PDA

View Full Version : அண்ட்ராய்டு வகை அலைபேசிகளில் தமிழ்...



பாரதி
02-04-2011, 09:46 AM
அன்பு நண்பர்களே,
அண்ட்ராய்டு வகை அலைபேசியை நீங்கள் வைத்திருக்கிறீர்களா..? உங்கள் அலைபேசியில் இணையப்பக்கங்களில் தமிழை செம்மையாக காண வேண்டுமா..?
கீழ்க்கண்ட உலாவியை பதிவிறக்குங்கள்.


http://code.google.com/p/sett-browser/downloads/detail?name=SETT-Browser-1.1.1.apk எப்படி நிறுவுவது என்பதைக்காண

http://code.google.com/p/sett-browser சென்று பாருங்கள்.

தமிழ், சிங்கள எழுத்துருக்களை காணும் பொருட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

https://lh4.googleusercontent.com/_zuAuyyI9nVs/TVyU3mitCxI/AAAAAAAABMc/Xz_FNkdVsB8/s800/SETT%20Browser%20-%20Native%20Script1.1.1.png


இவ்வகை அலைபேசிகளில் தமிழில் தட்டச்ச..

http://www.appbrain.com/app/tamil-visai/com.tamil.visai தமிழ்விசை என்னும் மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

http://s3.appbrain.com/screen?id=-558818992584254491&i=1
மேலும் தமிழில் தட்டச்ச தமிழ் கீபோர்ட் எனும் மென்பொருளும் கிடைக்கிறது.


http://www.appbrain.com/app/tamil-keyboard/com.mak.tamil தேவைப்படும் நண்பர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

இம்மென்பொருட்களை ஆக்கி இலவசமாக வழங்கும் நண்பர்களுக்கு மன்மார்ந்த நன்றிகள்.

ஓவியன்
02-04-2011, 11:33 AM
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா, மிக அண்மையில்தான் அண்ட்ராய்டுக்கு மாறியுள்ளேன், அண்ட்ராய்டில் தமிழ் என்பதை சிந்திக்கத் தொடங்கிய நேரத்தில் உங்கள் பதிவு, மிக்க நன்றி.

நாஞ்சில் த.க.ஜெய்
02-04-2011, 06:58 PM
உதவும் வகையில் ஒரு அருமையான பதிவு .தொடருங்கள் நண்பரே

பாரதி
03-04-2011, 05:45 PM
கருத்துகளுக்கு நன்றிகள் ஓவியன், ஜெய்.

என்னிடம் அண்ட்ராய்டு இயங்குதளத்தைக்கொண்ட கைபேசி இல்லாததால் சோதிக்க இயலவில்லை. இயலுமெனில் பரிசோதித்துப்பார்த்த பின்னர் உங்கள் கருத்தைக்கூறுங்கள் ஓவியன்.

பாரதி
09-04-2011, 08:44 AM
கீழ்க்கண்ட சுட்டியில் அண்ட்ராய்டு வகை கைபேசிகளுக்கான உலாவி உட்பட பல இலவச மென்பொருட்களும், பொன்னியின் செல்வன், திருக்குறள், பைபிள் உள்ளிட்ட பல்வேறு இலவச மென்புத்தகங்களும் ஒருங்கே கிடைக்கின்றன.


https://market.android.com/search?q=tamil&so=1&c=apps

kanmanian
23-06-2011, 12:46 PM
nanri:)

மயூ
18-09-2011, 04:08 PM
மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவன் தனது இறுதியாண்டு செயற்றிட்டத்திற்காகச் செய்த செயலி இது.

யுனிகோடு இல்லாத தொலைபேசிகளில் யுனிகோட் எழுத்துகளை சிறப்பாக காட்டுகின்றது. அதாவது யுனிகோடு எழுத்துக்களை காட்டும் திறன் அன்ரொயிட்டுக் இல்லை ஆனால் TSCII, Bamini போன்ற எழுத்துருக்களைக் காட்ட முடியும். திரையின் பின்னால் யுனிக்கோடு எழுத்துருக்களை பாமினியாக மாற்றி திரையில் காட்டுகின்றார்கள். அருமையான செயலி.

ஆனாலும் எனது சாம்சங் ஏஸ் இல் வேலை செய்யவில்லை.