PDA

View Full Version : புறக்கணிப்பு



கீதம்
03-04-2011, 09:51 PM
புறக்கணிப்புகள் எனக்குப் புதிதில்லை.
புறக் கணிப்புகளைக் கொண்டு
அகக் கணிப்புகளையும் அறிவேன்.
புறக்கணிப்பு புறப்பட்டுவந்த
புறம் மட்டுமே புதிது.
புதிதாய் நானும் கற்றேன்.
புறக்கணிப்புகளைப் புறக்கணிக்க....

M.Jagadeesan
04-04-2011, 01:36 AM
புறக்கணிப்புகள் எனக்குப் புதிதில்லை.
புறக் கணிப்புகளைக் கொண்டு
அகக் கணிப்புகளையும் அறிவேன்.
புறக்கணிப்பு புறப்பட்டுவந்த
புறம் மட்டுமே புதிது.
புதிதாய் நானும் கற்றேன்.
புறக்கணிப்புகளைப் புறக்கணிக்க....

காய்களைப் புறக்கணித்தல் நல்லதுதான் நம்கையில்
வாய்ஊறும் தேன்கனிகள் வகைவகையாய் கிடைத்திட்டால்
நோய்களை உண்டாக்கும் தீயவற்றைப் புறக்கணித்தால்
பாயிலே படுக்கின்ற துன்பந்தான் வந்திடுமோ?
வாயால் பிறர்சொல்லும் வசவுகளைக் கேளாமல்
"நாய்கள் குரைக்கின்றன" எனச்சொல்லிப் புறக்கணிப்பீர்!
தாயொருத்தி ஈன்றெடுத்த தன்மகவைப் புறக்கணித்தால்
"பேய் இவள்" எனச்சொல்லி இவ்வுலகம் புறக்கணிக்கும்!

வழக்கமான கவிதைகளைப் புறக்கணித்து புதுக்கவிதை தந்த கீதத்திற்கு நன்றி!

முரளிராஜா
04-04-2011, 02:24 AM
புறக்கணிப்புகளைப் புறக்கணித்தேன்
நானும் நேற்றுவரை
இன்றைய புறக்கணிப்பு
கீதத்தால் என்பதால்
என் கொள்கையை
புறக்கணித்தேன்

புறக்கணிப்பு
கவிதைக்கான
தலைப்பு என்பதால்
வாசித்தேன்
நம் நட்ப்புக்கான
முடிவாய் இருந்தால்
யாசித்திருப்பேன்
உம்மை பலமுறை
யோசிக்க சொல்லி

simariba
04-04-2011, 02:28 AM
புறக்கணிப்புகள் எனக்குப் புதிதில்லை.
புறக் கணிப்புகளைக் கொண்டு
அகக் கணிப்புகளையும் அறிவேன்.
புறக்கணிப்பு புறப்பட்டுவந்த
புறம் மட்டுமே புதிது.
புதிதாய் நானும் கற்றேன்.
புறக்கணிப்புகளைப் புறக்கணிக்க....

அருமை கீதம்! நல்ல நேரத்தில் நல்ல அறிவுறை! பல சமயம் என் குழப்பங்களுக்கு இது போல் கவிதைகளே பதில் தருகிறது. வாழ்த்துக்கள்.

Nivas.T
05-04-2011, 07:09 AM
புறக்கணிப்பு என்னும் பெயரால்
புறந்தள்ளப் பார்த்தாலும்
காரியங்களை மட்டும்தான் முடிகிறது
நினைவுகளை அல்ல
நிகழ்வுகளை மட்டும்தான் முடிகிறது
அதுவும் நிஜமல்ல எனில்
புறக்கணிப்பு என்பதுதான் என்ன?
புறக்கணிக்க போவது எதை?
புறக்கணிக்க முடிவது எது?


உங்கள் கவிதைக்கு காரணம் புரியாவிட்டாலும்
கருத்து மிக அருமை
கவிதை மிக அழகுங்க

கீதம்
05-04-2011, 07:23 AM
காய்களைப் புறக்கணித்தல் நல்லதுதான் நம்கையில்
வாய்ஊறும் தேன்கனிகள் வகைவகையாய் கிடைத்திட்டால்
நோய்களை உண்டாக்கும் தீயவற்றைப் புறக்கணித்தால்
பாயிலே படுக்கின்ற துன்பந்தான் வந்திடுமோ?
வாயால் பிறர்சொல்லும் வசவுகளைக் கேளாமல்
"நாய்கள் குரைக்கின்றன" எனச்சொல்லிப் புறக்கணிப்பீர்!
தாயொருத்தி ஈன்றெடுத்த தன்மகவைப் புறக்கணித்தால்
"பேய் இவள்" எனச்சொல்லி இவ்வுலகம் புறக்கணிக்கும்!

வழக்கமான கவிதைகளைப் புறக்கணித்து புதுக்கவிதை தந்த கீதத்திற்கு நன்றி!

புறக்கணிக்க இயலா தெளிவுரை. மிகவும் நன்றி ஐயா.

கீதம்
05-04-2011, 07:26 AM
புறக்கணிப்புகளைப் புறக்கணித்தேன்
நானும் நேற்றுவரை
இன்றைய புறக்கணிப்பு
கீதத்தால் என்பதால்
என் கொள்கையை
புறக்கணித்தேன்

புறக்கணிப்பு
கவிதைக்கான
தலைப்பு என்பதால்
வாசித்தேன்
நம் நட்ப்புக்கான
முடிவாய் இருந்தால்
யாசித்திருப்பேன்
உம்மை பலமுறை
யோசிக்க சொல்லி

நட்பையெல்லாம் யாராவது புறக்கணிப்பாங்களா? புறக்கணிப்பவர்களையும் புறக்கணிக்கமாட்டேன். அவர்களது புறக்கணிப்புகளைத்தான் புறக்கணிக்க முயல்வேன்.

நல்லாவே குழப்புறேனா? நீங்க மட்டும்? :D

கீதம்
05-04-2011, 07:27 AM
அருமை கீதம்! நல்ல நேரத்தில் நல்ல அறிவுறை! பல சமயம் என் குழப்பங்களுக்கு இது போல் கவிதைகளே பதில் தருகிறது. வாழ்த்துக்கள்.

என் மனத்தெளிவு உங்களுக்கு ஒரு தெளிவான மனநிலையைத் தந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அபி.

கீதம்
05-04-2011, 07:31 AM
புறக்கணிப்பு என்னும் பெயரால்
புறந்தள்ளப் பார்த்தாலும்
காரியங்களை மட்டும்தான் முடிகிறது
நினைவுகளை அல்ல
நிகழ்வுகளை மட்டும்தான் முடிகிறது
அதுவும் நிஜமல்ல எனில்
புறக்கணிப்பு என்பதுதான் என்ன?
புறக்கணிக்க போவது எதை?
புறக்கணிக்க முடிவது எது?


உங்கள் கவிதைக்கு காரணம் புரியாவிட்டாலும்
கருத்து மிக அருமை
கவிதை மிக அழகுங்க

கவிதைக்கு காரணமெல்லாம் எதுவுமில்லை, நிவாஸ். தோன்றியது, எழுதினேன். :) பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.

ஆதவா
05-04-2011, 10:04 AM
புறக்கணிப்பு:

சிலசமயம் கேலியான
ஜாலியான
ஆபாசமான புறக்கணிப்புகள்
வரும்பொழுதெல்லாம்
தலையிலடித்துக் கொள்கிறேன்
ஏன் தான் பெண்ணாகப் பிறந்தோமென!!

ஹி ஹிஹி... சும்மா எழுதிப் பார்த்தேன்!!!

கீதம்
05-04-2011, 10:07 AM
புறக்கணிப்பு:

சிலசமயம் கேலியான
ஜாலியான
ஆபாசமான புறக்கணிப்புகள்
வரும்பொழுதெல்லாம்
தலையிலடித்துக் கொள்கிறேன்
ஏன் தான் பெண்ணாகப் பிறந்தோமென!!

ஹி ஹிஹி... சும்மா எழுதிப் பார்த்தேன்!!!

புறக் கணிப்புகளைச் சொல்றீங்களோ? நல்லாத்தான் இருக்கு.... :)

அக்னி
05-04-2011, 01:07 PM
புறக் கணிப்பில்
புறக்கணிப்போரைப்
புறக் கணிக்காமலே
புறக்கணிக்கின்றேன்...

பின்னூட்டங்கள் சிறப்பாக, இத்திரி ஒளிர்கின்றது...
அனைவருக்கும் பாராட்டுக்கள்...

அமரன்
05-04-2011, 08:30 PM
புறக்கணிப்புகள் புறம்காட்டுவது
புறக்கணிப்புகளிடம்தான்.

நல்லாத்தான் இருக்கு.

புறக் கணிப்புகள் கொண்டு
புறக்கணிப்புகளைக்
கணிக்காத வரையில்..

கீதம்
07-04-2011, 02:10 AM
புறக் கணிப்பில்
புறக்கணிப்போரைப்
புறக் கணிக்காமலே
புறக்கணிக்கின்றேன்...

பின்னூட்டங்கள் சிறப்பாக, இத்திரி ஒளிர்கின்றது...
அனைவருக்கும் பாராட்ட்குக்கள்...

நன்றி அக்னி.

புறக்கணிப்பைப் புறக்கணிக்காது கண்டுகொண்டவர்களையும் கண்டுகொண்ட உங்களுக்கு நன்றி.:)

கீதம்
07-04-2011, 02:12 AM
புறக்கணிப்புகள் புறம்காட்டுவது
புறக்கணிப்புகளிடம்தான்.

நல்லாத்தான் இருக்கு.

புறக் கணிப்புகள் கொண்டு
புறக்கணிப்புகளைக்
கணிக்காத வரையில்..

சரியா சொன்னீங்க அமரன். நன்றி.

கௌதமன்
30-06-2011, 05:20 PM
புறக்கணிப்புகள் எனக்குப் புதிதில்லை.
புறக் கணிப்புகளைக் கொண்டு
அகக் கணிப்புகளையும் அறிவேன்.
புறக்கணிப்பு புறப்பட்டுவந்த
புறம் மட்டுமே புதிது.
புதிதாய் நானும் கற்றேன்.
புறக்கணிப்புகளைப் புறக்கணிக்க....

தயவு செய்து என்னை புறக்கணிங்கள்
நீங்கள் என்னில் கவனம் வைக்கும் போதெல்லாம்
நான் என் சுயத்தை இழக்கிறேன்
புகழ் வெளிச்சம் பாய்ந்து பாய்ந்து
என் இயல்பு நிலை இருளாகி விட்டது
உங்கள் அங்கீகரிப்புகளுக்காக
என் முகமூடி கழற்றப்ப்டாமல் இருக்கிறது
கவனிக்கப் படுகிறோம் என்பதாலாயே
நல்லவனாய் நடித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது
அங்கீகரிப்பின் கூச்சத்தை விட
புறக்கணிப்பின் துயரம் சுகமானது
தயவு செய்து என்னை புறக்கணிங்கள்

innamburan
30-06-2011, 09:32 PM
சற்றே வித்தியாசமான, திரும்பிப்பார்க்கவைக்கும் சிந்தனை. யான் நோக்கும் முறை வேறு. உன் கவனம் என்னை ஈர்க்காது. உன் கவனமின்மை எனக்கு பொருட்டல்ல. நான் நானே; அதுவே போதும்.

கீதம்
30-06-2011, 10:35 PM
தயவு செய்து என்னை புறக்கணிங்கள்
நீங்கள் என்னில் கவனம் வைக்கும் போதெல்லாம்
நான் என் சுயத்தை இழக்கிறேன்
புகழ் வெளிச்சம் பாய்ந்து பாய்ந்து
என் இயல்பு நிலை இருளாகி விட்டது
உங்கள் அங்கீகரிப்புகளுக்காக
என் முகமூடி கழற்றப்ப்டாமல் இருக்கிறது
கவனிக்கப் படுகிறோம் என்பதாலாயே
நல்லவனாய் நடித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது
அங்கீகரிப்பின் கூச்சத்தை விட
புறக்கணிப்பின் துயரம் சுகமானது
தயவு செய்து என்னை புறக்கணிங்கள்

இப்படியும் சொல்லலாமோ என்று ஏங்கவைக்கும் தவிப்பு! சில சமயங்களில் நீங்கள் சொல்வது போலத்தான் அங்கீகாரங்களை விடவும் புறக்கணிப்புகளே அமைதி தருகின்றன. மகிழ்வோடு நன்றி கூறுகிறேன், கெளதமன்.


