PDA

View Full Version : எப்படி கேட்பேன் உன்னிடம்..,



ilamaran
18-04-2011, 09:03 AM
எனக்கு மட்டுமல்ல,
யாருக்குமே புரியவில்லை..,
கணவனோடு கடந்து செல்லும்
உன் கண்ணில் தெரிவது
கலைந்து விட்ட நம் காதலின் மிச்சமா?
அடைந்து விட்ட கௌரவத்தின் கர்வமா?
எப்படி கேட்பேன் உன்னிடம்?

அமரன்
18-04-2011, 07:28 PM
நிகழ்வை உணர்வதே வாழ்க்கை...

பாராட்டுகள்.

Nivas.T
19-04-2011, 06:54 AM
நானிருந்த சிறையில்
அவனுக்கு ஆயுள் தண்டனை

அவளவுதான்

பாராட்டுகள் இளமாறன்

உமாமீனா
19-04-2011, 09:04 AM
:D:lachen001:மிச்சமல்ல எச்சம்.....ரொம்ப பீலிங்.... நல்லா இருக்குங்கோ

முரளிராஜா
19-04-2011, 09:30 AM
இளமாறன் கவிதை மிகவும் அருமை
அசத்திட்டிங்க என் பாராட்டுக்கள்


கிழட்டி விட்டவங்ககிட்ட கேள்வி கேக்கறத விட்டுட்டு
புதுசா ஒரு இடத்தில் அப்ளிகேசன் போடுங்க:D:D:D:D:D:D

கீதம்
20-04-2011, 12:43 AM
எனக்கு மட்டுமல்ல,
யாருக்குமே புரியவில்லை..,
கணவனோடு கடந்து செல்லும்
உன் கண்ணில் தெரிவது
கலைந்து விட்ட நம் காதலின் மிச்சமா?
அடைந்து விட்ட கௌரவத்தின் கர்வமா?
எப்படி கேட்பேன் உன்னிடம்?

ஏன் கேட்கவேண்டும்?
எதை அறியவேண்டும்?
காதலின் மிச்சமென்றால்
கர்வம் கொள்வாயா?
கெளரவத்தின் கர்வமென்றால்
காதலைக் கொல்வாயா?
கலைந்துபோன காதலுக்கு
கண்களில் சாட்சி தேடாதே...
கணவனாகிக் கரம்பற்றத்
தவறிவிட்டாய்...
கனவானாகியேனும் தவறிழைக்காது
கண்டுகொள்ளாமல் கடந்துபோ!

நிகழ்வை உணர்வதே வாழ்க்கையாம்!

வாழ்க்கையை உணரவைப்பதே நிகழ்வுகள்தாம்!

பாராட்டுகள் இளமாறன்.