PDA

View Full Version : இரண்டும் ஒன்றுதான்



M.Jagadeesan
01-04-2011, 12:58 PM
கடவுளும், ஊழலும் ஒன்று
இரண்டும் இல்லாத இடமில்லை
என்பதால்

கடலும், பெண்மனமும் ஒன்று
இரண்டும் ஆழம் காணமுடியாது
என்பதால்

அடுப்பில் வைத்த பாலும், ஆளான பெண்ணும் ஒன்று
இரண்டையும் கவனத்துடன் காக்கவேண்டும்
என்பதால்

தொடுக்கப்பட்ட கணையும், விடுக்கப்பட்ட சொல்லும் ஒன்று
இரண்டும் மீண்டும் திரும்பாது
என்பதால்

துடுப்பில்லாத படகும், துணையில்லாத ஆணும் ஒன்று
இரண்டும் கரைசேர முடியாது
என்பதால்.

நாஞ்சில் த.க.ஜெய்
01-04-2011, 01:18 PM
கடவுளும், ஊழலும் ஒன்று
இரண்டும் இல்லாத இடமில்லை
என்பதால்உண்மைக்கும் பொய்க்கும் உள்ள இடைவெளி ........


கடலும், பெண்மனமும் ஒன்று
இரண்டும் ஆழம் காணமுடியாது
என்பதால்அவசியம் இல்லாத உண்மைகள் ....


அடுப்பில் வைத்த பாலும், ஆளான பெண்ணும் ஒன்று
இரண்டையும் கவனத்துடன் காக்கவேண்டும்.
என்பதால்இக்கால பெண்களுக்கு பொருந்தா வரிகள் அவள் பெற்றோரின் வலிகள்...


தொடுக்கப்பட்ட கணையும், விடுக்கப்பட்ட சொல்லும் ஒன்று
இரண்டும் மீண்டும் திரும்பாது
என்பதால்நாவின்மையின் வலிமையை கூறும் வரிகள் .....


துடுப்பில்லாத படகும், துணையில்லாத ஆணும் ஒன்று
இரண்டும் கரைசேர முடியாது
என்பதால். குடும்ப வாழ்க்கையில் விடுகொடுக்கும் மனதின் அவசியம் ....

உண்மையின் கவிதை வரிகள் ...தொடருங்கள் நண்பரே....

முரளிராஜா
01-04-2011, 01:27 PM
தமிழ் மன்றமும், ஜெகதீசன் ஐயாவும் ஒன்று
இரண்டும் எங்களுக்கு எப்பொழுதும்
நல்விசயத்தை மட்டும் தருபவை என்பதால்

உங்கள் பயணம் இனிதாக அமைந்திருக்கும் என் நம்புகிறேன்

Nivas.T
01-04-2011, 01:38 PM
அருமையான எடுத்துக்காட்டுகள்

சமமான ஒப்பீடு

நல்ல கவிதைங்க
மீண்டும் மன்றம் வருகை மகிழ்ச்சி

தொடருங்கள் உங்கள் தொகுப்புகளை

M.Jagadeesan
01-04-2011, 01:48 PM
என் பயணம் இனிதே அமைந்தது. நண்பர்கள் த.க.ஜெய், முரளிராஜா, நிவாஸ்.டி. பாராட்டுக்களுக்கு நன்றி!

பிரேம்
11-04-2011, 12:39 PM
நண்பர்கள் இட்ட பின்னூட்டமும் நான் சொல்ல நினைத்ததும் ஓன்று..
கவிதை அருமை சார்..சூப்பர்...
உங்கள கிளறினா நிறையா விஷயம் வெளி வரும் போல இருக்கே..!!

அருமை..அருமை.. ! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..! :)

M.Jagadeesan
11-04-2011, 01:00 PM
இளம்புயல் பிரேம் அவர்களுக்கு நன்றி!

இளசு
12-04-2011, 05:51 AM
பாராட்டுகள் ஜெகதீசன் அவர்களே..

நாஞ்சில் ஜெய் அழகாக அலசிவிட்டார்.


பெண் இடையும் இறைவனும் ஒன்றுதான் என்ற போக்கிரித்தனமான உவமைகளைவிட..

நீக்கமற உலவும் ஊழலை ஒப்பிட்டது பொருத்தமே..


காலம்காலமாய் கடல்மனம், பொங்குபால், மடிநெருப்பு என பெண்களைப் பற்றிச் சொல்வது, நடப்பது நடைமுறை... ஒப்புகிறேன்.
ஜெய் சொல்வதுபோல் எதிர்காலம் மாறும் என நம்புகிறேன். மாறவேண்டும் என விரும்புகிறேன்..

( ஆண்மனமும் கடல்தான், ஆண் பிள்ளையும் பால்தான் என மாறிவிடுமோ????)


துடுப்பில்லாப் படகு -- விதிவிலக்குகளைத் தவிர மற்றவருக்கு அரும் உண்மை.

M.Jagadeesan
12-04-2011, 06:16 AM
பாராட்டுகளுக்கு நன்றி இளசு அவர்களே!

sarcharan
13-04-2011, 07:37 AM
கடவுளும், ஊழலும் ஒன்று
இரண்டும் இல்லாத இடமில்லை
என்பதால்

கடலும், பெண்மனமும் ஒன்று
இரண்டும் ஆழம் காணமுடியாது
என்பதால்

அடுப்பில் வைத்த பாலும், ஆளான பெண்ணும் ஒன்று
இரண்டையும் கவனத்துடன் காக்கவேண்டும்
என்பதால்

தொடுக்கப்பட்ட கணையும், விடுக்கப்பட்ட சொல்லும் ஒன்று
இரண்டும் மீண்டும் திரும்பாது
என்பதால்

துடுப்பில்லாத படகும், துணையில்லாத ஆணும் ஒன்று
இரண்டும் கரைசேர முடியாது
என்பதால்.

மிகவும் உண்மை அய்யா! :icon_b:

கூடவே நண்பர் ஜெய்யின் கருத்துக்களையும் ஆமோதிக்கின்றேன்

M.Jagadeesan
13-04-2011, 08:10 AM
நன்றி சா.ரா.

உமாமீனா
13-04-2011, 09:51 AM
சூப்பர் தொடரட்டும்............

M.Jagadeesan
13-04-2011, 10:21 AM
நன்றி உ.மீ