சற்றே வித்தியாசமான, திரும்பிப்பார்க்கவைக்கும் சிந்தனை. யான் நோக்கும் முறை வேறு. உன் கவனம் என்னை ஈர்க்காது. உன் கவனமின்மை எனக்கு பொருட்டல்ல. நான் நானே; அதுவே போதும்.

தங்கள் கவனத்தில் ஈர்க்கப்பட்டது புறக்கணிப்பு செய்த பாக்கியம். மிகவும் நன்றி ஐயா.

muthuvel
02-07-2011, 10:41 AM
மூடநம்பிக்கை

கிடா வெட்டி படையல் வைத்து ,
மொட்டை தலையில் தேங்காயை உடைத்து ,
முடியை காணிக்கை ஆக்கி,
கல்லும், முள்ளும் கடந்து மலை உச்சியை அடைந்து ,
ஆத்தாளுக்கு கூழ் ஊற்றி,
கலச கோபுரத்தில் கும்பாபிஷேகம் செய்து,
மனிதர்களை கடவுளாக வழிபட்டு ,
வடம் பிடித்து தேர் இழுத்து,
எல்லாமும்தான் செஞ்சாச்சு ,

மனிதனிடையே ,
இன்னும் துயரம்தான் தொடருதப்பா,

கலியுக காலம் என்று ,
கருணை அற்றோர் கருதிடவே ,
இன்று , இறைவன் கூட இரக்க மில்லாதவனாக மாறிவிட்டான்,
ஏளனமாக சிரிக்கின்றான் எங்களை பார்த்து...........

ஜானகி
02-07-2011, 03:31 PM
மூடநம்பிக்கை

கிடா வெட்டி படையல் வைத்து ,
மொட்டை தலையில் தேங்காயை உடைத்து ,
முடியை காணிக்கை ஆக்கி,
கல்லும், முள்ளும் கடந்து மலை உச்சியை அடைந்து ,
ஆத்தாளுக்கு கூழ் ஊற்றி,
கலச கோபுரத்தில் கும்பாபிஷேகம் செய்து,
மனிதர்களை கடவுளாக வழிபட்டு ,
வடம் பிடித்து தேர் இழுத்து,
எல்லாமும்தான் செஞ்சாச்சு ,

மனிதனிடையே ,
இன்னும் துயரம்தான் தொடருதப்பா,

கலியுக காலம் என்று ,
கருணை அற்றோர் கருதிடவே ,
இன்று , இறைவன் கூட இரக்க மில்லாதவனாக மாறிவிட்டான்,
ஏளனமாக சிரிக்கின்றான் எங்களை பார்த்து...........

எப்படியோ... இறைவனைப் பார்த்துவிட்டாயே...இனி நல்லகாலம்தான்...அவன் சிரிப்பில் ஏழையின் முகம் கண்டு உதவிக் கரம் நீ நீட்டினால்...!

Ravee
03-07-2011, 12:13 AM
புறக்கணிப்புகள் எனக்குப் புதிதில்லை.
புறக் கணிப்புகளைக் கொண்டு
அகக் கணிப்புகளையும் அறிவேன்.
புறக்கணிப்பு புறப்பட்டுவந்த
புறம் மட்டுமே புதிது.
புதிதாய் நானும் கற்றேன்.
புறக்கணிப்புகளைப் புறக்கணிக்க....

புறக்கணிப்பை பற்றி புது பாடம் கற்றேன்
அய்யகோ தேர்வில் அது புறக்கணிக்கப்பட்டது
கற்றது தேர்வுக்கு அல்ல வாழ்க்கைக்கு என்றெண்ணி
புறக்கணிப்புகளை புறம் தள்ள புது ஒளி பிறந்தது வாழ்வில்