PDA

View Full Version : மிஸ்டர்.நான்!



ரசிகன்
12-04-2011, 11:14 AM
இணைந்தொருவன் இயங்கும் கூட்டத்தில்
அகாலமாய்
தனித்து விடப்பட்டிருக்கிறது இதயம்!

எவனுடையதும்
எவளுடையதும்
பிடிமானம் இருப்பதில்லை
அதன் விரல் பிடிப்பில்...

யார் நீங்கள்?
எங்கு நிற்கிறேன்?
எங்கு செல்லப்போகிறேன்?
முகவரிகளற்ற உலகத்தில்
விடைகள் எதையும்
தெளிவாய் சொல்லத்தெரியவில்லை எனக்கு!

சிலவற்றை
வாய் கூசாமல் சொல்லிவிடலாம்...

இன்னுமொரு காதல்,
இன்னுமொரு புணர்வு,
இன்னுமொரு வோட்கா!


-------------
ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இதை சுட்டவும்!
http://ax.itunes.apple.com/app/id422668491

Nivas.T
12-04-2011, 12:17 PM
ஆஹா அற்ப்புதம் ரசிகரே

அதுவும் அந்த கடைசி வரி பிரமாதம்

ரசிகன்
14-04-2011, 12:07 PM
:):):)

கீதம்
14-04-2011, 10:14 PM
அவ்வளவுதானா நீங்கள்?
அதற்குத்தானா வாழ்க்கை?

இலக்கற்றப் பயணத்தின் நியதியற்ற வழிகளைப் பற்றி
எதையும் சொல்லத் தெரியவில்லை எனக்கு.

யாவும் இன்னொருமுறை கிட்டலாம்,
இழந்துவிட்ட வாழ்க்கை?

கவி நன்று, ரசிகன்.

முரளிராஜா
15-04-2011, 01:58 AM
ரசிகனின் கவிதையும்
கீதம் அவர்களின் பின்னூட்டமும்
அருமை