PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்...இறுதி பாகம்...ராஜாராம்
02-04-2011, 07:39 AM
பாண்டிச்சேரி.....காலை..8.0மணி

"என்னம்மா அபிராமி
நல்லா இருக்கியா?".

"ம்ம்ம்,,,நல்லா இருக்கேன்",

"இந்த ஒருமாசம் ஹாஸ்பிட்டலில் இருந்தது
உனக்கு எப்படி இருந்தது?".,,

"ம்ம்ம்...நல்லா இருந்துச்சு..",

"நல்லா தூங்கினியா?
கனவுல சித்தர் தொல்லையெல்லாம்
இல்லாமல் தூங்கினியா?".

"ம்ம்ம்ம்,,,.",

"இனிமே நீ எல்லாரைப்போலவும் சராசரி
பெண்ணாய் இருப்பாய்.
உனக்குள் இருந்த மனநோய்தாக்கம் போயிடுச்சி...
ஸோ தஎரியமா இரும்மா...",

"சரி....",

"இப்ப உன் காதுகளில் யாரும்
பேசுறாப்பல இல்லையே...".,

"இல்லை சார்...",

"நடந்ததையெல்லா, மறந்திரு...
இனி நடக்கப்போவதைமட்டும் எண்ணு...",

"சரி...சார்..".,
என்ற அபிராமி மெல்ல கண் அயர்ந்தாள்............
கண்களை மூடினாள்...

மருத்துவமனையில் அவளது அறையில் அவள்மட்டும்
கண் அயர்ந்திருக்க...

"அபிராமி....அபிராமி,....",
அவள் காதுகளில் மீண்டும் அந்தசிவனாடிசித்தனின் குரல்...
சட்டெனக் கண்விழித்தவளுக்கு
பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது..

"அபிராமி...நல்லா இருக்கியா?
உனக்கு ஒன்னும் ஆகாது...
உன்னை யாரும் எதுவும் பன்னமுடியாது...
நீ சித்தர்களான நாங்க வளர்ந்த்தப் பொண்ணு",
என்றபடி அவள் கண் எதிரே நிஜாமகாவே
நின்றிருந்தார்..வயோதிகர் ஒருவர்.

சாந்தமான கண்கள்...
முதுமையைக்காட்டும் நிரைமுடிகள்...
நெற்றி நிரைய திருநீரு...
மத்தியில் குங்குமம்....
காவி உடைதரித்த அவரது கையில்
ஒரு வேப்பங்குச்சியும் அதன் நுனியில்
செவ்வாடைக் கட்டியிருக்க...
அன்றொருநாள் அவள் கனவில்
கண்ட அதே முதியவர்,அவளதுக் கண்ணெதிரே.
ஆச்சரியமும்,
அதிர்ச்சியும் கலந்தப் பார்வையோடு
கண்விழித்தவளை,
அன்போடு
தலையை வருடினார்...

"இது நெஜமா?
இல்ல எனக்குமட்டும் தென்படுதா?",
பதறிய அபிராமியை மீண்டும் அன்போடு தடவிய அவர்,

"நான்தான் சிவனாடிசித்தன்...
நீ இப்பபார்ப்பது உண்மை...
நிஜம்....
இவையெல்லாம் சாதாரண மக்களுக்கு புரியாத
தெய்வ நிகழ்வுகள்",
அந்த சித்தரின் வார்த்தைகள் அவளது புருவங்களை
உயரச்செய்தன.

"ஏன் என்னையே சுத்துசுத்தி வரீங்க...
எனக்கு பயமா இருக்கு...
என்ன பைத்தியம்னு சொல்லி
இங்க கூட்டியாந்திருக்காங்க...
இதுல இப்ப நீங்கவேற என்னையக் குழப்பாதீங்க...",
என்றவள்

"போயிடுங்க...இங்கயிருந்துப் போயிடுங்க...
டாக்டர்...பாட்டி...எல்லாரும் இங்கவாங்க...",
சத்தமிடத்தொடங்கினாள்.

"அம்மாடி நீ கத்துவது யாருக்கும் கேட்காதும்மா...:",
தெய்வீக சிரிப்புடன் ,
கூறிய அந்த வயோதிகர்

"நீ உலகிற்கு சொந்தமனவள்...
நான் உன் அப்பா...
என்னுடைய சித்துவிளையாடல்கள் எல்லாம்
உன்னுள் ஐக்கியம் ஆகிவிட்டது..
அன்னை பிரத்தியங்கிராகாளி அருள்
உன்னுள் உறைந்துவிட்டது...
நீ வாக்கு சொல்லும் காலம் வந்துவிட்டது..",
என்று அவளது தலையி வேம்புக்குச்சியினை வைத்து..
மெல்ல முனுமுனுத்தார்..

அபிராமியின் உடல் சிலிர்க்கத்தொடங்கியது...
அவளுக்குள் ஏதோ ஒருப் பரவசம் ஏற்பட்டது...
அவளது மனம் அமைதியானது....
ஏதேதேதோ உணைவுகள்
அவளுக்குள் உருவானது...

"கலியுகமும் பிறந்ததுவே.

பஞ்சபூதங்களும்...'
எல்லைமீறி...
உலகையே ஆட்டுவிக்கும்....
காலம் வரும்...

நிலமதுவும் நடுங்கிடுமே...
சீற்றம்கொண்ட கடல் அலைகள்
கரைதாண்டும் காலமிது...
தர்மத்திற்கும்...
அதர்மத்திற்கும் போர்களமும்
உருவாகும்
நேரமிது...
இறைசக்தி பிடித்தார் வாழ்க்கை
துயர் இன்றி சீர்படுமே....

சிவனாடிசித்தன் எனது
கற்றவித்தை உன்னுள்ளே..
என்றென்றும் ஒளிவிடுமே....
மணவாழ்க்கை ஏதுமின்றி
உன் வாழ்வும் அமைந்திடுமே...
தொலைநோக்கு வட்டத்தில்
சுழன்றிடுமே உன்வாழ்கை...

விஞ்ஞானம் கண்டறியும்
மருத்துவமோ...
மெய்ஞானம் கண்டறியும்
மஹத்துவமோ...
காலதேவன் விடைசொல்லும்
காலம் வரும்...
உன் வாழ்வு எதுவென்று...
உன்மக்கள் அறிந்துவிடும்
காலமதுவும் தொலைவில் இல்லை...............................",

என்ற சிவானடி சித்தர் மெல்ல
அபிராமியின் தலையில் தன்கைகளை
வைத்து ஆசிர்வதித்தார்

பிரம்மை பிடித்தவளாய் அவரையே
உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்...அபிராமி.

சிரித்தபடியே மெல்ல அவர் அறையைவிட்டு
வெளியேறினார்...
ஆம்...அவையாவும் அவள் கண்முன்
நிகழ்ந்த அதிசய காட்சிகள்...சிலமாதங்களுக்குப் பின்...............
திருச்சி....தெப்பக்குளம்...

"ஏன்?ஏன்டி கல்யாணம் பன்னிக்கமாட்டேன்னு
சொல்றே..."
ஆத்டிரமாய்க் கேட்டான் பிரகாஷ்.

"எனக்குப் பிடிக்கலை...",
ஒருவரியில் பதில்கூறினாள் அபிராமி.

"பிடிக்கலைன்னா?
என்னைய பிடிக்கலையா?
அப்படின்னா,
என்னைய காதலிச்சதெல்லம் பொய்யா?",

"உண்மைதான்",

"பிறகு ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றே...",

"புடிக்கலைன்னா விடுங்க...".,

"போடி நீயெல்லாம் ஒருமனுஷியா?
ச்ச்சீ....",
ஆத்திரத்தில் வார்த்தைகளைக்
கொட்டினான் பிரகாஷ்,.
அவனுடன் தர்க்கம் செய்த அபிராமியோ
மவுனாமக கலங்கியக்கண்களுடன்
நின்றிருந்தாள்.

"தம்பி..நீங்க வீட்டுக்கு போங்க
அபிக்கிட்ட நான் பேசிக்கிறேன்...",
அவனை சமாதனாம் செய்து அனுப்பினாள்
அபியின் பாட்டி மங்களம்.....

இரவு....11.00மணி....

பிராகாஷின் செல்ஃபோன் அழைப்புமணி ஒலித்தது.
"ஹலோ....",
என்றான்..

"நான்தான் அபி பேசுறேன்,,..",
மறுமுனையில் அபிராமி.

"என்ன விஷயம் சொல்லு...",
என்றான் கடுமையாக.
மருத்துவமனையில் தன்னை சிவானடிசித்தர்
சந்தித்த அதிசயத்தை
அவனிடம் கூறினாள்..

"மணவாழ்க்கை ஏதுமின்றி
உன் வாழ்வும் அமைந்திடுமே...
தொலைநோக்கு வட்டத்தில்
சுழன்றிடுமே உன்வாழ்கை...
என்று உரைத்த அந்த வாக்கினை பிரகாஷிடம் கூறினாள்.

"இதுக்காகத்தான் கல்யாணம்
வேண்டாம்னு சொன்னியா?",
என்று பிரகாஷ் கேட்டதும்,,

"ஆமாம்...அதனால்தான் கல்யாணம் வேண்டாம்னு
சொன்னேன்...பயமா இருக்கு",
என்றவளிடம்,

"நாமக் கும்பிடும்சாமி நமக்கு நல்லடுதான் செய்யும்...
ஆண்டவன் மேலே பாரத்தைப்போட்டு...விட்டு
நாம் கல்யாணம் பன்னிப்போம்...
நடக்கிறதை ஆண்டவன் பார்த்துப்பான்",.
என்றான் பிரகாஷ்.

அவனது வார்த்தைகள் அவளுக்கு சற்றே
அமைதியை தந்தது....


சிலநாட்களுக்குப்பின்.....

அபிராமிக்கும்,பிரகாஷிற்கும்
நிச்சயதார்த்தம் வெகு விமர்சியாய் நடந்தது...

"அவளுக்கு இருப்பது மனநோய்தான்...
கல்யாணயானத்திற்கு பிறகு எல்லாம்
சரியாயிடும்....
ஆஸ்பத்திரிக்கு சித்தர் வந்தாரு பேசினாரு...
அப்படி அவல் சொல்வதெல்லாம்
அவளுக்குமட்டும் தோன்றும் பிரம்மை...
அது ஒருவகை மனவியாதி...
ஸோ,,,நீ தைரியமா இரு பிரகாஷ்...",
டாக்டர் மணி பிரகாஷிற்கு ஊட்டமான வார்த்தைகளை
தந்த மறுநிமிடம்...

"சார்,,,அந்தப்பொண்னு அபிராமி
சொல்றதெல்லாம் உண்மைத்தான்...
ஹாஸ்பிட்டல் கண்கானிப்புக் கேமிராவில்
அபிராமியின் அறையில் ஒருவர் அபிராமியுடன்
பேசுவதுப்போல் காட்சிப் பதிவாகி இருக்கு...
ஆனால் அவரது உருவம்
தெளிவாக தெரியவில்லை..
ஓவர் லைட்டிங்கில் தெரிகிறது...",
என்று பதட்டாமாய் கூறியபடி...
தனது லாப்ட்டாப்பில் இருந்த அந்த வீடியோக் காட்சியினை
போட்டுக்காண்பித்தார்
டாக்டர் மணியின் உதவிமருத்துவர்.

அபியின் அறையில்,
அவளது முகம் தெளிவாகவும்,..

ஒளிவடிவில்..
சற்று தெளிவின்றி
ஒரு உருவம் நீண்டநேரம்

அவளோடு உரையாடுவதுப்போலவும்,
அவளது சிரத்தில் ஒருவேம்புக்குச்சியினாலும்,
தன் கரத்தாலும்,
ஆசிர்வதிப்பதுபோலும்,

பதிவாகியிருந்த அந்தக் காட்சி
புதுமாபிள்ளை ஆகப்போகும் பிரகாஷின்
வயிற்றிலும்...
டாக்டர்மணீயின் வயிற்றிலும்...
புளியைகரைத்தாற்போல் ஆக்கியது...

மீண்டும் மீண்டும்,
அதேக் காட்சியினை போட்டுப்பார்த்த
மருத்துவர் மணி,

"நமக்குமேல ஏதோ ஒரு சக்தி இருக்கு....",
என்று ஒத்துக்கொண்டதுப்போல்
தலையசைத்தார்..

அவருடைய அந்த
வார்த்தை
பிராக்காஷிற்கு ஆச்சரியத்தை தந்தது,..

"கடவுளே....
எனக்கும் அபிக்கும் நல்லபடியாக் கல்யானம் ஆகனும்..
நாங்க நல்லாவாழனும்....
நீ எங்க வாழ்ககையை சிதைக்கமாட்டேன்னு
எனக்கு நம்பிக்கை இருக்கு...",
மனதுக்குள் தன்னம்பிக்கையுடன்
வேண்டினான் பிரகாஷ்.

"பிரகாஷ் இந்த விஷயம் அபிக்கு
தெரியவேண்டாம்....
அவளைப்பொறுத்தவரை இதெல்லாம்
பிரம்மையானது என்றே இருக்கட்டும்...",
என்று மணி கூற...
"ஓகே...மாமா..",
சற்றேக் குழப்பத்துடன் தலையசைத்தான் பிகாஷ்.....""கலியுகமும் பிறந்ததுவே.

பஞ்சபூதங்களும்...'
எல்லைமீறி...
உலகையே ஆட்டுவிக்கும்....
காலம் வரும்...

நிலமதுவும் நடுங்கிடுமே...
சீற்றம்கொண்ட கடல் அலைகள்
கரைதாண்டும் காலமிது...
தர்மத்திற்கும்...
அதர்மத்திற்கும் போர்களமும்
உருவாகும்
நேரமிது...
இறைசக்தி பிடித்தார் வாழ்க்கை
துயர் இன்றி சீர்படுமே......

இயற்கை அதன் சீற்றங்களை
வளர்ந்துவிட்ட விஞ்ஞானம்
தடுத்திடுமோ?...

கலியுகஆட்சிதனில்
அதர்மங்கள் தலைதூக்கும்...
அதர்மங்கள் தலைதூக்கும்
வேலைகளில்...
மெய்யனா அடியராய்...
மெய்யான சித்தராய்...
இறைஷக்தி அவதரிக்கும்...

அவர்கள் வழி....
கண்களுக்குப் புலப்படும்
காட்சிகள் ஒன்றாய்...
தோன்றிடுமே....

தோன்றிடும் காட்சிகள்....
காணுவார் பார்வைக்கு
விஞ்ஞானமாய் தோன்றிவிடும்..
மெய்ஞானமாயும் தோன்றிவிடும்...

விஞ்ஞானமோ?
மெய்ஞானமோ?
அவன் சக்தி ஏதும்மின்றி....
இவ்வுலகில் ஏதும்மில்லை.................."

கண்ணாமூச்சி ஆட்டம்..................................................முற்றும்

ஜானகி
02-04-2011, 01:56 PM
கண்ணாமூச்சி ஆட்டம் என்னவோ முடிந்துவிட்டது...எங்கள் கண்களில் கட்டியுள்ள கட்டு அவிழ்க்கப்படாமல் இருப்பது போன்ற ஒரு உணர்வு.... என்றாலும் நீரோட்டம் போன்ற எழுத்து நடையும், கற்பனை ஓட்டமும் பாராட்டப்படவேண்டியவைதான்.

அடுத்தது எப்போது...?

நாஞ்சில் த.க.ஜெய்
02-04-2011, 06:53 PM
முடியாத கண்ணாமூச்சி ஆட்டம் முடிந்துவிட்டது என்று கூறுவது முடியாதது ...அருமையான கதையினை கூறி அதன் வரிகளில் என்னை பயணிக்கவைத்து விட்டீர் ...ஆனால் இறுதிவரிகளை முடித்திருக்கும் விதம் இந்திரா சௌந்த ராஜனின் கதையினை போல் மீண்டும் ஒரு பாகம் போல் தொடரும் தொடர்ச்சிக்காகவா ? நண்பரே ...

ராஜாராம்
03-04-2011, 05:11 AM
நன்றி
ஜானகி அக்காவிற்கும்,
ஜெய் அவர்களுக்கும்

Nivas.T
03-04-2011, 07:08 AM
என்ன ராரா

முற்றும்னு போட்டுடீங்க
முடிவு என்னனு சொல்லலியே

அவங்க கல்யாணம் நடந்துச்சா இல்லியா?
அத மட்டுமாவது சொல்லி இருக்கலாம்ல

இருந்தாலும், கதை அற்ப்புதம் ராரா
கதைக்களம், கதையில் நடக்கும் சம்பவங்களை கூறிய விதம், கதையின் நாயகன் செயல்கள், தொடர்ந்து விழுந்த முடிச்சிகள், முச்சுகள் ஒவ்வொன்றாய் அவிந்த விதம் என்று அனைத்தும் அருமை.

பாராட்டுகள் ராரா

முரளிராஜா
03-04-2011, 08:28 AM
இந்த கதை முடிந்து போனாலும் இந்த கதையை நீ எங்களுக்கு சொன்னவிதம்
மிகவும் அருமை ராரா. உன் அடுத்த கதைக்காக நாங்கள் அனைவரும்
காத்திருக்கிறோம்

p.suresh
03-04-2011, 08:57 AM
கதை என்னைக் கட்டிப் போட்டு விட்டது.அதற்கு பரிசாக

கண்ணாமூச்சி ரே...ரே... என்பதற்கு பதிலாக இனி

கண்ணாமூச்சி ரா...ரா...என்று மாற்றுகிறேன்.:D:D:D

ஜானகி
03-04-2011, 09:13 AM
கதை என்னைக் கட்டிப் போட்டு விட்டது.அதற்கு பரிசாக

கண்ணாமூச்சி ரே...ரே... என்பதற்கு பதிலாக இனி

கண்ணாமூச்சி ரா...ரா...என்று மாற்றுகிறேன்.:D:D:D


சபாஷ் ! சரியான பரிசு ! நானும் வழிமொழிகிறேன்.

Nivas.T
03-04-2011, 10:24 AM
கண்ணாமூச்சி ரா...ரா...என்று மாற்றுகிறேன்.:D:D:D

:confused:
கண்ணாமூச்சு எங்க வரணும்??? :rolleyes::D

p.suresh
04-04-2011, 02:29 AM
:confused:
கண்ணாமூச்சு எங்க வரணும்??? :rolleyes::D

சூப்பர் கமெண்ட்.நிவாஸ்,மீக்கு தெலுகு ஒச்சுனா?:lachen001::lachen001::lachen001:

sarcharan
04-04-2011, 05:35 AM
அமீர் பட க்ளைமாக்ஸ் மாதிரி கதையை முடிச்சிட்டீங்க.... நல்ல கதை ரா ரா. பாராட்டுக்கள்.