PDA

View Full Version : வண்ணத்துப்பூச்சி



சசிதரன்
11-04-2011, 05:47 AM
வண்ணத்துப்பூச்சிகளை பற்றி தொடங்கினால்
உற்சாகம் கூடி போகும் உன்னில்.

அதைப் பற்றிய தகவல்களை
எவ்வளவு சொன்னாலும் கேட்பாய்.
சமயங்களில் நான் தெரியாத
அரிய தகவல்களை சொல்வாய்

வயல்வெளிகளின் பசுமையில்
வண்ணத்துப்பூச்சி பிடிப்பதாய் வரும் கனவு
உனக்கு பிடித்ததென்பாய்.

இரு சிறகுகள் கிடைத்தால்
அதன் கூட்டத்திற்கே ராணியாவேன்
என்றபடி சிரிப்பாய்.

நீண்ட நாட்களுக்கு பிறகான ஒரு சந்திப்பில்
உன் வண்ணத்துப்பூச்சி கனவுகள்
குறித்து கேட்ட பொழுது
விரக்தியாய் புன்னகைத்தபடி
நெடுஞ்சாலை பயணங்களில்
வண்ணத்துப்பூச்சுகள் பொருட்டல்ல என்றாய்.

கலாசுரன்
11-04-2011, 05:53 AM
இரு சிறகுகள் கிடைத்தால்
அதன் கூட்டத்திற்கே ராணியாவேன்
என்றபடி சிரிப்பாய்.

அமோகமான வரிகள் ..!

ரசித்தேன் சசிதரன் ..:)

உமாமீனா
11-04-2011, 07:38 AM
அது அன்று இது இன்று

Nivas.T
11-04-2011, 07:44 AM
நெடுஞ்சாலை பயணங்களில்
வண்ணத்துப்பூச்சுகள் பொருட்டல்ல என்றாய்.

விரக்த்தியின் விளிம்பு
வரிகளில் தெள்ளத்தெளிவாக

கவிதை அருமை சசிதரன்
என்ன சசி ரொம்பநாள ஆளக் காணும்?
எப்டி இருக்கீங்க?

ஓவியன்
12-04-2011, 05:43 AM
இரக்கமில்லாமல் ஓடி உருளும்
காலச் சக்கரங்கரங்கள்
அசூரத்தனமாக நசுக்கி விட்டுப் போகும்
விடயங்கள் கொஞ்சமல்ல.....

வேறென்ன சொல்ல,
இதுவும் கடந்து போகும்..!!

பூமகள்
12-04-2011, 08:58 AM
இப்படியாக இழந்த வண்ணத்துப்பூச்சி இறகுகளோடு தான் வாழ்க்கை இல்லையா சசி...??!!

குழந்தைப் பருவம் எத்தனை அழகானது..

அழகான கவிதை சசி.. பாராட்டுகள். :)

Ravee
12-04-2011, 10:46 PM
இயற்கையாய் பிறந்த கவிதை ..... சாலையில் சருகாய் கிடந்த வண்ணத்து பூச்சியினை கைகளில் எடுத்து வருடி பார்த்த நினைவுகளை திருப்பி தந்ததர்க்கு நன்றி சசி.

சசிதரன்
13-04-2011, 04:04 PM
நன்றி நண்பர்களே... :)

இளசு
13-04-2011, 05:37 PM
கல்லுக்குள் தேரைபோல்
வறண்ட நிதர்சன வாழ்க்கைக்குள்ளும்
வண்ண இரசனைகள் பதுங்கியிருக்கும்..

எந்தக் கணம்.. எது படும்.. எது தகரும்..?
இந்த வகை அகலிகை இரசனைகள்
என்றும் மீண்டும் வெளிவரலாம்...

நிகழாவிட்டாலும் குறைவில்லை..
முந்தை இருந்ததே இரசனைகள்..
அந்தத் திருப்தியே கூட போதும்..



கவிதைக்கு வாழ்த்துகள் சசி..

அமரன்
13-04-2011, 07:53 PM
அக்கால இரனைப் பூக்கள்
வாழ்க்கைப் பறப்பினூடு மகரந்தச் சேர்க்கை அடைந்து
விரக்திக் கனியாகக் கனிந்திருக்கும்
வாழ்வியல் நிதர்சனம் சொல்லும் கவிதை.

வண்ணத்துப் பூச்சியின் நிறங்களைப் போல்
எப்போதும் சசியின் கவிதைகள் அழகு கொட்டி வியப்பில் ஆழ்த்துவன.

சசிதரன்
14-04-2011, 04:19 PM
நன்றி இளசு அண்ணா... :)

நன்றி அமரன்... :)

கீதம்
14-04-2011, 10:05 PM
வண்ணத்துப்பூச்சிகளை விட்டு விலகி நெடுந்தூரம் பயணப்பட்டுவிட்ட மனதைப் பாடும் கவிதை.

ஏக்கம் பிரதிபலிக்கவில்லை, யதார்த்தமே புன்னகைக்கிறது. பாராட்டுகள் சசிதரன்.

முரளிராஜா
15-04-2011, 02:02 AM
வண்ணத்துப்பூச்சி அழகான கவிதை பாராட்டுக்கள் சசி