PDA

View Full Version : *முறை மாற்றம்...!*

pkarthi28
30-03-2011, 06:13 AM
பக்கத்துக்கு வீட்டில் ஓர்
பத்து வயது சிறுமி,
‘அங்கிள்’ என்றழைப்பாள் என்னை
அழகாக…

சந்தேகங்கள் கேட்டறிவாள்
துடிப்புள்ள மாணவியாக…
வேண்டும் பொருளுக்கு
சண்டையிடுவாள் - உரிமையுள்ள சகோதரியாக…

ஓர் நாள்,
ஏதோ வேலையில் இருந்த என்னை
‘அண்ணா’ என்ற குரல் திரும்ப வைத்தது ???
ஆம், ‘அங்கிள்’ என்றழைத்த குரல்தான் அது…

ஒன்றும் புரியாது
உற்றுப்பார்த்தேன்…..
தாவணி அணிந்திருந்த அவளுக்கு, அவள்
தாய் கொடுத்த அறிவுரையாம் அது…!

தாமரை
30-03-2011, 06:39 AM
உங்களுக்கு வயசு குறைஞ்சு போச்சேன்னு சந்தோஷப்படுங்களேன். :D:D:D

உமாமீனா
30-03-2011, 08:38 AM
:smilie_abcfra:..................................................:smilie_abcfra:.....................:mini023:

நாஞ்சில் த.க.ஜெய்
30-03-2011, 08:47 AM
வயதாக வயதாக எல்லோருக்கும் வயது கூடும் உங்களுக்கு மட்டும் வயது குறையுதே எப்படிங்க? ரொம்ப எச்சரிக்கயாத்தான் இருக்காங்க

முரளிராஜா
30-03-2011, 08:59 AM
:smilie_abcfra:..................................................:smilie_abcfra:.....................:mini023:

இதன் அர்த்தம் என்ன உ.மீ

உமாமீனா
30-03-2011, 09:42 AM
இதன் அர்த்தம் என்ன உ.மீ

தட்டசி வெலை செஇயவில்லை - இடட்தை பிடித்து வைத்தால் பத்தவைதுவிட்டயெ

முரளிராஜா
30-03-2011, 09:45 AM
தட்டசி வெலை செஇயவில்லை - இடட்தை பிடித்து வைத்தால் பத்தவைதுவிட்டயெ

என் கடமையில் நான் என்றும் கவனமாக இருப்பேன்
:D:D:D

பிரேம்
30-03-2011, 10:50 AM
தட்டசி வெலை செஇயவில்லை - இடட்தை பிடித்து வைத்தால் பத்தவைதுவிட்டயெ

ஐ தின்க்... ஷீ ஷ்பீக்ஸ் பிரிடிஷ் இங்க்லீஷ் ..:confused::confused:

உமாமீனா
31-03-2011, 05:35 AM
ஐ தின்க்... ஷீ ஷ்பீக்ஸ் பிரிடிஷ் இங்க்லீஷ் ..:confused::confused:

மு ரா செமை கோவத்தில் இருக்கேன் - தட்டச்சி வேலை செய்யவில்லையே என்று கடுப்பில் இரண்டு ஸ்மைல் போட்டு இடத்தை பிடித்து வைத்து பின் பின்னோட்ட்டம் இடலாம் என்று எண்ணிய என்னை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டிர்களே

முரளிராஜா
31-03-2011, 05:46 AM

ஏன் உங்களுக்கு அடிக்கடி இது மாதிரியான பிரச்சனை வருது:)

உமாமீனா
31-03-2011, 05:54 AM
ஏன் உங்களுக்கு அடிக்கடி இது மாதிரியான பிரச்சனை வருது:)

நான் தட்டச்சி செய்வது கூகுல் தமிழ் தட்டச்சு மூலம் தான் இப்பல்லாம் அடிக்கடி சரியாக வேலை செய்வது இல்லை ஏன்னு புரியலை - தனியாக என்னிடன் தமிழ் சாப்ட்வேர் இல்லை எல்லாமே ஆன்லைனை நம்பிதான்

ராஜாராம்
31-03-2011, 06:03 AM
ஒரு மனுஷன் நொந்துநூடுல்ஸ் ஆகி ஒருக்கவிதைய தந்திருக்காரு..:frown:
இதில ஆளாலுக்கு காமெடியா பன்றீங்க.....(உமாமீனா.,பிரேம்..தாமரை,முரா)...

என்னாதிது...சின்னப்புள்ளத்தனாமல இருக்கு....

கார்த்தி நீங்க கவலைப்படாதீங்க....
அந்தப்பொண்ணு புடவைக்கட்டியதும்...
சித்தப்பான்னு கூப்பிடப்போது...:aetsch013:

ஸோ...அதுக்குமுன்னே அந்த லிங்கை கட்ப்பன்னிடுங்க:aetsch013:.

முரளிராஜா
31-03-2011, 06:05 AM
நான் தட்டச்சி செய்வது கூகுல் தமிழ் தட்டச்சு மூலம் தான் இப்பல்லாம் அடிக்கடி சரியாக வேலை செய்வது இல்லை ஏன்னு புரியலை - தனியாக என்னிடன் தமிழ் சாப்ட்வேர் இல்லை எல்லாமே ஆன்லைனை நம்பிதான்

இகலப்பையை பதிவிறக்கி கொள்ளுங்கள்
அது மிகவும் உபயோகமாக இருக்கும்

ராஜாராம்
31-03-2011, 06:08 AM
இகலப்பையை பதிவிறக்கி கொள்ளுங்கள்
அது மிகவும் உபயோகமாக இருக்கும்

இதோ வந்துட்டாருயா....
கம்பியூட்டரைக் கண்டுப்புடுச்சவரு.....

தாமரை
31-03-2011, 06:19 AM
ஒரு மனுஷன் நொந்துநூடுல்ஸ் ஆகி ஒருக்கவிதைய தந்திருக்காரு..:frown:
இதில ஆளாலுக்கு காமெடியா பன்றீங்க.....(உமாமீனா.,பிரேம்..தாமரை,முரா)...

என்னாதிது...சின்னப்புள்ளத்தனாமல இருக்கு....

கார்த்தி நீங்க கவலைப்படாதீங்க....
அந்தப்பொண்ணு புடவைக்கட்டியதும்...
சித்தப்பான்னு கூப்பிடப்போது...:aetsch013:

ஸோ...அதுக்குமுன்னே அந்த லிங்கை கட்ப்பன்னிடுங்க:aetsch013:.

தப்பு தப்பு தப்பு!!!!

புடவை கட்டின பின்னால்
தம்பி என்றழைக்கும்

நரை முடி தோன்றும் போது
மகனே என்றழைக்கும்

குடுகுடுவென நடுங்கும் போது
குழந்தே என்றழைக்கும்

ஏன்னா
என்றும் பதினாறு
நம்ம கார்த்தி!!

:icon_b:

தாமரை
31-03-2011, 06:20 AM
இதோ வந்துட்டாருயா....
கம்பியூட்டரைக் கண்டுப்புடுச்சவரு.....

சொல்லிட்டாரய்யா, தொலைச்சவரு!!!

Nivas.T
01-04-2011, 01:01 PM
நல்லக் கவிதை நண்பரே பாராட்டுகள்

சொல்லிட்டாரய்யா, தொலைச்சவரு!!!

:lachen001::lachen001::lachen001:

pkarthi28
18-04-2011, 08:02 AM
ஒரு மனுஷன் நொந்துநூடுல்ஸ் ஆகி ஒருக்கவிதைய தந்திருக்காரு..:frown:
இதில ஆளாலுக்கு காமெடியா பன்றீங்க.....(உமாமீனா.,பிரேம்..தாமரை,முரா)...

என்னாதிது...சின்னப்புள்ளத்தனாமல இருக்கு....

கார்த்தி நீங்க கவலைப்படாதீங்க....
அந்தப்பொண்ணு புடவைக்கட்டியதும்...
சித்தப்பான்னு கூப்பிடப்போது...:aetsch013:

ஸோ...அதுக்குமுன்னே அந்த லிங்கை கட்ப்பன்னிடுங்க:aetsch013:.

இக்காலத்தில் மக்கள் 'முறை'களை கூட மாற்றிக்கொள்வதை ஒரு கற்பனையில் கவிதையாய் கொடுக்க முயற்சித்தேன்.... இப்படியெல்லாம் "பலப்" வாங்குவேன்னு எதிர் பார்கள...
நகைசுவையுடன் கருத்து பரிமாறிய அனைவருக்கும் நன்றி...
ராஜாராம் அரம்பத்தில. முக்கியமா ஏதோ விமர்சிக்க போரர்ன்னு நினச்சா, கடைசியா கால வாரிட்டாருப்பா...
தாமரையும் இதுல சேந்துட்டிங்களே....:sprachlos020:
:schnelluebersicht_k:music-smiley-019: