PDA

View Full Version : செய்பவனும்,செய்யாதவனும்



M.Jagadeesan
10-04-2011, 11:19 AM
"செய்" என்றால் செய்யாது
"செய்யாதே" என்றால் செய்யும்
இது குழந்தை.

சொன்னால் செய்வாள்
சொல்லாவிட்டால் செய்யமாட்டாள்
இது வேலைக்காரி.

சொன்னாலும், சொல்லாவிட்டாலும்
செய்து கொண்டேயிருப்பாள்
கட்டிய மனைவி.

செய்வதாய்ச் சொல்லி
செய்யாமல் ஏமாற்றுவான்
அரசியல்வாதி.

முரளிராஜா
10-04-2011, 12:07 PM
தேர்தல் சமயத்துக்கு ஏற்ற கவிதை
வாழ்த்துக்கள் அய்யா உங்களுக்கு

சொன்னாலும், சொல்லாவிட்டாலும்
செய்து கொண்டேயிருப்பாள்
கட்டிய மனைவி.
(தொந்தரவு செய்வதைதானே சொல்கிறிர்கள்:D)

M.Jagadeesan
10-04-2011, 12:55 PM
"ராரா"க்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? சொந்த அனுபவம் பேசுகிறதோ?

Nivas.T
10-04-2011, 01:30 PM
கவிதை அருமைங்க



"ராரா"க்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? சொந்த அனுபவம் பேசுகிறதோ?
:lachen001::lachen001::lachen001:

பிரேம்
11-04-2011, 12:33 PM
அருமை..அருமை..
மணிசெய்திகள் காணும் நேரத்தில் வந்து விழுந்த கவிதை போலும்..குழந்தை..வேலைக்காரி...மனைவி..அப்புறம் அரசியல்வாதி..!!
எப்டி என்னோட கணிப்பு..?? :eek:

M.Jagadeesan
11-04-2011, 01:02 PM
நன்றி பிரேம்!

ஷீ-நிசி
11-04-2011, 01:17 PM
அடடே! எப்படிங்க... நல்ல ஆராய்ந்து எழுதியிருக்கீங்க....

படிக்கறதுக்கு ரொம்ப சாதாரணமா இருந்தாலும்... அட, ஆமாம்ல அப்படின்னு சொல்ல தோணுது.

சூப்பர்

M.Jagadeesan
11-04-2011, 01:51 PM
நன்றி நிவாஸ்!

sarcharan
13-04-2011, 02:49 PM
"ராரா"க்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? சொந்த அனுபவம் பேசுகிறதோ?

திருமணமானவன் லைசென்ஸ் உள்ள காதலன்...:)

அமரன்
13-04-2011, 05:41 PM
அப்படிப் போடுங்க கவிதையை.

செய்யாததைச் செய்ததாய்ச் சொல்லி ஏமாற்றுபவனும் அரசியல்வாதிதான்.

jk12
13-04-2011, 06:19 PM
நல்லா இருக்கு நண்பரே
இன்னும் பல கவிதைகளை இத்திரியில் பதிவிர்கள் என காத்திருக்கிறேன்

M.Jagadeesan
13-04-2011, 10:47 PM
அமரன், JK12..ஆகியோருக்கு நன்றி!

கீதம்
14-04-2011, 04:04 AM
நன்றாக இருக்கின்றன சிந்தனைத் துளிகள்.

உங்கள் கூரிய அவதானிப்புக்குப் பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
14-04-2011, 04:07 AM
நன்றி! கீதம்!

உமாமீனா
16-04-2011, 09:55 AM
அருமை வாழ்த்துக்கள்...........

இளசு
16-04-2011, 11:00 PM
பாராட்டு கவிதைக்கு..


ஷீ சொல்வதுபோல் நானும் '' அட ஆமாம்'' என்கிறேன்.