PDA

View Full Version : அடையாளம் தவிர்ப்பவன்கீதம்
14-04-2011, 02:42 AM
அடையாளங்களை அப்புறப்படுத்துவதே
அவனது தவிர்க்க இயலா பொழுதுபோக்கு.
பெயரினை விரிக்கிறான், சுருக்குகிறான்,
புதிய பெயர்களால் தன்னை அழைத்துக்கொண்டு
பழகியவர்களை பீதியுறச் செய்கிறான்.

எந்தவொரு அடையாளத்துடனும்
எவரும் தன்னை அடையாளப்படுத்துவதை
அவன் துரும்பளவும் விரும்பவில்லையென்பதாய்
தன் விநோதச் செயல்களுக்குக் காரணம் சொல்லி
பரிகாசத்தையும் பரிதாபத்தையும்
பரிசிலாய்ப் பெற்றுக்கொள்கிறான்.

சிகை அலங்காரம் முதல்
புகை பிடிக்கும் லாவகம் வரை
தனக்கென்று எதையும் தக்கவைப்பதில்லை.
அபாரம் என்னும் அடைமொழிகளை
அவன் ரசிப்பதுமில்லை,
சகிக்கவில்லையென்னும் முகச்சுளிப்பையும்
அவன் பொருட்படுத்துவதில்லை.

வானளாவிப் பறந்தாலும்,
வட்டமிட்டுக் கரணமடித்தாலும் ,
பக்கமிருக்கும் மரக்கிளையில் சிக்கி,
கிழிபட்டுக் காற்றாடாதபோதும்
காற்றாடியென்றே குறிப்பிடுதல் போல்....

பெயரோ... தொழிலோ...
தோற்றமோ... தோரணையோ...
ஏதோவொன்றின் அடிப்படையிலொரு பெயர்
அத்தியாவசியமாய் தேவைப்படுகிறது
எல்லோருக்கும் அவனைக் குறிப்பதற்கு.

அடையாளங்களை அடியோடு வெறுத்தவன்,
இப்போது பரவலாக அறியப்படுகிறான்,
தனக்கெனவோர் அடையாளத்தைத்
தக்கவைத்துக்கொள்ளாதவன் என்னும்
நிரந்தர அடையாளக்குறிப்போடு.

இளசு
14-04-2011, 05:34 AM
மிக இரசித்தேன் கீதம்..

பூச்சிக்குக் கால்கள்
புழுவுக்கு நீள் உருவம்..
பூனைக்கு மீசை, கண்கள்
புலிக்கு உறுமல், வரிகள்..

முத்திரை அடையாளம்
முக்கியமாகிவிட்டவர் அநேகம்..


அடையாளம் இஃதென இறுகாமல் மாறிமாறிக் காணும்
அமீபாவுக்கு அக்குணமே அடையாள வடிவம்!

முரளிராஜா
14-04-2011, 12:06 PM
அடையாளங்களை அடியோடு வெறுத்தவன்,
இப்போது பரவலாக அறியப்படுகிறான்,
தனக்கெனவோர் அடையாளத்தைத்
தக்கவைத்துக்கொள்ளாதவன் என்னும்
நிரந்தர அடையாளக்குறிப்போடு.

அருமையான வரிகள்
அதுதானே உங்கள் கவிதையின் அடையாளம்

கீதம்
14-04-2011, 10:48 PM
மிக இரசித்தேன் கீதம்..

பூச்சிக்குக் கால்கள்
புழுவுக்கு நீள் உருவம்..
பூனைக்கு மீசை, கண்கள்
புலிக்கு உறுமல், வரிகள்..

முத்திரை அடையாளம்
முக்கியமாகிவிட்டவர் அநேகம்..


அடையாளம் இஃதென இறுகாமல் மாறிமாறிக் காணும்
அமீபாவுக்கு அக்குணமே அடையாள வடிவம்!

