PDA

View Full Version : புரிதலுணர்வு

கீதம்
08-04-2011, 12:56 AM
தூங்குவதுபோல்
பாசாங்கு செய்கிறாய் நீ!
துயிலெழுப்புவதுபோல்
பாவனை செய்கிறேன் நான்!
விழிக்கவிரும்பா உன்னுளத்தை நானும்
எழுப்பவிரும்பா என்னுளத்தை நீயும்
பொய்யறப் புரிந்துகொண்டபோதும்
தொடர்கிறதோர் போலிப்போராட்டம்,
தூங்குவதும், துயிலெழுப்புவதுமாய்!

ஜானகி
08-04-2011, 02:42 AM
தாய்க்கும், சேய்க்கும் இடையிலேயான, [ காலையில் நடக்கும்] செல்லமான, போலிப் போரட்டமாக காட்சியளிக்கிறது எனக்கு....சரியா...?

பூமகள்
08-04-2011, 02:52 AM
நான் விழித்ததை நீயறிந்தும்
தெரியாதது போல் நகர்கிறாய்...
எழுப்புவாய் என நானும்..
எழுவாய் என்று நீயும்..
நேரம் கடக்க..
நீ செல்கிறாய்..!!

நான் எழாமலே இன்னும்...!!

--
அருமை கீதம் அக்கா... கவிதை தரும் உணர்வு புரிகிறது.. பாராட்டுகள். :)

ஆதவா
08-04-2011, 04:55 AM
தூங்குவதுபோல்
பாசாங்கு செய்கிறாய் நீ!
துயிலெழுப்புவதுபோல்
பாவனை செய்கிறேன் நான்!
விழிக்கவிரும்பா உன்னுளத்தை நானும்
எழுப்பவிரும்பா என்னுளத்தை நீயும்
பொய்யறப் புரிந்துகொண்டபோதும்
தொடர்கிறதோர் போலிப்போராட்டம்,
தூங்குவதும், துயிலெழுப்புவதுமாய்!

ஆகமொத்தத்தில இரண்டுபேரும் சோம்பேறியா இருக்காங்கன்னு சொல்றீங்க!!! :lachen001:

இளசு
08-04-2011, 06:25 AM
நீ அருந்து என நீர்நிலையில்
நின்ற இணைமான்கள் கதை அறிவோம்.

இன்னும் கொஞ்சம் துயில் எனும்
இலவம்பஞ்சு மனம் அறிந்தோம்.

பிறர் பசியாற்றுவதும் துயில் நீட்டிப்பதும்
பெண்களின் பெருங்குணங்கள்..

கீதத்தின் கவிதையில் தாய்மை மணக்கிறது..
பாமகளின் படைப்பில் துணைவன் தாயான மகிமை புரிகிறது..

அன்றாட தாய்மைச் சிதறல்களால்தான்
கோடையில்கூட வாழ்க்கை சிலிர்க்கிறது..

தாமரை
08-04-2011, 06:44 AM
தூங்குவதுபோல்
பாசாங்கு செய்கிறாய் நீ!
துயிலெழுப்புவதுபோல்
பாவனை செய்கிறேன் நான்!
விழிக்கவிரும்பா உன்னுளத்தை நானும்
எழுப்பவிரும்பா என்னுளத்தை நீயும்
பொய்யறப் புரிந்துகொண்டபோதும்
தொடர்கிறதோர் போலிப்போராட்டம்,
தூங்குவதும், துயிலெழுப்புவதுமாய்!

மெல்ல எட்டிப்பார்த்து விட்டு
மெல்ல நகர்கிறார்
பசியோடு காத்திருந்த
பாவமான அப்பாவி

என்றும் சேர்த்திருக்கலாமோ?? :sprachlos020::sprachlos020::sprachlos020:

கீதம்
08-04-2011, 07:43 AM
தாய்க்கும், சேய்க்கும் இடையிலேயான, [ காலையில் நடக்கும்] செல்லமான, போலிப் போரட்டமாக காட்சியளிக்கிறது எனக்கு....சரியா...?

அட, இந்தக் கோணத்தினின்று நோக்கினால் இன்னும் அழகாகத் தெரிகிறதே இக்கவிதை! நன்றி ஜானகி அம்மா.:icon_b:

கீதம்
08-04-2011, 07:48 AM
நான் விழித்ததை நீயறிந்தும்
தெரியாதது போல் நகர்கிறாய்...
எழுப்புவாய் என நானும்..
எழுவாய் என்று நீயும்..
நேரம் கடக்க..
நீ செல்கிறாய்..!!

நான் எழாமலே இன்னும்...!!

--
அருமை கீதம் அக்கா... கவிதை தரும் உணர்வு புரிகிறது.. பாராட்டுகள். :)

அதே பழரசம். பருகத்தரப்பட்ட குவளைகள் மட்டும் பலரகம். பாராட்டும் நன்றியும் பூமகள்.:)

முரளிராஜா
08-04-2011, 07:51 AM
அட, இந்தக் கோணத்தினின்று நோக்கினால் இன்னும் அழகாகத் தெரிகிறதே இக்கவிதை! நன்றி ஜானகி அம்மா.:icon_b:

அப்ப நீங்க நோக்கிய கோணம் எது?:D
(தப்பா நினைக்காதிங்க இன்னிக்கு வேற யாரும் சிக்கல)

கீதம்
08-04-2011, 07:52 AM
ஆகமொத்தத்தில இரண்டுபேரும் சோம்பேறியா இருக்காங்கன்னு சொல்றீங்க!!! :lachen001:

ஆஹா.... என்ன ஒரு புரிதலுணர்வு உங்களுக்கு! பாராட்டுகிறேன் ஆதவா.:)

கீதம்
08-04-2011, 07:54 AM
அப்ப நீங்க நோக்கிய கோணம் எது?:D
(தப்பா நினைக்காதிங்க இன்னிக்கு வேற யாரும் சிக்கல)

ராரா விடுமுறைக்கு விண்ணப்பிக்கும்போதே நினைச்சேன். :)அப்படியே உங்க பதிவுக்கு மேல் இருக்கும் பதிவைப் பாருங்க. புரியும்.

கீதம்
08-04-2011, 07:56 AM
நீ அருந்து என நீர்நிலையில்
நின்ற இணைமான்கள் கதை அறிவோம்.

இன்னும் கொஞ்சம் துயில் எனும்
இலவம்பஞ்சு மனம் அறிந்தோம்.

பிறர் பசியாற்றுவதும் துயில் நீட்டிப்பதும்
பெண்களின் பெருங்குணங்கள்..

கீதத்தின் கவிதையில் தாய்மை மணக்கிறது..
பாமகளின் படைப்பில் துணைவன் தாயான மகிமை புரிகிறது..

அன்றாட தாய்மைச் சிதறல்களால்தான்
கோடையில்கூட வாழ்க்கை சிலிர்க்கிறது..

உங்கள் பார்வையும் பதிவும் வெகு அழகு இளசு அவர்களே... பெருமிதத்தோடு நன்றி கூறுகிறேன்.

கீதம்
08-04-2011, 07:58 AM
மெல்ல எட்டிப்பார்த்து விட்டு
மெல்ல நகர்கிறார்
பசியோடு காத்திருந்த
பாவமான அப்பாவி

என்றும் சேர்த்திருக்கலாமோ?? :sprachlos020::sprachlos020::sprachlos020:

ம். சேர்த்திருக்கலாமே....:)

ஆமாம், யாரந்த பாவமான அப்பாவி?:confused:

Nivas.T
08-04-2011, 10:10 AM
சோம்பலுக்கு இப்டி ஒரு

அழகான கவிதையா?

அருமைங்க

தாமரை
08-04-2011, 10:27 AM
ம். சேர்த்திருக்கலாமே....:)

ஆமாம், யாரந்த பாவமான அப்பாவி?:confused:

அம்மா - பையனா இருந்தா அப்பா

கணவன் - மனைவியா இருந்தா - மாமனார் மாமியார்..

இப்படி நீங்க எந்த கோணத்தில் எடுத்துகிட்டாலும் யாரோ ஒருவர் இருப்பாருங்கோ...

உலகத்தில வேற யாருமே இல்லாதது மாதிரியில்ல யாரந்த அப்பாவிங்கறீங்க!!!

பூமகள்
08-04-2011, 10:43 AM
மெல்ல எட்டிப்பார்த்து விட்டு
மெல்ல நகர்கிறார்
பசியோடு காத்திருந்த
பாவமான அப்பாவி

என்றும் சேர்த்திருக்கலாமோ?? :sprachlos020::sprachlos020::sprachlos020:

சத்தமின்றி சமைத்து
அடுக்களையில் நிறைத்து
மெல்ல எனைப் பார்த்துவிட்டு
நகர்கிறார் பாசமானவர்..

இப்படியும் சேர்த்திருக்கலாமே... :rolleyes: :icon_b::icon_b:

தாமரை
08-04-2011, 10:59 AM
சத்தமின்றி சமைத்து
அடுக்களையில் நிறைத்து
மெல்ல எனைப் பார்த்துவிட்டு
நகர்கிறார் பாசமானவர்..

இப்படியும் சேர்த்திருக்கலாமே... :rolleyes: :icon_b::icon_b:

நிறைய எழுத்துப் பிழை இருக்காம் அண்ணி சொன்னாங்க

சுத்தமின்றி சமைத்து
அடுக்களையை கலைத்து
மெல்ல எனைப் பார்த்ததும்
நழுவுகிறார் மோசமானவர்..

பூமகள்
08-04-2011, 11:03 AM
எழுத்துப் பிழையல்ல..
கரண்டி எடுப்பவர் பிழை..:cool:

ஒழுங்கு வைப்பதும்
ருசித்துச் சமைப்பதும்
பெரும் உணவுக் கூடங்களில்
ஆண்கள் தானே..!! ;):p

தாமரை
08-04-2011, 11:30 AM
ஒத்துகிட்டாச் சரி!!!:lachen001::lachen001::lachen001:

கீதம்
09-04-2011, 12:39 AM
சோம்பலுக்கு இப்டி ஒரு

அழகான கவிதையா?

அருமைங்க

நன்றி நிவாஸ்.:)

கீதம்
09-04-2011, 12:41 AM
அம்மா - பையனா இருந்தா அப்பா

கணவன் - மனைவியா இருந்தா - மாமனார் மாமியார்..

இப்படி நீங்க எந்த கோணத்தில் எடுத்துகிட்டாலும் யாரோ ஒருவர் இருப்பாருங்கோ...

உலகத்தில வேற யாருமே இல்லாதது மாதிரியில்ல யாரந்த அப்பாவிங்கறீங்க!!!

அப்படி யாரோ ஒருவர் எட்டிப்பார்த்து பசியோடு காத்திருக்கையில் இந்தப் போலிப் போராட்டமெல்லாம் தொடருமா? உண்மைப்போராட்டம்தான்.:D

கீதம்
09-04-2011, 12:43 AM
சத்தமின்றி சமைத்து
அடுக்களையில் நிறைத்து
மெல்ல எனைப் பார்த்துவிட்டு
நகர்கிறார் பாசமானவர்..

இப்படியும் சேர்த்திருக்கலாமே... :rolleyes: :icon_b::icon_b:

இதெல்லாம் கவிதையில்தான் சாத்தியம். இல்லையா பூமகள்?:)

கீதம்
09-04-2011, 01:40 AM
நிறைய எழுத்துப் பிழை இருக்காம் அண்ணி சொன்னாங்க

சுத்தமின்றி சமைத்து
அடுக்களையை கலைத்து
மெல்ல எனைப் பார்த்ததும்
நழுவுகிறார் மோசமானவர்..

எழுத்துப் பிழையல்ல..
கரண்டி எடுப்பவர் பிழை..:cool:

ஒழுங்கு வைப்பதும்
ருசித்துச் சமைப்பதும்
பெரும் உணவுக் கூடங்களில்
ஆண்கள் தானே..!! ;):p

ஒத்துகிட்டாச் சரி!!!:lachen001::lachen001::lachen001:

அந்த ஏழு நாட்களும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13950)
அடுக்களை தன் களையிழந்து
அலங்கோலமான அவலத்தை
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்
மறக்கவும் இயலுமோ?
மறைக்கவும் இயலுமோ?:)

பூமகள்
09-04-2011, 03:11 AM
நெத்தியடி கீதம் அக்கா.. அருமை. :)

பதில் சொல்லியே வெல்லும் தலைவர் தாமரை அண்ணா.. இதற்கும் ஒரு பதில் அவர் பக்கம் வைத்திருப்பார்....:cool:

தாமரை
09-04-2011, 04:49 AM
அந்த ஏழு நாட்களும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13950)
அடுக்களை தன் களையிழந்து
அலங்கோலமான அவலத்தை
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்
மறக்கவும் இயலுமோ?
மறைக்கவும் இயலுமோ?:)

அடும் களையே
அடும் கலையே
அடுக்களையில்
அடு கலையே

எடுக்கலையே
அடுக்கலையே
கடுக்கையிலே
எடு கழையே

அதை மட்டும்தான் படிச்சீங்களாக்கும்.. இதையும் படிச்சிருக்கணுமே...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6656

பெண்களுக்கான பத்திரிக்கைகளைப் ஆண்களும் படியுங்கள். குறுக்கு வழிகளை அறிந்து கொள்ளுங்கள்.

ஹா! ஹா!! ஹா!!!!

கீதம்
09-04-2011, 07:49 AM

குறுக்கு வழி ரொம்ப நல்லாயிருக்கு.

இந்த உபாயங்களை இருவருமே படித்தால் என்ன நடக்கும்?

அதேதான். ஆரம்பகட்டத்துக்கு வந்தாச்சி.

தூங்குவதுபோல்
பாசாங்கு செய்கிறாய் நீ!
துயிலெழுப்புவதைபோல்
பாவனை செய்கிறேன் நான்!:icon_b:

தாமரை
09-04-2011, 08:19 AM

ஆரம்ப கட்டம் வராது.. இறுதிக்கட்டம்தான் வரும்...
உபாயங்கள் உடையும் போது அபாயமாகும்..

நாங்களும் மங்கையர் மலர், சினேகிதி, அவள் விகடன் இப்படி எல்லாம் படிப்பமில்ல

அதுசரி ஒரு எட்டு வரி கிறுக்கி இருக்கற்னே அதில் யாரைத் திட்டறேன், யாரைப் புகழறேன், என்ன சொல்லவர்ரேன் என எதாவது புரிஞ்சதா?

கீதம்
09-04-2011, 08:23 AM
அடுக்களையில் வேலை முடித்து அப்படி அப்படியே எதையும் எடுக்காமல் அடுக்காமல் போட்டது போட்டபடி நீங்கள் வெளிவந்தப்போ அண்ணி கழை எடுத்துகிட்டு அடிக்கவந்தாங்கன்னு புரிஞ்சிகிட்டேன். சரியா?:lachen001:

தாமரை
09-04-2011, 09:48 AM
அடுக்களையில் வேலை முடித்து அப்படி அப்படியே எதையும் எடுக்காமல் அடுக்காமல் போட்டது போட்டபடி நீங்கள் வெளிவந்தப்போ அண்ணி கழை எடுத்துகிட்டு அடிக்கவந்தாங்கன்னு புரிஞ்சிகிட்டேன். சரியா?:lachen001:

வெரிகுட் அப்படித்தான் மிகச்சரியா தப்பா புரிஞ்சிக்கணும்..

இன்னிக்கு யார் வீட்டிலோ யாருக்கோ மாத்து உறுதியப்போய்:lachen001::lachen001::lachen001:

கீதம்
10-04-2011, 02:32 AM
அடுதல் என்பதற்கு கொல்லுதல், சமைத்தல், கெடுதல், போரிடுதல், வெல்லுதல், வருத்துதல், கடைதல், காய்ச்சுதல், மேற்கொள்ளுதல் என்று பல பொருட்கள் இருப்பதாக அறிகிறேன்.

அடும் களையே
அடும் கலையே

அழகைக் கெடுக்கும், போராடவைக்கும் கலையிதுவே!

(அந்தக்காலத்தில் விறகடுப்புதானே. புதிதாய் அடுக்களை நுழைபவரின் நிலை பரிதாபத்துக்குரியது. ஈரவிறகெனில் அடமாய்ப் புகையெழுப்ப, ஊதாங்குழலால் ஊதி ஊதி மூச்சடைக்க, கண்ணில் நீர்வழிய, கரி படிந்து முகமெல்லாம் களையிழந்து ஒரு போருக்குப் போய்வந்ததுபோல் காட்சியளிக்கக்கூடும்)

அடுக்களையில்
அடு கலையே!

அடுக்களையில் சமைப்பதும் ஒரு கலையே!

(அதையே பக்குவத்துடன் கையாண்டால் அழகு மிளிர சமையற்கலை கைவந்துவிடும்)

எடுக்கலையே
அடுக்கலையே

அடுப்பை மூட்டுவதற்கே அத்தனை லாவகம் தேவை.

நன்கு காய்ந்த விறகுகளைத் தேர்ந்தெடுப்பதும் ஒரு கலையே...

அப்படித் தேர்ந்தெடுத்ததை அழகாய் அடுப்பின் வாயில் தள்ளி அடுக்குவதும் ஒரு கலையே!

கடுக்கையிலே
எடு கழையே.

தீ கடுமையானால் விறகை வெளியில் இழுத்து தீயை அடக்கி, பதமாய்ப் பக்குவமாய்ச் சமைத்தல் வேண்டும்.

(எரியிறதைப் பிடுங்கினா கொதிக்கிறது தன்னால அடங்கும்)

அப்படி இப்படியென்று எப்படியோ கொஞ்சமாவது தேற்றியிருக்கிறேனா?:)

********************************

அடுமடையருக்கு
அடுக்களையும்
ஆடுகளமாம்.

அடிமடையருக்கோ
அடுக்களையே
அடுகளமாம்.
:lachen001::lachen001::lachen001:

இளசு
10-04-2011, 08:32 AM
தலைப்பு - புரிதலுணர்வு..
விளைவு - புரியாமல் குழம்பிய நிலை..

--

கடைமடையன் என்றால்...

கடைசி மடைக்கு உரியவன்?
கடையும் பணி செய்யும் சமையலன்?
கடையில் பணி செய்யும் சமையலன்..?
கடைந்தெடுத்த அறிவிலன்...?!!

-- குழப்பத்தில் ஓர் அதி மடையன்!!!!

கீதம்
10-04-2011, 09:04 AM
தலைப்பு - புரிதலுணர்வு..
விளைவு - புரியாமல் குழம்பிய நிலை..

--

கடைமடையன் என்றால்...

கடைசி மடைக்கு உரியவன்?
கடையும் பணி செய்யும் சமையலன்?
கடையில் பணி செய்யும் சமையலன்..?
கடைந்தெடுத்த அறிவிலன்...?!!

-- குழப்பத்தில் ஓர் அதி மடையன்!!!!

குழப்பத்திற்கு வருந்துகிறேன் இளசு அவர்களே...

அடுமடையர் என்றும் அடிமடையர் என்றும் சொல்லியிருக்கிறேன்.

அடுமடையர் - சமையற்தொழிலைச் செய்பவர்கள்

அடிமடையர் - விவரம் அறியாதவர்கள்

அடுமடையருக்கு
அடுக்களையும்
ஆடுகளமாம்.

தேர்ந்த சமையற்காரருக்கு அடுக்களை என்பது ஒரு விளையாட்டுமைதானம் போல இருக்கும். புகுந்து விளையாடுவர்.

அடிமடையருக்கோ
அடுக்களையே
அடுகளமாம்.

சமையல் பற்றி அ, ஆ, அறியாதார்க்கு அடுக்களை ஒரு போர்க்களம் போலத்தான் தோன்றும். அவர் சமையலில் ஈடுபடும்போதும் அடுக்களை ஒரு போர்க்களத்தைப் போன்றே தோற்றம் தரும்.

இதைத்தான் எழுதினேன்.:)

இளசு
10-04-2011, 09:56 AM
வருந்தத்தேவையே இல்லை..

குழப்பித் தமிழ்மீன் படிக்கவந்த மாணவமீனவனின் நன்றிகள் உங்களுக்கு...

தாமரை
11-04-2011, 11:55 AM
அடும் களையே
அடும் கலையே
அடுக்களையில்
அடு கலையே

எடுக்கலையே
அடுக்கலையே
கடுக்கையிலே
எடு கழையே

அதை மட்டும்தான் படிச்சீங்களாக்கும்.. இதையும் படிச்சிருக்கணுமே...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6656

பெண்களுக்கான பத்திரிக்கைகளைப் ஆண்களும் படியுங்கள். குறுக்கு வழிகளை அறிந்து கொள்ளுங்கள்.

ஹா! ஹா!! ஹா!!!!

அடும் களையே

வருத்துகின்ற களைப்பயிர் போன்றவர்கள்

அடும் கலையே

நம்மை கொல்ல உபயோகிக்கும் கலை

அடுக்களையில் அடு கலையே

சமையலறையில் சமைத்தலாகும்.

எடுக்கலையே

காகம் கூட அவர் சமைத்து வைத்ததை எடுக்கலையே

அடுக்கலையே

இது சமையல் கலையல்ல.. கொல்லும் கலை. கொலைக்கலை

கடுக்கையிலே..

அவர் அள்ளிக் கொட்டிய உப்பு, புளி, காரம் ஆகியவை சுள்ளென உரைக்கையில்

எடு கழையே

கோலெடுத்து துரத்துவோமாக..

(இது ஜானகி அம்மாவின் ரசம் - விஷம் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது :lachen001::lachen001::lachen001:)

அடும் களையே

வெல்லும் அழகே / கொல்லும் அழகே

அடும் கலையே

சமையலும் ஒரு கலைதான்

அடுக்களையில்

சமையலறையில்

அடு கலையே

புகுந்து சமையல் செய் ஒளியே.. (கலை என்றால் ஒளி என்றும் பொருள்)

எடுக்கலையே

எடுக்கும் கலை.. சமையலுக்கு கண் அளவு கையளவு கொண்டு பொருட்களை எடுக்கும் கலை தெரிந்திருக்க வேண்டும். எதனுடன் எது என்று சேர்த்தெடுக்கவும் எது எது கூடாது என பிரித்தெடுக்கவும் தெரியவேண்டும். அப்படி உப பொருட்களை எடுக்கும் கலைதான்

அடுக்கலையே

சமையற்கலையாகும்

கடுக்கையிலே

அளவு மிகும்பொழுதோ கடுத்தல் - மிகுதியாகிப் போதல்

அப்படி அளவு தெரியாமல் மிகுதியோ என்று தோன்றும் பொழுது...

எடு கழையே

அளவு காட்டும் கோல்களை உபயோகிப்பாயாக..

கீதம்
11-04-2011, 12:01 PM
விளக்கம் ரொம்ப நல்லாயிருக்கு. நானும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கேன் என்று நினைக்கும்போது சந்தோஷமாகவும் இருக்கு. நன்றி தாமரை அவர்களே...

கௌதமன்
29-06-2011, 06:25 PM
தூங்குவதுபோல்
பாசாங்கு செய்கிறாய் நீ!
துயிலெழுப்புவதுபோல்
பாவனை செய்கிறேன் நான்!
விழிக்கவிரும்பா உன்னுளத்தை நானும்
எழுப்பவிரும்பா என்னுளத்தை நீயும்
பொய்யறப் புரிந்துகொண்டபோதும்
தொடர்கிறதோர் போலிப்போராட்டம்,
தூங்குவதும், துயிலெழுப்புவதுமாய்!

நிஜமாகவே தூங்கும் போது
காரணமேதுமில்லாமல் அலற எழுப்பிவிட்டு
இன்னுமா தூங்குகிறாய் எனக் கேட்கும் உன்
குறும்புக்கு சிக்காமல் தூங்க மறுக்கிறது என் கண்கள்!
குறும்பு செய்ய வழியில்லாமல் என் தூக்கத்தை
எதிர்பார்த்து காத்திருக்கிறது உன் கைகள்!!
யாரையும், எதையும் எதிர்பார்க்காமல்
கடமையாய் காத்திருக்கிறது அலாரக் கடிகாரம்!!!

Ravee
29-06-2011, 07:47 PM
தாய்க்கும், சேய்க்கும் இடையிலேயான, [ காலையில் நடக்கும்] செல்லமான, போலிப் போரட்டமாக காட்சியளிக்கிறது எனக்கு....சரியா...?

என் மனசிலையும் இதே கருத்துதான்பட்டது அம்மா ................ என்ன பண்றது யார் யார் வீட்டில என்ன பார்க்குறோமோ அதானே மனசில படும் ............ :lachen001:

Ravee
29-06-2011, 07:51 PM
நிறைய எழுத்துப் பிழை இருக்காம் அண்ணி சொன்னாங்க

சுத்தமின்றி சமைத்து
அடுக்களையை கலைத்து
மெல்ல எனைப் பார்த்ததும்
நழுவுகிறார் மோசமானவர்..

அடும் களையே
அடும் கலையே
அடுக்களையில்
அடு கலையே

எடுக்கலையே
அடுக்கலையே
கடுக்கையிலே
எடு கழையே

அந்த ஏழு நாட்களும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13950)
அடுக்களை தன் களையிழந்து
அலங்கோலமான அவலத்தை
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்
மறக்கவும் இயலுமோ?
மறைக்கவும் இயலுமோ?:)

உங்க ரெண்டு பேருக்கும் லீவு நாளே இல்லையா ? .......... :eek:

ஹா ஹா .... புலிகளை பார்த்து பூனை ஒன்று சூடு போட்டுக்கொண்டு இருக்கிறது ....

போய் "கொடுக்கல அதனால் கிடைக்கல" படியுங்கள்

:lachen001: :D :lachen001:

innamburan
29-06-2011, 08:43 PM
நிகண்டு பதில் சொல்லவில்லை!

கீதம்
30-06-2011, 05:49 AM
நிஜமாகவே தூங்கும் போது
காரணமேதுமில்லாமல் அலற எழுப்பிவிட்டு
இன்னுமா தூங்குகிறாய் எனக் கேட்கும் உன்
குறும்புக்கு சிக்காமல் தூங்க மறுக்கிறது என் கண்கள்!
குறும்பு செய்ய வழியில்லாமல் என் தூக்கத்தை
எதிர்பார்த்து காத்திருக்கிறது உன் கைகள்!!
யாரையும், எதையும் எதிர்பார்க்காமல்
கடமையாய் காத்திருக்கிறது அலாரக் கடிகாரம்!!!

ரொம்ப ரொம்ப நாளைக்கப்புறம் கெளதமனின் கவிவண்ணம். கடைசிவரிகளை மிகவும் ரசித்தேன். புதைந்திருந்த புரிதலுணர்வை மீண்டும் வெளிக்கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றி கெளதமன்.

என் மனசிலையும் இதே கருத்துதான்பட்டது அம்மா ................ என்ன பண்றது யார் யார் வீட்டில என்ன பார்க்குறோமோ அதானே மனசில படும் ............ :lachen001:

:):icon_ush::icon_b:

ஹா ஹா .... புலிகளை பார்த்து பூனை ஒன்று சூடு போட்டுக்கொண்டு இருக்கிறது ....

போய் "கொடுக்கல அதனால் கிடைக்கல" படியுங்கள்

:lachen001: :D :lachen001:

அதனால்தான் கவிதையும் ரொம்ப சூடா இருக்கோ? :rolleyes:

கீதம்
30-06-2011, 05:52 AM
நிகண்டு பதில் சொல்லவில்லை!

இதற்கெதற்கு ஐயா நிகண்டு? புரியாமலா இருக்கிறது புரிதலுணர்வு? :confused:

Ravee
30-06-2011, 06:17 AM
அதனால்தான் கவிதையும் ரொம்ப சூடா இருக்கோ? :rolleyes:

:sport-smiley-002: இப்படி நீங்க சொல்வதில் உள்குத்து ஒண்ணும் இல்லையே