PDA

View Full Version : கண்டிராத கோலங்களில்



சுடர்விழி
01-04-2011, 09:02 AM
அடி வாங்கி அழுது கொண்டிருக்கும் பாரதி
ஓடி ஒளிந்து விளையாடும் ஒளவை
தூக்கக் கலக்கத்தில் கொட்டாவியுடன் கிருஷ்ணன்
காற்சிலம்பைக் காணாமல் தேம்பும் கண்ணகி
எழுத்தாணியால் முதுகு சொறியும் வள்ளுவன்
கைத்தடியால் அடுத்தவனை அடிக்கும் காந்தி
ரோஜா இதழைக் கசக்கி எறியும் நேரு

அழைத்தவுடன் மேடையேற
வரிசையில் காத்தபடி
கண்டிராத கோலங்களில்
இவர்கள்..................

பெற்றவர் பெருமைக்காக
யாரென்ற அறிமுகம்கூட
அல்லாதவரின் முகம் அணிந்து
மனனம் செய்தது
மறக்காமாலிக்க வேண்டி
உருப் போட்டபடி
’மாறுவேடப்போட்டி’யில்
பரிசுக் கனவுகளுடன்
காத்திருக்கும் பிஞ்சுகள் !!!



-சுடர்விழி


நன்றி சிங்கப்பூர் தமிழ்முரசு !

ஜானகி
01-04-2011, 09:29 AM
கொண்டதே கோலம் ! கண்டதே காட்சி ! கண்முன் விரிந்ததே மீண்டும் !

புகைப் படங்களுடன் வெளியிட்டிருந்தால் இன்னும் ரசிக்கலாம்.

Nivas.T
01-04-2011, 11:42 AM
அதுதான் மாறுவேடம் என்றாகிவிட்டதே
பிறகு என்ன? என்று நம்மை நாமே ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டியதுதான்

கவிதை அருமை சுடர்விழி

பாராட்டுகள்

நாஞ்சில் த.க.ஜெய்
01-04-2011, 11:50 AM
மாறுவேடம் புனைந்த குழந்தைகளின் பரிசு கிடைக்குமா?கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு...கண்டிராத கோலங்களில்

கலாசுரன்
02-04-2011, 06:24 AM
நல்லா இருக்கு இந்தக் கவிதை ...!!!

மழலைகளின் குணத்தில் இவர்கள் அனைவரும் மாறிவிடவேண்டியது தான் அவர்கள் மகிழட்டும் ..:)
வாழ்த்துக்கள்...:)

சுடர்விழி
04-04-2011, 01:05 AM
பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் !!

இளசு
11-04-2011, 09:14 PM
சுடர்விழிப் பார்வை இருந்தால்தான்
இப்படி ஒரு கவிதை சாத்தியம்..


விவரித்த காட்சியை கண்முன் தோன்றவைத்த
படக்கருவிக் கவிதை..

பாராட்டுகள் சுடர்விழி...

சுடர்விழி
07-05-2011, 05:33 AM
நன்றி இளசு அவர்களே !!

Ravee
07-05-2011, 08:46 AM
கொண்டதே கோலம் ! கண்டதே காட்சி ! கண்முன் விரிந்ததே மீண்டும் !

புகைப் படங்களுடன் வெளியிட்டிருந்தால் இன்னும் ரசிக்கலாம்.






http://www.thehindu.com/multimedia/dynamic/00297/28dcpwkm_daffodils__297840e.jpg

அடி வாங்கி அழுது கொண்டிருக்கும் பாரதி
ஓடி ஒளிந்து விளையாடும் ஒளவை
தூக்கக் கலக்கத்தில் கொட்டாவியுடன் கிருஷ்ணன்
காற்சிலம்பைக் காணாமல் தேம்பும் கண்ணகி

எழுத்தாணியால் முதுகு சொறியும் வள்ளுவன்
கைத்தடியால் அடுத்தவனை அடிக்கும் காந்தி
ரோஜா இதழைக் கசக்கி எறியும் நேரு

அழைத்தவுடன் மேடையேற
வரிசையில் காத்தபடி
கண்டிராத கோலங்களில்
இவர்கள்..................

பெற்றவர் பெருமைக்காக
யாரென்ற அறிமுகம்கூட
அல்லாதவரின் முகம் அணிந்து
மனனம் செய்தது

மறக்காமாலிக்க வேண்டி
உருப் போட்டபடி
’மாறுவேடப்போட்டி’யில்
பரிசுக் கனவுகளுடன்
காத்திருக்கும் பிஞ்சுகள் !!!


http://www.tribuneindia.com/2004/20040516/chd14.jpg


* சுடர்விழி *

அம்மாவின் ஆசை .... படத்துடன் போட்டுவிட்டோம்

lolluvathiyar
07-05-2011, 01:01 PM
கவிதை அருமை. மாறு வேட போட்டி நாடகம் இவை எல்லாம் குழ ந்தைகளை செய்ய படும் கொடுமை. பள்ளி கூடங்களின் வருமானத்திற்க்கு மறைமுகமாக போடும் முகமூடி. அதை அற்புதமாய் சொன்ன கவிதை பாராட்டுகுறியது


யாரென்ற அறிமுகம்கூட
அல்லாதவரின் முகம் அணிந்து
எனக்கு மிகவும் பிடித்த வரி அப்படியே பக்கா உன்மை.

meera
08-05-2011, 01:42 AM
ஆஹா அருமையான கவிதை. எல்லா பெற்றோருக்கும் என் குழந்தை இதை செய்ய வேண்டும்,அதை செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகம். குழந்தைகளுக்கு இந்த சரித்திரம் படைத்த சாதனையாளர்களை அறியத்தருவது அவசியம் தான். ஆயினும் எத்தனை பெற்றோர் இதை செவ்வனே செய்கிறார்கள்??.பாரதியின் மகிமையோ, நேருவின் பாசமோ, ஒளவையின் அசைக்க முடியா எழுத்தைப் பற்றியோ எத்தனை குழந்தைக்களுக்கு சொல்லித்தருகிறோம். அவசர உலகில் அனைத்தும் அவசரமாய் அரங்கேற்றப்படுகிறது..



ரவி படங்களுடன் காணகொடுத்தது கவிதைக்கு அழகு:icon_b:

கவிதை அருமை சுடர்விழி

கீதம்
09-05-2011, 02:32 AM
மனம் ஒவ்வாக் காட்சியைக் கவிதையாக்கி மன்றத்தில் படைத்த சுடர்விழிக்கும், கண்கொள்ளாக் காட்சியைப் புகைப்படமாய்ப் பதிந்த ரவிக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

கவிதை சொல்லும் கருத்து சிந்திக்கவைக்கிறது. சிறப்புப் பாராட்டுகள் சுடர்விழி.

சுடர்விழி
09-05-2011, 08:58 AM
படத்துடன் வெளியிட்டு கவிதைக்கு உயிர்ப்பு கொடுத்த ரவீ அவர்களுக்கு என் நன்றிகள் !!!

சுடர்விழி
09-05-2011, 09:00 AM
கவிதை அருமை. மாறு வேட போட்டி நாடகம் இவை எல்லாம் குழ ந்தைகளை செய்ய படும் கொடுமை. பள்ளி கூடங்களின் வருமானத்திற்க்கு மறைமுகமாக போடும் முகமூடி. அதை அற்புதமாய் சொன்ன கவிதை பாராட்டுகுறியது


என்னுடைய கருத்தும் அது தான்...குழந்தைகளுக்கு செய்யப்படும் கொடுமை என்பதில் கொஞ்சமும் மிகையல்ல.....பாராட்டுக்கு நன்றி !!

சுடர்விழி
09-05-2011, 09:07 AM
குழந்தைகளுக்கு இந்த சரித்திரம் படைத்த சாதனையாளர்களை அறியத்தருவது அவசியம் தான். ஆயினும் எத்தனை பெற்றோர் இதை செவ்வனே செய்கிறார்கள்??.பாரதியின் மகிமையோ, நேருவின் பாசமோ, ஒளவையின் அசைக்க முடியா எழுத்தைப் பற்றியோ எத்தனை குழந்தைக்களுக்கு சொல்லித்தருகிறோம். அவசர உலகில் அனைத்தும் அவசரமாய் அரங்கேற்றப்படுகிறது..

கவிதை அருமை சுடர்விழி

சரித்திரம் படைத்த சாதனையாளர்களை அறியத்தருவதையும் மீறி பிள்ளைகள் போட்டியில் வென்றாக வேண்டும் என்பது மட்டுமே குறியாகிப் போனதுதான் வருத்தமான விஷயம்...

பாராட்டுக்கு நன்றி மீரா !!

சுடர்விழி
09-05-2011, 09:08 AM
மனம் ஒவ்வாக் காட்சியைக் கவிதையாக்கி மன்றத்தில் படைத்த சுடர்விழிக்கும், கண்கொள்ளாக் காட்சியைப் புகைப்படமாய்ப் பதிந்த ரவிக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

கவிதை சொல்லும் கருத்து சிந்திக்கவைக்கிறது. சிறப்புப் பாராட்டுகள் சுடர்விழி.

நன்றி கீதம் !!