PDA

View Full Version : மறக்க செய்யும் மாய எந்திரம்



கார்த்தீ
15-04-2011, 06:24 PM
கண் முன்னே நிஜமாய்
கண்டவர்களை எல்லாம்
கனவில் நிழலாய்
மட்டுமே காண முடிகிறது

தாகத்திற்கு பானை நீராய்
இருக்க வேண்டியவர்கள்.... இன்று
தொட தொட தூரமாய் போகும்
கானல் நீராய் மட்டுமே.....


சுகமான நிஜங்கள்
சுமையான நினைவுகள் ஆகும் போது......
மறக்கின்ற சக்தி இல்லை எனில்
மாய்ந்து போகுமோ இந்த மானுடம்.......


அந்த நினைவுகள் சுகமாய் தோன்றுவது
கனவுகள் பூசும் சாயத்தால்.....
நிஜம் புரியும் போது சுமையாவது...
மனம் பட்ட காயத்தால்....

நிஜமாய் நடக்க வேண்டிய நிகழ்வுகளை
இறக்க செய்து நினைவுகளாக்கியது.....கடவுள் செய்த தந்திரம்.......
ஆனால் வலியாய் இருக்கும் நினைவுகளுக்கு
மருந்து போட்டு ஆற்றியது........ காலம் என்னும் மாய எந்திரம்....

ஜானகி
16-04-2011, 01:02 AM
காலம் எனும் மாயா ஜால எந்திரம்

பாலமாகும் நிஜத்திற்கும், நினைவுக்கும்

பாவையன்றோ நாம் ஓட்டுனன் கைப்பிடியில்

தேவையன்றோ ஞானமெனும் சக்கரம்...!

கலாசுரன்
16-04-2011, 04:06 AM
நல்லா இருக்கு :)

இளசு
16-04-2011, 11:16 PM
மறதி போகி இல்லையென்றால்
குப்பை நினைவைக் கொளுத்துவது எக்காலம்?

கவிதைக்குப் பாராட்டு!

கீதம்
24-04-2011, 01:59 AM
இழப்பின் வலியை ஈடுகட்ட முனையும் வரிகள். காலத்தின்மேல் பாரத்தைப் போட்டு துயரத்தின் போக்கைத் திசை திருப்பத் துடிக்கும் மனம். பாராட்டுகள்.

அறிமுகத்தைத் தந்தும் அமர்க்களப்படுத்துங்கள்.

Nivas.T
24-04-2011, 06:00 AM
நல்ல கவிதை கார்த்திகேயன்

பாராட்டுகள்

Nivas.T
24-04-2011, 06:01 AM
நல்ல கவிதை கார்த்திகேயன்

பாராட்டுகள்

கார்த்தீ
25-04-2011, 05:42 PM
படித்த... பாராட்டிய... நண்பர்களுக்கு நன்றி....
கார்த்தீ...