PDA

View Full Version : இதிகாசம் தரும் இனிய செய்திகள்



ஜானகி
11-04-2011, 10:37 AM
சமீபத்தில் நான் படித்த செய்திகள்"" ராமாயண மகாபாரதத்தின் இனிய செய்திகள் ,ஸ்வாமி என்பவர் எழுதிய புத்தகத்தில் என்னைக் கவர்ந்த கருத்துக்களில் சில :

வேதக் கருத்துக்களுக்குச் சம்பவங்களின் விளக்கமாகவே இதிகாசங்கள் விளங்குகின்றன...ஒரு கருத்தை கதை ஒன்றின் மூலம், நன்றாகப் புரியும்படி விளக்கமுடியும்.

" அறம் வழுவாதிருக்கவேண்டும் " எனும் கருத்தை ராமாயணமும், மகாபாரதமும், " உண்மையே பேசவேண்டும் " என்ற கருத்தை அரிச்சந்திர புராணமும் எடுத்துக் காட்டுகின்றன.

நேரிடையாகப் புலன்களால் காணப்பட்ட, அவற்றைச் சார்ந்த அனுமானத்தால் ஊகிக்கப்பட்ட, இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஞானம் போன்றவை வேதத்தில் இருக்கின்றன, இவைகளைத் தெளிவாக விளக்கவே புராணங்கள் எழுந்தன.உழவும், தொழிலும், பண்பாடும், அரசியலும், வாழும் முறைகளாகவும், இவைகளுக்கு உதவும் பல சாத்திரங்களும், புராணங்களில் விளக்கப் படுகின்றன.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கில் எல்லா உயிர்களின் தேவை, தாகம், முயற்சி, செயல், நோக்கம், இன்பமெல்லாமே வேதம் கூறியபடி, புராணங்கள் விளக்குகின்றன.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, வேதங்கள், கவிதைகளாக, துதிபாடும் செய்யுள்களாகத் தோன்றும்.

ஆழ்ந்து நோக்கினால், உடலியல், மனோவியல், விஞ்ஞானம், மருத்துவம்,உயிரினத்தின் வாழ்வியல்முறை, அரசியல், வழிபாட்டுமுறைகள்,தியானம், புலனடக்கம், கலைகள், உட்பட, எல்லாமே கூறப்பட்டுள்ளது.

அதேபோல, புராணங்களை, மேலோட்டமாகப் பார்க்கும் போது, மாயாஜாலக் கதைகள் போலத் தெரியும்.

ஆழ்ந்து படித்தால், சிறந்த மனித நீதிக் கதைகள், தத்துவக் கதைகள் புலப்படும்.

வேதக் கருத்துக்களின் படி எப்படி வாழ்வது என்பதை எடுத்துக் காட்டவே இறை அவதாரங்கள் ஏற்பட்டுள்ளன.

அரக்கர்களை வதம் செய்யத்தான் இறைவன் அவதரித்தான் என்பது சரியல்ல..அதனை அவன் பூமியில் பிறவாமலே செய்துவிடலாமே ?...தர்மம் என்றும் வெல்லும், பொன்ற நீதிகளையும், அநீதிகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் செயல் முறையில் காட்டவே புராணங்கள் ஏற்பட்டன.

புராணங்கள் கற்பனை என்று ஒதுக்கிவிடமுடியாது...எந்தக் கற்பனையும், உண்மையில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாகவைத்தே உண்டாகும் அல்லவா ?

நல்ல, கெட்ட வழிகள், குறுக்கு, நேரான வழிகள், உலக சுக வாழ்வு, வீடுபேறு போன்றவற்றையும் புராணங்கள் வேதத்தின் வழியில் விளக்குகின்றன.

புராணங்கள் எக்காலத்திற்கும் ஏற்றவையாக, பொருத்தமானவையாக இருப்பதால் தான், தொன்று தொட்டு இன்றும் அழியாமல் நிலைபெற்று உள்ளது.

பொய், கட்டுக்கதை என்று சிலரால் ஏசப்பட்டாலும், காகிதமும், அச்சும் ஏற்படாத காலத்தில், பல்வேறு முனிவர்களாலெழுதப்பட்டவை இன்றளவும் நிலைத்து நிற்பதன் காரணமென்ன ? அதில் இருக்கும் உண்மையால் தானே.. ?

தொடரும்....

உமாமீனா
11-04-2011, 10:46 AM
ஒ அப்படியா - அறிய தகவல் -பகிர்தலுக்கு நன்றி

ஜானகி
11-04-2011, 04:39 PM
இனி ராமாயணம் போதிக்கும் உண்மைகளை ஆராய்வோம்.

இந்தப் புராணத்தில், கூடி வாழக் கற்பிக்கும் குடும்பச் செய்திகள் நிரம்பியுள்ளன.ஒரு சம்சாரி எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதை ராமன் தனது அவதாரத்தின் மூலம் போதிக்கிறான்.

ராவணனால், பூமிக்கு நேர்ந்த கொடுமைகளைக் களையவே, நாராயணன், மனித குலத்தில், ராமனாக அவதரித்தார்.

உத்தமமான அரச குடும்பத்தில், சிக்கல் வந்தபோதும், மனம் தளராமல், தந்தை சொல்லைத் தாரகமாக ஏற்று, கானகம் ஏகுகிறான்...யாரையும் தூற்றாமல், சமாதானமாக வனமேகுகிறான்.யாரிடமும் தனக்கு நீதி கேட்கவில்லை, தனக்குச் சாதகமாக எழுந்தவர்களையும் அடக்கி, குழப்பத்தைப் பெரிது படுத்தாமல், குடும்ப மரியாதையைக் காப்பது, மூத்த மகனின் கடமை என்பதைக் காட்டுகிறான்.எதையும் தாங்கும் மனப்பான்மையுடன், துணிவோடு ஏற்றுக்கொண்டு, துக்கப்படாமல் இருக்கிறான். யாரையும் பழி வாங்கும் எண்ணமும் இல்லை.

பரதனோ, தனக்குக் கிடைத்த பதவியையும் துறந்து, வனவாசம் செல்கிறான்.ராமனின் பாதுகைகளை அரசனாக வைத்து நாட்டிற்கு வெளியிலிருந்தே அரசாள்கிறான்.

கைகேயியும், ராமனின் அவதார ரகசியம் தெரிந்துதான் அவனைக் கட்டிற்கு அனுப்புகிறாள்..தான் பழியை ஏற்றுக்கொண்டு.

சீதையும், லட்சுமணனும் ராமனைப் பின் தொடர, லட்சுமணன் மனைவியும் ஒருவகையில் தியாகம் செய்கிறாள்.

இப்படி, அந்தக் குடும்பத்தில், ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு மற்றவருக்காக தியாகம் செய்கிறார்கள்.

கிஷ்கிந்தையில், வாலி, சுக்ரீவன் என்ற இரு சகோதரர்களுக்கிடையேயான பகையில், தன்னைப் போல, நாடும் மனைவியும் இழந்த சுக்ரீவனுக்கு கைகொடுக்கிறான் ராமன்..தர்மதிற்குத் துணை போகிறான்.

இலங்கையில், பெருமை பல வாய்ந்த ராவணனும், பிறன் மனை கவர்ந்ததால் ராமனால் தண்டிக்கப் படுகிறான். தர்மத்தைக் காக்க, தனயனையும் பிரிகிறான் விபீஷணன். செஞ்சோற்றுக் கடனுக்காகத் தன் உயிரையும் இழக்கிறான் கும்பகர்ணன்.

இப்படி, குடும்பத்தில், சொந்தங்கள் எப்படியெல்லம் நடந்துகொள்வார்கள், அதற்கு எப்படித் தீர்வு காணவேன்டும் என்பதை, இந்தக் கதை தெளிவு படுத்துகிறது அல்லவா ?

தாய், தந்தையரிடத்தில் மரியாதை, சகோதர வாஞ்சை, நண்பர்களிடம் உயிர் நட்பு, குருவிடம் பக்தி, பகைவனிடத்தும் கருணை, தர்மத்தைக் காப்பதில் வரும் இடையூறுகள் என்று எல்லாவற்றையுமே வேதம் போல விளக்குகிறது.

