PDA

View Full Version : ஆத்தாவின் பலிM.Jagadeesan
12-04-2011, 04:06 PM
ஆத்தாளுக்கு நேர்ந்துவிட்ட
ஆடறுக்கப் போகையிலே
ஆத்தாளின் பின்னிருந்து
அசரீரியாய்க் கேட்டது
ஒரு குரல்.

நிறுத்துங்கடா! கடாபலியை!
நீசர்களே! நிறுத்துங்கடா!

ஆத்தாவின் குரல்கேட்டு
அதிர்ந்தனர் அவ்வூர் மக்கள்.
"எப்போதும் பலிகொடுத்தால்
ஏற்கின்ற ஆத்தாவே!
இப்போது மறுக்கின்ற
காரணந்தான் சொல்வாயே!"

"
ஆத்தா சொன்னது:
"காலையில் எழுந்தவுடன்
காபிதனைக் குடிக்கின்றீர்
இட்டலியும்,தோசையும்
சட்டினியும்,சாம்பாரும்
வெட்டுகிறீர் அதன்பின்னே

பகலுணவுக்காக
தஞ்சாவூரில் விளைந்த
தலைவாழை இலையிட்டு
பொன்னி அரிசியிலே
பொங்கிய சாதமிட்டு
பருப்புக் கடைசலை
விருப்புடனே மேலூற்றி
ஊத்துக்குளி வெண்ணையிலே
காய்ச்சிய நெய்யூற்றி
பெருங்காயம் மணமணக்க
முருங்கைக்காய் சாம்பாரும்
அவியலும்,பொறியலும்
ஆறுவகைக் காய்கறியும்
அப்பளமும் வடையும்
அவலிட்ட பாயசமும்
தக்காளி ரசமும்
தாளித்த மோரும்
ஆவக்காய் ஊறுகாயுடன்
அமர்க்களமாய் உண்கின்றீர்

ஆனால் எனக்கு மட்டும்
எப்போதும் தப்பாமல்
வெள்ளாட்டைப் பலியிட்டு
வேண்டுதலை ஆற்றுகிறீர்!
நல்லஉணவு சாப்பிடாமல்
நாக்கு செத்துவிட்டதடா
வெட்கத்தைவிட்டுக் கேட்கின்றேன்!
வேண்டுமடா மாற்றுணவு!


ஆத்தாவின்
இந்தஉரை கேட்டவுடன்
அந்தஊர் மக்களெல்லாம்

"எந்தஉணவு கேட்டாலும்
தந்திடுவோம் ஆத்தாவே!
எங்கள்
தலைவேண்டும் என்றாலும்
தந்திடுவோம் ஆத்தாவே!"

அதற்கு ஆத்தா,
"உங்கள் தலை வேண்டாம்
உங்கள் தலை வேண்டாம்
சிங்கத்தின் கறியுண்ண
ஆசைமிகக் கொண்டேன்
ஆதலினால்
சிங்கத்தைப் பலியிட்டு
வேண்டுதலை ஆற்றிடுவீர்"
என்றவுடன்

அங்கிருந்த கூட்டமெல்லாம்
அலறிப் புடைத்து உடனே
ஆளுக்கொரு பக்கமாய்
சென்று மறைந்ததுவே!

Nivas.T
12-04-2011, 04:10 PM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

M.Jagadeesan
12-04-2011, 04:13 PM
தங்கள் சிரிப்புக்கு நன்றி நிவாஸ்!

முரளிராஜா
12-04-2011, 04:17 PM
என்ன இது தமிழ் மன்றத்துல எங்க பாத்தாலும் கிடாவெட்டா இருக்கு.
எங்காத்துல எல்லாரும் என்ன திட்றா. எப்பபாரு கிடாவெட்டையே படிச்சின்ட்ற்க்கியே
அசடு அப்படிங்கறா. :Dஎங்க பக்கத்தாத்து ஜானகி அக்காவும் இதுக்கெல்லாம் காரணம்
அந்த ஆதவாதான் அவர் மேல கேஸ் போடலாமாடா அம்பினு என்ன கேட்கறா.:lachen001:
எது எப்படி இருந்தாலும் எங்க ஜெகதீசன் அய்யாவின் கவிதை ரொம்ப பேஸா இருக்கு
அசத்திட்டேள் போங்கோ

M.Jagadeesan
12-04-2011, 04:27 PM
நன்றி! மு.ரா!

sarcharan
13-04-2011, 11:46 AM
சிங்கத்தை பலி இடணுமா... சிங்கம் ரா ரா (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=514754&postcount=15) லீவுல போயிருக்கே...

M.Jagadeesan
13-04-2011, 11:55 AM
ரா.ரா. சிங்கம் வந்துவிட்டதே! கிடாவெட்டுக்கு இரண்டாம் கதையும் தந்துவிட்டதே!

அமரன்
13-04-2011, 05:32 PM
ஊரில் இருக்கும் போது சனிக்கிழமை தோறும் முதலில் நல்லெண்ணைத் தோயல். எண்ணெய் நன்றாக ஊறி உச்சி குளுந்ததும் தண்ணித் தோயல். (பெருசுங்க மத்தத் தண்ணியிலும் தோயும்). தோய்ஞ்சு முடிஞ்சதும் வீட்டுக் கோடியில் அடிச்ச ஆட்டின் இரத்தப் பொரியல். கொஞ்ச நேரம் கழிச்சு மூக்கு வடியுமளவுக்கு உறைக்க உறைக்க ஆட்டிறைச்சிக் குழம்பு, குத்தரிசிச் சோற்றுடன். காலம் மாறினாலும் மாறாமல் இருக்கும் நம்மூர் வழக்கத்தில் இதுவும் ஒன்று. அப்படி ஒன்றுதான் கிடாவெட்டும். ஒரே வித்தியாசம், கோடிப்பக்கம் சின்னஞ் சிறுசுகளை அனுமதிக்க மாட்டாங்க. கோயில் பக்கம் எப்படியோ..

சுய பாதுகாப்பையும் சுய நலத்தையும் கருத்தில் கொண்ட வணக்க முறைக்கு நல்லதொரு அடிக்கவிதை.

பாராட்டுகள் ஜெகதீசன்.

sarcharan
15-04-2011, 12:11 PM
ஊரில் இருக்கும் போது சனிக்கிழமை தோறும் முதலில் நல்லெண்ணைத் தோயல். எண்ணெய் நன்றாக ஊறி உச்சி குளுந்ததும் தண்ணித் தோயல். (பெருசுங்க மத்தத் தண்ணியிலும் தோயும்). தோய்ஞ்சு முடிஞ்சதும் வீட்டுக் கோடியில் அடிச்ச ஆட்டின் இரத்தப் பொரியல். கொஞ்ச நேரம் கழிச்சு மூக்கு வடியுமளவுக்கு உறைக்க உறைக்க ஆட்டிறைச்சிக் குழம்பு, குத்தரிசிச் சோற்றுடன்.

.

நேக்கு நாக்குல இப்பவே ஜலம் ஊறறது...

M.Jagadeesan
15-04-2011, 12:27 PM
பாராட்டுக்கு நன்றி! அமரன்!

உமாமீனா
16-04-2011, 09:59 AM
அருமை சிரிக்கவும் சிந்திக்கவும்

govindh
16-04-2011, 10:14 AM
ஆத்தாவின் பலி -
(மாற்றுணவு!)

கவி அருமை....
பாராட்டுக்கள்.

ஆளுங்க
16-04-2011, 03:25 PM
இது என்ன ஆத்தா புதிய பலி கேட்கிறார்?
ஆட்டை வெட்டுவது எளிது... ஏறு ஒன்றுடன் மோதுவதே கடினம்...

இன்றைய தினத்தில், நீங்கள் சிங்கத்தை வேட்டையாட நினைத்தாலே வனத்துறை உங்களை சிறை பிடிக்கும்!!

கவிதை அருமை..

இப்படி எல்லா ஊர்களில் உள்ள ஆத்தாக்களும் பலி கேட்டால்??????????

அருமையான சிந்தனை...
நன்றி ஐயா!!

ஜானகி
16-04-2011, 03:39 PM
மேனகா காந்தியின் கண்களில் இந்தக் கவிதை படாமல் இருக்கவேண்டுமே....!

இளசு
16-04-2011, 11:31 PM
சிந்திக்க வைத்த கவிதை..

மீண்டும் வளராதென்றால் எத்தனை பேர் முடிகாணிக்கை அளிப்பார்கள்?


பாராட்டு ஜெகதீசன் அவர்களுக்கு..