PDA

View Full Version : இடம் மாறிய கொடை



M.Jagadeesan
05-04-2011, 02:00 AM
வேலைக்காரி முனியம்மா தலையைச் சொறிந்துகொண்டு அகிலாண்டத்தின் முன்னே வந்து நின்றாள்.

"என்ன முனீமா? தலையைச் சொறியரே!"

"ஒரு 200 ரூவா காசு இருந்தா குடும்மா! பையனுக்கு உடம்புக்கு முடியல! டாக்டர் கிட்ட கூட்டிப்போவணும்"

"காபிப்பொடி வாங்கக்கூடக் காசில்லாம காஞ்சிபோய்க் கிடக்கிறேன். எங்கிட்ட பத்து பைசாக் கூடக் கிடையாது.வேலையைப் பாரு!" என்று கடிந்துகொண்டாள் அகிலாண்டம்.

அகிலாண்டத்தின் வீட்டுவேலையை முடித்துவிட்டு வெளியேறினாள் முனியம்மா. அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பக்கத்து வீட்டுப் பங்கஜம் உள்ளே நுழைந்தாள்.

"வா பங்கஜம்!" என்று வரவேற்ற அகிலாண்டம் பங்கஜத்திற்கு சூடாகக் கும்பகோணம் டிகிரி காப்பிப் போட்டுக்கொடுத்தாள்.

"என்ன பங்கஜம்?" வந்த காரணத்தைக் கேட்டாள் அகிலாண்டம்.

"இந்த மாசம் ஜி.ஆர்.டி நகைக்கடைக்கு 500 ரூபா தவணைப்பணம் கட்டணும். உங்கிட்ட கேட்டுப் போகலாம்ணு வந்தேன். ஆனா பாவம் உன் வீட்டுக்காரருக்கு 5000 ந்தான் சம்பளம். அதான் உங்கிட்ட எப்படிக் கேக்குறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்"

"அதென்ன பங்கஜம் அப்படிச் சொல்லிட்டே! நீ ஆயிரம் கேட்டாலும் என்னால கொடுக்கமுடியும்" என்று சொல்லி 500 ரூபாய் கொண்டுவந்து பங்கஜத்திடம் கொடுத்தாள் அகிலாண்டம். பணத்தைப் பெற்றுக்கொண்ட பங்கஜம் நன்றி சொல்லிவிட்டு தன் வீட்டிற்குப் போய்விட்டாள்.

அன்று மாலை ஐந்து மணி இருக்கும்.

அகிலாண்டத்தின் வீட்டிற்கு வந்த முனியம்மா," பிச்சாத்து காசு 200 ரூவா கேட்டதுக்கு இல்லேன்னு சொல்லிட்டே! பக்கத்து வீட்டு பங்கஜம் மாமிகிட்ட 200 ரூவாதான் கேட்டேன்.மவராசி 500 ரூவா கொடுத்தா! அவ நல்லா இருக்கணும்; அவ புள்ளகுட்டிங்க எல்லாம் நல்லா இருக்கணும்" என்று வாழ்த்தியபடியே வெளியே சென்றாள்.

அதிர்ந்து போனாள் அகிலாண்டம்.(முனியம்மா பங்கஜம் வீட்டிற்கும் வேலைக்காரி)

கீதம்
05-04-2011, 07:05 AM
நல்ல கதை. பாராட்டுகள் ஐயா. பங்கஜம் கொடுத்ததில் உள்நோக்கம் இருக்குமா என்று தெரியவில்லை. முனியம்மாவின் பையன் குணமானால்தான் முனியம்மாவால் தொடர்ந்து வேலைக்கு வரமுடியும் என்று நினைத்திருக்கலாம். அதனால் தன்னிடம் இல்லாவிடினும் இரவல் வாங்கியாவது கொடுத்திருக்கலாம் அல்லது உண்மையிலேயே இரக்கசுபாவத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் அகிலாண்டத்துக்கு மூக்கறுப்புதான். இவரே உதவி நற்பெயரைப் பெற்றிருக்கலாம்.

Nivas.T
05-04-2011, 07:26 AM
நல்லக் கதை

உதவி செய்வது என்று முடிவெடுத்துவிட்டால் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்

சிலருக்கு இது ஒரு குணமாக உள்ளது, அதாவது கொடுத்தபனமோ பொருளோ திருபா வரும் என்று நம்பிக்கை உள்ள இடம்மட்டும் உதவிக்கரம் நீட்டுவார்கள். இது தவறில்லை ஆனாலும் உதவி என்று வருபவர்களின் நிலைமையும், அவர்கள் கேக்கும் உதவி நம்மால் எந்த அளவுக்கு முடியும் எனபதையும் போர்த்தது.

அனால் பிறரது இறக்க குணத்தை தவறாக பயன்படுத்துவோர் நிறைய பெருகிவிட்டனர்.

மிக்க நன்றிங்க

M.Jagadeesan
06-04-2011, 11:20 PM
கீதம், நிவாஸ்.டி. ஆகியோருக்கு நன்றி!