PDA

View Full Version : சிநேகப் பொழுதுகள்!



ரசிகன்
18-04-2011, 09:08 AM
தொலைதூர மௌனங்கள்
நம்மை சடலங்கலாகவே பாவித்து
சுமார் மூன்றரை ஆண்டுகள்!

ஒன்றும் புதியதாய் சொல்வதற்கில்லை.,
சராசரி ஆண் பெண் நட்புதான்
எனினும்
கொஞ்சம் கூடுதலாகவே
கவனிக்கப்பட்டிருக்கிறோம் நம் வட்டத்தில்!

குறைந்தபட்ச நம் வாழ்வை
சுறுக்கமாய் சொல்வதென்றால்....
வகுப்புகள் திருடி
சாலையோரம் வைத்தோம்...
நேரங்கள் கழிக்க
சண்டையிட்டே தொலைத்தோம்...
அதிகபட்ச விளைவு நட்பு!

காதலெனும் காந்தப்பறவை
உன்னை கவர்ந்து தூக்கிப்போக
உலகப்பார்வையில் நான் வேற்றுகிரக வாசி!

இடைவெளிகளும் களைத்துப்போக
தாமாகவே முன்வந்தாய்
ஒரு மன்னிப்போடு
ஒரு நலம் விசாரிப்போடு!

அரைமணி நேர உரையாடல்
நீ முடித்துப்போக
நான் மீண்டுமொரு முறை வாசிக்கிறேன்...

உன் அம்மாவின் காரக்குழம்பு
என் நாவை இனித்துப்போவதை
மறுப்பதற்கில்லை!

sarcharan
18-04-2011, 01:06 PM
சூப்பர் கவிதை சார்

ஷீ-நிசி
21-04-2011, 01:17 PM
உன் அம்மாவின் காரக்குழம்பு
என் நாவை இனித்துப்போவதை
மறுப்பதற்கில்லை!


காரக்குழம்பு இனித்துப்போவதை... அழகிய முரண்!

இளசு
21-04-2011, 09:42 PM
ஆண் - பெண் கல்லூரி கால நட்பு..
அதன் வெளிவட்டம் முளைக்கும் காதல்..
காதலால்/ காலத்தால் தகரும் உள்வட்டம்..
மனச்சிக்கல்... மனத்தேங்கல்...

வாசிக்கும் பலரையும் பாதிக்கும் சேதி உள்ள கவிதை..


ரசிகனுக்குப் பாராட்டு!

ரசிகன்
26-04-2011, 10:20 AM
சூப்பர் கவிதை சார்
நன்றி சரண் :-)

ரசிகன்
26-04-2011, 10:21 AM
காரக்குழம்பு இனித்துப்போவதை... அழகிய முரண்!
:):):)

நன்றி ஷீ-நிசி :)

ரசிகன்
26-04-2011, 10:21 AM
ஆண் - பெண் கல்லூரி கால நட்பு..
அதன் வெளிவட்டம் முளைக்கும் காதல்..
காதலால்/ காலத்தால் தகரும் உள்வட்டம்..
மனச்சிக்கல்... மனத்தேங்கல்...

வாசிக்கும் பலரையும் பாதிக்கும் சேதி உள்ள கவிதை..


ரசிகனுக்குப் பாராட்டு!
நன்றி இளசு சார்! :)