PDA

View Full Version : எங்கே செல்லும் இந்தப்பாதை....?கீதம்
05-04-2011, 07:10 AM
வார இறுதி நாட்களின் இறுதி வேளைகளை குடும்பசகிதம் கூடத்தில் அமர்ந்து ஏதேனுமொரு புதிய தமிழ்த்திரைப்படத்துக்கு அரைமனதாய் அர்ப்பணித்து வழியனுப்புவதென்னும் வழக்கம் கடந்த சில வருடங்களாகவே தொடர்கிறது.

ஒன்றிரண்டு திரைப்படங்கள் தவிர பெரும்பாலானவற்றில் பொதுவாக வந்து எரிச்சலூட்டும் காட்சி, கதாநாயகன் நண்பர்களோடு குடிப்பதும் குடித்துவிட்டு ஒரு குத்தாட்டம் போடுவதும் அல்லது கிளுகிளுப்பாய் ஒரு நடனமாடுவதும் அது முடிந்ததும் பக்கத்திலிருக்கும் இன்னொரு குடிகாரனுடன் சண்டையிடுவதும்.(அநேகமாய் அவன் வில்லனாகவோ அல்லது வில்லனின் ஆளாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.) கதை கிராமமா நகரமா என்பதைப் பொறுத்து இடம் சாராயக்கடையா.... ஆடம்பரமான பாரா என்பது மட்டும் வேறுபடும்.

இன்னொரு காட்சியும் உண்டு. அதாவது நண்பர்கள் குழுவில் யாராவது குடிக்கும் பழக்கம் இல்லை என்று சொன்னால் போதும், உடனிருப்பவன் ஏதோ நகைச்சுவையைக் கேட்டதுபோல் சிரித்துவிட்டு சொல்வான், "டேய்...மச்சி... இவனப் பாருடா... பழக்கம் இல்லையாம்டா.... டேய்.... இவனெல்லாம் வாழ்ந்து என்னடா சாதிக்கப்போறான்... எங்க கூட சேர்ந்து எங்க பேரையே கெடுத்திடுவ போலயிருக்கு... போடா..... போ……போய் எங்கனா ஓரமா குந்தி குச்சிமிட்டாய் சாப்பிடு...."

சும்மா இருந்தவனுக்கு ரோஷம் வந்துவிடும். முன்னே இருக்கும் டம்ளரை எடுத்து ஒரே மடக்கில் குடித்துவிட்டுப் பிதற்ற ஆரம்பித்துவிடுவான்.

இது போன்ற காட்சிகளைப் பார்க்கும்போதெல்லாம் மனதோரம் ஒரு கேள்வி எழாமல் இல்லை. உண்மையில் இன்றைய இளைஞர் சமுதாயம் இப்படிதான் இருக்கிறதா? அல்லது இப்படி இருப்பதாக திரைப்படங்களில் மிகைப்படுத்திக்காட்டப்படுகிறதா?

அன்றும் அப்படிதான். ஏதோ ஒரு திரைப்படம்.அதிலொரு இளைஞன் போதைப்பொருளை உபயோகித்துக்கொண்டிருக்கிறான். அவன் எப்படி உபயோகிக்கிறான் என்பதை அவன் கை, மூக்கு, உதடு என்று மிகவும் குளோசப்பில் காட்ட... கடுப்பானேன் நான்.

"ஐயோ... இந்தக் காட்சியை இப்படி குளோசப்பிலே வேற காட்டித் தொலையணுமா?"

"அம்மா.... இது கெடுதல்னு அவனுக்குத் தெரியாதா?" என் மகனின் கேள்வி சற்றே என்னைத் துணுக்குறச் செய்கிறது.

"எது?"

புரிந்துதான் கேட்கிறானா எனப் புரியாமல் நான்.

"அதான்.... ட்ரக்ஸ் எடுக்கிறாங்களே... அது கெடுதல்னு தெரியுமா அவங்களுக்கு?"

சடாரென்று நிமிர்ந்தேன். ட்ரக்ஸ் பற்றி இவனுக்கு என்ன தெரியும் என்கிற அலட்சிய பாவம் மாறி, ஏதோ தெரிந்திருக்கிறது என்னும் எச்சரிக்கையுணர்வு தூண்ட... அவன் கேள்விக்கு பொறுப்பான பதிலளிக்க முன்வந்தேன்.

"தெரிஞ்சாலும் அதுக்கு அடிமையாகிட்டா அதுக்கப்புறம் மூளை யோசிக்கிற திறமையை இழந்திடும்"

"ஆமாம்மா.... ஹார்ட் பிராப்ளம் வரும், ஞாபக மறதி வரும், மூளை அதோட செயல்பாடுகளைத் தாறுமாறா செய்யும். சிலசமயம் தற்கொலை எண்ணம் கூட வருமாம்..."

திரைப்படம் நிறுத்தப்பட்டது. அவன் சொல்வதை மிதமான பதற்றத்துடன் கவனிக்கத் தொடங்கினோம். அவன் மேலும் தொடர்ந்தான்.

"ஹெராயின், மரிஜுவானா, கோகெய்ன், ஐஸ்... ஐஸுன்னா... நாம சாப்புடுற ஐஸ் இல்ல.... இது வேற.... அப்புறம் ஸ்பீட்... அப்புறம்... GHB... இதெல்லாம் ரொம்ப ரொம்ப கெடுதலான ட்ரக்ஸ். இல்லீகலும் கூட..."

"இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்?" பதற்றத்துடன் கேட்டேன். நண்பர்கள் சரியில்லையோ?

நாங்கள் குடியிருக்கும் பகுதி ஒரு காலத்தில் போதைப் பொருள் உபயோகத்துக்குப் பெயர்போன பகுதியாம். குடியேறியபின் நண்பர்கள் சொல்லகேட்டேன். இப்போது எல்லாம் கட்டுக்குள் இருக்கிறது. நல்ல குடியிருப்புகள், நல்ல பள்ளிகள், நல்ல மனிதர்கள் என்று அமைதியாகப் போகிறது வாழ்க்கை. ஆனால் இன்றென்னவோ அடிவயிற்றில் புதிதாய் ஒரு பயம் பிரளயமெடுத்தது.

"இந்த செமஸ்டரில் நாங்க அதைப் பத்திதானே அஸைன்மெண்ட் பண்றோம்."

இயல்பாய் சொன்னான் அவன். இந்த செமஸ்டருக்கான அஸைன்மெண்ட்டைப் பற்றி இதுவரை அவனைக் கேட்கவில்லை என்பது அப்போதுதான் உறைக்கிறது.

"எதைப் பத்தி? ட்ரக்ஸ் பத்தியா?"

"ம். இன்னுங்கூட எனக்கு நிறைய விவரம் எடுக்கணும், எனக்கு நீங்க ஹெல்ப் பண்றீங்களாம்மா?"

நானா?

ஆம், நானேதான். அவனுக்கு தகவல்கள் திரட்டித் தருகிறேன். என் பிள்ளை எதைப் பற்றி நினைக்கவும் கூடாது என்று நினைத்தேனோ.... நானே அதைப் பற்றி அவனுக்குப் பாடம் எடுக்கிறேன்.

எவை எவை போதைப் பொருட்கள்? என்னென்ன பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன? உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகின்றன? எவை சட்டபூர்வமானவை? சட்டபூர்வமற்ற போதைபொருட்களை உபயோகிப்பவருக்கும் விற்பனை செய்பவருக்கும் சட்டத்தின் பார்வையில் கிடைக்கும் தண்டனைகள் என்ன? எல்லாவற்றையும் அலசி அவனுக்கு விளக்கினேன்.

ஆறாம் வகுப்பு மாணவனுக்கு இதுபற்றிய அறிவு தேவையா? அறிவதாலேயே ஆர்வம் மேலோங்கிவிடாதா? இப்போது அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் அவசியம்தான் என்ன? ஏகப்பட்டக் கேள்விகளை என்னுள் அடக்கியபடியே அவனுக்கு விவரிக்கிறேன். அவனோ என்னிலும் அதிகமாய்த் தெரிந்துவைத்திருக்கிறான்.

"இங்க பல பேரோட அப்பா அம்மா எல்லாரும் குடிக்கிறாங்க... சிகரெட் பிடிக்கிறாங்க... அதனால் அந்தப் பிள்ளைகளுக்கும் அந்தப் பழக்கம் சின்ன வயசிலேயே வந்திடும்னுதான் இப்பவே அதைப் பத்தியெல்லாம் சொல்லித்தராங்கம்மா..."

அவன் தெளிவாகத்தான் இருக்கிறான். பிடிக்காததைப் பற்றிப் பார்ப்பதும், பேசுவதுமே சிந்தையைக் கெடுக்கும் என்னும் என் அசைக்கமுடியாத நம்பிக்கையை ஆணிவேரோடு பிடுங்கினான்.

பதின்ம வயதுகளில் பசுஞ்செடிகளாய் நிற்கும் இவர்களைப் பாழ்படுத்தப் படையெடுக்கும் பழக்கவழக்கங்களிலிருந்து பாதுக்காக்கும் வேலியமைக்க பெற்றவர்களும் மற்றவர்களும் முன்வருவார்கள் என்று காத்திராமல் தனக்குத்தானே முள் வளர்த்து தற்காத்துக்கொள்ளக் கற்றுத் தருகிறது பாடசாலை.

"அம்மா... நான் பெரியவனானதும் நிச்சயமா சிகரட் பிடிக்கமாட்டேன், குடிக்கமாட்டேன், ட்ரக்ஸ் பக்கமே போகமாட்டேன்"

நான் எதுவும் சொல்லாமலே.... கேட்காமலே என்னிடம் சொல்கிறான். பாடத்திட்டத்தின்பால் நான் கொண்டிருந்த துவேஷ மாயத்திரை விலகத்தொடங்குகிறது.

சரியான பாதையைக் காட்டி இதில் மட்டுமே நீ போகவேண்டும் என்று சொல்லிப் பிற பாதைகளை அவன் பார்வையினின்று மறைக்க முயற்சி செய்தேன் நான். பாடசாலையோ... சரியான பாதையைப் பற்றிச் சொல்வதுடன், போகக்கூடாத பாதைகளைப் பற்றியும் விவரித்து, அவ்வழியே போவதால் உண்டாகும் ஆபத்துகளையும், தீங்குகளையும் எடுத்துச்சொல்லி, தவறிப்போனவர்களின் கதியையும் கண்முன்னே காட்டி... இனி நீ செல்லவேண்டிய பாதை எது என்பதை நீயே தீர்மானித்துக்கொள் என்று சொல்கிறது.

என் மகன் தான்செல்லவேண்டிய பாதையைத் தீர்மானித்துவிட்டான். மனநிறைவுடன் அடுத்திருக்கும் மகளைப் பார்க்கிறேன்.

"இந்த செமஸ்டரில் உனக்கு என்னம்மா அஸைமெண்ட்?"

"கே மேரேஜை ஆதரிச்சு ஸ்பீச் கொடுக்கணும்மா"

அவளும் இயல்பாய் சொல்கிறாள். எனக்குள் மறுபடியும் பிரளயம்.

என்னது? ஓரினச் சேர்க்கைத் திருமணத்தைப் பற்றியா? பதினோராம் வகுப்பு மாணவிக்கு இப்படியொரு தலைப்பா? இது நல்லதா? கெட்டதா? நம் கலாச்சாரத்துக்கு முற்றிலும் முரண்பட்ட விஷயமாயிற்றே.... இவளால் எப்படி முடியும்?

"ஆதரிக்கறதுக்குப் பதில் எதிர்த்துப் பேசலாமே...."

"எதிர்த்துப் பேசறதுதான் எல்லாரும் செய்வாங்களே... ஒரு சென்சிடிவான விஷயத்தை எடுத்து அதை பெரும்பான்மைக்கு எதிரா பேசணும். அதான் அஸைமெண்ட்... நான் இந்த டாபிக்கை எடுத்திருக்கேன். அப்பதான் அது சேலஞ்சிங்கா இருக்கும், ரிப்போர்ட்டும் நல்லா கிடைக்கும். இன்னும் சிலர் பேசப்போற தலைப்பைக் கேட்டா நீங்க பயந்திடுவீங்க."

இதைவிடவுமா? மறுபடியும் சற்று நேரம் குழம்பினேன். குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்கமுடியுமாமே.... எனக்கும் கிடைத்தது. மீனல்ல, மீட்சி!

பாதைகளைப் பற்றிய பார்வைகள் விரியட்டும். வெறும் ஏட்டுப்படிப்பில் தேறி வாழ்க்கைத் தேர்வில் தோற்பதைக் காட்டிலும், வாழ்க்கைப் புத்தகத்தின் ஏடுகளையும் புரட்டித் தேர்ச்சி பெறட்டும், வருங்காலத் தலைமுறையினர்.

sarcharan
05-04-2011, 08:57 AM
காலம் கலிகாலம் ஆகிபோச்சு...ஹ்ம்ம் என்ன செய்ய...

Ravee
05-04-2011, 09:24 AM
எப்போதும் நம் குழந்தைகளை சுற்றி மூன்று வட்டங்கள் உள்ளது கீதம் முதலாவது அவனின் நெருங்கிய உறவுகள் , இரண்டாவது நண்பர்கள் , மூன்றாவது சமுதாயம்..... இதில் ஒவ்வொரு வட்டங்களின் பார்வையும் பாதிப்பும் மற்ற வட்டங்களுக்கு அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் தரும். ஆனால் என்ன செய்வது நம் குழந்தைகள் இந்த மூன்று வட்டத்தையும் வெற்றிகரமாக தாண்டி சென்றால் மட்டுமே நாளை அவன் குழந்தைகளுக்கு இந்த மூன்று வட்டத்தை தரமுடியும். முடிந்த வரை அவர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் காட்டிக்கொடுக்கலாம் . காலம் முழுதும் கை பிடித்து கூடவே செல்ல முடியாது. அவர்களும் அதை விரும்ப மாட்டார்கள் .....:cool:

ஆதவா
05-04-2011, 09:37 AM
முதலில் உங்கள் பையனுக்கும் பொண்ணுக்கும் என் வாழ்த்தை சொல்லிவிடுங்கள். முதலில் என் மேட்டருக்கு வருகிறேன். (அப்பத்தானே நான் நல்லவன்னு நிரூபிக்க முடியும்!!:))

எனக்கு சிறுவயதிலேயே இந்த ஞானமெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் பீடி, சிகரெட், சரக்கு, இந்த மூன்றைத் தவிர வேறெதுவும் தெரியாது. யாரும் இதைப் பற்றி டீட்டெய்லாக சொல்லித் தரவில்லை. அதாவது உதாரணத்திற்கு பீடி எப்படி தயாரிக்கப்படுகிறது? இந்தமாதிரியான விஷயங்களில் நான் நெகட்டிவ் சைடுதான் இருப்பேன். சமீபத்தில் தங்கம் குறித்து படித்துக் கொண்டிருந்த பொழுது ஆசிரியரிடம் போலி தங்கம் எப்படி செய்யறாங்கன்னு சொல்லிக் கொடுங்க என்றேன். அவர் சிரித்தார். பதில் அவருக்கு நிச்சயம் தெரியும், ஆனால் சொல்ல மறுத்துவிட்டார். இந்தமாதிரி ஒரு விஷயத்தின் பாஸிட்டிவ் சைட் மட்டுமே சொல்லித் தரப்படுகிறது. போலித்தங்கம் செய்வது எப்படியெனத் தெரிந்து கொண்டால் அசல் தங்கம் எது என்பதை இன்னும் தெளிவாகக் கூறிவிடமுடியும். எனக்கு இரண்டு பக்கமும் தெரிந்திருக்கவேண்டும். இப்போது மீண்டும் பீடி விஷயத்திற்கு வருவோம். அதன் நெகட்டிவ் சைட் எப்படி தயாரிக்கப்படுகிறது. அதன் பாஸிட்டிவ் சைட், அதனால் பயன்பெறும் மனிதர்கள் + விளைவுகள்! இத்தனைக்கும் சிகரெட் போன்றவை தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன.. ஆனால் இந்தமாதிரி எந்தவொரு விஷயமும் கிடைக்கவேயில்லை. அவ்வளவு ஏன், பெரிய சரக்கு பாட்டில்கள் பல வருஷங்கள் பதக்கி வைத்திருந்துதான் விற்கப்படுகின்றன என்பதையே சமீபத்தில்தான் தெரிந்து கொள்ள நேர்ந்தது. தெரிந்து கொள்ளாமலிருந்து எந்த பிரச்சனையுமில்லை எனக்கு,

முன்பு அப்பா ஏதாவது வரையவேண்டுமென்றா கையில் சிகரெட் இல்லாமல் வரையமாட்டார். நான் படித்துக் கொண்டிருந்த பொழுது அவருக்கு சிகரெட் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நிறையதடவை. சிலசமயங்களில் முகர்ந்து பார்ப்பேன். அதன் நெடி நன்றாக இருக்காது. சிகரெட் பிடிப்பதால் என்ன பயன் என்று அவரிடம் கேட்கவும் தயக்கம். அவரும் “ சிகரெட் பிடிக்கக் கூடாது “ என்று முன்பே எச்சரிக்கையும் செய்ததில்லை. ஆனால் என்னவோ ஒரு உணர்வு. பிடிக்கக் கூடாது... அது எவ்வழியில் வேண்டுமானாலும் வந்திருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்து, ஒரு சின்ன ஆய்வின் வழியேதான் இதையெல்லாம் “தவறானவைகள்” என்று ஒதுக்க ஆரம்பித்தேன். முதலில் சொன்னது போல சிகரெட் எப்படி தயாரிக்கப்படுகிறது. (பிராண்டு தேவையில்லை.) அதன் விளைவுகள்.. அதேபோல சரக்கு... இந்த இரண்டின் அவலத்தை நேரில் கண்டதனால் முதலில் “ இது தனிமனித ஒழுங்குக்கு இழுக்கு” என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்து அதன் விளைவுகள் சிறிது காணத் தெரிந்து கொண்டதனால் “உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது” என்ற உண்மையைத் தெரிந்து கொண்டேன். அதாவது வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால் இதற்கு என் அப்பாவே ரோல் மாடலாக உபயோகித்துக் கொண்டேன். அவர் என்ன செய்தாரோ அதை செய்யமறுத்தேன்..

சரி ரொம்ப ஓவராக சுயபுராணம் பாடக்கூடாது. முதலில் பையன் மேட்டருக்கு வருவோம்.

போதை மருந்து குறித்த தகவல்களை சேகரித்துக் கொடுங்கள். விக்கிபீடியாதான் இருக்கீறதே, ஓல்ட் ஹிஸ்டரியிலிருந்து துவங்கி இன்றைய உலகம் வரையில் கிடைக்கும். மருந்துகளின் பெயர்களை நிறைய தெரிந்துவைத்திருக்கிறார் என்பதால் அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, முக்கியமாக அதன் விளைவுகளையும் விழிப்புணர்சியையும் எடுத்துக் காட்டுங்கள். அது குறித்த ஆவணப்படங்கள் கிடைத்தால் காண்பியுங்கள். ஒரு தெளிவு கிடைக்கும். இது எப்படிப்பட்டது எனும் தெளிவு கிடைக்கும். கடைசியில் ஹெராயின் பொட்டலமே கையில் கிடைத்தாலும் அவரின் மனம் அது கொடியது என்று தூக்கி வீசும்.

உங்கள் பெண் பேசப்போகும் விஷயம் கொஞ்சமல்ல, ரொம்பவே சென்ஸிடிவானது. உண்மையில் அந்த முடிவை வரவேற்கிறேன். எதிர்த்து பேசுவதைக் காட்டிலும் ஆதரித்துப் பேசுதல் நன்று... அதற்கான தகவல்களையும் சேகரித்துக் கொடுங்கள். அதாவது பழைய வரலாறிலிருந்து... (எனக்குத் தெரிந்து மகா ஓவியர் மைக்கெலேஞ்சலோ ஒரு ஓரினச்சேர்க்கையாளர்!!!) நவீன வரலாறு வரை, அதனை மக்கள் எப்படி பார்க்கிறார்கள், எந்தெந்த நாடுகளில் சட்டம் இருக்கின்றது, போன்ற பல விஷயங்கள்.... இது கொஞ்சம் நெளிவு ஏற்படுத்தும் சப்ஜெக்ட் என்பதால் பல விஷயங்கள் கட் செய்யப்படலாம்... அது உங்கள் இஷ்டம்!!

சிறுவயதிலேயே பெரிய விஷயங்களைக் கையாளுவது நல்லதுதான்!!! ஆல் த பெஸ்ட்!

நல்லவேளை நீங்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் இருக்கிறீர்கள்.இது போன்ற காட்சிகளைப் பார்க்கும்போதெல்லாம் மனதோரம் ஒரு கேள்வி எழாமல் இல்லை. உண்மையில் இன்றைய இளைஞர் சமுதாயம் இப்படிதான் இருக்கிறதா? அல்லது இப்படி இருப்பதாக திரைப்படங்களில் மிகைப்படுத்திக்காட்டப்படுகிறதா?

நீங்க தமிழ்படங்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அது மிகைமிகைப்படுத்தல்தான்!!

நான் பசங்களோடு பாருக்குச் சென்றிருக்கிறேன். அதாவது குடிசை லெவலிலிருந்து பங்களா லெவல் வரை... ஒருசில இடங்களில் ஒருசிலர் வற்புறுத்துகிறார்கள். அதாவது ”டேய்.... இவனெல்லாம் வாழ்ந்து என்னடா சாதிக்கப்போறான்... எங்க கூட சேர்ந்து எங்க பேரையே கெடுத்திடுவ போலயிருக்கு.” போன்ற வசனங்கள் நகைச்சுவையாகவே சொல்லப்படுகின்றன. சொல்லுவார்களே.... சேர்க்கை சரியில்லை என்று.. அந்தமாதிரி நண்பர்களின் கெஞ்சலில் குடித்தவர்களை, குடிக்க ஆரம்பித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். அதேசமயம் நண்பர்களுக்கு பயந்து குடிக்காமலிருப்பவர்களையும் பார்க்கிறேன்.

அப்பறம், ஒரு வீக்னெஸ் பலருக்கும் உண்டு!!! அது மற்றவர்கள்தான் சொல்லணும்!! பாரில், பொண்ணுங்க ஊத்திக் கொடுத்தால் குடிக்க ஆரம்பிக்கிறார்களாமே... உண்மையா??

தாமரை
05-04-2011, 09:38 AM
அவங்க எச்சரிக்கையாத்தான் இருக்காங்க போல இருக்கு.. நீங்க தடுமாறிடாதீங்க...

கீதம்
05-04-2011, 09:44 AM
அவங்க எச்சரிக்கையாத்தான் இருக்காங்க போல இருக்கு.. நீங்க தடுமாறிடாதீங்க...

நான் வளர்ந்த சூழல் என்னைத் தடுமாறவைக்கிறது. ஆனாலும் பிள்ளைகள் என்னைப்போல் இல்லாமல் வாழுமிடத்துக்கேற்ப தங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நான் தடையாக இருக்கமாட்டேன்.

கீதம்
05-04-2011, 09:55 AM
முதலில் உங்கள் பையனுக்கும் பொண்ணுக்கும் என் வாழ்த்தை சொல்லிவிடுங்கள். முதலில் என் மேட்டருக்கு வருகிறேன். (அப்பத்தானே நான் நல்லவன்னு நிரூபிக்க முடியும்!!:))

எனக்கு சிறுவயதிலேயே இந்த ஞானமெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் பீடி, சிகரெட், சரக்கு, இந்த மூன்றைத் தவிர வேறெதுவும் தெரியாது. யாரும் இதைப் பற்றி டீட்டெய்லாக சொல்லித் தரவில்லை. அதாவது உதாரணத்திற்கு பீடி எப்படி தயாரிக்கப்படுகிறது? இந்தமாதிரியான விஷயங்களில் நான் நெகட்டிவ் சைடுதான் இருப்பேன். சமீபத்தில் தங்கம் குறித்து படித்துக் கொண்டிருந்த பொழுது ஆசிரியரிடம் போலி தங்கம் எப்படி செய்யறாங்கன்னு சொல்லிக் கொடுங்க என்றேன். அவர் சிரித்தார். பதில் அவருக்கு நிச்சயம் தெரியும், ஆனால் சொல்ல மறுத்துவிட்டார். இந்தமாதிரி ஒரு விஷயத்தின் பாஸிட்டிவ் சைட் மட்டுமே சொல்லித் தரப்படுகிறது. போலித்தங்கம் செய்வது எப்படியெனத் தெரிந்து கொண்டால் அசல் தங்கம் எது என்பதை இன்னும் தெளிவாகக் கூறிவிடமுடியும். எனக்கு இரண்டு பக்கமும் தெரிந்திருக்கவேண்டும். இப்போது மீண்டும் பீடி விஷயத்திற்கு வருவோம். அதன் நெகட்டிவ் சைட் எப்படி தயாரிக்கப்படுகிறது. அதன் பாஸிட்டிவ் சைட், அதனால் பயன்பெறும் மனிதர்கள் + விளைவுகள்! இத்தனைக்கும் சிகரெட் போன்றவை தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன.. ஆனால் இந்தமாதிரி எந்தவொரு விஷயமும் கிடைக்கவேயில்லை. அவ்வளவு ஏன், பெரிய சரக்கு பாட்டில்கள் பல வருஷங்கள் பதக்கி வைத்திருந்துதான் விற்கப்படுகின்றன என்பதையே சமீபத்தில்தான் தெரிந்து கொள்ள நேர்ந்தது. தெரிந்து கொள்ளாமலிருந்து எந்த பிரச்சனையுமில்லை எனக்கு,

முன்பு அப்பா ஏதாவது வரையவேண்டுமென்றா கையில் சிகரெட் இல்லாமல் வரையமாட்டார். நான் படித்துக் கொண்டிருந்த பொழுது அவருக்கு சிகரெட் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நிறையதடவை. சிலசமயங்களில் முகர்ந்து பார்ப்பேன். அதன் நெடி நன்றாக இருக்காது. சிகரெட் பிடிப்பதால் என்ன பயன் என்று அவரிடம் கேட்கவும் தயக்கம். அவரும் “ சிகரெட் பிடிக்கக் கூடாது “ என்று முன்பே எச்சரிக்கையும் செய்ததில்லை. ஆனால் என்னவோ ஒரு உணர்வு. பிடிக்கக் கூடாது... அது எவ்வழியில் வேண்டுமானாலும் வந்திருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்து, ஒரு சின்ன ஆய்வின் வழியேதான் இதையெல்லாம் “தவறானவைகள்” என்று ஒதுக்க ஆரம்பித்தேன். முதலில் சொன்னது போல சிகரெட் எப்படி தயாரிக்கப்படுகிறது. (பிராண்டு தேவையில்லை.) அதன் விளைவுகள்.. அதேபோல சரக்கு... இந்த இரண்டின் அவலத்தை நேரில் கண்டதனால் முதலில் “ இது தனிமனித ஒழுங்குக்கு இழுக்கு” என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்து அதன் விளைவுகள் சிறிது காணத் தெரிந்து கொண்டதனால் “உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது” என்ற உண்மையைத் தெரிந்து கொண்டேன். அதாவது வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால் இதற்கு என் அப்பாவே ரோல் மாடலாக உபயோகித்துக் கொண்டேன். அவர் என்ன செய்தாரோ அதை செய்யமறுத்தேன்..

சரி ரொம்ப ஓவராக சுயபுராணம் பாடக்கூடாது. முதலில் பையன் மேட்டருக்கு வருவோம்.

போதை மருந்து குறித்த தகவல்களை சேகரித்துக் கொடுங்கள். விக்கிபீடியாதான் இருக்கீறதே, ஓல்ட் ஹிஸ்டரியிலிருந்து துவங்கி இன்றைய உலகம் வரையில் கிடைக்கும். மருந்துகளின் பெயர்களை நிறைய தெரிந்துவைத்திருக்கிறார் என்பதால் அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, முக்கியமாக அதன் விளைவுகளையும் விழிப்புணர்சியையும் எடுத்துக் காட்டுங்கள். அது குறித்த ஆவணப்படங்கள் கிடைத்தால் காண்பியுங்கள். ஒரு தெளிவு கிடைக்கும். இது எப்படிப்பட்டது எனும் தெளிவு கிடைக்கும். கடைசியில் ஹெராயின் பொட்டலமே கையில் கிடைத்தாலும் அவரின் மனம் அது கொடியது என்று தூக்கி வீசும்.

உங்கள் பெண் பேசப்போகும் விஷயம் கொஞ்சமல்ல, ரொம்பவே சென்ஸிடிவானது. உண்மையில் அந்த முடிவை வரவேற்கிறேன். எதிர்த்து பேசுவதைக் காட்டிலும் ஆதரித்துப் பேசுதல் நன்று... அதற்கான தகவல்களையும் சேகரித்துக் கொடுங்கள். அதாவது பழைய வரலாறிலிருந்து... (எனக்குத் தெரிந்து மகா ஓவியர் மைக்கெலேஞ்சலோ ஒரு ஓரினச்சேர்க்கையாளர்!!!) நவீன வரலாறு வரை, அதனை மக்கள் எப்படி பார்க்கிறார்கள், எந்தெந்த நாடுகளில் சட்டம் இருக்கின்றது, போன்ற பல விஷயங்கள்.... இது கொஞ்சம் நெளிவு ஏற்படுத்தும் சப்ஜெக்ட் என்பதால் பல விஷயங்கள் கட் செய்யப்படலாம்... அது உங்கள் இஷ்டம்!!

சிறுவயதிலேயே பெரிய விஷயங்களைக் கையாளுவது நல்லதுதான்!!! ஆல் த பெஸ்ட்!

நல்லவேளை நீங்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் இருக்கிறீர்கள்.நீங்க தமிழ்படங்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அது மிகைமிகைப்படுத்தல்தான்!!

நான் பசங்களோடு பாருக்குச் சென்றிருக்கிறேன். அதாவது குடிசை லெவலிலிருந்து பங்களா லெவல் வரை... ஒருசில இடங்களில் ஒருசிலர் வற்புறுத்துகிறார்கள். அதாவது ”டேய்.... இவனெல்லாம் வாழ்ந்து என்னடா சாதிக்கப்போறான்... எங்க கூட சேர்ந்து எங்க பேரையே கெடுத்திடுவ போலயிருக்கு.” போன்ற வசனங்கள் நகைச்சுவையாகவே சொல்லப்படுகின்றன. சொல்லுவார்களே.... சேர்க்கை சரியில்லை என்று.. அந்தமாதிரி நண்பர்களின் கெஞ்சலில் குடித்தவர்களை, குடிக்க ஆரம்பித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். அதேசமயம் நண்பர்களுக்கு பயந்து குடிக்காமலிருப்பவர்களையும் பார்க்கிறேன்.

அப்பறம், ஒரு வீக்னெஸ் பலருக்கும் உண்டு!!! அது மற்றவர்கள்தான் சொல்லணும்!! பாரில், பொண்ணுங்க ஊத்திக் கொடுத்தால் குடிக்க ஆரம்பிக்கிறார்களாமே... உண்மையா??

நிறையச் சொல்லியிருக்கீங்க ஆதவா... மிகவும் நன்றி. கொஞ்சம் அல்ல, நிறையவே நானும் குழம்பியிருந்தேன்.

நல்லவேளை, ஆஸ்திரேலியாவில் இருக்கிறீர்கள் என்கிறீர்கள். ஆஸ்திரேலியாவில் இருப்பதால்தான் இந்நிலை. நம்நாட்டில் இப்படிப்பட்டத் தலைப்புகளில் அஸைன்மெண்ட் கொடுக்கதான் துணிவார்களா? இங்குள்ள கலாச்சாரத்துக்கேற்றாற்போல் பாடத்திட்டமும் அமைந்திருக்கிறது.

ஓரளவுக்கு அதாவது பிள்ளைகள் லெவலுக்கு தகவல்கள் திரட்டித்தருகிறேன்.

தெளிவடைய உதவியதற்கு நன்றி ஆதவா.

கீதம்
05-04-2011, 09:57 AM
எப்போதும் நம் குழந்தைகளை சுற்றி மூன்று வட்டங்கள் உள்ளது கீதம் முதலாவது அவனின் நெருங்கிய உறவுகள் , இரண்டாவது நண்பர்கள் , மூன்றாவது சமுதாயம்..... இதில் ஒவ்வொரு வட்டங்களின் பார்வையும் பாதிப்பும் மற்ற வட்டங்களுக்கு அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் தரும். ஆனால் என்ன செய்வது நம் குழந்தைகள் இந்த மூன்று வட்டத்தையும் வெற்றிகரமாக தாண்டி சென்றால் மட்டுமே நாளை அவன் குழந்தைகளுக்கு இந்த மூன்று வட்டத்தை தரமுடியும். முடிந்த வரை அவர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் காட்டிக்கொடுக்கலாம் . காலம் முழுதும் கை பிடித்து கூடவே செல்ல முடியாது. அவர்களும் அதை விரும்ப மாட்டார்கள் .....:cool:

டீனேஜ் பிள்ளைகளின் வளர்ப்பு பற்றி நிறைய படித்திருக்கிறேன். கேள்விப்பட்டுமிருக்கிறேன். ஆனாலும் நடைமுறையில் வரும்போதுதான் அதன் தீவிரம் புரிகிறது. கருத்திட்டு தேற்றியதற்கு நன்றி ரவி.

கீதம்
05-04-2011, 09:59 AM
காலம் கலிகாலம் ஆகிபோச்சு...ஹ்ம்ம் என்ன செய்ய...

இப்படிப் பெருமூச்சு விட்டால் சரியாப்போச்ச? அடுத்து என்ன பண்றதுன்னு ஆலோசனை சொல்லவேண்டாமா?:)

தாமரை
05-04-2011, 10:23 AM
அவங்க எச்சரிக்கையாத்தான் இருக்காங்க போல இருக்கு.. நீங்க தடுமாறிடாதீங்க...

உங்கள் மகள் நோக்கில் தெளிவாகத்தான் இருக்கிறார். அவர் அடைய நினைக்கும் கலை, மக்கள் மனதில் தவறு என்று ஊறிப்போன விஷயங்களைப் பற்றி அவர்களைச் சிந்திக்க வைப்பது. இது ஒரு தலைமைப் பண்பு. இதைக் கலையாக மட்டுமே கற்றுக் கொள்ளணும்.

அக்னி
05-04-2011, 11:37 AM
புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தவரே நிகழும், பெரியவர்களின் தவிர்க்க முடியாத தடுமாற்றம்...

எமது பாரம்பரிய கலாச்சார, பண்பாடு
வாழும் நாட்டின் கலாச்சார, பண்பாடு

என்ற இரு வாழ்க்கைச் சூழலை வாழ வேண்டிய நிர்ப்பந்தம், ஒரு குழப்பத்தைப் பெரியோருக்குத் தந்துவிடுகின்றது.

வீட்டினுள்ளே ஒரு வாழ்வும், வெளியே ஒரு வாழ்வும் வாழ வேண்டிய கட்டாய இரட்டை வாழ்க்கை.

இதில், குழந்தைகள் தெளிவாகவே இருக்கின்றார்கள்...

ஐரோப்பிய நாடுகளில்,
வாழும் நாடுகளின் மொழியறிவு பெற்றோரை விடவும் குழந்தைகளிடம் அதிகம் உண்டு.
சரியாகச் சொல்லின் இத்தலைமுறையினரின் கற்றல் நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் அமைந்துவிட்டதால்,
முந்தைய தலைமுறையினரிலும் இத்தலைமுறையினர் மொழியறிவு மிகுந்துள்ளார்கள்.
ஆனாலும், வீட்டினுள், தாய் தந்தையுடன் அவர்களுடைய மொழியறிவுக்கேற்ற வகையில் இயல்பாகவே தாய்மொழியிற் பேசுகின்றார்கள்.
இது சொல்லித் தந்து வந்ததல்ல.
குழந்தைகள் மேல் திணிக்கப்பட்ட இரட்டைக் கலாச்சார, பண்பாட்டு வாழ்க்கைமுறை,
ஒருங்கேயமைந்த ஒரு புது வாழ்க்கை முறையாகக் குழந்தைகளால் வாழப்பட,
பெரியவர்களான நாம்தான் அதனை சரிவரக் கையாள முடியாது குழம்பிப் போகின்றோம்.

அடுத்த தலைமுறையில் இது ஒரு பிரச்சினையாகவே இருக்காது என்பது திண்ணம்.

சிவா.ஜி
05-04-2011, 03:59 PM
இவையெல்லாம் நாம் நமது வசதியான, வளமையான வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை. அதாவது....பிள்ளைகளைப் பற்றிய பயம். ஆனால் இந்த பயம் தேவையில்லை. தாமரை சொன்னதைப்போல அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். பெற்றோர்கள்தான் குழம்பிப்போகிறார்கள். குழப்பம் தேவையில்லை தங்கையே....

பிள்ளைகள் மிக நன்றாகவே வளருகிறார்கள். தெளிவாய் சிந்திக்கிறார்கள். சந்தோஷப்படுங்கள்.

அமரன்
05-04-2011, 09:09 PM
தாமரை அண்ணா சொன்னதுதான்..

நான் வளர்ந்த சூழல் என்னைத் தடுமாறவைக்கிறது. ஆனாலும் பிள்ளைகள் என்னைப்போல் இல்லாமல் வாழுமிடத்துக்கேற்ப தங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நான் தடையாக இருக்கமாட்டேன்.

நீங்கள் நல்ல தாய்.
எல்லாம் நடக்கும் நல்லதாய்..

உங்களைப் போல இருக்க பலரால் முடிவதில்லை..

படிப்பு விசயத்தில் மட்டுமல்லாமல் பழக்க வழக்கத்திலும் இந்த முரண்பாடு உண்டு. இரு பக்கமும் இரு வேறு சமன்பாடு கொண்டு வாழ்க்கையை நிறுவ முயற்சிப்பதன் விளைவு..

போலிருக்கிறது என்றுதான் தாமரை அண்ணாவாலும் சொல்ல முடிகிறது.. உறுதிபடக் கூற இயலவில்லை. கூறவும் முடியாது.

ஐந்தை வளைக்கலாம் என்ற வாக்கு இங்கே பொய்த்து விடுகிறது. ஐம்பது வளைந்தால்தான் உடைவுக்குத் தடை போட முடியும். (அச்சச்சோ அக்காவின் உண்மையான வயசைச் சொல்லீட்டேனோ:))

ஒப்படைகள் ஏட்டில் இருக்கும் வரை கவலை ரேகை எங்கும் இல்லை.

பா”தை”:icon_b:

கீதம்
05-04-2011, 10:14 PM
உங்கள் மகள் நோக்கில் தெளிவாகத்தான் இருக்கிறார். அவர் அடைய நினைக்கும் கலை, மக்கள் மனதில் தவறு என்று ஊறிப்போன விஷயங்களைப் பற்றி அவர்களைச் சிந்திக்க வைப்பது. இது ஒரு தலைமைப் பண்பு. இதைக் கலையாக மட்டுமே கற்றுக் கொள்ளணும்.

இதை என்னுடைய ப்ராஜக்டாக மட்டுமே பாருங்கள் என்று சொல்லிதான் அவளும் என்னைத் தேற்றுகிறாள். மிகவும் நன்றி தாமரை அவர்களே.

கீதம்
05-04-2011, 10:19 PM
புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தவரே நிகழும், பெரியவர்களின் தவிர்க்க முடியாத தடுமாற்றம்...

எமது பாரம்பரிய கலாச்சார, பண்பாடு
வாழும் நாட்டின் கலாச்சார, பண்பாடு

என்ற இரு வாழ்க்கைச் சூழலை வாழ வேண்டிய நிர்ப்பந்தம், ஒரு குழப்பத்தைப் பெரியோருக்குத் தந்துவிடுகின்றது.

வீட்டினுள்ளே ஒரு வாழ்வும், வெளியே ஒரு வாழ்வும் வாழ வேண்டிய கட்டாய இரட்டை வாழ்க்கை.

இதில், குழந்தைகள் தெளிவாகவே இருக்கின்றார்கள்...

ஐரோப்பிய நாடுகளில்,
வாழும் நாடுகளின் மொழியறிவு பெற்றோரை விடவும் குழந்தைகளிடம் அதிகம் உண்டு.
சரியாகச் சொல்லின் இத்தலைமுறையினரின் கற்றல் நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் அமைந்துவிட்டதால்,
முந்தைய தலைமுறையினரிலும் இத்தலைமுறையினர் மொழியறிவு மிகுந்துள்ளார்கள்.
ஆனாலும், வீட்டினுள், தாய் தந்தையுடன் அவர்களுடைய மொழியறிவுக்கேற்ற வகையில் இயல்பாகவே தாய்மொழியிற் பேசுகின்றார்கள்.
இது சொல்லித் தந்து வந்ததல்ல.
குழந்தைகள் மேல் திணிக்கப்பட்ட இரட்டைக் கலாச்சார, பண்பாட்டு வாழ்க்கைமுறை,
ஒருங்கேயமைந்த ஒரு புது வாழ்க்கை முறையாகக் குழந்தைகளால் வாழப்பட,
பெரியவர்களான நாம்தான் அதனை சரிவரக் கையாள முடியாது குழம்பிப் போகின்றோம்.

அடுத்த தலைமுறையில் இது ஒரு பிரச்சினையாகவே இருக்காது என்பது திண்ணம்.

சரியாகச் சொன்னீர்கள் அக்னி. இரட்டைக்குதிரைச் சவாரி குழந்தைகளுக்கு எளிதில் கைவந்துவிடுகிறது. பெரியவர்கள்தான் இரண்டுங்கெட்டானாய் விழிபிதுங்கி நிற்கிறோம்.

கீதம்
05-04-2011, 10:24 PM
இவையெல்லாம் நாம் நமது வசதியான, வளமையான வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை. அதாவது....பிள்ளைகளைப் பற்றிய பயம். ஆனால் இந்த பயம் தேவையில்லை. தாமரை சொன்னதைப்போல அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். பெற்றோர்கள்தான் குழம்பிப்போகிறார்கள். குழப்பம் தேவையில்லை தங்கையே....

பிள்ளைகள் மிக நன்றாகவே வளருகிறார்கள். தெளிவாய் சிந்திக்கிறார்கள். சந்தோஷப்படுங்கள்.

கருத்துக்கு நன்றி அண்ணா. மூன்று வருடங்களுக்குள் முற்றிலுமாய்த் தங்களுடைய சுற்றுவட்டத்தோடு ஒன்றிவிட்டார்கள். அவர்களுடைய எதிர்காலத்துக்காகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கை இது. அதுவே அதன் விலையாகிப் போகுமோ என்ற பயம்தான் இப்படி எழுதவைக்கிறது.

கீதம்
05-04-2011, 10:35 PM
தாமரை அண்ணா சொன்னதுதான்..நீங்கள் நல்ல தாய்.
எல்லாம் நடக்கும் நல்லதாய்..

உங்களைப் போல இருக்க பலரால் முடிவதில்லை..

படிப்பு விசயத்தில் மட்டுமல்லாமல் பழக்க வழக்கத்திலும் இந்த முரண்பாடு உண்டு. இரு பக்கமும் இரு வேறு சமன்பாடு கொண்டு வாழ்க்கையை நிறுவ முயற்சிப்பதன் விளைவு..

போலிருக்கிறது என்றுதான் தாமரை அண்ணாவாலும் சொல்ல முடிகிறது.. உறுதிபடக் கூற இயலவில்லை. கூறவும் முடியாது.

ஐந்தை வளைக்கலாம் என்ற வாக்கு இங்கே பொய்த்து விடுகிறது. ஐம்பது வளைந்தால்தான் உடைவுக்குத் தடை போட முடியும். (அச்சச்சோ அக்காவின் உண்மையான வயசைச் சொல்லீட்டேனோ:))

ஒப்படைகள் ஏட்டில் இருக்கும் வரை கவலை ரேகை எங்கும் இல்லை.

பா”தை”:icon_b:

நன்றி அமரன் நல்லதாய் மொழிந்ததற்கு.:)

ஐம்பதிலும் வளையத்தான் வேண்டும் என்கிறீர்கள். வளைய முயற்சிக்கிறேன். :icon_b:மன்றத்தின் மணிமுடி
வயசிலோ வணங்காமுடி!
வலதுகால் வைத்து வருவோரை
ஊக்குவித்து இசைபாடும் மகுடி!
இந்த இனியவருக்கு
மரியாதை வழங்காமையே
மரியாதை வழங்கலாம்!

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..

அமரனை இப்படிக் கிண்டல் செய்திருக்கக் கூடாது,,

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று கேட்பார்கள். வயதில் வணங்காமுடி என்றால்

அவருக்கு வளையாத வயது அதாவது ஐம்பதுக்கு மேல வயசு என்று ஆகிறது. பாவம் இன்னும் கல்யாணம் ஆகாத புள்ளை. கொஞ்சமாச்சும் கருணை காட்டுங்கம்மா..

மத்தபடி எல்லாம் சரிதான்.

அன்று சொன்னதற்கு......

ஐம்பது வளைந்தால்தான் உடைவுக்குத் தடை போட முடியும். (அச்சச்சோ அக்காவின் உண்மையான வயசைச் சொல்லீட்டேனோ:))

இன்று பழியா? எப்படியோ நூறு சதம் (ஐம்பதுக்கு ஐம்பது) கணக்கு நேர் செய்யப்பட்டுவிட்டது நம்மிடையே.... :D