PDA

View Full Version : மனசரோவரில் விடிந்த இன்றைய பொழுது



simariba
04-04-2011, 02:21 AM
மிகுந்த களைப்பில்
தூங்கியிருந்தேன் நேற்றிரவு
மூடியிருந்த கண்களின் மேல்
மெல்லிய வெளிச்சம்
விடிந்து விட்டதா யோசனையுடன்
கண்களை திறக்க
யத்தனித்த வினாடி
முகத்தின் மேல் சிலு சிலு காற்று
சுற்றிலும் பனிபடர்ந்த குளுமை
விழித்து பார்த்தால்
சுற்றிலும் வெள்ளி நிறத்தில்
பனி மலைகள்
கிழக்கில் எட்டிப்பார்க்கும்
கதிரவன்
எழுந்து நடந்தேன்
பக்கத்தில் தெள்ளிய சுத்தமான
தண்ணீர் அல்ல ஏரி
எவ்வளவு சுத்தம் இந்த தண்ணீர்
இது எந்த இடம்
சிந்திக்கவேயில்லை மனம்
எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை
கொஞ்சமும் சந்தேகமில்லாமல்
அந்த இடத்தின் புதுமையை
முழுதாக அள்ளிப்பருகிய வேளை
பறவைகளின் சத்தம்
ரம்மியமாக காதின் ஓரம்
இந்த இடத்தில்
பறவைகளின் சத்தம்
எப்படி?
இமய மலையில்
கைலாசத்திற்கு அருகிலிருக்கும்
மனசரோவர் ஏரியல்லவா இது.
மறுபடியும் கண்விழிக்க
வெப்ப மிகுதியால் காலையில்
ஆன் செய்த ஏஸி
முகத்தில் சிலு சிலுக்க
நேற்றிரவு வைத்த அலார்ம்
பறவைகள் ஓலியுடன்
காதில் விழ
சற்று முன் கண்டது கனவு என்று
நம்ப முடியாத பிரம்மிப்பில்
இன்னும் நான்.

Nivas.T
04-04-2011, 05:59 AM
கவிதை அழகுங்க

பாராட்டுகள்

ஆனால் கனவில் மானசரோவர் ஏரி வந்தது ஏன் என்றுதான் புரியவில்லை? :confused::confused:

simariba
04-04-2011, 07:10 AM
நன்றி நிவாஸ்!

அக்னி
04-04-2011, 12:10 PM
இன்று,
கனவில் பசுமை கண்ட
ஏக்கம்...

நாளை,
கனவிலாவது பசுமை காணலாமா
என்ற ஏக்கம்...

அதற்குப் பின்...
கனவில்லாமல் ஓர் வினா...
பசுமையா... அப்படியென்றால்..?

*****
அதுசரி...
இப்பிடி ஏ.சி. போட்டு, பறவைச் சத்தத்தில் அலாரம் வைத்து விழித்துவிடுவீர்களா...

பரவை முனியம்மா சகட்டுமேனிக்கு ஏசிற மாதிரி அலாரம் அடிச்சாலும்,
நாம தூங்குகின்ற கும்பா பரம்பரையாக்கும்...

முரளிராஜா
05-04-2011, 05:23 AM
கவிதை அருமை வாழ்த்துக்கள்

கீதம்
09-04-2011, 12:36 AM
மனசோரத்தில் முடிந்த ஆசைகள்
நிசவாழ்வில் முடியா ஆசைகள்
மகத்தான நேரம் பார்த்து எழுந்தது
மனசரோவரின் விடிகாலைப்பொழுதாய்!

ஆழ்மன ஏக்கத்தொகுப்பு
அழகிய கவியென கையளிப்பு!

பாராட்டுகள் அபி.

இளசு
10-04-2011, 12:26 AM
அழகான கனவை அழகான கவிதையாய்ச் சொன்னீர்கள். பாராட்டுகள்.


( ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால், சீனாவில் இருக்கும் மானசரோவர் செல்ல அவ்வரசு உதவித்தொகை அளிக்குமாம் - வாக்குறுதி கேட்டு வந்த கனவோ?!!!!)

simariba
11-04-2011, 04:04 AM
நன்றி அக்னி! அதற்குத் தான் வாரம் ஒரு முறையாவது கட்டாயமாக ஏதேனும் ஒரு இயற்கை இடத்திற்கு சென்று பசுமையை ஒரு வாரம் தாக்கு பிடிக்குமாறு அள்ளி மனதிற்குள் அடைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்.



இன்று,
கனவில் பசுமை கண்ட
ஏக்கம்...

நாளை,
கனவிலாவது பசுமை காணலாமா
என்ற ஏக்கம்...

அதற்குப் பின்...
கனவில்லாமல் ஓர் வினா...
பசுமையா... அப்படியென்றால்..?

*****
அதுசரி...
இப்பிடி ஏ.சி. போட்டு, பறவைச் சத்தத்தில் அலாரம் வைத்து விழித்துவிடுவீர்களா...

பரவை முனியம்மா சகட்டுமேனிக்கு ஏசிற மாதிரி அலாரம் அடிச்சாலும்,
நாம தூங்குகின்ற கும்பா பரம்பரையாக்கும்...

simariba
11-04-2011, 04:13 AM
:)நன்றி முரளி ராஜா!

ஓஹோ இது தான் காரணமா? முன்பு ஒரு முறை நேஷனல் ஜியோகரேபிக்கில் இந்த ஏரியை பார்த்தபோது குழப்பமாக என்னவோ தோன்றியது. :) நன்றி கீதம்!

:)நன்றி இளசு!