PDA

View Full Version : முகம் திரும்பா யானைசசிதரன்
14-04-2011, 04:23 PM
யானை வரைவதென்றால்
மிகவும் பிடிக்கும் அவனுக்கு.

பெரிய காதுகள் கொண்டு
திரும்பி நிற்கும் யானைகளையே
அவன் வரைய பழகியிருந்தான்.

அதன் வால்பகுதியை
மிகுந்த கவனம் கொண்டு வரைவான்.
எத்தனை முறை கேட்டும்
யானையின் முகத்தை அவன்
வரைந்ததே இல்லை.

அவன் கையெழுத்திடும் பொழுதும் கூட
திரும்பி நிற்கும் யானை ஒன்றையே
மிக சிறியதாய் வரைந்து கையெழுத்திட்டான்.

நானும் அவனும் மட்டுமிருந்த ஓர் நாளில்
மிக நீண்ட வற்புறுத்தலுக்கு பின்
யானையின் முகம் தெரியும்படி
அவன் வரைந்த ஓவியம்
யானை போலவே இல்லை.

இளசு
14-04-2011, 08:06 PM
மானுக்கு அம்பெறிந்து வெல்வதைவிட
யானைக்கு வேலெறிந்து தோற்பது நன்று -
வள்ளுவம் சொல்வது....

மாற்றி யோசி -
இக்கவிப்பொருள் ஓவியன் சொல்வது..

யோசிக்கிறேன்...


-- வாழ்த்துகள் சசிதரன்..

கீதம்
14-04-2011, 10:31 PM
வரைந்தவனின் கைகளைத் தவிர்த்து
வற்புறுத்தியவனின் பார்வையில் இருக்கலாம் குறை!

இதைக்காட்டத்தானா இத்தனைநாள் மறுத்தாய் என்று
தெறித்த ஏளனம் யானையின் முகத்தைச் சிதைத்திருக்கலாம்.
அல்லது இன்னமும் யானையின் முகத்தைக் காட்ட
அவன் பிரியப்படாதிருக்கலாம்,

எத்தனை யூகங்களை உள்ளடக்கி வெறிக்கிறது
முகம் திரும்பிய யானை.

யானையின் முகத்தை யாசிப்பவனை
விநோதமாய் பார்க்கிறேன் நானும்.

கவிதை அருமை. பாராட்டுகள் சசிதரன்.

முரளிராஜா
15-04-2011, 01:56 AM
அருமையான கவிதை வாழ்த்துக்கள் சசிதரன்

ஜானகி
15-04-2011, 02:08 AM
இருப்பதில் மகிழாமல், இல்லாததற்கு, ஆசைப்படின், ஏமாற்றம்தான்...என்பதனை உணர்த்துகிறதோ...இந்தக் கவி ?

யானைக்கு என்னவோ ஒரு முகம் தான்...பார்க்கும் பார்வையில் எத்தனை கோணங்கள்...! எத்தனை கோணல்கள் !

Ravee
15-04-2011, 04:36 AM
கவிதையை படித்த உடனே
நான் சொல்ல நினைத்ததெல்லாம்
எல்லோரும் சொல்லிப்போக
மீதம் இருப்பதென்ன
" சசி உன்னால் மட்டும்
எப்படி முடியுது இதெல்லாம் " .... :)

பிரேம்
15-04-2011, 05:20 AM
கவிதை அருமை சசிதரன்..
நீங்க கேட்டுகிட்டே இருந்ததால..கடுப்பாகி உங்க உருவத்தையே வரைந்து காண்பித்துவிட்டாரோ..?

Nivas.T
15-04-2011, 08:40 AM
இதுக்கு முன்னாடி அவர் யானையை பார்த்திருக்க மாட்டார் போல?:D

நல்லக் கவிதை சசிசதரன்
பாராட்டுக்கள்

கலாசுரன்
16-04-2011, 04:12 AM
ஒரு ரசானுபவம் தந்த கவிதை சசிதரன் ...!
ஒற்று தென்றல் என் மேல் வீசிப்போன அனுபவம் :)
வாழ்த்துக்கள் :)

சசிதரன்
16-04-2011, 04:28 PM
நன்றி இளசு அண்ணா, கீதம், முரளிராஜா, ஜானகி, ரவி அண்ணா, பிரேம், நிவாஸ் மற்றும் கலாசுரன்..

:):):)

அமரன்
17-04-2011, 05:35 PM
கை எழுத்தாக முகம் காட்டாத ஓவியம்...

கை எழுத்து, நம்பிக்கைக்குரிய அடையாளம்!

தன் செயல் வண்ணங்களால், சமூகப் பரப்பில், தன் அடையாளத்தைப் வரைபவர்கள் நிறையப் பேரு உண்டு, இக்கவிதையின் உருவான ஓவியனைப் போல்..

காலப் போக்கில் அந்த ஓவிய அடையாளத்தின் வண்ணங்கள் உரிந்து உண்மை தெரியும் போது உடைந்து விடுகின்றன, சமூகத்தவர் கொண்ட நம்பிக்கையும், உருவகித்த விம்பங்களும், கூடவே சில உண்மைகளும்.

அப்போது அவர்கள் மனநிலை...

அதைச் சொல்லாமல் எண்ண அலைகளில் பரவ விடுகிறது கவிதையின் மிச்சம். அதுதான் உச்சமும் கூட.

நான் கொண்ட பொருள் சரி என்றால், ஓவிய மனிதனிடம் கோவிக்க ஏதுமில்லை. தாமரை அண்ணா சொன்னது போல, ஆதன் கவிதை கக்கியது போல நம்பிக்கை உறையில் உறங்கும் துரோகத்தின் கத்தியில் எமது கைரேகைதான்..

பாராட்டுகள் சசி!

சசிதரன்
18-04-2011, 04:25 PM
கை எழுத்தாக முகம் காட்டாத ஓவியம்...

கை எழுத்து, நம்பிக்கைக்குரிய அடையாளம்!

தன் செயல் வண்ணங்களால், சமூகப் பரப்பில், தன் அடையாளத்தைப் வரைபவர்கள் நிறையப் பேரு உண்டு, இக்கவிதையின் உருவான ஓவியனைப் போல்..

காலப் போக்கில் அந்த ஓவிய அடையாளத்தின் வண்ணங்கள் உரிந்து உண்மை தெரியும் போது உடைந்து விடுகின்றன, சமூகத்தவர் கொண்ட நம்பிக்கையும், உருவகித்த விம்பங்களும், கூடவே சில உண்மைகளும்.

அப்போது அவர்கள் மனநிலை...

அதைச் சொல்லாமல் எண்ண அலைகளில் பரவ விடுகிறது கவிதையின் மிச்சம். அதுதான் உச்சமும் கூட.

நான் கொண்ட பொருள் சரி என்றால், ஓவிய மனிதனிடம் கோவிக்க ஏதுமில்லை. தாமரை அண்ணா சொன்னது போல, ஆதன் கவிதை கக்கியது போல நம்பிக்கை உறையில் உறங்கும் துரோகத்தின் கத்தியில் எமது கைரேகைதான்..

பாராட்டுகள் சசி!

அசத்தலான கண்ணோட்டம் அமரன்... பிரமித்து போய் பார்க்கிறேன்.... மிக்க நன்றி அமரன்... :)

kavitha
25-06-2011, 09:14 AM
அமரனின் கவிதை விளக்கம் அருமை, கவிதையும் அருமை.

கருணை
25-06-2011, 02:25 PM
https://lh3.googleusercontent.com/-9W-z5Ap37qM/TgXvWDpVcaI/AAAAAAAAAq8/fMN8hUuOLoo/Ele.JPG :D :) :D

நான் பள்ளியில் படிக்கும் போது வரைந்து பழகிய யானையும் இது போலத்தான் இருந்தது.