நன்றி இளசு அவர்களே.... உங்கள் பின்னூட்டம் கண்டு சிலிர்த்தேன். அடையாளமில்லாதவனோடு அமீபாவை ஒப்பிட்டது அழகு. இத்தனை வார்த்தைகளையும் அமீபா என்னும் ஒற்றை வார்த்தைக்குள் அடக்கிவிட்டீர்களே.:icon_b:

கீதம்
14-04-2011, 10:49 PM
அருமையான வரிகள்
அதுதானே உங்கள் கவிதையின் அடையாளம்

அப்படியா?:) நன்றி முரளிராஜா.

ஜானகி
15-04-2011, 02:13 AM
மாற்றமில்லாதது மாற்றம் ஒன்றுதான் என்பது போல, அடையாளம் இல்லாததுதான் அடையாளம் ஆனதோ...? எனினும், உட்பொருள் ஏதுமுண்டோ...?

பிரேம்
15-04-2011, 05:15 AM
கவிதை அருமை மேடம்..நன்றி.. :)

Nivas.T
15-04-2011, 08:32 AM
ஏதோ என்னைப்பற்றி எழுதியது போலவே எனக்கு ஒரு பிரம்மை:D

கவிதை அழகுங்க:)

ஆனா அடியாள இருக்குறது நல்லதுன்னு சொல்றீங்களா? இல்ல நல்லது இல்லன்னு சொல்றீங்களா?:confused:

சசிதரன்
15-04-2011, 12:53 PM
ரொம்ப அழகா சொல்லியிருக்கிங்க கீதம்... அடையாளம் தவிர்க்க முயற்சித்தது ஒருவேளை தன மேல் அதிக கவனம் குவிக்கும் முயற்சியோ... அல்லது தன்னை ஒளித்துக் கொள்ளும் முயற்சியோ...:confused:

ரொம்ப அற்புதமான வரிகளில் கவிதை... :)

கீதம்
19-04-2011, 12:21 AM
மாற்றமில்லாதது மாற்றம் ஒன்றுதான் என்பது போல, அடையாளம் இல்லாததுதான் அடையாளம் ஆனதோ...? எனினும், உட்பொருள் ஏதுமுண்டோ...?

உட்பொருளா? அதாவது மறைமுகமாய் எவரையும் குறிப்பிடுகிறேனா என்கிறீர்களா?

நீங்கள் கேட்பதைப் பார்த்தால் அடையாளம் தவிர்த்தவனை அடையாளங்கண்டுகொண்டீர்கள் என்றல்லவோ எண்ணத் தோன்றுகிறது.:)

கீதம்
19-04-2011, 12:25 AM
கவிதை அருமை மேடம்..நன்றி.. :)

நன்றி பிரேம். (எதுக்கு அந்த 'மேடம்'? நான் என்ன உங்கள் க்ளாஸ் டீச்சரா? :) )

கீதம்
19-04-2011, 12:31 AM
ஏதோ என்னைப்பற்றி எழுதியது போலவே எனக்கு ஒரு பிரம்மை:D

உங்களைத்தான் ஜானகி அம்மா சொல்லியிருக்காங்களோ?:icon_ush:


கவிதை அழகுங்க:)

நன்றி நிவாஸ்.:)


ஆனா அடியாள இருக்குறது நல்லதுன்னு சொல்றீங்களா? இல்ல நல்லது இல்லன்னு சொல்றீங்களா?:confused:

உங்களை அடியாளா இருக்கச் சொல்லி நான் எங்கே சொன்னேன்?:confused:

கீதம்
19-04-2011, 12:34 AM
ரொம்ப அழகா சொல்லியிருக்கிங்க கீதம்... அடையாளம் தவிர்க்க முயற்சித்தது ஒருவேளை தன மேல் அதிக கவனம் குவிக்கும் முயற்சியோ... அல்லது தன்னை ஒளித்துக் கொள்ளும் முயற்சியோ...:confused:

ரொம்ப அற்புதமான வரிகளில் கவிதை... :)

நன்றி சசிதரன். நீங்கள் சொல்லியிருக்கும் இரண்டு காரணங்களுமே ஏற்றுக்கொள்ளவைக்கின்றன. :icon_b: