PDA

View Full Version : பெருங்கனவு..



சசிதரன்
12-04-2011, 04:56 AM
அந்த பெருங்கனவின் முடிவில்
தலை துண்டிக்கப்படுகிறது.

அது யாருடைய தலை என்பது
பெரும் குழப்பமாயிருந்தது.

பேரமைதி சூழ்ந்த ஒரு
பச்சை படர்ந்த புல்வெளியில்
அது உருண்டு வருகிறது.

காரணங்கள் சொல்லப்படவில்லை...
யூகங்களுக்காய் விடப்பட்டிருக்கலாம்.

என் தலை துண்டிக்கப்படவில்லை
என் கையில் ஆயுதம் இல்லை
நான் சாட்சியாக மட்டுமே இருக்கிறேன்.

தொடக்கம் எதுவென அறியாத
அந்த பெருங்கனவின் முடிவில்
எப்பொழுதும் தலை துண்டிக்கப்படுகிறது.

கருஞ்சிவப்பாய் பரவும் குருதி
வெப்பமாய் கால் நனைக்க
நான் புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்.
மிக குரூரமான புன்னகை.

ஓவியன்
12-04-2011, 05:20 AM
காரணங்கள் சொல்லப்படவில்லை...
யூகங்களுக்காய் விடப்பட்டிருக்கலாம்.

காரணங்கள் சொல்லப்படாமையாலும்,
காரணங்கள் சரிவரத் தெரியாமையாலும் தான்,
யுகம், யுகமாக யூகங்கள் உலா வருகின்றன....


நான் சாட்சியாக மட்டுமே இருக்கிறேன்.

சாட்சியாக இருப்பதில் தவறில்லை,
வெறும் பார்வையாளனாக இருப்பதுதான் தவறு....

ஆனாலும் என்ன செய்ய,
நாளை நம் தலையும் உருளாமலிருக்க
நாமும் வெறும் பார்வையாளர்களாகவே
இருக்க வேண்டியுள்ளது....

---------------------------------------------------------------------------------------------

வித்தியாசமான யூகங்களைத் தூண்டவல்ல கவி விதைத்த உங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுதலும் உரித்தாகட்டும் சசிதரன். :icon_b:

பிரேம்
12-04-2011, 06:05 AM
கவிதை அருமை..
ரொம்ப கொடுரமான ஆளா இருப்பீங்க போல..:confused: