PDA

View Full Version : பட்டிமன்றம்:1(மாமியாரா மருமகளா)

ராஜாராம்
03-04-2011, 07:51 AM
அன்றாட வாழ்வில்
பிரச்சனைகளை எதிர்கொள்ளும்...
இருமனிதர்கள்...

மற்றும்
வெவ்வேறு கருத்துக்களைக்
கொண்ட...

இரு மனிதர்கள்...
ஒருவரை ஒருவர் சந்தித்தால்..
என்ன நிகழும்?
அவர்களுக்குள் உரையாடல்
எப்படி இருக்கும்?

அவ்விருவரின் உரையாடலுக்கும்
நடுவராக....
ஒரு கதாபாத்திரமும்
கலந்துரையாடல் செய்தால்....
அந்தசம்பவம் எப்படியிருக்கும்?..

இப்படிப்பட்ட கருவைக்கொண்டு
பட்டிமன்றம் போல்
உருவாக்கப்பட்டதே,...
இந்த திரி.

யாரையும் புண்படுத்தவேண்டுமென்றோ...
இகழ்ச்சி செய்யவேண்டுமென்றோ
இந்த பட்டிமன்ற படைப்பு..
பதிவுசெய்யப்படவில்லை...

சிந்திக்க வைக்கவும்..
சிரிக்கவைக்கவும்....
உருவாக்கப்பட்ட
திரி இது.

இத்திரியின் ஒவ்வொரு பாகத்திலும்
மாறுபட்ட
தலைப்புகளில் உரையாடல்கள்
இடம்பெறும்.
அது
ஒருதலைவரின் முன் நடைபெறும்...

இத்திரிக்கு தலைப்பை...
"பட்டிமன்றம்",
என்று தந்துள்ளேன்....
*****************************************************************************

பட்டிமன்றம்:1
______________________
இன்றைய பட்டிமன்றத்தின்......
உரையாடல் தலைப்பு....
"குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம்...
"மாமியாரா?மருமகளா?",...

மாமியார்கள்தான் காராணம் என்று அங்கவையும்...
மருமகள்கள்தான் காரணம் என்று சங்கவையும்...
உரையாடல்செய்ய

நடுவராக,
மகாகவி பாரதியார்..
அவர்கள் இடம்பெறுகிறார்....
______________________
அங்கவை:-வணக்கம் நடுவரே...

பாரதியார்:-வணக்கம் அங்கவையே..

சங்கவை:-வணக்கம் நடுவரே,,,'

பாரதி:-வணக்கம் சங்கவையே....

வணக்கம் கூறிய பாரதியார்....
"ம்ம்,,,ஆரம்பியுங்கள் உங்கள் கச்சேரியை...
மன்றம் களைக் கட்டட்டும்,...",
என்றதும்..

சங்கவை:-பிரச்சனைகளுக்கு முழுக்காரணமும்
மருமகள்கள்தான் நடுவர் அவர்களே....

பாரதி:-எதைவைத்து அப்படி சொல்லுகிறீர்கள்?

சங்கவை:-எனக்கு வயசு ஆகிடுச்சி...
என் முகமெல்லாம் சுறுக்கம் விழுந்துப்போச்சு
என்று என்மருமகளிடம் சொன்னேன்.
அதற்கு என் மருகள் என்னசொன்னாள்
தெரியுமா?",.

பாரதி:-என்ன சொன்னாள்?

சங்கவை:-கவலைபடாதீங்க அத்தை.
ஐயன்பாக்ஸை வைத்து
உங்க மூஞ்சியிலே நாலுஇழுப்பு இழுக்கிறேன்..
சுருக்கமெல்லாம் போயிடும்னு சொன்னாள்..
என்ன திமிறு இருக்கும் அவளுக்கு..",

பாரதி:"ஆஹா..!!!,
ஆரம்பமே ரணகளமா இருக்கே,...
ஷ்ஷ்ஷஷப்ப்ப்ப்பாபா....".

அங்கவை:-"பிரச்சனைக்கு முழுக்காரணம்
மாமியார்கள்தான் காரணம் நடுவரே.".

பாரதி:-"எதைவைத்தும்மா அப்படி சொல்றே?".

அங்கவை:-என் மாமியாரு என்னைய
எதாவது சொல்லி திட்டிக்கிட்டே இருப்பாங்க,..
நான் சும்மா இருந்தாக்கூட வலுக்கட்டாயமாக
வந்து
சண்டைபோடுவாங்க.
அவுங்க போடுகிற சண்டை டீ.வீ சீரியல்போல
இருக்கும்..நடுவரே."

பாரதி:-டீ.வீ சீரியல்மாதிரி இருக்குமா?
எதனால் அப்படி சொல்றீங்க?",.,

அங்கவை:-ஒவ்வொரு நாளும் சண்டையை
ஆரம்பிக்கும்போது,,,,,
இதுவரைன்னு சொல்லி,.
முதால்நாள் நடந்த சண்டையை
கொஞ்சம் போட்டுக்காடிட்டு...
இனின்னு சொல்லி...
அன்றைய சண்டையை
ஆரம்பிப்பாங்க..."

பாரதி:-அம்மாடி அர்த்தம்முள்ள வாதங்களை
முன் வைங்கம்மா..",

சங்கவை:-கல்யாணம் ஆனதும் தனிக்குடித்தனம்
போயிட்டான் என் பையன்.
வருகிற மருமகள்களில் முக்கால்வாசிப்பேரு
இதைத்தான் செய்யிறாளூங்க..",

அங்கவை:-தனிக்குடித்தனம் போகிற
அளவுக்கு கொண்டுப்போறதே
மாமியார்கள்தான்..
கல்யாணம் ஆனப்புதுசுல
ஆஹா ஓஹோன்னு
மருமகளை புகழ்வாங்க.பிறகு போகபோக
குறைகளா சொல்லுவாங்க.",

சங்கவை;-நல்ல விஷயங்களை சொல்லினால்
அது குறைசொல்லுவதுப்போல
உங்களைப்போன்ற
மருமகள்கள் எடுத்துக்கிறாங்க..

அங்கவை:-வரதட்சணைகளை வாங்க
தூண்டுதலாக இருப்பதே
மாமியார்கள்தான்..
எத்தனையோ பெண்கள்
வரதட்சணைக் கொடுமையால்
தற்கொலை பண்ணிக்கிறாங்க

சங்கவை:-வரதட்சணையா வாங்கிற
நகைகளை
மாமியார்களா போட்டுக்கிறாங்க.
உங்களைப்போன்ற
மருமகள்கள்தானே
போட்டிக்கிறீங்க.உங்க வாழ்க்கைக்கு
ஒரு சேமிப்பு இருக்கனும்னுதானே
அதை வாங்குறோம்:",

பாரதி:வரதட்சனை வாங்குவது ஒரு
குற்றச்செயல்.பாவக்காரியம்.
வேறு ஏதேனும் காரணங்களை
சொல்லும்மா சங்கவையே."

சங்கவை:-"முதியோர் இல்லங்கள்
உருவாகக் புகுந்த வீட்டிற்கு
வரும்
மருமகள்கள்தான் காரணம்.".

அங்கவை:-"அப்படின்னா..?
நீங்களும் கல்யாணம் ஆகி
ஒருவீட்டுக்கு மருமகளா
வந்தவங்கதானே.
நீங்களும் அதற்குக் காரணம்தானே?".

பாரதி:-என்ன கொடுமை சார்...
பெண் சுதந்திரத்திற்கு
பாட்டெல்லாம் எழுதினேன்.
இப்ப நடுவரா பாடாப்படுறேன்னே..".

சங்கவை:-"மாமியாரும் நம்மைப்
பெற்ற அம்மாவைப்போல என்று
மருமகள்கள் எண்ணுவதில்லை".

அங்கவை:-"மருமகளை
பெற்றப்பெண்ணைப்போல
மாமியாரகள் எண்ணுவதில்லையே..".

சங்கவை:-மாமியாரே
தப்புபண்ணினால்கூட,.,,
வயசானவங்கதானேன்னு,
மருமகள்கள்
விட்டுகொடுப்பதில்லை."

அங்கவை:மருமகள்களே
தப்புபண்ணினால்கூட
சின்னஞ்சிருசுங்கதானேன்னு,
மாமியார்கள் மன்னிப்பதில்லை".

பாரதி:-பிரமாதம்....

அங்கவை:-ஒருநாள் எங்கவீட்டில
கரெண்ட்
லோவோல்ட்டேஜில் வந்தது.
ஏன் இப்படி லோவோல்ட்டேஜில்
கரெண்ட் வருதுன்னு மாமியாரைக்
கேட்டேன்.அதுக்கு அவுங்க
என்னசொன்னாங்க
தெரியுமா?

பாரதி:-என்ன சொன்னாங்க?".

அங்கவை:-வருகிற கரெண்ட்
நெய்வேலியில் இருந்து வருதா?
கல்ப்பாக்கத்தில் இருந்து வருதான்னு..
பிளக்பாயிண்ட்டில்
கையை வெச்சுப்பாரும்மா,,,,
என்று சொன்ன்னங்க..'

பாரதி:-உங்கள் வாதங்களுக்கான
நேரம்
முடிந்துவிட்டது..

என்ற பாரதி..
"இப்பவே கண்ணைக்கட்டுதே...",
என்று பெருமூச்சுவிட்டபடி தீர்ப்பைகூற
தொடங்கினார்.

பாரதி:-இவையாவும்
மாமியார் தப்பா?மருமகள் தப்பா?
என்று என்னால் கூறமுடியவில்லை.

ஆண் ஆதிக்கத்திலிருந்து
விடுபட பெண்களுக்காக பாட்டெழுதினேன்.
பெண்ணை பெண்ணே ஆதிக்கம்
செய்தால் என்னவென்று சொல்வது?

அடிப்பட்டால் 108ல் போகலாம்..
அந்த நூற்றியெட்டே அடிபட்டால்
எதிலேப்போவது?

நான் என்ற அகம்பாத்தையும்...
நீயா நானா என்ற மோதலையும்
கைவிட்டுவிட்டு.....
நம் குடும்பம் இனிமையாக
இருக்கவேண்டும்,
நம் பிள்ளைகள்
நல்ல சூழலில் வளரவேண்டும்...
என்று எண்ணுங்கள்.

முதியோர்கள் இல்லத்திற்கு
யார் காரணம் என்றுநான்
கூறவிரும்பவில்லை.
ஆனால்
ஒன்றுமட்டும் கூறுகிறேன்...
"பிறர்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா பிற்பகல் தாமேவரும்"....

என்றவர்....
"ஓகே...ரெடி ஜீட்...
சபையை கலைங்கம்மா....",
என்றுக் கூறிவிட்டு

"இனி மாமியார்கள் மருமகளுக்குள்
சண்டையே வரக்கூடாது.
அப்படி வாழும் பெண்கள்தான்
நான் கண்டப் புதுமைப்பெண்கள்..."

என்றபடி மெல்ல அவ்விடத்தைவிட்டு
எஸ்கேப் ஆகினார்...

(நம் மன்றத்து நண்பர்கள் இதை விவாதிக்க விரும்பினால்
விவாதிக்கலாம்.விவாதம் ஆரோகியமானதாகவும்
புண்படும்படி இல்லாமலும் இருக்கவும்)

Nivas.T
03-04-2011, 08:05 AM
:lachen001::lachen001::lachen001:
சபாஷ் ...........

முரளிராஜா
03-04-2011, 08:11 AM
தன் மருமகளை தன் சொந்த மகளாக
நினைக்காத மாமியாரும்
தன் மாமியாரை தன்னை பெற்ற தாயாக
நினைக்காத மருமகளும்
இருக்கும் வரை இந்த பிரச்சனையும்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்

நல்ல கற்பனை ரா ரா
வாழ்த்துக்கள்

ஜானகி
03-04-2011, 09:10 AM
அன்றாட வாழ்வில்
பிரச்சனைகளை எதிர்கொள்ளும்...
இருமனிதர்கள்...

மற்றும்
வெவ்வேறு கருத்துக்களைக்
கொண்ட...

இரு மனிதர்கள்...
ஒருவரை ஒருவர் சந்தித்தால்..
என்ன நிகழும்?
அவர்களுக்குள் உரையாடல்
எப்படி இருக்கும்?

அவ்விருவரின் உரையாடலுக்கும்
நடுவராக....
ஒரு கதாபாத்திரமும்
கலந்துரையாடல் செய்தால்....
அந்தசம்பம் எப்படியிருக்கும்?..

இப்படிப்பட்ட கருவைக்கொண்டு
பட்டிமன்றம் போல்
உருவாக்கப்பட்டதே,...
இந்த திரி.

யாரையும் புன்படுத்தவேண்டுமென்றோ...
இகழ்ச்சி செய்யவேண்டுமென்றோ
இந்த பட்டிமன்ற படைப்பு..
பதிவுசெய்யப்படவில்லை...

சிந்திக்க வைக்கவும்..
சிரிக்கவைக்கவும்....
உருவாக்கப்பட்ட
திரி இது.

இத்திரியின் ஒவ்வொரு பாகத்திலும்
மாறுபட்ட
தலைப்புகளில் உரையாடல்கள்
இடம்பெறும்.
அது
ஒருதலைவரின் முன் நடைபெறும்...

இத்திரிக்கு தலைப்பை...
"பட்டிமன்றம்",
என்று தந்துள்ளேன்....
*****************************************************************************

பட்டிமன்றம்:1
______________________
இன்றைய பட்டிமன்றத்தின்......
உரையாடல் தலைப்பு....
"குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம்...
"மாமியாரா?மருமகளா?",...

மாமியார்கள்தான் காராணம் என்று அங்கவையும்...
மருமகள்கள்தான் காரணம் என்று சங்கவையும்...
உரையாடல்செய்ய

நடுவராக,
மகாகவி பாரதியார்..
அவர்கள் இடம்பெறுகிறார்....
______________________
அங்கவை:-வணக்கம் நடுவரே...

பாரதியார்:-வணக்கம் அங்கவையே..

சங்கவை:-வணக்கம் நடுவரே,,,'

பாரதி:-வணக்கம் சங்கவையே....

வணக்கம் கூறிய பாரதியார்....
"ம்ம்,,,ஆரம்பியுங்கள் உங்கள் கச்சேரியை...
மன்றம் கலைகட்டட்டும்,...",
என்றதும்..

சங்கவை:-பிரச்சனைகளுக்கு முழுக்காரணமும்
மருமகள்கள்தான் நடுவர் அவர்களே....

பாரதி:-எதைவைத்து அப்படி சொல்லுகிறீர்கள்?

சங்கவை:-எனக்கு வயசு ஆகிடுச்சி...
என் முகமெல்லாம் சுறுக்கம் விழுந்துப்போச்சு
என்று என்மருமகளிடம் சொன்னேன்.
அதற்கு என் மருகள் என்னசொன்னாள்
தெரியுமா?",.

பாரதி:-என்ன சொன்னாள்?

சங்கவை:-கவலைபடாதீங்க அத்தை.
ஐயன்பாக்ஸை வைத்து
உங்க மூஞ்சியிலே நாலுஇழுப்பு இழுக்கிறேன்..
சுருக்கமெல்லாம் போயிடும்னு சொன்னாள்..
என்ன திமிறு இருக்கும் அவளுக்கு..",

பாரதி:"ஆஹா..!!!,
ஆரம்பமே ரணகளமா இருக்கே,...
ஷ்ஷ்ஷஷப்ப்ப்ப்பாபா....".

அங்கவை:-"பிரச்சனைக்கு முழுக்காரணம்
மாமியார்கள்தான் காரணம் நடுவரே.".

பாரதி:-"எதைவைத்தும்மா அப்படி சொல்றே?".

அங்கவை:-என் மாமியாரு என்னைய
எதாவது சொல்லி திட்டிக்கிட்டே இருப்பாங்க,..
நான் சும்மா இருந்தாக்கூட வழியவந்து
சண்டைபோடுவாங்க.
அவுங்க போடுகிற சண்டை டீ.வீ சீரியல்போல
இருக்கும்..நடுவரே."

பாரதி:-டீ.வீ சீரியல்மாதிரி இருக்குமா?
எதனால் அப்படி சொல்றீங்க?",.,

அங்கவை:-ஒவ்வொரு நாளும் சண்டையை
ஆரம்பிக்கும்போது,,,,,
இதுவரைன்னு சொல்லி,.
முதால்நாள் நடந்த சண்டையை
கொஞ்சம் போட்டுக்காடிட்டு...
இனின்னு சொல்லி...
அன்றைய சண்டையை
ஆரம்பிப்பாங்க..."

பாரதி:-அம்மாடி அர்த்தம்முள்ள வாதங்களை
முன் வைங்கம்மா..",

சங்கவை:-கல்யாணம் ஆனதும் தனிக்குடித்தனம்
போயிட்டான் என் பையன்.
வருகிற மருமகள்களில் முக்கால்வாசிப்பேரு
இதைத்தான் செய்யிறாளூங்க..",

அங்கவை:-தனிக்குடித்தனம் போகிற
அளவுக்கு கொண்டுப்போறதே
மாமியார்கள்தான்..
கல்யாணம் ஆனப்புதுசுல
ஆஹா ஓஹோன்னு
மருமகளை புகழ்வாங்க.பிறகு போகபோக
குறைகளா சொல்லுவாங்க.",

சங்கவை;-நல்ல விஷயங்களை சொல்லினால்
அது குறைசொல்லுவதுப்போல
உங்களைப்போன்ற
மருமகள்கள் எடுத்துக்கிறாங்க..

அங்கவை:-வரதட்சனைகளை வாங்க
தூண்டுதலாக இருப்பதே
மாமியார்கள்தான்..
எத்தனையோ பெண்கள்
வரதட்சனைக் கொடுமையால்
தற்கொலை பன்னிக்கிறாங்க

சங்கவை:-வரதட்சனையா வாங்கிற
நகைகளை
மாமியார்களா போட்டுக்கிறாங்க.
உங்களைப்போன்ற
மருமகள்கள்தானே
போட்டிக்கிறீங்க.உங்க வாழ்க்கைக்கு
ஒரு சேமிப்பு இருக்கனும்னுதானே
அதை வாங்குறோம்:",

பாரதி:வரதட்சனை வாங்குவது ஒரு
குற்றச்செயல்.பாவக்காரியம்.
வேறு ஏதேனும் காராணங்களை
சொல்லும்மா சங்கவையே."

சங்கவை:-"முதியோர் இல்லங்கள்
உருவாகக் புகுந்த வீட்டிற்கு
வரும்
மருமகள்கள்தான் காரணம்.".

அங்கவை:-"அப்படின்னா..?
நீங்களும் கல்யானம் ஆகி
ஒருவீட்டுக்கு மருமகளா
வந்தவங்கதானே.
நீங்களும் அதற்குக் காரணம்தானே?".

பாரதி:-என்ன கொடுமை சார்...
பெண் சுதந்திரத்திற்கு
பாட்டெல்லாம் எழுதினேன்.
இப்ப நடுவரா பாடாப்படுறேன்னே..".

சங்கவை:-"மாமியாரும் நம்மைப்
பெற்ற அம்மாவைப்போல என்று
மருமகள்கள் எண்ணுவதில்லை".

அங்கவை:-"மருமகளை
பெற்றப்பெண்ணைப்போல
மாமியாரகள் எண்ணுவதில்லையே..".

சங்கவை:-மாமியாரே
தப்புபன்னினால்கூட,.,,
வயசானவங்கதானேன்னு,
மருமகள்கள்
விட்டுகொடுப்பதில்லை."

அங்கவை:மருமகள்களே
தப்புபன்னினால்கூட
சின்னஞ்சிருசுங்கதானேன்னு,
மாமியார்கள் மன்னிப்பதில்லை".

பாரதி:-பிரமாதம்....

அங்கவை:-ஒருநாள் எங்கவீட்டில
கரெண்ட்
லோவோல்ட்டேஜில் வந்தது.
ஏன் இப்படி லோவோல்ட்டேஜில்
கரெண்ட் வருதுன்னு மாமியாரைக்
கேட்டேன்.அதுக்கு அவுங்க
என்னசொன்னாங்க
தெரியுமா?

பாரதி:-என்ன சொன்னாங்க?".

அங்கவை:-வருகிற கரெண்ட்
நெய்வேலியில் இருந்து வருதா?
கல்ப்பாக்கத்தில் இருந்து வருதான்னு..
பிளக்பாயிண்ட்டில்
கையை வெச்சுப்பாரும்மா,,,,
என்று சொன்ன்னங்க..'

பாரதி:-உங்கள் வாதங்களுக்கான
நேரம்
முடிந்துவிட்டது..

என்ற பாரதி..
"இப்பவே கண்ணைக்கட்டுதே...",
என்று பெருமூச்சுவிட்டபடி தீர்ப்பைகூற
தொடங்கினார்.

பாரதி:-இவையாவும்
மாமியார் தப்பா?மருமகள் தப்பா?
என்று என்னால் கூறமுடியவில்லை.

ஆண் ஆதிக்கத்திலிருந்து
விடுபட பெண்களுக்காக பாட்டெழுதினேன்.
பெண்ணை பெண்ணே ஆதிக்கம்
செய்தால் என்னவென்று சொல்வது?

அடிப்பட்டால் 108ல் போகலாம்..
அந்த நூற்றியெட்டே அடிபட்டால்
எதிலேப்போவது?

நான் என்ற அகம்பாத்தையும்...
நீயா நானா என்ற மோதலையும்
கைவிட்டுவிட்டு.....
நம் குடும்பம் இனிமையாக
இருக்கவேண்டும்,
நம் பிள்ளைகள்
நல்ல சூழலில் வளரவேண்டும்...
என்று எண்ணுங்கள்.

முதியோர்கள் இல்லத்திற்கு
யார் காரணம் என்றுநான்
கூறவிரும்பவில்லை.
ஆனால்
ஒன்றுமட்டும் கூறுகிறேன்...
"பிறர்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா பிற்பகல் தாமேவரும்"....

என்றவர்....
"ஓகே...ரெடி ஜீட்...
சபையை கலைங்கம்மா....",
என்றுக் கூறிவிட்டு

"இனி மாமியார்கள் மருமகளுக்குள்
சண்டையே வரக்கூடாது.
அப்படி வாழும் பெண்கள்தான்
நான் கண்டப் புதுமைப்பெண்கள்..."

என்றபடி மெல்ல அவ்விடத்தைவிட்டு
எஸ்கேப் ஆகினார்...

(நம் மன்றத்து நண்பர்கள் இதை விவாதிக்க விரும்பினால்
விவாதிக்கலாம்.விவாதம் ஆரோகியமானதாகவும்
புன்படும்படி இல்லாமலும் இருக்கவும்)

பாரதியாரை நடுவராகப் போட்டிருப்பதால், தயவு செய்து எழுத்துப் பிழைகளை நீக்கிவிட்டுப் பதிவிடவும்....தவறாக நினைக்கவேண்டாம்....சொல்நயத்தின் அழகை அது தடை செய்கிறது.உங்கள் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டதால் தான் சொல்கிறேன்.

மற்றபடி சூடான விவாதத்திற்குத் தயார்...! நடுநிலமையில் அனைவரும் பங்கேற்றால், பிரச்சனை வராது...

உமாமீனா
03-04-2011, 10:05 AM
:lachen001::lachen001:......................................:confused:....................:icon_ush:.............:icon_rollout:............:icon_good:......................:icon_hmm:

தாமரை
03-04-2011, 10:58 AM
பாரதியாரை நடுவராகப் போட்டிருப்பதால், தயவு செய்து எழுத்துப் பிழைகளை நீக்கிவிட்டுப் பதிவிடவும்....தவறாக நினைக்கவேண்டாம்....சொல்நயத்தின் அழகை அது தடை செய்கிறது.உங்கள் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டதால் தான் சொல்கிறேன்.

மற்றபடி சூடான விவாதத்திற்குத் தயார்...! நடுநிலமையில் அனைவரும் பங்கேற்றால், பிரச்சனை வராது...

விவாதத்திற்குத் தயார்தான், ஆனால் அதுக்கு முன்னால நடுவரா யாரைப் போடுறது என்று விவாதம் வச்சுக்குங்க.

கல்யாணம் ஆகாத ஆணைப் போட முடியாது.. ஏன்னா அவருக்கு அனுபவமே இருக்காது.

கல்யாணம் ஆன ஆணைப் போடலாம்னா அவருக்கு தினம் தினம் அதுதானே பொழப்பா ஓடுகிட்டு இருக்கு. அதை மறக்கத்தானே அவர் மன்றம் வர்ரார். இங்கயுமா என ஓடிட மாட்டாரா?

மருமகள், மாமியார் ஆகியோர் வாதி பிரதிவாதிகள். அதனால அவர்களையும் நடுவர்களா போட முடியாது.

சரி கல்யாணம் ஆகாத பெண்ணைப் போடலாம்னா அவர்களுக்கு மாமியார்னா யார் மாமின்னு கேட்கறவங்க...

யாரைத்தான் நடுவராப் போடறது?

முரளிராஜா
03-04-2011, 11:40 AM
:lachen001::lachen001:......................................:confused:....................:icon_ush:.............:icon_rollout:............:icon_good:......................:icon_hmm:

உ.மீ கோடிட்ட இடத்தை யாரு நிரப்புவா?
உங்கள் தமிழ் தட்டச்சு மறுபடியும் வேலை செய்யவில்லையா?இந்த பிரச்சனை உங்களுக்கு அடிக்கடி வருகிறது. இதை சரி செய்ய இதோ ஒரு வழி.

தேவையான பொருட்கள்

1. மூண்றாம் வகுப்பு மாணவனின் தமிழ் புத்தகம் 1

2. குமுதம் புத்தகம் 1

3. குங்குமம் புத்தகம் 1

4. பெவிகால் 500 மி கிராம்

5. ஜலம் 1 கப்

6. பிளேடு 1

முதலில் மேலே சொன்ன 3 புத்தக்ங்களையும் எடுத்து பக்கம் மாறாமல் படித்துபார்த்து அதில் ஏதேனும் ஆங்கில எழுத்துக்கள் இருந்தால்
பிளேடாள் சுரண்டிவிட்டு கிழித்து வைத்து கொள்ளவும். பிறகு கிழித்த ஏடுகளை அருவாமனையின் துணைக்கொண்டு சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும் அதன் பின் ஒரு பெரிய சட்டியை எடுத்து முன்பே நறுக்கி
வைத்துள்ள தமிழ் காகிதங்களை அதில் போடவும். அதில் 1 பெரிய கப்பில் உள்ள தண்ணிரை முழுவதுமாக ஊற்றவும்.

அடுப்பை பற்றவைத்து கொள்ளவும் அந்த சட்டியில் தமிழ் காகிதங்கள் கூழானபிறகு அடுப்பை நிறுத்தவும்.

ஓரளவு ஆறியபின் உங்கள் தட்டச்சுபலகையில் முழுவதுமாக எல்லா இடமும் படும்படி அந்த தமிழ் கூழை ஊற்றவும்.15 நிமிடங்களுக்கு பின்
உங்கள் தட்டச்சுபலகையை பாருங்கள் அதில் உள்ள ஆங்கில எழுத்துக்கள்
எல்லாம் விரட்டப்பட்டு தமிழ் எழுத்துக்கள் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கும்.

தமிழ் எழுத்துக்கள் நிரந்தரமாக உங்கள் தட்டச்சுபலகையில் இருக்க தேவையான அளவு பெவிகால் எடுத்து எழுத்துக்கள் மீது தடவிவிடவும்.
அவ்வளவுதான் தமிழ் தட்டச்சு ரெடி

கோபித்து கொள்ளாதிங்க உ.மீ ஜானகி மேடம் சமையல் செய்முறகளை
படித்ததால் வந்த வினை.நான் ஏற்க்கனவே சொன்னமாதிரி இகலப்பையை
பதிவிறக்கி கொள்ளுங்கள்.

ராஜாராம்
03-04-2011, 03:58 PM
நன்றி,
முரா,
நிவாஸ்,
தாமரை,
உமாமீனா,
ஜானகி அக்கா(தாங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்தம் செய்து இதை மாற்றி அமைத்துள்ளேன்.நன்றி ஜானகிஅக்கா.நான் தவறாக எண்ணவில்லை.
அவற்றை,
உரிமையோடு ,என் அக்காவாக நீங்கள் கூறுகிறீர்கள்.அதை ஏற்பது என் கடமை)

(என் படைப்புக்களில் ஏதேனும் வார்த்தைப் பிழைகள் இருந்தால் நண்பர்கள் அதை
உரிமையோடு சுட்டிக்காட்டுங்கள்.)

p.suresh
04-04-2011, 02:13 AM
என் படைப்புக்களில் ஏதேனும் வார்த்தைப் பிழைகள் இருந்தால் நண்பர்கள் அதை
உரிமையோடு சுட்டிக்காட்டுங்கள்.)
[/COLOR]

நண்பா,சிறு வயது முதல் ஆங்கிலவழி கல்வி பயின்ற உனக்கு தமிழில் எழுத்துப்பிழைகள் வருவது சகஜம் என்று நான் அறிவேன்.

பாயாசத்தில் தலைமுடி விழுந்ததற்காக பாயாசத்தைக் கீழே கொட்டும் பழக்கமில்லை எனக்கு.தொடரட்டும் உன் பணி.

முரளிராஜா
04-04-2011, 06:17 AM
நண்பா,சிறு வயது முதல் ஆங்கிலவழி கல்வி பயின்ற உனக்கு தமிழில் எழுத்துப்பிழைகள் வருவது சகஜம் என்று நான் அறிவேன்.

எப்ப படிச்ச ரா ரா :D:D:D:D:D:icon_ush:

sarcharan
04-04-2011, 06:23 AM
அடுப்பை பற்றவைத்து கொள்ளவும் அந்த சட்டியில் தமிழ் காகிதங்கள் கூழானபிறகு அடுப்பை நிறுத்தவும்.

ரா ரா,
உங்க கதையை படித்த்தும் மூ ரா சூடாயிட்டார் பாருங்க...:icon_ush:

மு ராவின் "பேப்பர் மச்சி செய்வது எப்படி..." வாங்கிவிட்டீர்களா???:icon_b:

ஓரளவு ஆறியபின் உங்கள் தட்டச்சுபலகையில் முழுவதுமாக எல்லா இடமும் படும்படி அந்த தமிழ் கூழை ஊற்றவும்.15 நிமிடங்களுக்கு பின்
உங்கள் தட்டச்சுப்பலகையை பாருங்கள் அதில் உள்ள ஆங்கில எழுத்துக்கள்
எல்லாம் விரட்டப்பட்டு தமிழ் எழுத்துக்கள் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கும்.

ஓஹோ கண்ணாமூச்சி ஆட்டம் இதுதானா?;)

தமிழ் எழுத்துக்கள் நிரந்தரமாக உங்கள் தட்டச்சுபலகையில் இருக்க தேவையான அளவு பெவிகால் எடுத்து எழுத்துக்கள் மீது தடவிவிடவும்.
அவ்வளவுதான் தமிழ் தட்டச்சு ரெடி

எப்படி ராசா? எப்படி? எப்படி உங்களூக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது.. :confused:

பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமுன்னு சொல்லுவாங்க.. ராராவோட சேர்ந்து நீங்களும் இப்படியாகிட்டீங்களே மு ரா.... :icon_ush:

கோபித்து கொள்ளாதிங்க உ.மீ, ஜானகி மேடம் சமையல் செய்முறகளை
படித்ததால் வந்த வினை.

உங்க சமையலுக்கு ஒரு சவால். இந்த நேரத்தில் ஒரு நகைச்சுவை பகிர்கிறேன்..

ஜானகி (மேடம்) : சார்! நீங்க எழுதின "சமைத்துப்பார்" புஸ்தகத்தை படிச்சுப்பார்த்து ரசம் வைத்தேன். :eek: சாப்பிட்டுவிட்டு எல்லாரும் சரியில்லைன்னு சொல்றாங்க...:frown:

எழுத்தாளர் சூ ரா: சமைத்துப்பாருன்னு தானே (சொன்னேன்)எழுதினேன். சாப்பிட்டுப்பாருன்னா (சொன்னேன்)எழுதினேன்.

ஜானகி (மேடம்) : :icon_ush::icon_ush:

விவாதத்திற்குத் தயார்தான்,

யாரைத்தான் நடுவராப் போடறது?

ஹ்ம்ம்.... சப்பைகட்டு கட்டியாச்சு...

மற்றபடி சூடான விவாதத்திற்குத் தயார்...! நடுநிலமையில் அனைவரும் பங்கேற்றால், பிரச்சனை வராது...

நீங்க அங்கவை பக்கமா இல்ல சங்கவை பக்கமா?

பொங்கவைக்க மன்றமக்கள் ரெடி.

உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.

இத்திரிக்கு தலைப்பை...
"பட்டிமன்றம்",
என்று தந்துள்ளேன்....
*****************************************************************************

ரா ராவின் வழக்கமான ஹெட்டரோடு கதை ஆரம்பிக்கிறது... :lachen001:

பட்டிமன்றம்:1
______________________
இன்றைய பட்டிமன்றத்தின்......
உரையாடல் தலைப்பு....
"குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம்...
"மாமியாரா?மருமகளா?",...

ஹாகாக.. நாட்டுக்கு ரொம்ப தேவையான ஒண்ணு...

மாமியார்கள்தான் காராணம் என்று அங்கவையும்...
மருமகள்கள்தான் காரணம் என்று சங்கவையும்...

இன்னிக்கி பொங்க வெக்காம போகறதில்லைன்னு முடிவுபண்ணீட்டீங்க...

நடுவராக,
மகாகவி பாரதியார்..
அவர்கள் இடம்பெறுகிறார்....

இவரு என்ன பாவம் பண்ணுனாரு, :eek:
ரா ரா, எப்படி இது... மல்லாக்க படுத்து யோசிச்சீங்களா? :frown:

நல்லவேளை! சாலமன் பாப்பையா தப்பிச்சாரு...

பாரதி:-அம்மாடி அர்த்தம்முள்ள வாதங்களை
முன் வைங்கம்மா..",

நடுவரையே ஏங்க வெச்சிருக்கீங்க...

பாரதி:-என்ன கொடுமை சார்...
பெண் சுதந்திரத்திற்கு
பாட்டெல்லாம் எழுதினேன்.
இப்ப நடுவரா பாடாப்படுறேன்னே..".

பாரதி:-பிரமாதம்....

தெரியுமா?

பாரதி:-என்ன சொன்னாங்க?".

பாரதி:-உங்கள் வாதங்களுக்கான
நேரம்
முடிந்துவிட்டது..

என்ற பாரதி..
"இப்பவே கண்ணைக்கட்டுதே...",
என்று பெருமூச்சுவிட்டபடி தீர்ப்பைகூற
தொடங்கினார்.

பாரதி:-இவையாவும்
மாமியார் தப்பா?மருமகள் தப்பா?
என்று என்னால் கூறமுடியவில்லை.

தீர்ப்பு சொல்லமுடியலையே... என்ன கொடுமை சார் இது....

அடிப்பட்டால் 108ல் போகலாம்..
அந்த நூற்றியெட்டே அடிபட்டால்
எதிலேப்போவது?

பாரதியாரை தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி ஆக்கீட்டீங்களே! பேசாம
நம்ம சிவா ஜியை கூப்பிட்டு ஓப்பினியன் கேக்கலாமா?

என்றவர்....
"ஓகே...ரெடி ஜீட்...
சபையை கலைங்கம்மா....",
என்றுக் கூறிவிட்டு

என்றபடி மெல்ல அவ்விடத்தைவிட்டு
எஸ்கேப் ஆகினார்...

எஸ்கேப் எஸ்கேப் எஸ்கேப்

முரளிராஜா
04-04-2011, 11:36 AM
ரா ரா,
உங்க கதையை படித்த்தும் மூ ரா சூடாயிட்டார் பாருங்க...:icon_ush:

மு ராவின் "பேப்பர் மச்சி செய்வது எப்படி..." வாங்கிவிட்டீர்களா???:icon_b:

ஓஹோ கண்ணாமூச்சி ஆட்டம் இதுதானா?;)

எப்படி ராசா? எப்படி? எப்படி உங்களூக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது.. :confused:

என்னை ரொம்ப புகழாதிங்க சா ரா எனக்கு புகழ்ச்சி பிடிக்காது
:D:D:D:D:D

ஜானகி
04-04-2011, 02:07 PM
முக்கியமான ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்... சூடான விவாதம் தொடங்கினால், படித்து ரசிக்கத் தயார் என்றுதான் நான் சொல்ல நினைத்தேன்.....உமாமீனாவின் தட்டச்சுபோல என்னுடையதும் பழிவாங்கிவிட்டது....ஆளை விடுங்கப்பா....சமயலறை கலாட்டா போதாதா...இது வேறா எனக்கு...?

அன்புரசிகன்
05-04-2011, 06:22 AM
அங்கவை:-வணக்கம் நடுவரே...

பாரதியார்:-வணக்கம் அங்கவையே..

சங்கவை:-வணக்கம் நடுவரே,,,'

பாரதி:-வணக்கம் சங்கவையே....

வணக்கம் கூறிய பாரதியார்....
"ம்ம்,,,ஆரம்பியுங்கள் உங்கள் கச்சேரியை...
மன்றம் களைக் கட்டட்டும்,...",
என்றதும்..

சங்கவை:-பிரச்சனைகளுக்கு முழுக்காரணமும்
மருமகள்கள்தான் நடுவர் அவர்களே....

அதெப்படி . பக்கத்தில கொமா (,) போட்டதற்காக எப்படி நீங்ககள் சங்கவையை முதலில் பேசவிடலாம். முதலில் வணக்கம் சொன்னவர் தான் முதலில் ஆரம்பிக்கணும். :D :D :D

sarcharan
05-04-2011, 09:10 AM
அதெப்படி . பக்கத்தில கொமா (,) போட்டதற்காக எப்படி நீங்ககள் சங்கவையை முதலில் பேசவிடலாம். முதலில் வணக்கம் சொன்னவர் தான் முதலில் ஆரம்பிக்கணும். :D :D :D
.
பெரிய கண்டுபிடிப்பு....;)

உமாமீனா
05-04-2011, 10:12 AM
உ.மீ கோடிட்ட இடத்தை யாரு நிரப்புவா?
உங்கள் தமிழ் தட்டச்சு மறுபடியும் வேலை செய்யவில்லையா?இந்த பிரச்சனை உங்களுக்கு அடிக்கடி வருகிறது. இதை சரி செய்ய இதோ ஒரு வழி.

தேவையான பொருட்கள்

1. மூண்றாம் வகுப்பு மாணவனின் தமிழ் புத்தகம் 1

2. குமுதம் புத்தகம் 1

3. குங்குமம் புத்தகம் 1

4. பெவிகால் 500 மி கிராம்

5. ஜலம் 1 கப்

6. பிளேடு 1

முதலில் மேலே சொன்ன 3 புத்தக்ங்களையும் எடுத்து பக்கம் மாறாமல் படித்துபார்த்து அதில் ஏதேனும் ஆங்கில எழுத்துக்கள் இருந்தால்
பிளேடாள் சுரண்டிவிட்டு கிழித்து வைத்து கொள்ளவும். பிறகு கிழித்த ஏடுகளை அருவாமனையின் துணைக்கொண்டு சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும் அதன் பின் ஒரு பெரிய சட்டியை எடுத்து முன்பே நறுக்கி
வைத்துள்ள தமிழ் காகிதங்களை அதில் போடவும். அதில் 1 பெரிய கப்பில் உள்ள தண்ணிரை முழுவதுமாக ஊற்றவும்.

அடுப்பை பற்றவைத்து கொள்ளவும் அந்த சட்டியில் தமிழ் காகிதங்கள் கூழானபிறகு அடுப்பை நிறுத்தவும்.

ஓரளவு ஆறியபின் உங்கள் தட்டச்சுபலகையில் முழுவதுமாக எல்லா இடமும் படும்படி அந்த தமிழ் கூழை ஊற்றவும்.15 நிமிடங்களுக்கு பின்
உங்கள் தட்டச்சுபலகையை பாருங்கள் அதில் உள்ள ஆங்கில எழுத்துக்கள்
எல்லாம் விரட்டப்பட்டு தமிழ் எழுத்துக்கள் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கும்.

தமிழ் எழுத்துக்கள் நிரந்தரமாக உங்கள் தட்டச்சுபலகையில் இருக்க தேவையான அளவு பெவிகால் எடுத்து எழுத்துக்கள் மீது தடவிவிடவும்.
அவ்வளவுதான் தமிழ் தட்டச்சு ரெடி

கோபித்து கொள்ளாதிங்க உ.மீ ஜானகி மேடம் சமையல் செய்முறகளை
படித்ததால் வந்த வினை.நான் ஏற்க்கனவே சொன்னமாதிரி இகலப்பையை
பதிவிறக்கி கொள்ளுங்கள்.

இப்படியா என்னை போட்டு பார்ப்பது - என்ன ஒரு நல்ல எண்ணம் (சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது இது தானோ) இருக்கிற தட்டச்சி போர்டையும் தொலைச்சிட்டு போக என்னவெல்லாம் எப்படியெல்லாம் ஐடியா பண்றிங்க?

ரூம் போட்டு யோசிப்பியளோ?

எனக்கு வேணும் எனக்கு வேணும் எல்லாம் என் நேரம்- - ஏன்.....ஏன் இந்த கொல வெறி......இன்னைக்கு நா தான் உறுகாயா???

அன்புரசிகன்
06-04-2011, 12:54 AM
.
பெரிய கண்டுபிடிப்பு....;)

நீங்கள் பிடிக்கலையே... அதுவரைக்கும் அது பெருசு தானே... :D

sarcharan
06-04-2011, 06:02 AM
நீங்கள் பிடிக்கலையே... அதுவரைக்கும் அது பெருசு தானே... :D

:D:D:lachen001: