PDA

View Full Version : கிடாவெட்டு(போட்டிக்கான கதை)



ராஜாராம்
29-03-2011, 01:51 PM
(மதங்களின் சடங்குகளையோ...
அச்சடங்கினைப் பெரிதும் நம்பும் மனிதர்களையோ
புன்படுத்தவேண்டும் என்பது இதன் நோக்கமல்ல,.
நகைச்சுவைவையை கருத்தில்
கொண்டுமட்டுமே இது உருவாக்கப்பட்டது.)

(பூலோகம்..
தேவலோகம்...
இந்த இரு இடங்களுக்குள் நடக்கும்
சம்பங்களே இக்கதையின் தளம்)

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRC5QM4yhh6WOyFop1gHWTDp-zB4JpgnlTLXWoUdi6MKU0jENfuBdXdyAA
தேவலோகம்....

"மே...மே...அம்மே,,,அம்மே.",
என்று,
இறைவியிடம் ஓடிவந்தது தாய் ஆடு.

"வா,,..ஆட்டுக்குட்டியே...வா?",
என்றாள் இறைவி

"அம்மே...நீ செய்யிறது நியாயமா?",
என்றது தாய் ஆடு,

"என்ன?
என்மீது என்ன குற்றம் கண்டாய்?",
பதில் கேள்விக்கேட்டாள் இறைவி.

"பூலோகத்தில் எனது மகனை
உன் கோயில் பூஜையில் பலியிடப்போறாங்க...",
தாய் ஆடு ,கூற

"வாட்?
பலியிடப்போறாங்களா?
யூமீன், மர்டெர் பன்னப்போறாங்களா?",
என்று இறைவிக் கேட்க,

"யா...யா...",
என்று தலையசைத்தது தாய் ஆடு.

"ஏன் அப்படி செய்யப்போறாங்க?",
என்று இறைவிக் கேட்டதும்,

"நீதான் உன் பூஜைக்கு,
கெடாவெட்டி பொங்கல் வைக்கனும்னு
உன் பக்தர்களுக்கு சொல்லியிருக்கியாமே...",
என்றது பரிதாபமாக தாய் ஆடு.

"கெடாவெட்டி...பொங்கலா?
கெடாவெட்டுவது நான்வெஜ் அயிட்டம்.
பொங்கல் வைப்பது வெஜ் அயிட்டம்.
இது ரெண்டையும் சேர்த்துப்பன்னாப் போறாங்களா?
காம்பினேஷனே சரியில்லையே..",
இறைவி குழம்பினாள்.

"நீதான் உன் பக்தர்களிடம் அப்படி
செய்யசொல்லி கேட்டியாமே?
இது நியாயமா?",
மறுபடி நியாயம் கேட்டது தாய் ஆடு.

"நோ..நான் அப்படி எதுவுமே
பக்தர்களிடம் கேட்டதில்லையே",
இறைவி மறுக்க,

"அப்படின்னா அதை தடுத்து
நிறுத்தும்மே...மே...",
என்றது தாய் ஆடு.

"இப்ப,என்னதான் சொல்லவருகிறாய்"
இறைவிக் கேட்க,

"கந்தசாமி மகனுக்கு காதுக்குத்தினால்.,
அவன் பையன்
காதுதானே ரணமாகனும்.
என் மகனை வெட்டியா ரணமாக்கனும்?",
பரிதாபமாய் பார்த்தது தாய் ஆடு.

"நீ சொல்றது சரிதான்...
இப்ப என்னைய என்னசெய்ய சொல்றே",
இறை இறுதியாய் கேட்க,

"நிறுத்தனும்...
எல்லாத்தையும் நிறுத்தனும்...
கெடாவெட்டுறது..
கோழியை வெட்டுறது..
எல்லாத்தையும் நிறுத்தனும்..",
என்று ஆணித்தரமாய் கூறியது தாய் ