PDA

View Full Version : கீதம் எழுதா கீதங்கள்...அக்னி
07-04-2011, 08:32 AM
கீதம்
நாம் உச்சரித்தால் இசைக்கும்...

கீதம்
மன்றமெங்கும் இசைப்பதால்,
நாம் உச்சரிக்கப்படுகின்றோம்...

கீதம்
கட்டுப்படுத்தப்பட இயலாதது...
அதனாற்தான்
மன்றத்தின் இடுக்குகள் நுழைந்து
மன்றத்தின் கீழடுக்குகள் வரைக்கும்
பரவி விரிகின்றது...

என்னைப்பற்றி எழுதியதை
வாசிக்க,
எனக்குள் இசைப்புயல்...
அதனால் அடித்துச் சொல்கின்றேன்..,
எழுத்துக்கள் சத்தமில்லாமல்
இசைக்குமா என்றால்..,
அச்சமில்லாமல் கீதப் பதிவுகளைக்
கைகாட்டலாம்...

ஒவ்வோர் உறவுக்கும்
இவர் கவி வடிக்க
ஓர் கவி மட்டும்
இவருக்குப் போதுமா...
அதனால்,
ஒவ்வோர் உறவும்
இங்கே
ஓரோர் பதிவேனும்
இடக் கேட்கின்றேன்...

வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றிகள்...
கீதம் அக்கா

கீதம்
07-04-2011, 09:07 AM
ஆஹா...ஆப்பு ரிப்பீட்டா? மக்களே... கொஞ்சம் தயை காட்டுங்கள்.

அங்கே ஜானகி அம்மா எடுத்துக்கொடுக்க இங்கே வாழ்த்தெனும் பேரில் வத்தியைப் பத்த வைத்துவிட்டீரே அக்னி... நீர் வாழ்க.

ஜானகி
07-04-2011, 10:30 AM
நாங்களென்ன கீதம் வீட்டு தட்டச்சா....

சங்கேதமாய்ப் பல பாட்டெழுத...

சங்கீதமாய் அதன் பொருளுரைக்க...

மன்றத்து முற்றத்தின் வானம்பாடிதனை

கன்றுக்[ கத்துக்] குட்டி நானும் எட்டமுடியுமோ ?

பொருளோடு பதம் சேர்க்கும் பாங்குதனைச் சொல்லவா..?

அருளோடு மாதமொரு மாலை தரும் சிந்தனையைச் சொல்லவா..?

இன்னுமுண்டு எத்தனையோ வியந்திடவே...

முந்தவேண்டும் வாழ்த்திடவே என்றே சில வரிகள்...

[என் கோரிக்கையை ஏற்றுப் பற்றவைத்த அக்னி அவர்களுக்கு நன்றி]

கீதம்
07-04-2011, 10:44 AM
மருளும் மான்குட்டியாகவே
மன்றத்து முற்றத்தில்
நின்றிருந்தேன் நானும் அன்று!
ஊக்கம் தந்த உறவுகளால்தானே
உயரப் பறக்கும் வானம்பாடியானேன்,
உற்சாக கீதம் நானும் பாடலானேன்.
எனக்கான பாராட்டுகள் யாவும்
மன்றத்தாய்க்கே சமர்ப்பணமாகும்.

அக்னி
07-04-2011, 11:14 AM
நாங்களென்ன கீதம் வீட்டு தட்டச்சா....

சங்கேதமாய்ப் பல பாட்டெழுத...

சங்கீதமாய் அதன் பொருளுரைக்க...

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமாற் போல,
கீதம் வீட்டுத் தட்டச்சும் தமிழ் சொல்லும்...

அழகாகக் சொன்னீர்கள் ஜானகி அம்மா...

நான் இத்திரிக்கு என்ன தலைப்பிடுவது என்று யோசித்தேன்...
அது கீதம் அக்கா எழுதாததாக இருத்தல் வேண்டும் என்பதனால்,
அதனையே தலைப்பாக்கிவிட்டேன்...

நீங்கள் எழுதத் தெரியாது என்று சொல்லியே,
அற்புதமாய் எழுதி விட்டீர்கள்...
ஏனோ தானோ பா(ர்)ட்டி என்பதை மீண்டும் காட்டி விட்டீர்கள்...
என் நன்றிகள்...

ஆமா... ஜானகி அம்மா வீட்டுக் கரண்டியும் சமையல் செய்யுமோ... :p

அக்னி
07-04-2011, 11:25 AM
நீர் வாழ்க.
வாழ்த்துகின்றீர்களா என்பது சந்தேகமாகவே இருக்குதே...

கீதம் அடிக்க, நீர் வந்தால் எப்படி முடியும்... :rolleyes:

மருளும் மான்குட்டியாகவே
மன்றத்து முற்றத்தில்
நின்றிருந்தேன் நானும் அன்று!

மான்குட்டி வளர்ந்துவிட்டது...
இன்று,
மான்குட்டிகளாய் உங்கள் பதிவுகள்,
மன்ற முற்றத்திலே
துள்ளி விளையாடுகின்றன... :icon_b:

ஆதவா
07-04-2011, 12:45 PM
எனக்கு வாழ்த்து கவிதையெல்லாம் வராதுங்க... (அட நெசமாலுந்தானுங்!!)

ஆனா கீதம் அக்காவை ஒரு ஒசரத்துல வெச்சிருக்கேனுங்க

மன்றத்தில சிறந்த கதாசிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க.. அதிலயும் மிகச்சிறந்த கதாசிரியர்கள் லிஸ்ட் இருக்கு. அதில கீதம் அக்காவுக்கு நிச்சயம் இடமிருக்கு.. ஆல்ரவுண்டர்னு கிரிக்கெட்ல சொல்லுவாங்களே... நம்ம ராபின்சிங், யுவ்ராஜ்சிங் மாதிரி (எல்லாமே சிங் சிங்கா இருக்கு.... கீதம்ங்கற பெயர் கூட சிங்குக்கு (sing) sync ஆவுதே.) பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங்கில் கலக்கிறமாதிரி கதை கவிதை இலக்கியம்னு எல்லாத்திலயும் ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க.

ஒருவாட்டி நேர்ல் பாத்தாக்கா கேப்பேன். யக்கா, ஒங்க கையி வழியா வர்ற எழுத்துங்க எல்லாமே எப்டிங்கக்கா இப்டி தரமா இருக்குங்கன்னு....
வாழ்த்துக்களுங்கோவ்!!

அக்னி
07-04-2011, 12:50 PM
ஆல்ரவுண்டர்னு கிரிக்கெட்ல சொல்லுவாங்களே... நம்ம ராபின்சிங், யுவ்ராஜ்சிங் மாதிரி (எல்லாமே சிங் சிங்கா இருக்கு.... கீதம்ங்கற பெயர் கூட சிங்குக்கு (sing) sync ஆவுதே.)

:icon_b: :icon_b: :icon_b:
எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் உங்களுக்குச் சிக்குதோ...

பிரேம்
07-04-2011, 01:05 PM
பதிவுல அவங்க Fast
பின்னூட்டத்தில் அவங்க First
நம்மல்லாம் அவங்க Guest
East or West
கீதம் மேடம்தான் Best..! :icon_b:

அக்னி
07-04-2011, 01:09 PM
தமிழிலும் Enlglishஇலும் வாழ்த்திய
பிரேம் sirக்குப் பாராட்டும் Thanaksஉம்... :p

பூமகள்
07-04-2011, 01:38 PM
கீதம் அக்காவின் எழுத்துக்கு நான் பெரிய விசிறி..

காற்றினிலே வரும் கீதம் போல் மன்ற காற்றில் இவரின் எழுத்துகள் பறந்து வந்து அனைவர் உள்ளமும் குளிர்விக்கும்..

சிறுகதைகள் மனதில் நிலைத்து நிற்கும்படி அமைப்பவர்.. கீதம் அக்காவிடம் நிறைய நான் கற்க வேண்டும்.. அதற்கு அவர் எழுத்துகள் தொடர்ந்து நான் படிக்க வேண்டும்.. ஹ்ம்ம்.. காலம் கை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

கீதம் அக்காவின் தங்கையாவதில் பெருமகிழ்ச்சி எனக்கு... பாராட்டுகள் அக்கா.
தொடரட்டும் கீதமழை.. :)
(வாழ்த்து திரி ஆரம்பிக்க எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...... ;))

அக்னி
07-04-2011, 01:59 PM
கீதம் அக்காவின் எழுத்துக்கு நான் பெரிய விசிறி..

அப்பிடியே ஒரு கவிதையையும் அவருக்காக விசிறி விட்டிருக்கலாமே பூமகள்...

த.ஜார்ஜ்
07-04-2011, 04:29 PM
கவிதை புலமை எனக்கில்லை.

மன்றத்தில் நான் பிரமிக்கிற ஒரு ஆளுமை கீதம் என்பது உண்மை.

மன்றத்தில் பதிவிடும் ஒவ்வோர் எழுத்து விதைகளையும் உன்னிப்பாய் கவனித்து அவை வேர்விட்டு வளர பின்னுட்ட உரமிடுபவர்கள்.[அவரது மாத தொகுப்பு ஒரு சின்ன உதாரணம்]

அவர்கள் கவிதைகள், என்னை, கவி ரசனையை நோக்கி நகர்த்திக் சென்றிருக்கின்றன.

எதிர்பாராத திக்குகளிலிருந்து பொழிகின்ற வரங்கள் போல் மன்றத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிறைந்திருக்கிறார். அதன் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறை அபரிமிதமானது.

மிகவும் பெருமிதமாக இருக்கிறது கீதம்; நீங்கள் பரிமாறும் பந்தியில் நானும் அமர்ந்திருக்கிறேன் என்பதில்.

சொல்வதற்கு நிறைய இருந்தாலும் சொல்ல வார்த்தைகள் வராது.. உணர்வு பெருக்கிடும்போது.

உங்கள் உற்சாகம் வடியாது இருக்கட்டும்.
படைப்பாற்றல் கரைபுரண்டு ஓடட்டும்.
இனிமையானவை என்றும் உங்களுக்கு வாய்க்கட்டும்.

இளசு
07-04-2011, 07:44 PM
மன்ற நதி வற்றாமல் பாய
மலைச்சிகர அருவிகள் பல உண்டு...

காலகட்டங்கள் மாற அருவிகளும் மாறி..
ஆற்றோட்டம் சீராய் சிறப்பாய் என்றும்...

கீதம் மன்றம் கண்ட சிறப்பருவி..

ஐந்தருவி, ஆறருவி எனச் சுற்றமும் நட்பும்
தருவித்த தேனருவி...

மணக்கும் படைப்புகள் அளிக்கும் செண்பக அருவி...

மயக்கும் தொகுப்புகள் கொடுக்கும் மன்ற அன்புப் பேரருவி...

படைப்புகள் கண்ணாடி என்றால், பழகுமனம் பாலருவி..

இரசிக மனப் பறவைகளின் தமிழ்த்தாகம் தணிக்கவந்த தமிழருவி...

-- வாழ்த்துகள் கீதம்..---- அக்னிக்கு அன்பும் பாராட்டும்!

கீதம்
08-04-2011, 12:45 AM
என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியல. திக்குமுக்காடிக்கிட்டு இருக்கேன். இந்த வாழ்த்துகளையெல்லாம் என் பிறந்தநாள் பரிசா (போன வாரம்:)) எடுத்துக்கறேன். உங்கள் அனைவர் மனதிலும் எனக்கும் ஒரு இடம் அதுவும் சிறப்பான இடம் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. என்னை எனக்கு அறிமுகப்படுத்திய மன்ற உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

கவியெழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்தி திரி திறவ வைத்த ஜானகி அம்மா,

பற்றவைத்துவிட்ட உற்சாகத்தில் பட்டென்று திரியைக் கொளுத்திப்போட்ட அக்னி,

வாழ்த்துகிறேன் என்று என்னை ரவுண்டு கட்டி பாராட்டிய ஆதவா,

தமிழில் பாராட்ட வார்த்தைகளே இல்லையென்று ஆங்கிலத்தில் பாடிய பிரேம்,

பாராட்டு விசிறியால் என்னை விசிறிக் குளிர்வித்த என் பொறாமைக்குரிய தங்கை பூமகள்,

நெகிழ்ச்சியுடன் என் பரிமாறலுக்காக பந்தியில் காத்திருக்கும் நண்பர் ஜார்ஜ்,

உள்ளத்து உணர்வுகளை உருவி அதீதப் புகழருவியில் என்னை நனைத்த இளசு அவர்கள்...

மற்றும் வாய் திறவாது மனதுள் வாழ்த்தும் ஆசிர்வதிக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் நெகிழ்வான நன்றிகள்.

பாராட்டுகள் மட்டுமல்ல, விமர்சனங்களையும் குறைகாணின் திருத்துவதையும் நான் உளமாற வரவேற்கிறேன். உங்கள் அனைவருடனும் என்றும் நட்பையே நாடுகிறேன்.

M.Jagadeesan
08-04-2011, 12:54 AM
மன்றமெனும் மாகடலில் கண்டெடுத்த நல்முத்து
மாசில்லா மாணிக்கம் மன்றத்தின் மணிவிளக்கு

அலைகடலுக்கு அப்பாலே இருந்தாலும் கீதத்தின்
கலையுள்ளம் தமிழ்நாட்டை நோக்கியே நின்றிருக்கும்

மன்றத்து மறவரெல்லாம் படைப்புகளை எழுதிவிட்டு
கீதத்தின் பின்னூட்டத்திற்காகக் கியூவிலே நின்றிடுவர்

ஏனென்றால் அவர்தம்
பின்னூட்டம் ஒவ்வொன்றும்
பொன்னாட்டம் தகதகக்கும்

கவிதை எழுத நாமெல்லாம்
தமிழைத் தேடி ஓடுவோம்
ஆனால்
கீதத்தின் கவிதை என்றால்
தமிழே ஓடிவரும்.
எதுகையும், மோனையும் அவர்
கட்டளைக்குக் காத்திருக்கும்.

கீதத்தின் எழுத்துக்களில் போதைகொண்ட*
பேதைகளில் நானும் ஒருவன்.

கீதம்
08-04-2011, 01:10 AM
உங்கள் மனதில் என்னை ஏற்றிவைத்திருக்கும் உயரம் மிகப் பெரிது. மிகவும் நன்றி ஐயா. அத்தனைக்கும் நான் தகுதியா என்று தெரியவில்லை. எனினும் ஒரு குடும்பத்தில் பெரியவர்களின் ஆசி கிடைக்கப்பெற்ற சின்னஞ்சிறுமி போல் இன்றென்னை உணர்கிறேன். உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் நம்மை மனதளவில் ஒன்றுபடுத்திய தமிழ்மன்றத்துக்கு என் நன்றி.

p.suresh
08-04-2011, 05:20 AM
மன்ற மரக்கிளையில்

இளைப்பாறும்

பறவைகளாய்

நாங்கள்,

ஆனால்

மன்ற மரக்கிளையை

நிலைநிறுத்தும்

வேர்களாய்

நீங்கள்.

புதுத்திரியில்

கீதத்தின்

பின்னூட்டம்

பூத்திரியாய்

திரியை

ஒளியூட்டும்.

மன்ற உறவுகள்

உங்கள் வசம்

மன்றம் எங்கும்

உங்கள் வாசம்.

மன்றமே என்றும்

உங்கள் சுவாசம்

இசை பரப்பும்

கீதம்

எங்கும் கேட்கும்

நாதம்

உம் படைப்பே

வேதம்

வாழிய நீடூழி,

வாழ்க பல்லாண்டு.

Nivas.T
08-04-2011, 09:08 AM
நானும் எப்டியாவது ஒரு நல்லக் கவித எழுதலாம்னு நெனைச்சா? நல்ல கேட்டுக்குங்க நல்ல கவித எழுதலாம்னா, முடியல, எவ்வளவு யோசிச்ச்சாலும் சிலவிசியங்கள் முடியாது. அப்படித்தான் எனக்கு இவங்கள் பாராட்டி எழுதறது.

அப்படி எழுத முயற்சி செஞ்சாலும் வார்த்த கிடைக்கனுமா இல்லையா? என்ன நான் சொல்றது?

எதாவது ஒரு விசயம் செஞ்ச பாராட்டலாம், எப்பயாவது செய்ஞ்சாலும் பாராட்டலாம். அத உருப்படியா செஞ்சா பாராட்டலாம். என்னை மாதிரி இருந்தா.

கதை, கவிதை, மன்ற அலசல், மன்ற உலா, பாராட்டுவது, பாராட்டு பெறுவது, ஊக்விப்பது, கண்ணியமாய் கலந்துரையாடுவது, நாசுக்காய் நக்கலடிப்பது, எச்சரிக்கை செய்வது என்று அனைத்தையும் நன்றாக, சிறப்பாக செய்யும் ஒருவரை பாராட்டு பாராட்டுன்னா எப்டி முடியும்? சின்னப்புள்ளத்தனமா இருக்கு. எப்டி முடியுங்குற?. பால் பொங்கும், பச்சத்தண்ணி எப்டி பொங்கு???

இவங்கள பாராட்ட என்னால முடியாது, முடிஞ்சா நீங்க எல்லாரும் பாராட்டுங்க. அம்புட்டுத்தேன்.................

பூமகள்
08-04-2011, 10:13 AM
எப்டி முடியுங்குற?. பால் பொங்கும், பச்சத்தண்ணி எப்டி பொங்கு???
:medium-smiley-088::medium-smiley-088:

:medium-smiley-080::medium-smiley-080::medium-smiley-041::medium-smiley-041::huepfen024::huepfen024:

:icon_clap::icon_clap::icon_clap::icon_clap::icon_clap:

:aktion033::aktion033::aktion033::aktion033:

ரசித்தேன் .. சிரித்தேன்.. விழுந்து விழுந்து சிரித்தேன்.. :)

:icon_good::icon_good::icon_good::icon_good::icon_good:

ஜானகி
08-04-2011, 10:28 AM
நானும் எப்டியாவது ஒரு நல்லக் கவித எழுதலாம்னு நெனைச்சா? நல்ல கேட்டுக்குங்க நல்ல கவித எழுதலாம்னா, முடியல, எவ்வளவு யோசிச்ச்சாலும் சிலவிசியங்கள் முடியாது. அப்படித்தான் எனக்கு இவங்கள் பாராட்டி எழுதறது.

அப்படி எழுத முயற்சி செஞ்சாலும் வார்த்த கிடைக்கனுமா இல்லையா? என்ன நான் சொல்றது?

எதாவது ஒரு விசயம் செஞ்ச பாராட்டலாம், எப்பயாவது செய்ஞ்சாலும் பாராட்டலாம். அத உருப்படியா செஞ்சா பாராட்டலாம். என்னை மாதிரி இருந்தா.

கதை, கவிதை, மன்ற அலசல், மன்ற உலா, பாராட்டுவது, பாராட்டு பெறுவது, ஊக்விப்பது, கண்ணியமாய் கலந்துரையாடுவது, நாசுக்காய் நக்கலடிப்பது, எச்சரிக்கை செய்வது என்று அனைத்தையும் நன்றாக, சிறப்பாக செய்யும் ஒருவரை பாராட்டு பாராட்டுன்னா எப்டி முடியும்? சின்னப்புள்ளத்தனமா இருக்கு. எப்டி முடியுங்குற?. பால் பொங்கும், பச்சத்தண்ணி எப்டி பொங்கு???

இவங்கள பாராட்ட என்னால முடியாது, முடிஞ்சா நீங்க எல்லாரும் பாராட்டுங்க. அம்புட்டுத்தேன்.................

உங்கள் உள்ளத்தில் இருப்பதை அப்படியே கொட்டித் தீர்த்த நேர்த்தியைவிட வேறு என்ன பாராட்டு சிறப்பாக இருக்கமுடியும் ? எளிமைதான் என்றுமே அழகு !

பூமகள்
08-04-2011, 10:50 AM
என்னது கீதம் அக்கா... சென்ற வாரம் பிறந்த நாள் கொண்டாடுனீங்களா??

எத்தனையாவது பிறந்த நாள்.. ஓ அதைக் கேக்கக் கூடாதோ.. என்றும் பதினாறு என்று அழுந்தச் சொல்லுங்க அக்கா... சரி என்று கொண்டாடுனீங்கன்னாவது சொல்லுங்க.. நாங்க வாழ்த்து திரி கொழுத்துவோம்ல.. எப்படியெல்லாம் யோசிக்கிறோம் பாருங்க.. (வாழ்த்து திரி துவங்க தேர்தல் வைப்போர் சங்கத் தலைவியாக்கும் நானு.. ;))

சரி.. சரி.. வாழ்த்தனுமா பாராட்டனுமா..அதுவும் கவிதையில வந்து பாராட்டனுமாம்.. அதுக்கு நான் உங்க எழுத்தை முழுதும் வாசிச்சிருக்கனும்.. இருந்தாலும் பரவாயில்ல... அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்கன்னு தெரியும்..

கீதமெனும் சங்கீதம்
என்னுள் நுழைந்தது என்றென
ஆராய்கிறேன்..

முதல் முடிவு அறிய இயலா
சிவம் போல்
விழிக்கிறது மனம்..

"அட..!!" என்று சொல்ல வைத்த
இடத்தில் என்னுள் புகுந்திருக்கலாம்..

சேர்ந்து நாட்களாகியும்
அமைதிப் புயலாக
காலத்தின் கையில்
தன் எழுதுகோல் கொடுத்திருந்தீரோ??

எழுத ஆரம்பித்ததுமல்லவா தெரிகிறது..
நான் மணல் தான் என்று..

மலையளவு வன்மை கொண்டு
கரைபுரண்டோடும் தமிழாற்றை
கொணர்ந்தீர்கள்..

எறும்பாய் நான்
உங்கள் பதிவிலையில் தத்தளித்தபடி
கரை சேரக் காத்திருக்கிறேன்..

வளருங்கள்..
மகிழ்வுடன்
பின்னால் வருகிறோம்.
உயரம் பார்க்கவேனும். :)

Nivas.T
08-04-2011, 11:42 AM
இந்த வாழ்த்துகளையெல்லாம் என் பிறந்தநாள் பரிசா (போன வாரம்:)) எடுத்துக்கறேன்.

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
Belated Wishes
Many more return of the Day

ரசித்தேன் .. சிரித்தேன்.. விழுந்து விழுந்து சிரித்தேன்.. :)

வடிவேல் டயலக் தான் ஆனா இந்த இடத்துல சரியா பொருந்திடுச்சு :D:D:D:D:D:lachen001:

உங்கள் உள்ளத்தில் இருப்பதை அப்படியே கொட்டித் தீர்த்த நேர்த்தியைவிட வேறு என்ன பாராட்டு சிறப்பாக இருக்கமுடியும் ? எளிமைதான் என்றுமே அழகு !

உண்மைதான் ஜானகியம்மா

எளிமை எப்பொழுதும் அழகு :)

கலையரசி
08-04-2011, 03:39 PM
குடத்திலிட்ட விளக்காயிருந்த கீதம்
குன்றின் மேலிட்ட விளக்காக
குவலயம் முழுதும் இன்று பிரகாசிப்பது கண்டு
மன்ற உறவுக்குள் உறவு என்ற முறையில்
மனம் மிக மகிழ்கின்றேன்!
குன்றாயிருந்து கைதூக்கி விட்ட
மன்றத்துக்குக் கைகூப்பி
நன்றி நவில்கின்றேன் நானும்
கீதத்தின் சார்பில்!

கீதம் எழுதாத கீதத்தை
இசைத்த அக்னியாருக்கு
என் ஸ்பெஷல் நன்றி!

பாராட்டுக்களுடன் வாழ்த்துகிறேன் கீதம்!

கீதம்
09-04-2011, 02:11 AM
மன்ற மரக்கிளையில்

இளைப்பாறும்

பறவைகளாய்

நாங்கள்,

ஆனால்

மன்ற மரக்கிளையை

நிலைநிறுத்தும்

வேர்களாய்

நீங்கள்.

புதுத்திரியில்

கீதத்தின்

பின்னூட்டம்

பூத்திரியாய்

திரியை

ஒளியூட்டும்.

மன்ற உறவுகள்

உங்கள் வசம்

மன்றம் எங்கும்

உங்கள் வாசம்.

மன்றமே என்றும்

உங்கள் சுவாசம்

இசை பரப்பும்

கீதம்

எங்கும் கேட்கும்

நாதம்

உம் படைப்பே

வேதம்

வாழிய நீடூழி,

வாழ்க பல்லாண்டு.

உங்கள் ஆர்வ வெளிப்பாட்டைக் கண்டு வியக்கிறேன், சுரேஷ். மிகவும் நன்றி.

தாங்கிப்பிடிக்கும் மரவேர்கள்
தம்மிருப்பை வெளிக்காட்டுவதில்லை,
பாரந்தாங்கும் பெருந்தண்டும்
தற்பெருமை பேசுவதில்லை,
பரந்துபட்டப் பெருங்கிளைகள்
பாராட்டுகளுக்கேங்குவதில்லை,
சலசலக்கும் நுனிக்கிளைகளே
சலனத்திற்காளாகும்,
இங்கே சலசலப்புக்குக்கு மத்தியில்
சந்தோஷமாய் நிற்கிறேனே.
நம்புங்கள் என்னை,
உங்களில் ஒருத்தியென்றே...
நுனிக்கிளைதனில் பொருத்தி!:)

என்னை மன்னிச்சிடுங்க அக்னி. கீதம் எழுதா கீதங்கள்னு தலைப்பு வச்சீங்க. ஆனாலும் என்னால் நண்பர்களின் பாராட்டுக்கு பதில் எழுதாமல் இருக்க முடியலை. நான் சும்மா இருந்தாலும் என் கை சும்மா இருக்கமாட்டேன் என்கிறது.

கீதம்
09-04-2011, 02:17 AM
நானும் எப்டியாவது ஒரு நல்லக் கவித எழுதலாம்னு நெனைச்சா? நல்ல கேட்டுக்குங்க நல்ல கவித எழுதலாம்னா, முடியல, எவ்வளவு யோசிச்ச்சாலும் சிலவிசியங்கள் முடியாது. அப்படித்தான் எனக்கு இவங்கள் பாராட்டி எழுதறது.

அப்படி எழுத முயற்சி செஞ்சாலும் வார்த்த கிடைக்கனுமா இல்லையா? என்ன நான் சொல்றது?

எதாவது ஒரு விசயம் செஞ்ச பாராட்டலாம், எப்பயாவது செய்ஞ்சாலும் பாராட்டலாம். அத உருப்படியா செஞ்சா பாராட்டலாம். என்னை மாதிரி இருந்தா.

கதை, கவிதை, மன்ற அலசல், மன்ற உலா, பாராட்டுவது, பாராட்டு பெறுவது, ஊக்விப்பது, கண்ணியமாய் கலந்துரையாடுவது, நாசுக்காய் நக்கலடிப்பது, எச்சரிக்கை செய்வது என்று அனைத்தையும் நன்றாக, சிறப்பாக செய்யும் ஒருவரை பாராட்டு பாராட்டுன்னா எப்டி முடியும்? சின்னப்புள்ளத்தனமா இருக்கு. எப்டி முடியுங்குற?. பால் பொங்கும், பச்சத்தண்ணி எப்டி பொங்கு???
இவங்கள பாராட்ட என்னால முடியாது, முடிஞ்சா நீங்க எல்லாரும் பாராட்டுங்க. அம்புட்டுத்தேன்.................

இப்படி உணர்ச்சிவசப்பட்டு பொங்குவீங்கன்னு தெரிஞ்சிருந்தா அக்னி சொல்லியிருக்கவே மாட்டாருங்க நிவாஸ்.

கொஞ்சம் குளிருங்க... (கூல் கூல்னு தமிழில் சொன்னேங்க.)

என்னை நல்லாவே கவனிக்கிறீங்கன்னு தெரியுது. நன்றி நிவாஸ். உங்க கவிதையின் பாணியிலும் நல்ல வளர்ச்சி தெரியிது. தொடரட்டும் உங்கள் பங்களிப்பு.

கீதம்
09-04-2011, 03:08 AM
என்னது கீதம் அக்கா... சென்ற வாரம் பிறந்த நாள் கொண்டாடுனீங்களா??

எத்தனையாவது பிறந்த நாள்.. ஓ அதைக் கேக்கக் கூடாதோ.. என்றும் பதினாறு என்று அழுந்தச் சொல்லுங்க அக்கா... சரி என்று கொண்டாடுனீங்கன்னாவது சொல்லுங்க.. நாங்க வாழ்த்து திரி கொழுத்துவோம்ல.. எப்படியெல்லாம் யோசிக்கிறோம் பாருங்க.. (வாழ்த்து திரி துவங்க தேர்தல் வைப்போர் சங்கத் தலைவியாக்கும் நானு.. ;))

பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி பூமகள்.

என்றென்று சொல்வேன்?
முட்டாள்கள் தினமன்று...
அன்று அன்று...
அன்றன்று...
அன்றைக்கடுத்த தினமன்று!:)சரி.. சரி.. வாழ்த்தனுமா பாராட்டனுமா..அதுவும் கவிதையில வந்து பாராட்டனுமாம்.. அதுக்கு நான் உங்க எழுத்தை முழுதும் வாசிச்சிருக்கனும்.. இருந்தாலும் பரவாயில்ல... அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்கன்னு தெரியும்..

கீதமெனும் சங்கீதம்
என்னுள் நுழைந்தது என்றென
ஆராய்கிறேன்..

முதல் முடிவு அறிய இயலா
சிவம் போல்
விழிக்கிறது மனம்..

"அட..!!" என்று சொல்ல வைத்த
இடத்தில் என்னுள் புகுந்திருக்கலாம்..

சேர்ந்து நாட்களாகியும்
அமைதிப் புயலாக
காலத்தின் கையில்
தன் எழுதுகோல் கொடுத்திருந்தீரோ??

எழுத ஆரம்பித்ததுமல்லவா தெரிகிறது..
நான் மணல் தான் என்று..

மலையளவு வன்மை கொண்டு
கரைபுரண்டோடும் தமிழாற்றை
கொணர்ந்தீர்கள்..

எறும்பாய் நான்
உங்கள் பதிவிலையில் தத்தளித்தபடி
கரை சேரக் காத்திருக்கிறேன்..

வளருங்கள்..
மகிழ்வுடன்
பின்னால் வருகிறோம்.
உயரம் பார்க்கவேனும். :)

எழுதப் பழகியது
மன்றப்பலகையில்தானே!
எழுத்தை வளர்த்ததும்
இன்றென்னை வாழ்த்துவதும்
மன்றத்தின் பல கைகள் தாமே!

அன்போடு நன்றி கூறுகிறேன் பூமகள். :)

கீதம்
09-04-2011, 03:11 AM
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
Belated Wishes
Many more return of the Dayவாழ்த்துக்கு நன்றி நிவாஸ்.

கீதம்
09-04-2011, 03:14 AM
குடத்திலிட்ட விளக்காயிருந்த கீதம்
குன்றின் மேலிட்ட விளக்காக
குவலயம் முழுதும் இன்று பிரகாசிப்பது கண்டு
மன்ற உறவுக்குள் உறவு என்ற முறையில்
மனம் மிக மகிழ்கின்றேன்!
குன்றாயிருந்து கைதூக்கி விட்ட
மன்றத்துக்குக் கைகூப்பி
நன்றி நவில்கின்றேன் நானும்
கீதத்தின் சார்பில்!

கீதம் எழுதாத கீதத்தை
இசைத்த அக்னியாருக்கு
என் ஸ்பெஷல் நன்றி!

பாராட்டுக்களுடன் வாழ்த்துகிறேன் கீதம்!

மன்றம் என்னைக் கைதூக்கிவிட்டாலும்
மன்றத்தைக் கைகாட்டியது
நீங்கள்தானே அக்கா...
உங்கள் வாழ்த்துகளுடனும்
வழிகாட்டுதல்களுடனும்
இனிதே தொடரும் என் பயணம்.

மிகவும் நன்றி அக்கா.

Nivas.T
10-04-2011, 08:24 AM
இப்படி உணர்ச்சிவசப்பட்டு பொங்குவீங்கன்னு தெரிஞ்சிருந்தா அக்னி சொல்லியிருக்கவே மாட்டாருங்க நிவாஸ்.

கொஞ்சம் குளிருங்க... (கூல் கூல்னு தமிழில் சொன்னேங்க.)

என்னை நல்லாவே கவனிக்கிறீங்கன்னு தெரியுது. நன்றி நிவாஸ். உங்க கவிதையின் பாணியிலும் நல்ல வளர்ச்சி தெரியிது. தொடரட்டும் உங்கள் பங்களிப்பு.

கோபமெல்லாம் இல்லீங்க

ஒரு வித்தியாசமா இருக்கட்டும்னு தான் இப்படி பதிச்சேன். இப்டி ஒரு திரியை தொடங்கிய அக்னி அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

நீங்க, சிவா.ஜி அண்ணா, ஆதவா, ஆதன், த்க்ஸ், இந்த மன்றம் வரும் இன்னும் பலரது எழுத்துக்களும், பதிப்புகளும் எனக்கு வழிகாட்டிகள்.

நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டவன்

கீதம்
10-04-2011, 08:50 AM

நிவாஸ், நான் சொன்னதை தவறா புரிஞ்சுகிட்டீங்க. கோபப்படுறீங்கன்னு நான் சொல்லலை. எமோஷனாயிட்டீங்கங்கிறதைத்தான் அப்படி சொன்னேன். உண்மையில் உங்க பதிவை நான் மிகவும் ரசிச்சேன். :)நன்றி நிவாஸ்.

Nivas.T
10-04-2011, 09:09 AM
நிவாஸ், நான் சொன்னதை தவறா புரிஞ்சுகிட்டீங்க. கோபப்படுறீங்கன்னு நான் சொல்லலை. எமோஷனாயிட்டீங்கங்கிறதைத்தான் அப்படி சொன்னேன். உண்மையில் உங்க பதிவை நான் மிகவும் ரசிச்சேன். :)நன்றி நிவாஸ்.

:):icon_b::D

முரளிராஜா
10-04-2011, 09:44 AM
நிவாஸ், நான் சொன்னதை தவறா புரிஞ்சுகிட்டீங்க. கோபப்படுறீங்கன்னு நான் சொல்லலை. எமோஷனாயிட்டீங்கங்கிறதைத்தான் அப்படி சொன்னேன். உண்மையில் உங்க பதிவை நான் மிகவும் ரசிச்சேன். :)நன்றி நிவாஸ்.

நிவாஸ் என்ன என்னமாதிரி புத்திசாலியா, சட்டுனு புரிஞ்சிக்க:D:D:D

குணமதி
03-07-2011, 05:03 AM
வாழ்க! வளர்ந்திடுக!

ஆற்றல் சான்ற எழுத்துக்கள்

அனைத்தும் அலசும் அறிவுநிலை!

போற்றும் நெஞ்சம் சிறியதையும்

புகழும் நல்ல கொடையுள்ளம்!

மாற்ற மறியா நற்பண்பு

மதிக்கும் போக்கு மற்றவரை!

ஏற்றம் மல்கும் எம்'கீதம்'

என்றும் வாழ்க! வளர்ந்திடுக!

கீதம்
11-07-2011, 02:52 AM
வாழ்க! வளர்ந்திடுக!

ஆற்றல் சான்ற எழுத்துக்கள்

அனைத்தும் அலசும் அறிவுநிலை!

போற்றும் நெஞ்சம் சிறியதையும்

புகழும் நல்ல கொடையுள்ளம்!

மாற்ற மறியா நற்பண்பு

மதிக்கும் போக்கு மற்றவரை!

ஏற்றம் மல்கும் எம்'கீதம்'

என்றும் வாழ்க! வளர்ந்திடுக!

இன்னுமின்னும் என்னை ஏத்தும்
இன்னுளத்தின் ஆசியும் வாழ்த்தும்
அகங்குளிர அன்போடேற்கிறேன்,
தங்கள் வாய்மொழித் தமிழுக்குக்
தலைவணங்கி நவில்கிறேன்,
நெஞ்சம் நிறை நன்றி!