PDA

View Full Version : ஆஸி VS பங்ளாதேஸ்



ஆதி
11-04-2011, 09:50 AM
இன்று ஆஸிக்கு பங்ளாதேஸுக்கும் இடையில் நடந்த இரண்டாவது ஒருநாள் ஆட்டம் நடந்தது

முதலில் மட்டையாடிய பங்ளா 50 ஓவர்களுககு 7 விக்கடுகளை இழந்து 229 எடுத்தது, பின்ன மட்டையாடிய ஆஸி 26 ஓவர்களுக்கு 1 விக்கட்டை மட்டுமே இழந்து 232 எடுத்து இன்றைய போட்டியை வென்றது..

ஷேன் வாட்சன் 96 பந்துகளுக்கு 185 ரன்களை குவித்தார், அதில் 15 பௌண்ட்ரிகளும், 15 சிக்ஸர்களும் அடங்கும்...

ஒரு நாள் போட்டியில் அதிகமா சிக்ஸர் அடித்த வீரர் எனும் பெருமையை இதன் மூலம் வாட்ஸன் பெருகிறார்..

இதற்கு முன் ஒரு நாள் போட்டியில் அதிகப்பட்சமாக 12 சிக்ஸர்களை அடித்தவர் சேவியர் மார்ஸல்ஸ் என்பவர் ஆவர்..

பங்ளா மட்டும் இன்னும் 20-30 ரன்களை அடித்திருந்தால், வாட்ஸன் சச்சினின் அதிகப்படியான ஒருநாள் ஆட்டத்தின் ஓட்டங்களான 200ரை எந்த சந்தேகமில்லாமல் கடந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது...

வாழ்த்துக்கள் வாட்ஸன்...

ஓவியன்
11-04-2011, 10:00 AM
இப்போதுதான் ஸ்கோர் கார்டைப் பார்த்தேன், அடித்து நொறுக்கியிருக்கிறார் வட்சன்..!! :eek:

வாழ்த்துகள் வாட்சன், டெண்டுல்கரின் இரட்டைச்சத சாதனை மயிரிழையில் தப்பியது. :)

ஆதவா
11-04-2011, 10:21 AM
முதலில் நான் பார்க்கும் பொழுது வாட்சன் சதம் கடந்திருந்தார். 21 ஓவர் இன்னும் 70 ரன்கள் தேவையாக இருந்தது,... ஆனால் சத்தியமாக வாட்சன் இப்படி கோடையடி அடிப்பாரென நினைத்தும் பார்க்கவில்லை! நல்லவேளை, பங்களாதேஷ் 230 ரன்கள் மட்டுமே டார்கெட் கொடுத்தது!!! ஹி ஹ் இ

aren
11-04-2011, 10:29 AM
பங்களாதேஷ் இன்னும் 30 ரன்கள் எடுத்திருந்தால் வாட்சன் இந்த மாதிரியாக ஆடியிருக்கமாட்டார் கொஞ்சம் நிதானமாகவே ஆடியிருப்பார். ஆகையால் சச்சின் ரெக்கார்டை அதற்குள் அடித்துவிட முடியாது.

இருந்தாலும் இது எம அடி, வாட்சன் உண்மையிலேயே ஒரு திறமையான ஆட்டக்காரர்.

ஷீ-நிசி
11-04-2011, 01:16 PM
மரண அடிதான் பங்களாதேஷ்க்கு...

வாட்சனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வழங்கியிருக்கிறது பங்களாதேஷ்... நிறைய கேட்ச்கள் கோட்டை விட்டார்களாம்..

அன்புரசிகன்
11-04-2011, 11:05 PM
அந்தக்கண்றாவியை நான் நேற்று பார்த்தேன். பந்துவீச்சாளர்கள் தான் பாவம். பின்னால் நின்ற விக்கட் காப்பாளர் சிரித்துக்கொண்டிருந்தார். (அவருக்கு வேலை குறைஞ்சதாலயோ???)


மரண அடிதான் பங்களாதேஷ்க்கு...

வாட்சனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வழங்கியிருக்கிறது பங்களாதேஷ்... நிறைய கேட்ச்கள் கோட்டை விட்டார்களாம்..
நிறைய வாய்ப்பெல்லாம் இல்லை. 2 தான். அதுவும் 100 அடித்த பிறகு. ஒன்று மிகவும் கடினமானது. 2வது தான் இலகுவானது. (அன்று பாக்கிஸ்தான் விட்டவற்றுடன் ஒப்பிடுகையில் இவற்றை கணக்கிடாதே விடலாம். :lachen001: