PDA

View Full Version : 30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி?



தங்கவேல்
04-04-2011, 01:30 PM
இது எனது அனுபவத்தில் நான் கண்ட பலன். உடல் எடை அதிகமிருக்கிறது என்று மருத்துவர் சொன்னதும், அதன் தொடர்ச்சியாக கார்போஹைட்ரேட் அதிகம் எடுக்காமல் டயட் உணவினை எடுத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். 86 கிலோ இருந்தேன். தற்போது 56 கிலோ இருக்கின்றேன். உடற்பயிற்சி செய்வது இல்லை. ஆனாலும் உடல் பருமனைக் குறைத்தேன். எப்படி?

நான் தவிர்த்த உணவுகள்
========================
1) பால், தயிர் முற்றிலுமாக தவிர்த்தேன்
2) புளியைத் தவிர்த்தேன்
3) உப்பைக் குறைத்தேன். ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனுக்கும் குறைவான உப்பை பயன்படுத்தினேன்.
4) எண்ணெய் முற்றிலுமாக இல்லாமல் சாப்பிட்டேன்
5) தினம் ஒரு கொடம்புளி கீற்றினை குழம்பில் இட்டு அதைச் சாப்பிட்டேன்
6) இரவில் நான்கு துண்டுகள் பப்பாளி சாப்பிட்டேன்
7) காலையிலும், மாலையிலும் கிரீன் டீ மட்டுமே குடித்தேன்
8) இனிப்பை தொடுவதே இல்லை(எனக்குப் பிடிக்கவே பிடிக்காத சுவை இது)
9) காய்கறிகள் இரண்டு கப் என்றால் அரிசி ஒரு கப் எடுத்தேன்
10) தேங்காயைத் தவிர்த்தேன்
11) கிழங்கு வகைகள், பூமியின் அடியில் விளையும் காய்கறிகள் தவிர்த்தேன்.
12) மட்டன், சிக்கன் தவிர்த்தேன்

சாப்பிட்ட பொருட்கள்
==================

காலை (7.30 மணிக்கு)
==================
கிரீன் டீ ஒரு கப் தினம் தோறும்
தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு
இட்லி என்றால் மூன்று, தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி
சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய், எண்ணெய் சேர்க்காமல் செய்தது)
ஒரு கப் சாதம்(சுடுதண்ணீர் சேர்த்தது) அத்துடன் இரண்டு கப் காய்கறிகள்
மேற்கண்டவற்றில் ஏதாவதொரு உணவு காலையில் எடுத்துக் கொள்வேன்.

பத்து மணிவாக்கில் சில மேரி பிஸ்கட்டுகளுடன் கொஞ்சம் தண்ணீர்

மதியம் ( 12.45க்கு)
================
கீரை, ஒரு கப் சாதம், இரண்டு கப் வெந்த காய்கறிகள், பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு (வாரம் ஒரு தடவை மட்டும்), சாம்பார், குழம்புகள் இவற்றில் காரம் அதிகமிருக்காது. புளிக்குப் பதில் கொடம்புளி பயன்படுத்துவேன். கிழங்கு வகை காய்கறிகளைத் தொடவே மாட்டேன். நாட்டுக்காய்கறிகளுடன் பருப்பு வகைகள் சேர்த்துக் கொண்டேன்.

மாலை (4.00க்கு)
================

ஒரு கப் கிரீன் டீயுடன்,சில மேரி பிஸ்கட்டுகள்


இரவு(7.30க்கு)
===========

தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு
சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய், எண்ணெய் சேர்க்காமல் செய்தது)
அத்துடன் மதியம் மீதமான காய்கறிகள் கொஞ்சம்

படுக்கும் முன்பு
==============
ஐந்தோ அல்லது ஆறோ துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளி

இடையிடையே இரண்டு லிட்டர் தண்ணீர் பருகுவேன்

முக்கியமாக கவனிக்க வேண்டியது நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி இரவு பத்துக்கு தூங்கச் சென்று விட வேண்டும்.

மேற்கண்ட உணவினைச் சாப்பிட்டு வந்தேன். உடல் எடை 56 கிலோ வந்து விட்டது. தற்போது ஒரு மாதம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவேன். அடுத்த மாதம் எண்ணெய் சேர்த்துச் சாப்பிடுவேன். மட்டன், மீன், சிக்கன் மாதமொருமுறைச் சேர்த்துக் கொள்வேன். அவ்வளவுதான் உடல் எடை குறைந்து, உடல் லேசானது போல ஆகி விட்டது.

டாக்டர் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார். உடலுக்குத் தேவையான உணவினை மட்டுமே சாப்பிட்டால் நோய் எதற்கு வருகிறது?

ஜானகி
04-04-2011, 01:55 PM
எளிமையான, பலனுள்ள தகவலுக்கு நன்றி. கொடம்புளி என்பது என்ன / எங்கு கிடைக்கும் ?

தங்கவேல்
04-04-2011, 02:02 PM
கொடம்புளி என்பது கேரளா ஆலப்புழா பக்கம் கிடைக்கும். கேரளா புளி என்றுச் சொல்வார்கள். ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைத்து விடும். 45 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்திய பிறகு நிறுத்தி விட வேண்டும். மேற்கண்ட உணவினைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, கொடம்புளியைத் தவிர்த்து விட வேண்டும்.

Nivas.T
04-04-2011, 03:57 PM
நல்ல தகவலுக்கு நன்றி

முரளிராஜா
05-04-2011, 05:24 AM
பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி

M.Jagadeesan
05-04-2011, 05:40 AM
பயனுள்ள தகவல்தான்; கடைபிடிப்பதுதான் கடினம்.

தங்கவேல்
06-04-2011, 04:27 AM
ஜகதீசன், நாம் சாப்பிடும் உணவுகளில் எது உடம்பிற்கு நல்லது எது கெட்டது என்ற புரிதல் இருந்தால் எதுவும் எளிமைதான். மருத்துவர் சொல்லிய பின்பு உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைபிடிப்பதை விட, முன்னே கடை பிடிக்க ஆரம்பித்தால் உடம்பு நல்ல நிலையில் இருக்குமே?முயற்சித்துப் பாருங்கள்.

உமாமீனா
06-04-2011, 05:23 AM
நல்ல தகவல் தோழரே - முயற்சிக்கிறேன்

jey
06-04-2011, 05:36 AM
மிகவும் பயணுள்ள தகவல் பகிற்ந்தமைக்கு நன்றி நண்பரே

ரங்கராஜன்
06-04-2011, 08:32 AM
தங்கவேலு கலக்கிட்டீங்க போங்க

நானும் இதனை பின்பற்ற போகிறேன்....... நன்றி

ஒரு நாயகன் உதயமாகிறான்......... பாட்டு போடுங்கப்பா...........

அக்னி
06-04-2011, 09:36 AM
நீங்க தவிர்த்த அனைத்தையும் தவிர்க்கிறதுக்கு,
நான் என்னோட நாக்கைத் தவிர்க்கணும்...

ஆனால்,
பட்டினி கிடந்து மெலிந்து வருத்தம் சேர்க்காமல்,
நன்றாகச் சாப்பிட்டபடியே பருமனைக் குறைப்பதுவே சிறந்தது.

ஓவியன்
06-04-2011, 09:53 AM
ஆகா, நம்ம தங்கவேலு அண்ணா சீயான் விக்ரத்துக்கு சாத்தியப்படும் விடயத்தை தனக்கும் சாத்தியப்படுத்தியிருக்கிறாரே...!! :D

வாழ்த்துகள் அண்ணா..!! :)

உணவு கட்டுப்பாட்டு முறைகள் ஒவ்வொருவரது உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும் காரணத்தால் எந்த வித உணவுக்கட்டுப்பாட்டுக்கும் நாம் நம்மை ஈடுபடுத்த முன்னர் நல்லதோர் டயட்டிசியனுடன் கலந்தாலோசித்து விட்டு செய்வது நலம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.



-----------------------------------------------------------------------------------------------------

நன்றாகச் சாப்பிட்டபடியே பருமனைக் குறைப்பதுவே சிறந்தது.

ஆமாம், ஆமாம், நீங்கள் நன்றாக சாப்பிட்ட படியே வேறு ஒருவரின் பருமனைக் குறைக்கலாம். :icon_good:

அக்னி
06-04-2011, 09:57 AM
ஆமாம், ஆமாம், நீங்கள் நன்றாக சாப்பிட்ட படியே வேறு ஒருவரின் பருமனைக் குறைக்கலாம். :icon_good:
ஏதேது... அனுபவமா...
உங்களோட பல்கலை வாழ்க்கையில் ரசிகரும் நீங்களும் ஒன்றாகத்தானே இருந்தீங்க... ???

ஓவியன்
06-04-2011, 10:03 AM
பல்கலை வாழ்க்கையில் ரசிகரும் நீங்களும் ஒன்றாகத்தானே இருந்தீங்க... ???

ஒன்றாகத்தான் இருந்தோம், ஆனா வேறு வேறாகத்தான் சாப்பிடுவோம்..!! :lachen001: :lachen001: :D

Nivas.T
06-04-2011, 10:08 AM
தங்கவேலு கலக்கிட்டீங்க போங்க

நானும் இதனை பின்பற்ற போகிறேன்....... நன்றி

ஒரு நாயகன் உதயமாகிறான்......... பாட்டு போடுங்கப்பா...........

:eek::eek::eek::eek:
என்னத்த பின்பற்றி? :wuerg019:
என்னத்த ஒடம்பக் கொறச்சு?:wuerg019:

இதெல்லாம் நடக்குற கதையா???:confused:

போங்க தம்பி போங்க :rolleyes::rolleyes:

:D:D:D:D

ரங்கராஜன்
06-04-2011, 10:30 AM
:eek::eek::eek::eek:
என்னத்த பின்பற்றி? :wuerg019:
என்னத்த ஒடம்பக் கொறச்சு?:wuerg019:

இதெல்லாம் நடக்குற கதையா???:confused:

போங்க தம்பி போங்க :rolleyes::rolleyes:

:D:D:D:D

விடுங்க தம்பி, இருக்குறவன் வச்சிக்கிறான் இல்லாதவன் வரைஞ்சிக்கிறான்......

ஹெக்ஹே.... நேத்து அடிக்க வரணு சொன்னீங்க...... வரவேயில்லை........

முரளிராஜா
06-04-2011, 10:44 AM
விடுங்க தம்பி, இருக்குறவன் வச்சிக்கிறான் இல்லாதவன் வரைஞ்சிக்கிறான்......

ஹெக்ஹே.... நேத்து அடிக்க வரணு சொன்னீங்க...... வரவேயில்லை........

எத அடிக்க வரேன்னு சொன்னார்:confused:

உமாமீனா
06-04-2011, 10:47 AM
ஹெக்ஹே.... நேத்து அடிக்க வரணு சொன்னீங்க...... வரவேயில்லை........


எத அடிக்க வரேன்னு சொன்னார்:confused:


இங்கேயும் அதே வாட்டர் மேட்டரா????

தங்கவேல்
07-04-2011, 02:54 AM
கார் வைத்திருந்தால் 50,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை சர்வீஸ் செய்கிறோம். இரண்டு சக்கர வாகனம் வைத்திருந்தால் சர்வீஸ் செய்கிறோம். அதே போல அனைத்துப் பொருட்களையும் துடைத்து, தூய்மைப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால் உடம்பை மட்டும் ஏன் கவனிக்க மறக்கிறோம்? நம் உடம்பிற்கு இன்பம் தரத்தான் மற்ற பொருட்களை வாங்குகிறோம். அந்த பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் நம் உடலுக்கு கொடுக்க மறுக்கிறோம்? அதற்கு பெயர்தான் மடத்தனம் என்பது.

மனித உடம்பிற்கு என்று சில உணவுப் பொருட்கள் மட்டுமே ஏதுவானது. அக்காலப் படங்களைப் பார்த்தீர்கள் என்றால் பழங்களையே தட்டு நிறைய கொண்டு வந்து வைப்பார்கள். அதையே ஹீரோ சாப்பிடுவார். பழ உணவுகள் மட்டுமே மனித உடம்புக்கு எந்த வித எதிர் விளைவுகளையும் கொடுக்காத உணவு. பிற உணவுகள் அனைத்தும் உடம்பிற்கு கேடுகளை வரவைக்கும். அது காய்கறிகள் என்றாலும் கூட.

உடம்பிற்கு ஒவ்வாத உணவுகள் உண்ணப்படுகையில், உடம்பு அதை கிரகிக்க தன் சக்திகள் அனைத்தையும் செலவழிக்குமாம். பெரும் போராட்டத்தினை செய்து உடம்பைத் தன் பழைய நிலைக்கு கொண்டு வருமாம். இப்படி தினம் தோறும் போராட்டங்களை தொடரும் உடம்பின் பாகங்கள் ஒரு காலத்தில் ஓய்வடையும் போது, நோய்கள் எட்டிப்பார்க்கின்றன.

உங்களுக்குத் தெரியுமா? அரிசி நமக்கு தேவையற்ற உணவு. ஆனால் நாம் அதை அதிகம் உண்கிறோம். ஜப்பானியர்களைப் பாருங்கள். ஒரு கை பிடி அளவு சாதத்தைத்தான் சாப்பிடுவார்கள். அவர்களின் புத்திசாலித்தனத்திற்கு எதிரே, வாழை இலையில் கோபுரம் கட்டி, வித விதமான குழம்புகள், பொறியல்களுடன் சாப்பிடும் நம் புத்திசாலித்தனம் போட்டி போட முடியுமா?

ஒவ்வொரு வகை உடம்பிற்கும் உணவுகள் வேறுபடும் என்பதெல்லாம் சும்மா. எல்லா உடம்பிற்கு ஏற்ற உணவு பழங்கள். முடியாவிட்டால் காய்கறிகள், கீரைகள். சிக்கன், மட்டன், மீன் போன்ற உணவுகள் உடம்பினைக் கெடுக்கும் விஷங்கள். அது விஷமென்று தெரியாமலே உண்ணும் நாமெல்லாம் படித்தவர்களா என்ன?

அமரன்
07-04-2011, 09:27 PM
அனுபவ மருத்துவம் அருமை!

ஆனால் இந்தளவுக்கு நேரம் வசதிப்படுவது எனக்குக் கடினம்.

தங்கவேல்
08-04-2011, 07:19 AM
நேரத்தை மாற்றிக் கொள்ளுங்கள் அமரன். நம் உடம்பிற்கு எந்த உணவு நோய்களைத் தராதோ அந்த உணவினைச் சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் சாப்பிட வேண்டுமோ அப்போதெல்லாம் சாப்பிடலாம். எந்த உணவுகள் உடலுக்கு கேடு என்பதை அறிந்து கொண்டால் போதும்.

தமிழ்ச்சூரியன்
31-05-2011, 09:45 AM
எடையைக் குறைப்போருக்கு மிகவும் பயனுள்ள தகவல்.

aren
31-05-2011, 10:42 AM
நானும் என்னென்னவோ யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன், ஆனால் எதுவுமே இதுவரை நடைமுறைப் படுத்தமுடியவில்லை.

முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது.

உங்கள் வெற்றி எங்களுக்கும் ஒரு ஊந்துகோலாக இருக்கட்டும். முயற்சி செய்கிறேன்.

ஷீ-நிசி
31-05-2011, 02:34 PM
சூப்பர் நண்பரே...

அந்த பவுடர், இந்த பவுடர்னு கண்ட கண்ட வழிமுறைகளை கடைபிடிக்காமல் உணவு பழக்கத்தின் மூலம் குறிப்பிட்ட மாற்றத்தை கண்டிருக்கிறீர்கள்... உடற்பயிற்சியையும் கொஞ்சம் இதில் இணைத்துக்கொள்வது இன்னும் கூடுதல் நன்மை தரும் என்று எண்ணுகிறேன்.

நன்றி நண்பரே.. பகிர்ந்தமைக்கு!

சிவா.ஜி
31-05-2011, 04:33 PM
இது எதுவுமே இல்லாமல்....கடந்த பத்து வருடங்களாக ஒரே எடையில் இருக்கிறேன்.

எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்....ஆனால்....அளவோடு. சிக்கனா இரண்டு சிறிய துண்டு, மட்டனா....அதே....மற்றவையும் அப்படியே.....கூடவே தினம் 45 நிமிடம் உடற்பயிற்சி. காலையில் வேகமான நடையில் நாலு கிலோமீட்டர் நடை.
(ஆனால் ஸ்வீட் இல்லை)

எப்போதும் ஃபிட்.

aren
01-06-2011, 02:47 AM
இது எதுவுமே இல்லாமல்....கடந்த பத்து வருடங்களாக ஒரே எடையில் இருக்கிறேன்.



உங்கள் வீட்டில் இருக்கும் எடைபார்க்கும் மிஷினை உடனே மாற்றுங்கள். அது வேலை செய்யவில்லை என்று தெரிகிறது.

பால்ராஜ்
02-06-2011, 03:33 AM
எடையைக் குறைக்கிறோமோ இல்லையோ..
கூடாமல் பார்த்துக் கொள்வதே ஒரு வெற்றிதான் இல்லையா?

சொ.ஞானசம்பந்தன்
02-06-2011, 09:22 AM
விடா முயற்சி செய்து பருமனைக் குறைத்தது பெரிதும் பாராட்டுக்கு உரிய செய்தியே.

மச்சான்
02-06-2011, 02:44 PM
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே...!

Ravee
02-06-2011, 02:49 PM
உங்கள் வீட்டில் இருக்கும் எடைபார்க்கும் மிஷினை உடனே மாற்றுங்கள். அது வேலை செய்யவில்லை என்று தெரிகிறது.

:lachen001: :D :lachen001:

அவர் எங்கே ஒழுங்காக வீட்டில் இருக்கிறார் அண்ணா ... காடாறு மாதம் நாடாறு மாதம் ... எங்க அண்ணி நல்லா சமையல் செய்து போட்டு மனிதரை தேத்தி அனுப்பினால் , இவர் சொந்த சமையல் சாப்பிடமுடியாமல் இளைத்து போனால் நாம் என்ன செய்வது .... :lachen001:

சிவா.ஜி
02-06-2011, 03:13 PM
ரவீ எங்க போனாலும் யாரோ சமைச்சதைத்தான் சாப்பிட வேண்டியிருக்கு....இங்க கூட ஒரு நேரத்துக்கு 50 வெரைட்டி இருக்கு...ஆனா...எதை சாப்பிடனும், எவ்வளவு சாப்பிடனும்ன்னு நாமதானே முடிவு பண்ணனும்...சாப்பாட்டை நாமதான் சாப்பிடனும்....சாப்பாடு நம்மை சாப்பிடக்கூடாது....அதனாலத்தான் இப்பவும் நான் இருக்க வேண்டிய எடையிலிருந்து ஒரு கிலோ குறைவாவே எப்பவும் இருக்கேன்.

ஆரென்...எடை பாக்குற மிஷினை அப்பப்போ காலிப்ரேட் பண்ணிக்கிட்டே இருக்கேன்....என்னை நானே பண்ணிக்கற மாதிரி...ஹா...ஹா...

ஆனாலும் தங்கவேல் அவர்களின் உறுதியை நினைத்து வியக்கிறேன்.....பாராட்டுக்கள் தங்கம்.

Ravee
02-06-2011, 04:02 PM
ரவீ ....இங்க கூட ஒரு நேரத்துக்கு 50 வெரைட்டி இருக்கு...ஆனா...எதை சாப்பிடனும், எவ்வளவு சாப்பிடனும்ன்னு நாமதானே முடிவு .

உண்மைதான் அண்ணா , என் அனுபவத்தில கூட இது போலத்தான் ...கம்பெனி தர சாப்பாட்டில பர்க்கருக்கு நடுவில இருக்கிறது "ஆ" வா இல்லை "மா" வான்னு தெரியாமல் வெறும் வாழை பழத்தை சாப்பிட்டு காலம் தள்ளி இருக்கேன்.... :lachen001:

sunson
09-06-2011, 02:50 PM
கேரள நண்பர்கள், திருவிதாங்கூர்,மத்திய கேரள நண்பர்கள் அதிகமா மீன் சமையலுக்கு கொடம்புளியை மட்டுமே பயன்படுத்துவதை அவதானித்திருக்கின்றேன். கொடம்புளியில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.
பகிர்விற்கு நன்றி.

indiran
12-07-2011, 08:52 PM
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே

jayanth
08-02-2012, 05:16 AM
:icon_b:நன்றி....பல உங்களுடய உபயோகமான தகவலுக்கு. என்னுடைய எடையும் சிறிது அதிகம்தான்.....(ம் 100 KGs). உங்கள் முறைப்படி குறைக்க முயற்சிக்கின்றேன்:icon_b:

யவனிகா
08-02-2012, 06:18 AM
:icon_b:நன்றி....பல உங்களுடய உபயோகமான தகவலுக்கு. என்னுடைய எடையும் சிறிது அதிகம்தான்.....(ம் 100 KGs). உங்கள் முறைப்படி குறைக்க முயற்சிக்கின்றேன்:icon_b:

ரொம்பவே சிறிது தான்...:icon_b::icon_b::icon_b:

rajesh0682
02-03-2012, 06:38 AM
nantri

aren
02-03-2012, 07:18 AM
nantri

ராஜேஷ் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களால் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பங்களிக்க முடியும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
02-03-2012, 09:53 AM
நல்ல தகவல். மிகவும் நன்றி. நான் கடந்த ௨௨ வருடங்களாக சக்கரை வியாதியால் அவதிப்படுகிறேன். கூடவே தைராய்டு வேறு. அறுபது கிலோ இருக்க வேண்டிய எனது எடை இப்போது தொன்நூறு கிலோ. கூடவே, மூட்டுவலி, கைகால் வலி, இடுப்புவலி என்று பல உபாதைகள். மூன்று இன்சுலின் ஊசி ஒரு நாளைக்கு. நீங்கள் சொல்லியபடி எல்லாம் டயட் செய்து பார்த்தாகி விட்டது. ஆயினும் எந்த முன்னேற்றமும் இல்லை. என் நிலைமை இப்படி :redface: