PDA

View Full Version : பழந்தமிழரின் புனைவு(ஒப்பனை)கள்



குணமதி
15-04-2011, 08:51 AM
பழந்தமிழரின் புனைவு(ஒப்பனை)கள்!


வெளிநாட்டின், குறிப்பாக மேற்குலகத்தின் பெண்கள் உதடுகளுக்கும் நகங்களுக்கும் வண்ணப்பூச்சு இட்டுக்கொள்வதையும், முகத்திற்குப் பல்வேறு மணக்களிம்புகளும் மாவும் பூசிக்கொள்வதையும், உடல் வெண்மையாகத் தோன்ற பலவகையான நீர்மக் குளியல்கள் குளிப்பதையும் அறிந்த நம் நாட்டு மக்களும் அவர்களைப் போலவே பூச்சும் புனைவும் செய்துகொள்ள முனைந்திருப்பதும் நாம் அறிந்தவையே.

அழகி கிளியோபாட்டிரா கழுதைப் பாலில் குளித்ததாகப் படித்திருக்கிறோம். சில திரை நடிகைகளும் அவ்வாறு குளித்ததாகக் கூடச் செய்திகள் வருவதுண்டு.

பழந் தமிழரிடையேயும் ஒப்பனைப் பழக்கம் இருந்திருக்கிறது.

வட்டிசைச் செய்தி என்பது சாந்து அணிதலையும், கோலங்கோடல் என்பது பொது ஒப்பனையையும், கோவையின் சேர்ப்பு என்பது அணிகல ஒப்பனையையும், பாயற்பள்ளி என்பது படுக்கையறை ஒப்பனையையும், அழகுச்சுண்ணம் முகம் உடலுக்குப் பூசும் மணமாவையும் குறிப்பனவாம்.

தூநீராடல், மணத்தூள் நீராடல் என்பவையும் உண்டு. மலராய்ந்து தொடுத்தல் பூ ஒப்பனையாகும்.

கண்மை இடல், சந்தன குங்குமச் சாந்தினால் 'தொய்யில்' சித்திரம் வரைந்து கொள்ளல், உதடு,கன்னம், நெற்றி நகங்களில் அலத்தகம் என்னும் செம்பஞ்சுக் குழம்பால் சாயமிட்டுக் கொள்ளல், முகத்துக்கு வண்ண நறுமாவிடல், கூந்தலுக்கு அகிற்புகையிடல் முதலானவை தமிழர் ஒப்பனையின் கூறுகளாகும்.

ஆடவரும் பெண்டிரும் மூன்றுமுறை மூன்றுவகைப் பொடிகலந்த நீரில் குளித்தனர். முதற் பொடியில் துவர்ப்பொருளும், இரண்டாவதில் விரை(மண)ப்பொடியும், மூன்றாவதில் ஓமாலிகைப் பொடியும் கலந்து குளித்தனர்.

துவர்ப்பொருள் பத்து வகையும், மணப்பொடி ஐந்து வகையும், ஓமாலிகைப்பொடி 32 வகையுமென சிலம்பில் கடலாடு காதை கூறுகிறது. அவை என்னென்ன என்று அடியார்க்கு நல்லார் உரையில் பட்டியலிட்டுக்காட்டுகிறார்.

ஒப்பனையில் அந்தக்காலத்திலேயே தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்களாக இல்லை என்று தெரிந்துகொள்ள முடிகிறது.

Nivas.T
15-04-2011, 11:37 AM
தமிழர்களின் திறமையே தனிதான்

மிக நல்ல செய்தி
அழகான தகவல்

தமிழர்கள் எக்காலமும் எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை

மிக்க நன்றீங்க குணமதி

ஆதி
15-04-2011, 11:56 AM
சிலம்பில் இது போன்ற பலவகைகளை காண முடியும், ஆடல் வகை, தாள வகையெல்லாம் இளங்கோ சொல்லும் போது மிக வியப்பாக இருக்கும்..

பகிர்வுக்கு நன்றி குணமதி

sarcharan
15-04-2011, 12:02 PM
ஆடவரும் பெண்டிரும் மூன்றுமுறை மூன்றுவகைப் பொடிகலந்த நீரில் குளித்தனர். முதற் பொடியில் துவர்ப்பொருளும், இரண்டாவதில் விரை(மண)ப்பொடியும், மூன்றாவதில் ஓமாலிகைப் பொடியும் கலந்து குளித்தனர்.


தமிழச்சியா கொக்கா?




ஒப்பனையில் அந்தக்காலத்திலேயே தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்களாக இல்லை என்று தெரிந்துகொள்ள முடிகிறது.



தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!

குணமதி
28-04-2011, 12:14 PM
தமிழர்களின் திறமையே தனிதான்

மிக நல்ல செய்தி
அழகான தகவல்

தமிழர்கள் எக்காலமும் எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை

மிக்க நன்றீங்க குணமதி

நன்றி நண்பரே!

குணமதி
28-04-2011, 12:17 PM
சிலம்பில் இது போன்ற பலவகைகளை காண முடியும், ஆடல் வகை, தாள வகையெல்லாம் இளங்கோ சொல்லும் போது மிக வியப்பாக இருக்கும்..

பகிர்வுக்கு நன்றி குணமதி

ஆம். நடனத்திற்குச் சிலம்பே சிறப்பு!
நன்றி.

குணமதி
28-04-2011, 12:20 PM
தமிழச்சியா கொக்கா?




தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!

இன்னும் அகத்திணை நூல்களைப் படித்தால் பல வியப்பான செய்திகள் கிடைக்கும்.

பின்னூட்டத்திற்கு நன்றி.