இளசு
11-04-2011, 08:48 PM
நல்ல பார்வை.. நல்ல பகிர்தல்..

நன்றிகள் ஜானகி அவர்களே..

---------------------------------------

ஊர்மிளையின் தியாகம் ஏனோ
உரிய அளவில் போற்றப்படாமலே...


உங்கள் பதிவு அக்குறையை குறைக்கிறது...

rajeshkrv
14-04-2011, 04:57 PM
நல்ல பதிவு. இன்றைய கணினி யுகத்தில் ராமாயணத்திற்கும் கீதைக்கும் எங்கே நேரம். குழந்தைகளுக்கு கதை சொல்வது என்பதே இல்லாமல் போய்விட்ட காலமாகிவிட்டது.

jk12
14-04-2011, 05:40 PM
தகவல்களுக்கு நன்றி அம்மா

மேலும் தொடருங்கள்

ஜானகி
18-04-2011, 04:11 PM
மகாபாரதக் கதை, ஒரே குடும்பத்து அண்ணன் தம்பிகள் சண்டை, சொத்து விவகாரக் கதை. இரு கட்சிகளாகப் பிரிந்து, சகோதரர்கள் போர் செய்த கதை.

நியாயம் என்பது இருவர் பக்கமும் உள்ளது...ஆனால், தன் பக்க நியாயத்தால், எதிரிகளை நியாயமற்ற வழிகளில் அழிக்க முயன்றதால், தீயவர்களாகக் கருதப்பட்டனர் கௌரவர்கள்.

குடும்பம், அரசபரம்பரை வாரிசு பெறவேண்டும் என்பதாலேயே அரசர்கள் பலரை மணம் முடித்தனர்.

பஞ்ச பூதமான நெருப்பிலிருந்து வந்த திரௌபதி, தேவ அம்சத்தினரான ஐவருடன் குடும்பம் நடத்திய அசாதாரணப் பெண். பஞ்ச பூதங்கள் சேர்ந்ததே உடல் என்பதன் உருவகம் ஆகும் இது.

கூடவே இருந்து உறவாடிக் கெடுப்பர்களும் உண்டு என்பதற்கு சகுனி ஓர் எடுத்துக்காட்டு.

குடும்பஸ்தன் சூதாடக்கூடாது, அண்ணன் தம்பிகளுக்குள் ஒற்றுமை தேவை என்பதையும், உறவினர்கள் ஒற்றுமையாய் இருந்தால், எந்தப் பகையையும் வெல்லாலாம் என்பதையும் இந்தப் புராணம் விளக்குகிறது.

பெரிய இடத்துப் பெண்ணானாலும், வாழ்வில் வரும் துன்பங்களை எப்படி, தன்னம்பிக்கையும், இறையருளும் துணைகொன்டு எதிர்நோக்கவேண்டும் என்பதை, பாஞ்சாலி வாழ்ந்து காட்டுகிறாள்.

தர்மத்தின் பெருமையை படம் பிடித்துக் கட்டுகிறது இக்கதை.

குடும்பத்தில் பாசம், சகோதர வாஞ்சை, ஆசிரியர்களிடம் பக்தி, பகைவர்களை அணுகும் முறை என்று எல்லாமே சொல்லிக் கொடுக்கிறது இத்தகைய புராணங்கள்.

" தந்தை சொல்லைத் தட்டக்கூடாது. மகனாக வருபவன் தந்தையின் கடமைகளைத் தொடர்ந்து செய்யவேண்டும் "

" மனைவி என்பவள் கணவனின் தர்மத்தைப் பேணி, பொறுமை காக்கவேண்டும் " ...இவை ராமாயணம் போதிக்கும் உண்மைகள்.

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...பொறுமை காத்தால், மறுபடியும் தர்மம் வெல்லும் " ...இது மகாபாரதம் போதிக்கும் உண்மை.

இளசு
19-04-2011, 04:49 AM
ஊரில் ஒரு நல்லவனும் இல்லை -- துரியோதனன்
(அதே) ஊரில் ஒரு கெட்டவனும் இல்லை - தருமன்


கம்பரசமும் ஒரு பார்வை; பாஞ்சாலி சபதமும் ஒரு பார்வை..

முத்தும் கிளிஞ்சலும் -- பொறுக்குவோர் பொறுத்தே கடலின் கொடை.

உங்கள் நற்பார்வை வழியே நோக்கும் பாக்கியம் இத்திரிவழி..

நன்றி ஜானகி அவர்களே.. தொடருங்கள்..

ஜானகி
11-05-2011, 04:13 AM
வாழும் வழி..... இலக்குமணனுக்கு இராமன் வழங்கிய அறிவுரைகள் :

" உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக்கொண்டு, பக்தி, சிரத்தையுடன், ஒவ்வொரு நாளும் சேவை செய்து வா.

நல்ல காரியங்கள் செய்வதில், ஒரு நாள் கூட அசிரத்தையாக இராதே.

எப்போதும் உற்சாகமாக இரு.

சத்தியத்தைக் கைவிடாதே.எப்போதும் பணிவுடன் நடந்துகொள்.

மனைவி, மக்களிடம் கூட, அளவுக்கு மீறிய பற்றும் பாசமும் கொள்ளாதே.

மனதை சம நிலையில் வைத்திரு. அதிர்ஷ்டம் வந்தால், அதிகம் மகிழாதே; அதிர்ஷ்டம் போய்விட்டால், மன வருத்தம் கொள்ளாதே.

நன்றி..... தர்ம முரசு..

ஜானகி
11-05-2011, 04:26 AM
உண்மையை அறி... பரதனுக்கு வழங்கிய அறிவுரை :

சேர்த்துவைத்த செல்வம் யாவும் ஒரு நாள் ஒன்றுமில்லாமல் அழியக்கூடியவை.

உயர்ந்து நின்றவை ஒரு காலத்தில் சரிந்து தரைமட்டமாகின்றன.

சேர்ந்தே இருப்பதுவும் ஒருநாள் பிரிந்துவிடுகிறது. எத்தகைய வாழ்வும், மரணத்தை முடிவாகக் கொண்டது.

பழுத்த பழம், கனிந்து, தரையில் விழத்தான் வேண்டும்...அதுபோல, மனிதனும் இறந்துதான் ஆகவேண்டும்... இறப்பதுதான் நிச்சயம், இருப்பது நிச்சயமில்லை.

ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும் புதிய பருவ காலத்தைக் கண்டு மனிதன் மகிழ்கிறான்... ஆனால், காலங்கள் உருளும்போது, தன் ஆயுட்காலமும் கழிவதை அவன் அறிவதில்லை.

இயற்கையை மீறுவது என்பது யாராலும் முடியாது.

மனிதர்கள் சந்தோஷத்தை நாடுகிறார்கள். ஆனால், தர்ம வழியில் அதனைப் பெற முயல வேண்டும்..கிடைப்பதில் மகிழ்பவர்களே சுகம் அடைவார்கள்.

நன்றி...தர்ம முரசு.

கீதம்
11-05-2011, 05:16 AM
மனதை சம நிலையில் வைத்திரு. அதிர்ஷ்டம் வந்தால், அதிகம் மகிழாதே; அதிர்ஷ்டம் போய்விட்டால், மன வருத்தம் கொள்ளாதே.

வாழ்க்கையில் எந்தத் துன்பமும் ஒருவனைப் பாதிக்காமலிருக்கவேண்டுமானால் இந்தப் போதனையைக் கடைப்பிடித்தால் போதும். நல்ல சிந்தனைகளைத் தொகுத்து வழங்கும் உங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

ஜானகி
12-05-2011, 01:58 PM
வாழ்க்கை

மண்ணுலக வாழ்க்கை, ஆகாயத்தில் தோன்றும் மேகம் போல, நிலையற்றது ; எண்ணெய் தீர்ந்துபோன விளக்கின் திரியைப் போன்றது; நீர்மட்டத்தில் தவழும் சிற்றலை போன்றது; ஒரு கணம் தோன்றி, மறுகணம் மறைவது.

சுண்டெலி, நாள்தோறும் சிறுகச் சிறுக பூமியைத் தோண்டி, வலையை ஆழப்படுத்துகிறது; அதுபோல, காலமென்ற சுண்டெலி, ஒவ்வொரு நிமிடமும் உயிர்களுடைய வாழ்க்கையைக் குடைந்தெடுத்தபடியே இருக்கிறது.

நோய்கள் பகைவர்களைப் போல, மனித உடலைப் பற்றிக்கொண்டு, அதை அழித்துவருகின்றன. மூப்பு எனும் புலி, மனித உடலின் மீது பாய்ந்து, அதைத் தாக்கி வீழ்த்துகிறது.

விவேகத்தின் ஆற்றலை வளர்த்துக் கொள்ளாதவர்களுக்கு, வாழ்க்கை துன்பத்தின் மூல காரணமாகவே அமைகிறது; ஆனால், மெய்ஞானம் பெற்று, சாந்தி அடைந்தவர்களுக்கோ, வாழ்க்கை பேரின்பமாக அமைகிறது.

நன்றி......தர்ம முரசு.

ஜானகி
14-05-2011, 02:54 PM
காலம்

ஒரு யுகத்திற்குப் பின் மற்றொரு யுகம் என்று வந்து போய்க்கொண்டிருக்கிறது...ஆனால், காலத்தின் போக்கு எந்த விதத்திலும் பாதிக்கப் படாமல், ஒரே ரீதியில் இருந்து வருகிறது.

தாமரைக்கு நிலவு எமனாக அமைகிறது ; யானையை அழிக்க சிங்கம் இருக்கிறது ; அதுபோல, மனிதனின் ஆயுள் காலத்தை அழிக்கக் காலம் இருக்கிறது.

காலம், யாராலும் புரிந்துகொள்ள இயலாத ஒரு புதிர். எத்தகைய அறிவாற்றலைக் கொண்டும், மக்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாது; என்றாலும், வாழ்க்கை முழுவதும் மிகவும் வெளிப்படையாக இருப்பது காலமே ஆகும்.

வீட்டை நெருப்பு எரிப்பது போல, மக்களின் உள்ளத்தில் பல ஆசைகளையும் அபிலாஷைகளையும் கிளப்பிவிட்டுக் காலம் மக்களை எரித்துவிடிகிறது.

காலம் மிகக் கொடியது, துன்பத்தால் வாடிவருந்தும் மனிதனிடம் கூட, அது கருணை காட்டுவதில்லை.

காலம் பிரம்மாண்டமான பரிமாணம் கொண்டது ; ஒரு விநாடி நேரத்தில் அது ஒரு பொருளை ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும்.

மக்களின் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம், மன அமைதி, மனசஞ்சலம், பேராசை, மோகம்....ஆகிய எல்லாமே காலத்திற்குள்தான் அடங்கியுள்ளன.

மழையைப் பொழியச் செய்வதும், சந்திரனை வானில் தோன்றி மறையச் செய்வதும் காலம்தான்.

நன்றி....தர்ம முரசு

கிருஷ்ணன்
16-05-2011, 07:23 AM
சமீபத்தில் நான் படித்த செய்திகள்"" ராமாயண மகாபாரதத்தின் இனிய செய்திகள் ,ஸ்வாமி என்பவர் எழுதிய புத்தகத்தில் என்னைக் கவர்ந்த கருத்துக்களில் சில :

வேதக் கருத்துக்களுக்குச் சம்பவங்களின் விளக்கமாகவே இதிகாசங்கள் விளங்குகின்றன...ஒரு கருத்தை கதை ஒன்றின் மூலம், நன்றாகப் புரியும்படி விளக்கமுடியும்.

" அறம் வழுவாதிருக்கவேண்டும் " எனும் கருத்தை ராமாயணமும், மகாபாரதமும், " உண்மையே பேசவேண்டும் " என்ற கருத்தை அரிச்சந்திர புராணமும் எடுத்துக் காட்டுகின்றன.

நேரிடையாகப் புலன்களால் காணப்பட்ட, அவற்றைச் சார்ந்த அனுமானத்தால் ஊகிக்கப்பட்ட, இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஞானம் போன்றவை வேதத்தில் இருக்கின்றன, இவைகளைத் தெளிவாக விளக்கவே புராணங்கள் எழுந்தன.உழவும், தொழிலும், பண்பாடும், அரசியலும், வாழும் முறைகளாகவும், இவைகளுக்கு உதவும் பல சாத்திரங்களும், புராணங்களில் விளக்கப் படுகின்றன.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கில் எல்லா உயிர்களின் தேவை, தாகம், முயற்சி, செயல், நோக்கம், இன்பமெல்லாமே வேதம் கூறியபடி, புராணங்கள் விளக்குகின்றன.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, வேதங்கள், கவிதைகளாக, துதிபாடும் செய்யுள்களாகத் தோன்றும்.

ஆழ்ந்து நோக்கினால், உடலியல், மனோவியல், விஞ்ஞானம், மருத்துவம்,உயிரினத்தின் வாழ்வியல்முறை, அரசியல், வழிபாட்டுமுறைகள்,தியானம், புலனடக்கம், கலைகள், உட்பட, எல்லாமே கூறப்பட்டுள்ளது.

அதேபோல, புராணங்களை, மேலோட்டமாகப் பார்க்கும் போது, மாயாஜாலக் கதைகள் போலத் தெரியும்.

ஆழ்ந்து படித்தால், சிறந்த மனித நீதிக் கதைகள், தத்துவக் கதைகள் புலப்படும்.

வேதக் கருத்துக்களின் படி எப்படி வாழ்வது என்பதை எடுத்துக் காட்டவே இறை அவதாரங்கள் ஏற்பட்டுள்ளன.

அரக்கர்களை வதம் செய்யத்தான் இறைவன் அவதரித்தான் என்பது சரியல்ல..அதனை அவன் பூமியில் பிறவாமலே செய்துவிடலாமே ?...தர்மம் என்றும் வெல்லும், பொன்ற நீதிகளையும், அநீதிகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் செயல் முறையில் காட்டவே புராணங்கள் ஏற்பட்டன.

புராணங்கள் கற்பனை என்று ஒதுக்கிவிடமுடியாது...எந்தக் கற்பனையும், உண்மையில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாகவைத்தே உண்டாகும் அல்லவா ?

நல்ல, கெட்ட வழிகள், குறுக்கு, நேரான வழிகள், உலக சுக வாழ்வு, வீடுபேறு போன்றவற்றையும் புராணங்கள் வேதத்தின் வழியில் விளக்குகின்றன.

புராணங்கள் எக்காலத்திற்கும் ஏற்றவையாக, பொருத்தமானவையாக இருப்பதால் தான், தொன்று தொட்டு இன்றும் அழியாமல் நிலைபெற்று உள்ளது.

பொய், கட்டுக்கதை என்று சிலரால் ஏசப்பட்டாலும், காகிதமும், அச்சும் ஏற்படாத காலத்தில், பல்வேறு முனிவர்களாலெழுதப்பட்டவை இன்றளவும் நிலைத்து நிற்பதன் காரணமென்ன ? அதில் இருக்கும் உண்மையால் தானே.. ?

தொடரும்....
நல்ல தகவல்கள் தந்ததற்கு மிக்க நன்றி. பல்லாண்டு வாழ்க தோழி.

ஜானகி
17-05-2011, 03:19 PM
மனமும் காலமும்

அலைகளைப் போல எப்போதும் கொந்தளிப்புடன் இருப்பதுதான் மனதின் இயல்பு ; சஞ்சலத்திலிருந்து அதற்கு சுலபத்தில் விடுதலை கிடைப்பதில்லை.

ஒரு விநாடி கூட அது அமைதியாக இருப்பதில்லை, புலனின்பங்களைப் பின்பற்றி போய்க்கொண்டே, கலக்கத்துடன் பல திசைகளிலும் மனம் ஓடியபடியே இருக்கிறது.

இந்த மனம் எனும் பேய்க்கு உண்மையில் இருப்பு என்பது அறவே கிடையாது , வீணான கற்பனையின் மூலமே அது ஒரு வடிவத்தை ஏற்கிறது ; இதனை விவேகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

மனம் நம்மை நெருப்பை விட மிகவும் அதிகமாக எரித்துவிடக்கூடியது ; அது வஜ்ரத்தைவிடக் கடினமானது. சலனம்தான் அதன் இயல்பாக இருக்கிறது.

நீர்ச்சுழல் இருக்கும் கடலைப் போலவே, மனமும் மனிதனை எங்கோ தொலை தூரத்தில் கொண்டுபோய்த் தள்ளிவிடக் கூடியது ; அதனை அடக்குவது மிகவும் கடினமான செயலாகும்.

மரத்திலுள்ள இலை விரைவில் பழுத்துத் தரையில் உதிர்ந்துவிடுகிறது, அதைப் போன்றதே இந்த உடலின் நிலையும்.பொய் ஞானத்தில் உதித்த உடல், கனவு நிலையைப் போல, மயக்கங்கள் நிறைந்ததாக இருக்கிறது.

உடலின் நிலையாமை வெட்ட வெளிச்சமான விஷயம். மனிதனுடைய ஆசைகள் நிறைவேறாதபடி, வயோதிகம் செய்துவிடுகிறது. மாலை நேரத்தைத் தொடர்ந்து இருள் சூழ்வதுபோல, வயோதிகத்தைத் தொடர்ந்து மரணம் வருகிறது.

இந்த உடல், மோகத்தில் அழுந்தியிருக்கும் உயிரின் இருப்பிடமாக விளங்குகிறது.மோட்சம் பெறுவதற்கு உதவுகின்ற தகுதி உடலுக்கு இருக்கிறது.

" நானும் உடலும் ஒன்று அல்ல ; எனக்கும் உடலுக்கும் சம்பந்தம் கிடையாது.." என்று உணர்ந்து அமைதி பெறும் மனிதன் மிகவும் சிறந்தவன் ஆவான்.

நன்றி....தர்ம முரசு.

ஜானகி
25-05-2011, 03:44 AM
அறியாமை

மனிதன் அறியாமையில் உழலுகிறான்...காலம் எனும் பாம்பு அவனை ஏற்கனவே பிடித்துக் கொண்டாகிவிட்டது ; ஆனால் அவன் நிலையற்ற புலன் இன்பங்களைத் தேடுகிறான்.....தோன்றி மறையும் நிலையற்ற அந்த இன்பங்களை அடைய அவன் இரவு பகலாகப் பாடுபட்டுக் கடுமையாக முயற்சி செய்கிறான்.

' நான் இந்த உடல்'....என்ற எண்ணம் அறியாமையாகும்.' நான் ஆத்ம சொரூபம் ' என்பதனை உணர்ந்துகொள்வதே ஞானம். ஞானமே மோகத்தை அழிக்கக் கூடியது.

எண்ணற்ற பிறப்பு, இறப்பு எனும் சம்சாரத்திற்கு அறியாமைதான் காரணமாக இருக்கிறது....அத்தகைய சம்சாரத்தை ஒழிக்கக்கூடியது ஞானம்.

ஆத்மா பரிபூரணமானது. இத்தகைய ஆத்மாவில் துன்பம் நிறைந்த சம்சாரம் இருப்பதாக நினைப்பதன் காரணம் அறியாமையே. ஞானம் ஏற்பட்டால் இந்த உணர்வு மறையும், ஆனந்தம் ஏற்படும்.

உண்மையில் இல்லாத ஒன்றை, இருப்பதாக நினைப்பது, ஒரு கயிற்றைப் பாம்பு எனக் கற்பனை செய்வது போலாகும்.

முக்தியைப் பெறுவதற்கு உரிய முயற்சியில் ஈடுபடும்போது, ஆசை, கோபம், மயக்கம், காமம், குரோதம், லோபம், மோகம் போன்ற பகைவர்களை எதிர்த்துப் போராட வேண்டிவரும். பொறுமையை வளர்த்துக் கொண்டால், தடைகளை மீறி முன்னேறலாம்.

ஆன்மா என்பது உடல், புலன்கள், புத்தி, பிரபஞ்ச வாழ்க்கைஆகியவைகளிலிருந்து வேறுபட்டது. இதனை உணராதவரை இந்த உலகத்தின் துன்பங்களான நோய், மரணம் முதலானவை தொந்தரவுதரும்.

ஆன்மா பரிசுத்தமானது, சுயம்பிரகாசமானது, உணர்ச்சிவயப்படாதது.

நன்றி....தர்ம முரசு.

ஜானகி
31-05-2011, 11:02 AM
பரதன் ராமனைக் காட்டில் சந்தித்தபோது" ஒரு நாட்டை ஆள்பவன் எப்படி இருக்கவேண்டும்" என்பது பற்றி ராமன் வழங்கிய அறிவுரைகளில் சில :

ராஜ நீதி

" இறை வழிபாடு செய். தாய் தந்தை சொற்படி நட. குருமார்களுக்கு சேவை செய்து அவர் கட்டளைகளை நிறைவேற்று.சான்றோருக்கு வேண்டியவைகளைக் கொடு. அறிவில் உயர்ந்த அறிஞர்களுக்குப் பரிசளி. "

" உன் மந்திரிகள் அறிவாளர்களாக, நீதி நிபுணர்களாக, பிறரது எண்ணஓட்டத்தைக் கிரகிக்கும் சக்தி பெற்றவர்களாக, நம்பத்தகுந்தவர்களாக இருக்கிறார்களா ?

" நீ செய்யும் ஆலோசனை, அந்தக் காரியம் முடிவதற்குமுன் வெளியில் தெரியாமல் இருக்கிறதா ? எளிய வழிகளில், உயர்ந்த பலன் தரும் திட்டங்களை ஆலோசித்து, தாமதமின்றிச் செய்கிறாயா ? "

" உன் வரவு அதிகமாகவும், செலவு குறைவாகவும் இருக்கிறதா ? விவசாயிகளும், குடியானவர்களும் வளம் பெற்று, உன்னிடம் அன்பு வைத்திருக்கிறார்களா ?உன் நாட்டில் உள்ளவர்கள் நீ நன்றாக இருக்கவேண்டும் என பிரார்த்திக்கிறார்களா ? "

" வீரர்கள், உத்தம குணம் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு வெகுமதிகள் கொடுத்துக் கௌரவிக்கிறாயா ? போர் வீரர்களுக்கு, உரிய காலத்தில், உணவையும், சம்பளத்தையும், அவரவர்கள் வேலைக்குத் தகுந்தபடி கொடுக்கிறாயா ? "

" பணக்காரனுக்கும், ஏழைக்கும் இடையே வரும் வழக்குகளில், உன் நீதிபதிகள் பணக்காரனிடமிருந்து பணம் பெற உத்தேசிக்காமல் தீர்ப்பு சொல்கிறார்களா ?"

" முற்பகலில் அறம் செய்யவேண்டும்; பிற்பகலில் பொருள் சம்பாதிக்கவேண்டும்; இரவை இன்பத்திற்காகச் செலவிடவேண்டும் உரிய வேளையில், உரியதைச் செய்யவேண்டும் "

"மன்னன், மந்திரி, நாடு, கோட்டை, பொக்கிஷம், படை, மக்கள்--- இந்த ஏழும் நாட்டின் அங்கங்களாகும், இவற்றை எப்போதும் நீ காக்கவேண்டும்."

" நெருப்பு, நீர், நோய், பஞ்சம், அகாலமரணம், என்று இயற்கையாக வரும் கஷ்டங்களையும், அதிகாரி, திருடன், எதிரி, அரசனுக்கு வேண்டியவன், அரசனின் பேராசை என்று மனிதனால் வரும் கஷ்டங்களையும் நீ விலக்கவேண்டும். "

நன்றி......தர்ம முரசு.