PDA

View Full Version : பூனைக்குட்டிகள்.. அம்மா.. மற்றும் தாய் பூனை



சசிதரன்
16-04-2011, 04:30 PM
மொட்டைமாடி ரங்கோன்மல்லி மறைவில்
அந்த குட்டிகள் முதலில் இருந்தது.
மழை பெய்தால் நனையுமென
தாழ்வாரத்தில் எடுத்து விட்டான் அண்ணன்.

தினம் தினம் சோறு வைத்ததால்
அம்மாவோடு மிகவும் இணக்கமானது
பச்சைக்கண் கொண்ட தாய் பூனை.

கொஞ்சமாய் வளரத் தொடங்கிய குட்டிகள்
விளையாடும் அழகை பார்த்தே மாலைகள் கழிந்தது.

அவற்றின் ஒவ்வொரு சத்ததிற்கும்
அர்த்தங்கள் சொல்லிக் கொண்டிருப்பாள் அம்மா.
சமயங்களில் எனக்கும் கூட
அவை அம்மாவுடன் பேசுவதாகவே தோன்றும்.

எப்பொழுதும் மாலையில்
வீடு திரும்பிவிடும் தாய் பூனை
இன்றோடு கணக்கிட்டால்
ஆறு நாட்களாகிறது வீடு திரும்பி.

குட்டிகள் எப்பொழுதும் போல்
விளையாடிக் கொண்டிருக்கிறது.
அம்மா எப்பொழுதும் போல்
வேளைக்கு சோறு வைத்து
அதனோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டு
இரவானால் தாய் பூனையின் பச்சைக் கண்களை
நினைவுக் கொள்கிறாள்.

எனக்கு மட்டும் ஏனோ
அந்த பூனைக் குட்டிகளை எங்காவது
கொண்டு விட்டு விட தோன்றுகிறது.

இளசு
16-04-2011, 11:20 PM
தன் தாயும் பிறிதொருநாள் இதே போல் பிரியலாம் என்ற உள்வருத்தமா?

தாய்ப்பாசப் பங்குக்கு வந்த குட்டிகள் மேல் அசூயையா?

கடைசி வரிக்கான காரணம் இன்னும் எனக்குப் பிடிபடாமல்..


கவிதைக்குப் பாராட்டு சசி...

உமாமீனா
17-04-2011, 03:12 AM
எதார்த்தமான கவிதை - பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள்

சசிதரன்
18-04-2011, 04:27 PM
தன் தாயும் பிறிதொருநாள் இதே போல் பிரியலாம் என்ற உள்வருத்தமா?

தாய்ப்பாசப் பங்குக்கு வந்த குட்டிகள் மேல் அசூயையா?

கடைசி வரிக்கான காரணம் இன்னும் எனக்குப் பிடிபடாமல்..


கவிதைக்குப் பாராட்டு சசி...

உங்கள் கணிப்புகளின் கலவை சரிதான் அண்ணா...

நன்றி இளசு அண்ணா... :)

சசிதரன்
18-04-2011, 04:28 PM
எதார்த்தமான கவிதை - பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள்

நன்றி உமாமீனா... :)

கீதம்
19-04-2011, 12:45 AM
தாயைத் தேடியலையும் குட்டிகளின் பரிதவிப்பைக் காணச் சகியாமலும் தோன்றியிருக்கலாம் குட்டிகளைக் கண்காணாது கொண்டுபோய்விடும் எண்ணம்.

நல்ல கவிதை சசிதரன்.

Ravee
19-04-2011, 05:00 AM
மீண்டும் சசியின் போகிறபோக்கில் சொல்லிப்போன அருமையான கவிதை ... இயற்கையின் யதார்த்தத்தை சொல்லும் வரிகள். விலங்குகள் பிரிவை நினைக்குமோ இல்லையோ நாம் அதிகமாகவே கவலை கொள்கிறோம் .... இயற்கையை மறந்து .

சசிதரன்
19-04-2011, 01:03 PM
நன்றி கீதம்... :)

நன்றி ரவி அண்ணா...:)

கலாசுரன்
25-04-2011, 04:10 AM
நல்லா இருக்கு சசிதரன்..!!
வாழ்த்துக்கள் :)