PDA

View Full Version : கவிச்சமர் - அழகு தெரிய...!!! ஆழம் அறிய...???



அக்னி
05-04-2011, 05:28 PM
சட்டென உதிக்கும் கவிதைகள், இத்தனை அழகாக ஆழமாக...
வியப்படக்க முடியவில்லை.

அழகு தெரிய, ஆழம் தெரியாமல் விலத்திப் போகலாமா...

ஆழம் அளந்து வெளிப்படுத்த யாராகிலும் வரலாம்...

ஆழம் வெளிப்படும்வரைக்கும், கவிதையின் உரிமையாளர்கள் ஆழம் சொல்லத் தடை.

தொடர்ந்தும் கவிச்சமரின் ஆழம் அறிய வேண்டுமானால்,
இங்கேயே அறிவிக்கலாம் என நினைக்கின்றேன்...

அக்னி
05-04-2011, 05:34 PM
கவிச்சமர் களத்தில், தற்போதைய இறுதி மூன்று...
ஆழம் காண, வருவது யார்...???

ஒளியாய்!
ஒளியாய் வாராய்!
மறையாய்!
மறைவாய் தாராய்!
கனிவாய்!
கனிவாய் திறவாய்!
மொழிவாய்!
இனிதாய் மொழியாய்!


இனிதாய் மொழியாய்
இருந்தாய்
கனியாய் சுளையாய்
வளர்ந்தாய்
வானாய் வெளியாய்
படர்ந்தாய்
மலராய் இதழாய்
மலர்ந்தாய்
தேனாய் சுவையாய்
தெளித்தாய்
மானாய் மீனாய்
குதித்தாய்
முள்ளாய் வலியாய்
வதைத்தாய்
சொல்லாய் செயலாய்
பிரித்தாய்


பிரித்தாய்
பற்பல அழித்து
பற்பல ஒழித்து
பற்பல மறைத்து
பற்பல குறைத்து
பற்பல நிறைத்து
பற்பல விதித்து
பற்பல உதிர்த்து
பற்பல தவிர்த்து
பற்பல குவித்து
பிரித்தாய் பற்பலவாய் பற்பலவாய் பற்பலவாய்
பற்பல இருந்தும்
பற்பல மறந்தும்
பற்பல மறைந்தும்
பற்பல தெரிந்தும்
பற்பல அறித்தும்
பற்பல புரிந்தும்
பிரிந்தோம் அறுந்தோம் தகர்ந்தோம்
பற்பலவாய் பற்பலவாய் பற்பலவாய்

-------------------------------


பிரித்தாய்
பற்பலவாய்
பற்பலவாய்
பற்பலவாய்
பிரிந்தோம்
பற்பலவாய்
பற்பலவாய்
பற்பலவாய்
செறிந்தாய்
பற்பலவாய்
பற்பலவாய்
பற்பலவாய்
செழித்தாய்
பற்பலவாய்
பற்பலவாய்
பற்பலவாய்
அழிகிறோம்
பற்பலவாய்
பற்பலவாய்
பற்பலவாய்

அக்னி
06-04-2011, 07:50 AM
என்ன இந்தப்பக்கம் யாரையும் காணோம்... :redface:

Nivas.T
06-04-2011, 07:52 AM
என்ன இந்தப்பக்கம் யாரையும் காணோம்... :redface:

:confused::frown:

கீதம்
06-04-2011, 08:20 AM
கவிதைகளில் அழகு தெரிகிறது. ஆழம் அறிய நிறைய முறை மூழ்கணும். அதைத்தான் அடிக்கடி வந்து செய்திட்டுப் போறேன். நல்ல பகுதியைத் துவங்கியதற்குப் பாராட்டுகள் அக்னி.

பிரிச்சு மேயற வேலை உங்களுக்குப் பழக்கமானதாச்சே... நீங்களே ஆரம்பிச்சு வைக்கலாமே....

கீதம்
09-04-2011, 08:43 AM
இனிதாய் மொழியாய்
இருந்தாய்
கனியாய் சுளையாய்
வளர்ந்தாய்
வானாய் வெளியாய்
படர்ந்தாய்
மலராய் இதழாய்
மலர்ந்தாய்
தேனாய் சுவையாய்
தெளித்தாய்
மானாய் மீனாய்
குதித்தாய்
முள்ளாய் வலியாய்
வதைத்தாய்
சொல்லாய் செயலாய்
பிரித்தாய்

நிவாஸின் இக்கவிதையை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அவர் எதைப்பற்றி சொல்கிறார் என்று புரியாதபோதும் இருவேறு பொருட்கள் கண்ணில் விரிகின்றன.

ஒன்று தமிழ், இன்னொன்று காதலி.

நான் தமிழைப் பொருத்தி ஆழமறிய முற்படுகிறேன். நான் தவறு செய்திருக்கும் இடங்களில் மற்றவர்கள் திருத்தி விளக்கலாம்.

இதோ என் விளக்கம்:

இனிதாய் மொழியாய் இருந்தாய்!

தமிழே... இனிய தாய்மொழியாக இருந்தாய்!

கனியாய் சுளையாய் வளர்ந்தாய்!

முக்கனியைப் போலே வளர்ந்தாய்,

மா, பலா, வாழை போல் காயிலும் பயன்பட்டாய், கனிந்தும் இனித்தாய்,

மாம்பழம்போல் அப்படியே கொண்டாலும் அழகுப் பொருள் தந்தாய், வாழை போல் தோல் நீக்கி சற்றே உள்நோக்கவும் இனிய பொருள் தந்தாய். பலாவினைப் போல் பார்க்கக் கடினமாய்த் தோன்றினாலும் பிளக்க... அரும்பொருட்களை இன்சுளையென இனிக்கத்தந்தாய்!

வானாய் வெளியாய் படர்ந்தாய்,

வான் போலவும் வெளிபோலவும் எல்லைகளற்றுப் பரந்திருந்தாய்,

மலராய் இதழாய் மலர்ந்தாய்,

மலர்ந்திருக்கும் மலரின் மணமும், இதழ்களின் நிறமும் வண்டுகளைக் கவர்தல் போல் உன் அருமை அறிந்து பலரும் உன்னைக் கற்க முன்வருமாறு முகமலர்ச்சி காண்பித்தாய்,

தேனாய் சுவையாய் தெளித்தாய்,

வந்தவர்களை நீ ஏமாற்றவில்லை, உன்னிடத்தில் இருக்கும் அற்புதங்களை அவர்களிடத்தில் தேனின் சுவையென அள்ளித் தெளித்தாய். வண்டு உறிஞ்சிதான் தேனெடுக்கும். தேந்தமிழோ வண்டுகளைக் கண்டதும் தானே தேனை அள்ளித் தெளித்து உதவுகிறது. சிரமமில்லாது தமிழின் சுவையை அவர்கள் உணரும்வகையில்!.

மானாய் மீனாய் குதித்தாய்,

காட்டுமான் இனத்துடன் ஒன்றுபட்டு மனம் நிறைந்து மகிழ்வோடு இருக்கும் பொழுதுகளில் குதித்து விளையாடுவது போல்....

ஆற்றில் நீர் மிகுந்து உயிராதாரத்துக்கு வித்திடும் புதுவெள்ளம் பாயும்போது துள்ளி விழும் மீன்போல்....

எங்கள் இனம் வாழ... குலம் தழைக்க.... வாழ்விக்க வந்த நம்பிக்கையின் எழுச்சி கண்டு நீயும் துள்ளினாய்!.

முள்ளாய் வலியாய் வதைத்தாய்,

மான்களின் கொண்டாட்டம் சிங்கங்களுக்குப் பொறுக்குமா?

விரட்டிப் பிடித்து முள்வேலியினுள் அடைக்கபட்டாய், வதைக்கப்பட்டாய்,

மீன்களின் துள்ளல் மீனவனுக்கு வெறுக்குமா?

தூண்டில் முள்ளாய் இறங்கிய துயரத்தில் வதைபட்டாய்,

வதைபட்ட உன்னிலை எங்கள் நெஞ்சில் முள்ளாய் தைக்க வலியாய் எம்மை வதைத்தாய்,

சொல்லாய் செயலாய் பிரித்தாய்,

சொல்வதொன்று, செய்வதொன்று என்று சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இல்லா இனத்துவேசத்துக்காளாகி

எம் உயிரையும் உணர்வையும் எங்களிடமிருந்து பிரித்தாய்.

அமரன்
09-04-2011, 09:25 PM
கணத்தில் கடத்தப்படும் உணர்வு மின்னல்கள்
கவிதையினூடு பாய்ச்சப்படுவது இயல்பு.
கணநேரக் கவிதைகளில் அதன் செறிவு சற்றே உயர்வு!
அளக்க விளைந்த அக்னிக்கும்
அளந்து விதைத்த அக்காவுக்கும் நன்றி.

-புலவர்கள் அவையில் வாயில் காவலன்

இளசு
10-04-2011, 12:37 AM
Originally Posted by கீதம்
ஒளியாய்!
( ஒளியாதே...)

ஒளியாய் வாராய்!
( ஒளியாக - வெளிச்சமாக வருக..)

மறையாய்!
( மறையாதே...)

மறைவாய் தாராய்!
( பிறர் காணாதவாறு தருக..)

கனிவாய்!

( கனிந்துவிடு..)

கனிவாய் திறவாய்!

(கனிபோன்ற இதழ்களைப் பிரியவிடு..)

மொழிவாய்!
( பேசு..)

இனிதாய் மொழியாய்!
( இதழ் கனி என்றால் பேச்சு இனிக்கத்தானே செய்யும்..)



--- கடலோரம் சிப்பி பொறுக்கும் இளசு