PDA

View Full Version : தவிர்க்க நினைக்கும் கணங்கள்....

Nivas.T
03-04-2011, 04:35 PM
கணப்பொழுதில் கவர்ந்துவிட்ட இனமொன்று

சலனம் காட்டி சட்டென்று கடந்து சென்றுவிட

பதிந்துவிட்டது பசுமரத்து ஆணியைப்போல்
பற்றிக்கொண்டது பகீரென்று பரவசம்

எங்கிருந்தோ எரிபொருளை ஏற்றிவந்து
தெளித்துவிட்டு போனது வளைவின் நினைவுகள்

ஆனந்தம் கொடுத்தாலும் அனலாய் வீசியது
சுவாலை சுட்டெரித்தது, கனலாய் கழிந்தது கணங்கள்

நினைவுகளை திருப்பமுயன்றும் கலைக்க முயன்றும்
தொட்டுவிட்டது தோல்வியைத்தான் தவிர
வேறொன்றும் இல்லை

ஆட்டிவைத்ததை அணைக்கத்தான் முடியவில்லை
அடக்கவாவது முடிவு செய்து முயன்று

இயற்கையின் கீறல் வழி தெளித்துவைத்து
தணிக்க முயன்று தணித்ததாய் தோன்றினாலும்

எப்பொழுது வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளும்
பக்குவத்தோடு பயமுறுத்தி வருகிறது

தவிர்க்க நினைக்கும் கணங்கள்

த.ஜார்ஜ்
03-04-2011, 04:43 PM
வளைவுகள் காட்டி கவர்ந்தது யார்? வீட்டுக்குத் தெரியுமா?

Nivas.T
03-04-2011, 05:03 PM
வளைவுகள் காட்டி கவர்ந்தது யார்? வீட்டுக்குத் தெரியுமா?

நமக்குத்தான் அந்தப் பிரச்சனையே இல்லையே:D:D:D:D

கீதம்
03-04-2011, 09:44 PM
மிகவும் தேறிவிட்டீர்கள். கவிதை அநாயாசமாக வருகிறதே.... அதைச் சொல்கிறேன். பாராட்டுகள் நிவாஸ்.

simariba
04-04-2011, 02:19 AM
ரொம்ப நல்லாருக்கு கவிதை! வாழ்த்துக்கள் நிவாஸ்.

உமாமீனா
04-04-2011, 02:57 AM
சபாஷ் அருமை தோழரே - உங்களின் தவிர்க்க நினைக்கும் கணங்கள்

Nivas.T
04-04-2011, 05:35 AM
மிகவும் தேறிவிட்டீர்கள். கவிதை அநாயாசமாக வருகிறதே.... அதைச் சொல்கிறேன். பாராட்டுகள் நிவாஸ்.

எல்லாம் மன்றத்தினால் தான்

நான் இன்னும் தேறாத விசயங்கள் பல
நானும் கவிதை வரைவதைத்தான் சொல்கிறேன்:D:D:D:D:D:D

பின்னூட்டத்திற்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிங்க......

Nivas.T
04-04-2011, 05:38 AM
ரொம்ப நல்லாருக்கு கவிதை! வாழ்த்துக்கள் நிவாஸ்.

வாழ்த்துகளுக்கு
மிக்க நன்றிங்க சிமரிபா

உங்களது கவிதைகளும் எனக்கு முன்மாதிரிதான்

Nivas.T
04-04-2011, 05:39 AM
சபாஷ் அருமை தோழரே - உங்களின் தவிர்க்க நினைக்கும் கணங்கள்

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி உமாமீனா

பிரேம்
11-04-2011, 12:35 PM
நிவாஸ்-நாவுக்கு பாராட்டுக்கள்..சாரி கொஞ்சம் லேட் ஆயிருச்சி...(இனி இந்த மாதிரி கணங்களை தவிர்த்து விட முயல்வேன்..) கவிதை அருமை..:)

இளசு
12-04-2011, 06:44 AM
பதின்ம வயதினரின் மகரந்த கணங்கள்..
பார்த்தாலே பற்றும் கந்தகங்களே..

எரிவது எரிபொருளாய் மட்டும் இருக்கட்டும்.

பாராட்டுகள் நிவாஸ்.

(பிழைகளையும் தவிர்க்கலாமே : தணிக்க, வேறொன்றும், இயற்கை)

M.Jagadeesan
12-04-2011, 07:51 AM
தவிர்க்க நினைக்கும் கணங்கள்
தவிர்க்க முடியாதவை.
அடக்க அடக்க பெருகும் தீ!
அணைக்க முடியாத ஊழித் தீ!
அதை அணைத்தால் மட்டுமே
அணையும் தீ! காதல் தீ!

சபாஷ்! நிவாஸ்!

Nivas.T
12-04-2011, 08:23 AM
நிவாஸ்-நாவுக்கு பாராட்டுக்கள்..சாரி கொஞ்சம் லேட் ஆயிருச்சி...(இனி இந்த மாதிரி கணங்களை தவிர்த்து விட முயல்வேன்..) கவிதை அருமை..:)

மிக்க நன்றி பிரேம்

பரவாயில்லை பிரேம்
முன்புபோல் மன்றம் வரமுடிவதில்லையே ஏன்? வேலை பளுவா?

Nivas.T
12-04-2011, 08:28 AM
பதின்ம வயதினரின் மகரந்த கணங்கள்..
பார்த்தாலே பற்றும் கந்தகங்களே..

எரிவது எரிபொருளாய் மட்டும் இருக்கட்டும்.

பாராட்டுகள் நிவாஸ்.

(பிழைகளையும் தவிர்க்கலாமே : தணிக்க, வேறொன்றும், இயற்கை)

மிக்க நன்றி அண்ணா
பாராட்டிற்கும், தவறுகளை சுட்டிக்காட்டியதற்க்கும்
இப்பொழுது திருத்திவிட்டேன் அண்ணா

Nivas.T
12-04-2011, 08:30 AM
தவிர்க்க நினைக்கும் கணங்கள்
தவிர்க்க முடியாதவை.
அடக்க அடக்க பெருகும் தீ!
அணைக்க முடியாத ஊழித் தீ!
அதை அணைத்தால் மட்டுமே
அணையும் தீ! காதல் தீ!

சபாஷ்! நிவாஸ்!

மிக்க நன்றி ஐயா

அழகான கவிதை பின்னூட்டத்திற்கும்
பாராட்டிற்கும்

சுகந்தப்ரீதன்
13-04-2011, 01:58 PM
நிவாஸ்... அப்பப்ப நம்ப அலைவரிசை மதில்மேல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12210)பூனையாட்டாம் ஒத்துப்போகுதே அதெப்படிப்பா..?!:confused:

தவிர்க்க நினைக்கும் கணங்களை சற்று கனமாகவே காணமுடிகிறது கவிதையில்.. வாழ்த்துக்கள்..!!:) (இதுக்குல்லாமான்னு கேட்கப்புடாது..)

Nivas.T
13-04-2011, 02:11 PM

ஒருவேள ரெண்டுபேரும் ஒரே குட்டைல ஊறிப்போமோன்னு தோணுது :rolleyes::D

கனத்தின் வலிதாளாமல் கணநேரத்தில் கதறியதுதான் இந்தக் கவிதை :traurig001:
என்ன பண்றது நம்ப விதி அப்டி:icon_ush::D:D:D

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சுகந்தவாசன்