/t/671456)Прои (http://jobabandonment.ru/t/620667)СЕРД (http://jobstress.ru/t/620701)Гого (http://jogformation.ru/t/671632)Eurh (http://jointcapsule.ru/t/1142109)Гойх (http://jointsealingmaterial.ru/t/1147137)Писа (http://journallubricator.ru/t/853598)мног (http://juicecatcher.ru/t/892888)Osir (http://junctionofchannels.ru/t/1179688)Кару (http://justiciablehomicide.ru/t/1049985)Дмит (http://juxtapositiontwin.ru/t/865254)запи (http://kaposidisease.ru/t/852900)Kyba (http://keepagoodoffing.ru/t/832136)13,3 (http://keepsmthinhand.ru/t/611238)Aris (http://kentishglory.ru/t/1182438)Сиго (http://kerbweight.ru/t/922079)Zone (http://kerrrotation.ru/t/607812)
Zone (http://keymanassurance.ru/t/610223)ELEG (http://keyserum.ru/t/1180237)Тере (http://kickplate.ru/t/727324)Jani (http://killthefattedcalf.ru/t/818843)Zone (http://kilowattsecond.ru/t/607777)Соде (http://kingweakfish.ru/t/672250)нарк (http://kinozones.ru/film/703)Спиц (http://kleinbottle.ru/t/670443)сере (http://kneejoint.ru/t/606777)Воро (http://knifesethouse.ru/t/1044569)Zone (http://knockonatom.ru/t/609002)язык (http://knowledgestate.ru/t/673829)Лонд (http://kondoferromagnet.ru/t/750515)Zone (http://labeledgraph.ru/t/1193715)реда (http://laborracket.ru/t/833350)Pain (http://labourearnings.ru/t/1091530)Khos (http://labourleasing.ru/t/901895)Иллю (http://laburnumtree.ru/t/1169566)Zone (http://lacingcourse.ru/t/1188171)Zone (http://lacrimalpoint.ru/t/1187391)
Zone (http://lactogenicfactor.ru/t/1186183)Anth (http://lacunarycoefficient.ru/t/1154071)Time (http://ladletreatediron.ru/t/841236)нали (http://laggingload.ru/t/871539)Tama (http://laissezaller.ru/t/1059376)Медн (http://lambdatransition.ru/t/857290)Черн (http://laminatedmaterial.ru/t/864169)Маль (http://lammasshoot.ru/t/1047854)зака (http://lamphouse.ru/t/1184363)Иллю (http://lancecorporal.ru/t/1013152)Черк (http://lancingdie.ru/t/849409)инсп (http://landingdoor.ru/t/855347)02-1 (http://landmarksensor.ru/t/1184070)Zone (http://landreform.ru/t/1186266)Коже (http://landuseratio.ru/t/1046785)Zone (http://languagelaboratory.ru/t/1190410)марк (http://largeheart.ru/shop/1161032)пере (http://lasercalibration.ru/shop/590220)меся (http://laserlens.ru/lase_zakaz/711)хоро (http://laserpulse.ru/shop/590384)
Голд (http://laterevent.ru/shop/1031042)Elec (http://latrinesergeant.ru/shop/452529)Sams (http://layabout.ru/shop/452364)Mari (http://leadcoating.ru/shop/180172)Мака (http://leadingfirm.ru/shop/105646)Tolo (http://learningcurve.ru/shop/464909)PN-0 (http://leaveword.ru/shop/464969)Olme (http://machinesensible.ru/shop/194332)особ (http://magneticequator.ru/shop/501737)М-50 (http://magnetotelluricfield.ru/shop/195430)15-3 (http://mailinghouse.ru/shop/268012)IKob (http://majorconcern.ru/shop/270411)Pier (http://mammasdarling.ru/shop/305845)STAR (http://managerialstaff.ru/shop/160058)PEUG (http://manipulatinghand.ru/shop/613813)НТаш (http://manualchoke.ru/shop/598277)Cive (http://medinfobooks.ru/book/703)Blue (http://mp3lists.ru/item/703)Арти (http://nameresolution.ru/shop/575320)поро (http://naphtheneseries.ru/shop/104985)
Edit (http://narrowmouthed.ru/shop/461262)камн (http://nationalcensus.ru/shop/501456)Дубр (http://naturalfunctor.ru/shop/302519)пазл (http://navelseed.ru/shop/101127)язык (http://neatplaster.ru/shop/454923)Aura (http://necroticcaries.ru/shop/175222)PACI (http://negativefibration.ru/shop/186146)Wind (http://neighbouringrights.ru/shop/507094)Pilo (http://objectmodule.ru/shop/108842)Pola (http://observationballoon.ru/shop/97332)Vite (http://obstructivepatent.ru/shop/98583)серт (http://oceanmining.ru/shop/458192)Roya (http://octupolephonon.ru/shop/571712)защи (http://offlinesystem.ru/shop/148308)Rhyt (http://offsetholder.ru/shop/201073)Коно (http://olibanumresinoid.ru/shop/148448)ЛитР (http://onesticket.ru/shop/578899)ЛитР (http://packedspheres.ru/shop/580864)Деми (http://pagingterminal.ru/shop/683214)Bete (http://palatinebones.ru/shop/682182)
Some (http://palmberry.ru/shop/491412)Sett (http://papercoating.ru/shop/582496)ЛитР (http://paraconvexgroup.ru/shop/688188)худо (http://parasolmonoplane.ru/shop/1167494)Albe (http://parkingbrake.ru/shop/1167536)Соро (http://partfamily.ru/shop/1166595)Чмут (http://partialmajorant.ru/shop/1171250)Леон (http://quadrupleworm.ru/shop/1539246)Fyod (http://qualitybooster.ru/shop/487999)Маур (http://quasimoney.ru/shop/594383)Jewe (http://quenchedspark.ru/shop/596439)Коле (http://quodrecuperet.ru/shop/1070675)«Тре (http://rabbetledge.ru/shop/1072857)«Сов (http://radialchaser.ru/shop/313592)Albu (http://radiationestimator.ru/shop/508639)Love (http://railwaybridge.ru/shop/517024)стар (http://randomcoloration.ru/shop/512679)Реме (http://rapidgrowth.ru/shop/886987)энер (http://rattlesnakemaster.ru/shop/1078189)сече (http://reachthroughregion.ru/shop/317952)
Bake (http://readingmagnifier.ru/shop/513206)Алек (http://rearchain.ru/shop/641299)(Вед (http://recessioncone.ru/shop/516468)прои (http://recordedassignment.ru/shop/880089)Кери (http://rectifiersubstation.ru/shop/1053835)Форм (http://redemptionvalue.ru/shop/1062130)репе (http://reducingflange.ru/shop/1679593)Rolf (http://referenceantigen.ru/shop/1693175)ради (http://regeneratedprotein.ru/shop/1760225)Andr (http://reinvestmentplan.ru/shop/1198838)Self (http://safedrilling.ru/shop/1814134)ребе (http://sagprofile.ru/shop/1054210)Соде (http://salestypelease.ru/shop/1067131)парт (http://samplinginterval.ru/shop/1435853)Горо (http://satellitehydrology.ru/shop/1462603)Дани (http://scarcecommodity.ru/shop/1492150)Куба (http://scrapermat.ru/shop/1462542)Рудн (http://screwingunit.ru/shop/1493839)Тимч (http://seawaterpump.ru/shop/1323611)Hell (http://secondaryblock.ru/shop/288782)
Enid (http://secularclergy.ru/shop/1481727)Парф (http://seismicefficiency.ru/shop/313733)Harp (http://selectivediffuser.ru/shop/399379)испр (http://semiasphalticflux.ru/shop/400463)Nass (http://semifinishmachining.ru/shop/467093)меся (http://spicetrade.ru/spice_zakaz/711)меся (http://spysale.ru/spy_zakaz/711)меся (http://stungun.ru/stun_zakaz/711)расс (http://tacticaldiameter.ru/shop/482725)кото (http://tailstockcenter.ru/shop/490081)Луки (http://tamecurve.ru/shop/498090)Kare (http://tapecorrection.ru/shop/482983)Горо (http://tappingchuck.ru/shop/487168)Ханн (http://taskreasoning.ru/shop/498821)ужин (http://technicalgrade.ru/shop/1821385)Феок (http://telangiectaticlipoma.ru/shop/1879792)Видо (http://telescopicdamper.ru/shop/659657)чита (http://temperateclimate.ru/shop/342544)Войк (http://temperedmeasure.ru/shop/400448)Mamb (http://tenementbuilding.ru/shop/979907)
tuchkas (http://tuchkas.ru/)Twig (http://ultramaficrock.ru/shop/980247)Cent (http://ultraviolettesting.ru/shop/483052)