PDA

View Full Version : கருணையின் பொட்டலம்..



கலாசுரன்
31-03-2011, 04:39 AM
*
சற்று முன்
உங்கள் முன்னால்
வைத்துச் சென்ற
கருணையின் பொட்டலத்தை
திறவாதிருங்கள்

அதனுள்
சதாகாலமும்
இளித்துக்கொண்டிருக்கும்
விலங்கொன்றை
பதுக்கி வைத்திருக்கிறேன்

அது
உங்களை
எதுவும் செய்து விடலாம்

அப்படி
உங்கள் முன்னிருக்கும்
கண்ணாடி பிம்பத்தில்
அது
நிரம்பி நிற்கக்கூடும்

பிறகு
அதை
அடிக்கடிப்
பார்க்கவேண்டுமென்ற ஆசை
உங்களை
துரத்திக்கொண்டே
இருக்கும்..

கவனம் ..!
*
***
கலாசுரன்

கீதம்
31-03-2011, 05:07 AM
முன்னேயொரு பொட்டலம்வைத்து
முன்னெச்சரிக்கையும் கொடுத்துவிட்டீர்!
இனியென்ன?
பிரித்துப் பார்ப்பதுதான் முதல் வேலை!
இப்படி எச்சரித்துத்தானே
விலக்கப்பட்ட கனியின்பால்
விருப்பமுண்டானது ஆதிமனிதருக்கு?

கவிதை நன்று கலாசுரன் அவர்களே.

சுடர்விழி
01-04-2011, 09:42 AM
களவு கொல்லும் கருணைப் பொட்டலம் அருமை கலாசுரன் அவர்களே! வாழ்த்துக்கள் !!

Nivas.T
01-04-2011, 10:16 AM
ஆவலாய் ஓடிவந்தேன்
பிரித்துப் பார்க்க
கருணையின் பொட்டலத்தை
விலங்கை கண்டு விலகிக்கொண்டேன்
ஏமாற்றம்தான்
விலங்கை கண்டு அல்ல
கருணையைக் காணாமல் தான்


கவிதை அருமை கலாசுரன்
பாராட்டுகள்

நாஞ்சில் த.க.ஜெய்
01-04-2011, 12:48 PM
கருணையின் பொட்டலம் வரிகளை புரிந்தும் புரியாமல் ....:confused:

இளசு
11-04-2011, 06:14 AM
அன்பு எங்கே முடிகிறது?
ஆக்கிரமிப்பு எங்கே தொடங்குகிறது?


கருணைப்பசுத்தோலுள்
இளித்துக்கூடுபாயும் புலி...

நம்பிக்கைக்கும் கவனநிலைக்கும்
இடையில் நகர்கிறது வாழ்க்கை..


பாராட்டுகள் கலாசுரன் அவர்களே..

கலாசுரன்
16-04-2011, 04:01 AM
கவிதை நடையிலேயே ஒரு பின்னூட்டம் ...!!
மிக்க நன்றி கீதம் :)

பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சுடர்விழி..:)

எனது இதழ்களிநோரம் புன்னகை மலரச் செய்த பின்னூட்டம் ..!!
மிக்க நன்றி நிவாஸ் :)

அது உங்கள் கையில் தான் ஜெய், முயற்சி கைகூடும் :)
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி :)


கருணைப்பசுத்தோலுள்
இளித்துக்கூடுபாயும் புலி...

நம்பிக்கைக்கும் கவனநிலைக்கும்
இடையில் நகர்கிறது வாழ்க்கை..

அது சரிதான் இளசு, நல்ல வரிகள் ..!!!
உங்களுக்கு ஒரு பிரத்யேக நன்றி..:)

சசிதரன்
16-04-2011, 04:25 PM
திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் வைக்கப்படுவதுதானே கருணையின் பொட்டலங்கள்... எச்சரிக்கையை யார் பொருட்படுத்த போகிறார்கள்...

நல்ல கவிதை கலாசுரன்... :)

கலாசுரன்
22-04-2011, 03:50 AM
மிக்க நன்றி சசிதரன் ..:)