PDA

View Full Version : அஃறிணைகள்ஷீ-நிசி
08-04-2011, 02:02 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Agrinaigal1.jpg


இவைகளெல்லாம்
ஓட்டுச்சாவடிக்கு செல்வதில்லை….

நாய்கள்,
பன்றிகள்,
பிணங்கள்,
மற்றும் சில வாக்காளர்கள்…….


ஷீ-நிசி

பின்குறிப்பு : வாக்களிக்க அனைத்து தகுதிகள் இருந்தும்... சூழ்நிலைகள் ஒத்துழைத்தும், அவசியம் வரிசையில் நின்று வாக்களிக்கத்தான் வேண்டுமா என்று நினைக்கும் அறிவுஜீவிக்களுக்காக மட்டுமே இந்த கவிதை சமர்ப்பணம்

M.Jagadeesan
08-04-2011, 02:36 AM
ஆடுகளும் ஓட்டுச்சாவடிக்குச் செல்வதில்லை.ஆனால் இன்று மக்கள் ஓட்டுச்சாவடிக்குச் செல்ல "இலவச ஆடுகள்" காரணமாக இருக்கின்றன.

அன்புரசிகன்
08-04-2011, 03:05 AM
அப்புறமா எப்படி கள்ளவாக்கு போடுறதாம்??? :D :D
---

கசையடி போல் வரிகள். ஆனால் ஒருவிடையம். இலங்கையில் எனது ஐயா (அம்மாவின் அப்பா)வின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கு. அவர் இறந்தது 1973 ல். கடந்தமுறையும் வாக்காளர் அட்டை வந்தது. ஆனால் என் தம்பி 21 வயது ஆகியும் இன்னமும் வாக்காளர் பட்டியலில் பெயர் வரவில்லை. பாடசாலையூடாக அடையள அட்டை விண்ணப்பித்ததால் அவனுக்கு அடையாள அட்டை உண்டு. :D :D :D

---

இறுதியில் terms and condition apply போன்ற வரிகள் எனக்குப்பிடித்திருக்கு.

ஆதி
08-04-2011, 04:25 AM
நிசி இந்த கவிதையின் கருத்தில் இருந்து முற்றிலுமா முரண்படுகிறேன்..

வாக்களிப்பதும் வாக்களிக்காமல் இருப்பதும் அவரவர் உரிமை..

//http://www.dailythanthi.com/article.asp?NewsID=637808&disdate=4/4/2011//

இந்த செய்தியின் கடைசி இரு பத்தியை பாருங்கள்...

அன்புரசிகன்
08-04-2011, 04:38 AM
நிசி இந்த கவிதையின் கருத்தில் இருந்து முற்றிலுமா முரண்படுகிறேன்..

வாக்களிப்பதும் வாக்களிக்காமல் இருப்பதும் அவரவர் உரிமை..

//http://www.dailythanthi.com/article.asp?NewsID=637808&disdate=4/4/2011//

இந்த செய்தியின் கடைசி இரு பத்தியை பாருங்கள்...

ஆதன்...
ஒரு ஜநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டல்லவா. அந்த கடமையை நிறைவேற்றுவது பற்றித்தான் நிஷியின் கவிதை உள்ளதாக நினைக்கிறேனே அன்றி உங்கள் உரிமையில் அல்ல. வாக்கு அளிக்காதவன் நாளை அரசிடம் எந்தக்கேள்வி கேட்பதற்கும் நாதியற்றவனாகிறான்.

அரசாங்கத்தை மக்களால் தெரிவுசெய்யப்படல் என்ற கூற்றில் நீங்கள் அளித்த வாக்கு உள்ளடங்குகிறது. நீங்கள் அந்த கடமையை தவறினால் அந்த மக்கள் என்ற பகுதியில் நீங்கள் வரமாட்டீர்கள். உங்களால் உருவாக்கப்படாத அரசிடம் நிச்சயம் அந்த அரசை தட்டிக்கேட்க்கும் உரிமை கிடையாது. இந்தியாவில் எப்படியோ தெரியாது பல மேலை நாடுகளில் வாக்களிக்கத்தவறுபவர்களுக்கு தண்டப்பணம் மற்றும் அரச சலுகைகள் நிறுத்தப்படும்.

உரிமை வேறு கடமை வேறு. இல்லையா... நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். (இது விவாதக்களமல்ல தான் ஆனால் பதிய வேண்டி நினைத்ததால் பதிகிறேன். தவறு என்றால் பதிவை நீக்கலாம்)

ஆதவா
08-04-2011, 04:46 AM
நிசி இந்த கவிதையின் கருத்தில் இருந்து முற்றிலுமா முரண்படுகிறேன்..

வாக்களிப்பதும் வாக்களிக்காமல் இருப்பதும் அவரவர் உரிமை..

//http://www.dailythanthi.com/article.asp?NewsID=637808&disdate=4/4/2011//

இந்த செய்தியின் கடைசி இரு பத்தியை பாருங்கள்...

எதுக்குங்க..... உங்க வாக்கை அடுத்தவங்களுக்கு தாரை வாக்கவா???

நான் சென்னையில் EPIC பணியில் இருந்தபொழுது நூற்றுக்கணக்கில்............... சரி வேண்டாம் விடுங்க... தேர்தல் கமிஷன்காரங்க நம்ம மன்றத்தில பார்த்தாலும் பார்ப்பாங்க..
ம்ம்..... இதைச் சொல்லலாம்..
என் கண் முன்னாடி நடந்த சம்பவம்... (பலருக்கும் நடந்திருக்கும்..)

மாலை நேரம். நீண்ட யோசனைக்குப் பின் வாக்களிக்க இரண்டு பேர் பள்ளிக்கூடம் செல்கின்றனர். பட்டியலில் பெயர் இருந்தது. ஆனால் திருப்பியனுப்பப் பட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே வாக்களித்தவர்களாகிவிட்டார்கள்.... அட அதாங்க கள்ளவோட்டு இவங்க பேர்ல... அங்க இருக்கறவங்க சிரிச்சுகிட்டே சொன்னாங்களாம்...

“அடுத்ததாட்டி நெம்ப லேட்டா வராதீங்க”

போங்கப்பா... போய் வாக்களிச்சி புள்ள குட்டிங்கள படிக்கவையுங்கப்பா..

@ ஷீ!! இதையே உங்கள் கவிதைக்கான என் கருத்தாக முன் வைக்கிறேன்.

ஆதவா
08-04-2011, 04:47 AM
ஆதன்...
ஒரு ஜநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டல்லவா. அந்த கடமையை நிறைவேற்றுவது பற்றித்தான் நிஷியின் கவிதை உள்ளதாக நினைக்கிறேனே அன்றி உங்கள் உரிமையில் அல்ல. வாக்கு அளிக்காதவன் நாளை அரசிடம் எந்தக்கேள்வி கேட்பதற்கும் நாதியற்றவனாகிறான்.

அரசாங்கத்தை மக்களால் தெரிவுசெய்யப்படல் என்ற கூற்றில் நீங்கள் அளித்த வாக்கு உள்ளடங்குகிறது. நீங்கள் அந்த கடமையை தவறினால் அந்த மக்கள் என்ற பகுதியில் நீங்கள் வரமாட்டீர்கள். உங்களால் உருவாக்கப்படாத அரசிடம் நிச்சயம் அந்த அரசை தட்டிக்கேட்க்கும் உரிமை கிடையாது. இந்தியாவில் எப்படியோ தெரியாது பல மேலை நாடுகளில் வாக்களிக்கத்தவறுபவர்களுக்கு தண்டப்பணம் மற்றும் அரச சலுகைகள் நிறுத்தப்படும்.

உரிமை வேறு கடமை வேறு. இல்லையா... நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். (இது விவாதக்களமல்ல தான் ஆனால் பதிய வேண்டி நினைத்ததால் பதிகிறேன். தவறு என்றால் பதிவை நீக்கலாம்)

அண்ணா.... சூப்பர்ங்ணா... நான் மனசில நெனச்சத செமயா சொன்னீங்ணா....

இளசு
08-04-2011, 06:10 AM
கெட்டவர்கள் நிகழ்த்தும் கேடுகளைவிட
நல்லவர்களின் வாளாவிருத்தலே
நாடுகள் சீர்கெட முதன்மைக் காரணி...
நம் ஷீ-யின் கவிக்கருத்தை வழிமொழிகிறேன்.

போய் 49-ஓ -வைத் தேர்ந்து வைக்கலாம்..

பாரதி
08-04-2011, 06:57 AM
இக்கவிதையின் தலைப்பே இதை படிக்கத்தூண்டியது.
கவிதையின் கரு கவிஞரின் மனநிலையை தெளிவாகக்காட்டுகிறது.
தகுதி படைத்த அனைவரும் தங்கள் வாக்கை செலுத்துவதும், செலுத்த மறுக்கும் முறையை வாக்குச்சாவடியில் தேர்ந்தெடுப்பதுமே முறையானதாகும்.
சில வரிகளில் சிந்திக்க வைத்த கவிதைக்கு பாராட்டு ஷீ.

----------------------------------------------------------------------------------
இனி...
தலைப்பு சரியா எனத் தேடியதில் கிடைத்த விளக்கம்:

அஃறிணையில் பன்மை உணர்த்தும் முறை
அஃறிணையில் ஒரு பொருளைக் குறிக்கும் இயற்பெயர்ச்
சொற்களைப் பன்மை ஆக்குவதற்கு அச்சொற்களின் பின் கள்
விகுதி சேர்த்துக் கொள்வதும் உண்டு என்று தொல்காப்பியர்
கூறுகிறார். (தொல். சொல். 171)
(எ.டு) யானை யானைகள்
மரம் மரங்கள்

இவ்வாறு ‘சேர்த்துக் கொள்வதும் உண்டு’ எனக் கூறியிருப்பதை
நோக்கும்போது, அவர் காலத்தில் கள் விகுதி சேர்க்காமலும்
அஃறிணைப் பன்மை உணர்த்தப்பட்டது என்பது தெரிய வருகிறது.
கள் விகுதியொடு வாராத அஃறிணை இயற்பெயர்கள், அவை
கொண்டு முடியும் வினைகளை வைத்து, ஒருமை, பன்மை
உணரப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

(எ.டு) யானை வந்தது (ஒருமை)
யானை வந்தன. (பன்மை)

மேலும் கவிதையின் முதல் வரியில் இவைகள் என வந்திருக்கிறது.
இது - ஒருமை ; இவை - பன்மை.
இவையெல்லாம் என்பது சரியாக இருக்குமா நண்பரே?

ஷீ-நிசி
08-04-2011, 01:47 PM
இந்தக் கவிதையை எழுதும்போதும், பதியும்போதும் இதற்கு எப்படி வேண்டுமானாலும் கருத்துக்கள் வரலாம் என்று அறிந்தே எழுதினேன்... ஆனால் மிக நியாயமாய் ஒரு கவிஞனின் உள்ளுணர்வை புரிந்து நீங்கள் கொடுத்த ஆதரவு என்னை உற்சாகபடுத்துகிறது....

இங்கே கவிதைக்கு பின்னூட்டமிட்ட ஜகதீசன் அவர்களுக்கு நன்றி

@ அன்புரசிகன்... பின்குறிப்பையும் ரசித்தமைக்கு நன்றி :)

@ ஆதன்... லிங்க் பார்த்தேன்.. ஓட்டுச்சாவடிக்கு சென்று 49ஓ போட சொல்லியிருக்கிறார்கள்... ஓட்டுச்சாவடிக்கு செல்லவேண்டாம் என்று சொல்லவில்லையே.. கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே!

@ஆதவா....
“அடுத்ததாட்டி நெம்ப லேட்டா வராதீங்க” சீக்கிரமாய் எழுந்து சீக்கிரமாய் சென்று கடமையை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் மக்களே! நன்றி ஆதவா..

@இளசு... அண்ணா, எப்படி இருக்கீங்க.. உங்கள் பின்னூட்டம் எல்லாம் என்னைப்போன்ற கவிஞர்களை வளர்க்கும் உரம்... மிக்க நன்றி அண்ணா!

@பாரதி... ரொம்ப சிந்திக்கவச்சீட்டீங்க...

அவை - அவைகள் (that - those)
இவை - இவைகள்.. (this - these)

(அவை என்பதும் அது என்பதும் ஒன்றே என்றும் நினைக்கிறேன்)

சரியென்றே நினைக்கிறேன் நண்பரே!

Nivas.T
08-04-2011, 01:56 PM
கசையடி கவிதை
அருமை நிசி
பாராட்டுகள்

ஆதி
08-04-2011, 02:58 PM
//அவை - அவைகள் (that - those)
இவை - இவைகள்.. (this - these)

//

அது அவை
இதி இவை

'கள்' விகுதி வராது..

ஆதி
08-04-2011, 03:28 PM
ரசிகன் நான் சொல்ல வந்தது வேறு..

எனக்கு எந்த கட்சிக்கும் ஓட்டு போட விருப்பமில்லை, நான் வாக்கு சாவடிக்கு சென்று ஓ 49 போட விருப்பம் தெரிவித்து, அந்த பதிவேட்டை கேட்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்ன நடக்கும் தெரியுமா ?

சிவா.ஜி அண்ணா கிட்ட கேட்டு பாருங்க அனுபவஸ்தர் சொல்லுவார்..

உடனே தர மாட்டாங்க, ஓரமா உட்கார வச்சிடுவாங்க, இந்த ஓ 49தை யாரையும் போட விடக்கூடாது என்பதில் எல்லா கட்சிக்கார்களும் தெளிவாகவும் ஒற்றுமையாகவும் இருப்பாங்க...

சிவா.ஜி அண்ணாவை வாக்குசாவடியை விட்டு காவலளர்களால் விரட்டி வெளியேற்றப்பட்ட சம்பவம், நம் மன்றத்தில் பதியப்பட்டிருக்கிறது..

//@ ஆதன்... லிங்க் பார்த்தேன்.. ஓட்டுச்சாவடிக்கு சென்று 49ஓ போட சொல்லியிருக்கிறார்கள்... ஓட்டுச்சாவடிக்கு செல்லவேண்டாம் என்று சொல்லவில்லையே.. கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே!
//

நிசி இப்படி பதில் சொல்றார், ஆனால் அந்த மாவட்ட ஆட்சியரின் பதிலை கூர்ந்து கவனித்தால் புரியும்...

ஓட்டு போடாமல் இருப்பதற்கு ஓ 49 என்பதற்கும் பெரியவித்யாசமில்லை என்று சொல்கிறார்..

ஒரு மாவட்ட ஆட்சியரின் கடமை ஓ 49இன் உண்மையான நோக்கத்தையும், அதற்கு இருக்கும் வல்லமையையும் எடுத்துக் கூறுவது, நீ ஓட்டு போட்டா போடு போடாடி விடு என்பது போல் பதிலளிப்பதல்ல..

அரசின் இன்னொரு கட்டளை என்ன தெரியுமா, அரசாங்க அதிகாரிகள் ஓ 49 பயன்படுத்த கூடாது என்பதைதான்..

இப்ப சொல்லுங்க எனக்கு விருப்பமில்லை என்பதை தெரியப்படுத்த கூடாது என்று அரசே தடுத்தால் வீட்டில் தூங்குவதில் என்ன தவறு ??

அஃறிணை அஃறிணை நு சொல்றீங்களே, அவங்க ஜெய்த அப்புரமும் நம்மை மந்தைகளாக தானே பாக்க போறாங்க ?

சிவா.ஜி அண்ணா மாதிரிக்கு இருக்கார் ஓ 49க்கு, இன்னும் என் நண்பர்கள் பலர் இருக்காங்க..

5 மணி நேரம் வரை காக்க வைத்து, அங்க ஃபோன் போடனும் இங்க ஃபோன் போட*னும், அவ*ரு வ*ர*னும் இவரு வரனும் என உட்கார* வைத்துவிட்டு, ஒவ்வொரு க*ட்சிக்காரனா வந்து மிரட்டி மிரட்டி வாக்கு சாவடியை விட்டே வெளியேற்றப்பட்ட அனுபவம் இருக்கா ?

அப்படி வெளியேற்றப்படவனுக்காக நீங்க* யாராவது குரல் கொடுப்பீங்களா ?

முடியாது இல்லையா ?

அப்ப விடுடுங்க, தூங்குறவங்க தூங்கட்டும், ஓட்டு போடுறவங்க போடடும்...

ஷீ-நிசி
09-04-2011, 01:04 AM
@ ஆதன்....தூங்குறவங்க தூங்கட்டும், ஓட்டு போடுறவங்க போடடும்...

'நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்'

உங்க ஓட்டு களவாடப்பட்டாலும் நீங்கள் உங்கள் உரிமையை நிலைநாட்டலாம்..

படிவம் 49-B என்று உள்ளது... உங்களுக்கு வாக்களிக்க மறு ஏற்பாடு செய்யப்படும்..


"த*ங்க*ள் பெய*ரில் க*ள்ள ஓ*ட்டு*ப் போட*ப்ப*ட்டு இரு*ந்தா*ல் வா*க்காள*ர்க*ள் வா*க்க*ளி*க்க ஏ*ற்பாடு செய்யப்பட்டுள்ளது" எ*ன்று* கூ*றிய *பிர*வீ*ண்குமா*ர், "வா*க்கு இழ*ந்த வா*க்காள*ர்க*ள் 49 *பி *பி*ரி*வி*ன்படி உ*ரிய வா*க்கு*ச்*சீ*ட்டு வழ*ங்க*ப்படு*ம்" எ*ன்று*ம் "தகு*ந்த ஆவண*ங்களுட*ன் வா*க்காள*ர்க*ள் வா*க்க*ளி*க்கலா**ம்" எ*ன்று*ம் தெ*ரி*வி*த்தா*ர்.

நன்றி ஆதவன்

அமரன்
09-04-2011, 10:05 PM
கடமை தவறும் கனவான்களை
ஆடை களைந்து தண்டிக்கும் கவிதை.
அவசியம் தேவை. ஒத்துப் போகிறேன் நிசி.

jk12
10-04-2011, 12:15 AM
ஷீ-நிசி
அருமையான கருத்துடன் ரத்தின சுருக்கமான கவிதை; அதை விட மிக அருமையான தலைப்பு.

நம்பிக்கைதான் வாழ்க்கை.. அந்த நம்பிக்கைகு கிடைகும் ஓரு வாய்ப்புதான் வாக்குரிமை..
கூர்ந்து வவனியுங்கள் உஙல் வேட்பாளர்களை எதாவது ஓரு நல்ல கொள்கையை முன்னிருத்தி ஓரு வேட்பாளராவது அனைத்து தோகுதிலுலும் செலுத்தும் டெப்பாசிட் போய்விடும் என தெரிந்தே தேர்தலில் இருப்பார். அப்படிபட்டவர்களுக்கு விழும் வாக்கு இன்னும் நல்ல நம்பிக்கையாவது சில நல்லவர்களுக்கு தராதா?...

நம் தள பொறுப்பான நண்பர் திரு.ஆதனும் சிந்தித்து அவருடைய பதிவை மார்றி கொள்வார் என நம்புகிரேன்.
நம்பிக்கைதானே வாழ்க்கை...(இந்த 49 ஓ போடும் பிரச்சினைக்கு பதில், முன்பாவது இரண்டு இடத்தில் குத்தி செல்லாத வாக்காக ஆக்கிவிட்டு வரலாம், இப்பொழுது அதற்க்கும் வழியில்லையே.... )

ஆதி
11-04-2011, 06:43 AM
@ ஆதன்....
'நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்'

உங்க ஓட்டு களவாடப்பட்டாலும் நீங்கள் உங்கள் உரிமையை நிலைநாட்டலாம்..

படிவம் 49-B என்று உள்ளது... உங்களுக்கு வாக்களிக்க மறு ஏற்பாடு செய்யப்படும்..

முன்பு கேட்டது தான் இப்பவும் கேக்குறேன், முன்பை விட இம்முறை தேர்தல் ஆணையம் கெடுபிடியுடன் உள்ளது, இதுவரை கள்ள ஓட்டு போடவே முடியாது என்று சொல்லிவந்த தேர்தல் ஆணையம் இப்போது கள்ள ஓட்டு போட்டால் என்று சொல்கிறது..

49-பி படிவம் வேறு புதுசா அறிமுகம்..

ஒரே ஒரு கேள்வி, இவ்வளவு கெடுபிடிக்கு மத்தியில் கள்ள ஓட்டு போடனும் னா அது வாக்குசாவடி அதிகாரி மற்று போலிஸ் இருவரையும் சரி கட்டித்தான் செய்யனும், அவங்களே உடைந்தையா இருந்தா இந்த 49-பி யார்கிட்ட வாங்குறது, இதுல போன் வேற கொண்டு போக கூடாதாம்..

நம் நாட்டில் சட்டங்கள் உண்டு, விதிகள் உண்டு, அதில் நிறைய ஓட்டைகளும் உண்டு..

//'நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்' //

என் ஆசான்களில் ஒருவனான பட்டுக் கோட்டையால் எழுதப்பட்டது, ஆனால் அது இங்கு ஒற்று போகாது என்பதே என் தாழ்மையான கருத்து...


நான் 49 ஓ பற்றி பேசுறேன் நீங்க 49 பி பற்றி பதில் சொல்றீங்க இதுவே அரசியல் தானே நிசி...


//5 மணி நேரம் வரை காக்க வைத்து, அங்க ஃபோன் போடனும் இங்க ஃபோன் போட*னும், அவ*ரு வ*ர*னும் இவரு வரனும் என உட்கார* வைத்துவிட்டு, ஒவ்வொரு க*ட்சிக்காரனா வந்து மிரட்டி மிரட்டி வாக்கு சாவடியை விட்டே வெளியேற்றப்பட்ட அனுபவம் இருக்கா ?

அப்படி வெளியேற்றப்படவனுக்காக நீங்க* யாராவது குரல் கொடுப்பீங்களா ?

//

இதுக்கு ஏன் பதில் இல்லை...

அன்புரசிகன்
11-04-2011, 06:53 AM
இதுல போன் வேற கொண்டு போக கூடாதாம்..

நீங்க வேற ஆதன்.
அப்புறம் நீங்க வீடியோவ எடுத்து மூஞ்சிப்புத்தகத்தில பரப்பினா தேர்தல் அதிகாரிகளின் நிலை என்ன??? இவ்வளவு கெடுபிடி செய்தும் பலனில்லாது போயிடும் இல்லையா???

தப்பை சரியாக செய்கிறது தேர்தல் ஆணையம். புரிஞ்சுக்குங்க.. :)

Nivas.T
11-04-2011, 07:40 AM
நீங்க வேற ஆதன்.
அப்புறம் நீங்க வீடியோவ எடுத்து மூஞ்சிப்புத்தகத்தில பரப்பினா தேர்தல் அதிகாரிகளின் நிலை என்ன??? இவ்வளவு கெடுபிடி செய்தும் பலனில்லாது போயிடும் இல்லையா???

தப்பை சரியாக செய்கிறது தேர்தல் ஆணையம். புரிஞ்சுக்குங்க.. :)

:lachen001::lachen001:

உமாமீனா
11-04-2011, 07:45 AM
நச்சின்னு நாலு வரியில் சொன்ன கவிதை கரு உண்மை - அருமை படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
11-04-2011, 09:42 AM
//5 மணி நேரம் வரை காக்க வைத்து, அங்க ஃபோன் போடனும் இங்க ஃபோன் போட*னும், அவ*ரு வ*ர*னும் இவரு வரனும் என உட்கார* வைத்துவிட்டு, ஒவ்வொரு க*ட்சிக்காரனா வந்து மிரட்டி மிரட்டி வாக்கு சாவடியை விட்டே வெளியேற்றப்பட்ட அனுபவம் இருக்கா ?

அப்படி வெளியேற்றப்படவனுக்காக நீங்க* யாராவது குரல் கொடுப்பீங்களா ?

அதாவது வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறியவனை காக்க வைப்பார்கள், மிரட்டுவார்கள்... வெளியேற்றுவார்கள் என்பது உங்கள் கூற்று..

49-A முதலில் இது படிவமே அல்ல..

ஓட்டு போடுகிறவர்கள், கையெழுத்து போடுவார்கள் ஒரு புத்தகத்தில்.. ஒட்டு போடவிரும்பாதவர்கள் கையெழுத்து போடும் புத்தகத்தில் கையெழுத்து போட்டுவிட்டு
அதன் அருகில் 49-A என்று எழுதவேண்டும் அவ்வளவுதான்..

இதற்கு ஏன் அதிகாரிகள் காத்திருக்க சொல்லபோகிறார்கள்.. அல்லது அவர் வரனும், இவர் வரனும் என்று சொல்லபோகிறார்கள் என்று தெரியவில்லை...

எத்தனையோ பேர் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் கடமையை நிறைவேற்றிவிட்டு
வருகிறார்கள்... அவர்கள் எல்லாம் வெளியேற்றபடுகிறார்களா என்ன??

ஷீ-நிசி
11-04-2011, 09:43 AM
நன்றி நிவாஸ், நன்றி அமரன், நன்றி ஜேகே... நன்றி உமாமீனா!

ஆதி
11-04-2011, 10:59 AM
//5 மணி நேரம் வரை காக்க வைத்து, அங்க ஃபோன் போடனும் இங்க ஃபோன் போட*னும், அவ*ரு வ*ர*னும் இவரு வரனும் என உட்கார* வைத்துவிட்டு, ஒவ்வொரு க*ட்சிக்காரனா வந்து மிரட்டி மிரட்டி வாக்கு சாவடியை விட்டே வெளியேற்றப்பட்ட அனுபவம் இருக்கா ?

அப்படி வெளியேற்றப்படவனுக்காக நீங்க* யாராவது குரல் கொடுப்பீங்களா ?

அதாவது வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறியவனை காக்க வைப்பார்கள், மிரட்டுவார்கள்... வெளியேற்றுவார்கள் என்பது உங்கள் கூற்று..

49-A முதலில் இது படிவமே அல்ல..

ஓட்டு போடுகிறவர்கள், கையெழுத்து போடுவார்கள் ஒரு புத்தகத்தில்.. ஒட்டு போடவிரும்பாதவர்கள் கையெழுத்து போடும் புத்தகத்தில் கையெழுத்து போட்டுவிட்டு
அதன் அருகில் 49-A என்று எழுதவேண்டும் அவ்வளவுதான்..

இதற்கு ஏன் அதிகாரிகள் காத்திருக்க சொல்லபோகிறார்கள்.. அல்லது அவர் வரனும், இவர் வரனும் என்று சொல்லபோகிறார்கள் என்று தெரியவில்லை...

எத்தனையோ பேர் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் கடமையை நிறைவேற்றிவிட்டு
வருகிறார்கள்... அவர்கள் எல்லாம் வெளியேற்றபடுகிறார்களா என்ன??

நான் தான் கூறினேனே நிசி, சிவா அண்ணா இருக்கார் உதாரணத்துக்கு என்று, உங்கள் பதிலில் இருந்து ஓ 49-ல் இருக்கும் சிக்கல் என்ன என்று உங்களுக்கு புரியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது..

கையெழுத்தை அங்கு போடனும், இங்கு போடனும் என்று சொல்லும் தேர்தல் ஆணையம் அதற்கென்று ஒரு நிலையான பொத்தானை வைக்க மறுப்பது ஏன் ?

கையெழுத்து போட்டா எவன் போட்டான் என்று தெரிஞ்சுடும், அந்த பயத்துலையே எவனும் ஓ 49 போட மாட்டான், அதையும் மீறி போட்டவர்கள் எல்லாம் உண்டு...

குரல் கொடுப்பீங்களா என்று கேட்டதுக்கு, அப்படி பிரச்சனையே நடக்க சாத்தியமில்லை என்று இருக்கும் பிரச்சனைகளை பார்த்து கண்மூடி கொண்டு, ஓட்டு போடாதவனை திட்டுவதில் என்ன நியாயமிருக்கிறது...

இதுவரை நானிட்டு வந்த பதிவுகளை பார்த்து நான் ஓட்டு போடாதவர்கள் பட்டியலில் இருக்கிறேன் என்று பலரும் நினைத்திருக்க கூடும், அதுப்பற்றி எனக்கு கவலையில்லை..

காரணம் நான் வாதிடுவது எனக்கு தெரிந்த/தெரியாத எத்தனையோ பேருக்காக..

நீங்கள் சொல்வது போல் 49**-A என்று குறிப்பிட வேண்டும் என்பதே தப்பான புரிதல்தானே ?

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=521711&postcount=2

மேலே உள்ள பதிவில் பாருங்க...

இங்கே நான் குறிப்பிடுவது 49-ஓ போடுவதில் இருக்கும் உண்மையான சிக்கல்களை, சிக்கல்களே இல்லை என்று நீங்கள் பதில் சொல்லுவதை பார்த்தால், நீங்கள் நம்புவது மட்டுமே சரி என்று பேசி கொண்டிருக்குறீர்கள் அல்லது உண்மையான நிலவரங்களை இன்னும் புரிந்து கொள்ளவில்லை நீங்கள் அல்லது அரசியல் அனுபவம் அதிகமாய் தேவைப்படுகிறது உங்க்களுக்கு அல்லட்து அப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று அதை முழுமையாக மறைத்து நீங்கள் சொல்லுவது சரி என்று நம்ப வைக்க முயல்குறீர்கள் அல்லது இன்னும் பல சாத்திய முயல்வுகள் இருக்கலாம்....

ஷீ-நிசி
11-04-2011, 11:37 AM
@ ஆதன்

எங்கோ ஒரு சிலருக்கு நடப்பதுதான் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் நடக்கும்
என்று நீங்கள் வாதிடுகிறீர்கள்...

49-ஓ அனுபவம் எல்லோருக்கும் கசப்பாகவே அமையும் என்பது உங்கள் வாதம்..
எல்லோருக்குமே அப்படி அமைவதில்லை என்பது என் வாதம்..

உங்கள் பார்வைக்கு வந்தது ஒரு சம்பவம்..
உங்கள் பார்வைக்கு வராமல் பல சம்பவங்களிருக்கலாம்..


49-ஓ வாக்காளர்களை மட்டும் நான் என் கவிதையின் கருவாக
எடுத்துக்கொள்ளவில்லை...

எத்தனையோ பேர் அந்த நாளை வாக்களிப்பதை தவிர்த்து பல்வேறு வேலைகளுக்கு உபயோகபடுத்திக்கொள்பவர்கள் உண்டு.

நான் ஒருவன் வாக்களிக்காமல் போவதால் நாட்டுக்கு என்ன தீங்கு விளைந்திடப் போகபோகிறது.... என்று நினைப்பவர்களுக்கு

என் ஒருவன் ஓட்டுத்தானா மாற்றத்தை ஏற்படுத்திவிடபோகிறது என்று நினைப்பவர்களுக்கு...

இப்படி நினைப்பவர்களுக்காகத்தான் இக்கவிதை...

நம்மால் எல்லையில் நின்று நாட்டுக்காக போரிட முடியாது....

நம்மால் அநீதியை எதிர்த்து குரலெழுப்பமுடியாது....

நம்மால் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கமுடியாது..

நம்மால் வீதிக்கு வந்து ரவுடிகளை பந்தாடமுடியாது...

நம்மால் முடிந்த ஒன்றே ஒன்று... ஓட்டுபோடுவது மட்டும்தான்..


வாக்களிக்கும் உரிமையை தவறாமல் நிறைவேற்றவேண்டும் என்ற அளவுக்கு எனக்கு அரசியல் அறிவு உள்ளது

ஆதி
11-04-2011, 12:03 PM
@ நிசி

ஒரு சம்பவமல்ல பல்வேறு சம்பவங்கள் உண்டு 49 ஓ வைத்து..

லயோலாவில் 2001 தேர்தல் கருத்துக் கணிப்பு எடுக்கும் குழுவில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்..

நக்கீரன், அரும்பில் மாணவ பத்திரிகையாளனாய் கல்லூரி காலத்தில் பண்யாற்றி இருக்கிறேன்..

சிறு போது முதலே அரசியல் சூழலில் தான் வளர்ந்தேன், என் அப்பாவே தீவிரமாய் அரசியலில் இயங்கியவர்தான், எங்கள் உறவுக்காரர்கள், என் அண்டைவீட்டார், என் நண்பர்கள், என் அப்பாவின் நண்பர்கள் என்று பலரும் பல கட்சிகளில் இருப்பவர்கள் தான் கொஞ்சம், சிலர் முக்கியமான பதவியில்...

2001, 2006 தேர்தலில் கட்சிப்பிரதிநிதிகளோடு வாக்குச்சாவடியில் அமர்ந்திருக்கிறேன்ன்..

என் அப்பாவே பலமுறை வாக்குச்சாவடி அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார், என் அப்பாவின் நண்பர்கள் பலர் இந்த தேர்தலிலும் பணியாற்ற செல்கிறார்கள்...

ஒரு புத்தகத்தை படித்துவிட்டு உலக புத்தகத்தை படித்ததாய் கருதும் அறிவாளி நானல்ல...

49 ஓ போடுவதில் இருக்கும் சிக்கல் எனக்கு மிக தெளிவாக தெரியும்..

49 ஓ போட வருகிறவர்களை எப்படி கையாள்வார்கள் என்பதும் எனக்கு ரொம்ப துல்லியமா தெரியும்..

திருப்பூர் நெசவாலர் சங்கம் இந்த தேர்தலில் 1000 பேரை நிறுத்தி 49 ஓ வை வலியுறுத்த போவதாக சொன்ன உடன் எல்லா கட்சிகளும் அலறியட்டித்துக் கொண்டு போய் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்..

இதை ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் ஓட்டுப்போடுவதை பற்றி பேசிக் கொண்டிருக்குறீர்கள், இவன் இல்லை என்றால் அவன், அவன் இல்லை என்றால் இவன் என்று மாற்றி மாற்றி குத்தி முகத்தில் கரி பூசிக் கொள்ளும் நிலமை மாற நான் பேசிக் கொண்டிருக்கிறேன்...

அதற்கு ஒரே தீர்வு 49 ஓ... இருப்பவர்களுக்கும், வருகிறவர்களுக்கும், வரப்போகிறவர்களுக்கும் மக்களைப்பார்த்தால் அப்பத்தான் பயம் வரும்..

இப்ப இருக்கிற சூழலுக்கு திமுக ஊழலை சொல்லி அதிமுகவும், அதிமுக ஊழலை சொல்ல திமுகவும் சம்பாதிக்க போறது மட்டும்தான் விதி..

இந்த விதியை மாற்றுகிற விதியை பற்றித்தான் வாதாடிக் கொண்டிருக்கிறேன்....

ஷீ-நிசி
11-04-2011, 12:45 PM
நம் கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்... நன்றி ஆதன்!

ஆதவா
11-04-2011, 01:04 PM
அடடே... ரொம்ப சீரியஸா வாதம் போயிட்டு இருக்கே...

என்னைப் பொறுத்தவரையிலும் ஓட்டு போடாமல் இருப்பது தவறானதுங்க... நீங்க என்னவேணும்னாலும் நினச்சுக்கலாம். ஏங்க சார், எப்பவும் DMK, ADMK க்கே ஓட்டு போடணும்னு நினைக்கிறீங்க? ஒரு நல்ல சுயேட்சை வேட்பாளரே இருக்கமாட்டாரா? அட்லீஸ்ட் இதுவரைக்கும் கொள்ளையடிக்காத ஒருத்தனுக்கு வாக்களிக்கலாமே?? ( யாருமே இல்லைங்கறீங்களா??? )

49 ஒ வுக்கு எப்ப பட்டனோட பட்டனா தேர்தல் கமிஷன் அமைக்குதோ, அப்போ விழும் பாருங்க ஆயிரத்தெட்டு ஓட்டு!!! அதுவரைக்கும் ஒரு நல்ல சுயேட்சை அல்லது வாய்ப்பு கிடைக்கப்பெறாத வேட்பாளருக்குப் போடுங்கள்... இல்லையா.... திமுக, அதிமுகவுக்குத்தான் போடுவேன்னு சொன்னா, இரண்டையும் நல்லா யோசிச்சுட்டு தாராளமா போடுங்க!!

இது என்னோட நிலைமைங்க.
ஓட்டுப் பெட்டியில 49ஒ க்கு பட்டன் இருந்தா நிச்சயம் அதை நான் போடுவேன்... பின்ன, நான் 49ஒ போடறதைப் பார்க்கிற இரண்டு கட்சிகளும் எங்க வீட்டுக்கு மின்சாரத்தை கத்திரிச்சுட்டா??? வாட்டர் சப்ளை நிறுத்திட்டா???? சாரிங்க.... தனிமனித சுயநலம் எனக்கு நிறைய உண்டுங்க!!!

ஆக்வே மக்களே... ஓட்டு போடுவது உரிமை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு... சோ, லைன்ல அடிக்காம புடிக்காம நின்னு எவனுக்கோ போட்டு கூடவே ஸ்கூலை விட்டு வெளியே வரும்போது கொஞ்சம் தலையில மண்ணைத் தூவிட்டு வந்திடுங்க!!!


மறவாதீர்கள் ஏப்ரல் 13!!

ஷீ-நிசி
11-04-2011, 01:14 PM
[QUOTE]அடடே... ரொம்ப சீரியஸா வாதம் போயிட்டு இருக்கே...

ஆரோக்கியாமான வாதம் தான் ஆதவா....ஆக்வே மக்களே... ஓட்டு போடுவது உரிமை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு... சோ, லைன்ல அடிக்காம புடிக்காம நின்னு எவனுக்கோ போட்டு கூடவே ஸ்கூலை விட்டு வெளியே வரும்போது கொஞ்சம் தலையில மண்ணைத் தூவிட்டு வந்திடுங்க!!!


அதுசரி... யார் தலையில தூவிட்டு வரனும்.... :)

ஆதவா
11-04-2011, 01:17 PM
[QUOTE=ஆதவா;522210]
அதுசரி... யார் தலையில தூவிட்டு வரனும்.... :)

நம்ம தலையிலயேதான்!! :)

ஷீ-நிசி
11-04-2011, 01:18 PM
[QUOTE=ஷீ-நிசி;522217]

நம்ம தலையிலயேதான்!! :)

அதான் ஓட்டு போடறோம்ல... எதுக்கு இன்னொருவாட்டி!! :lachen001: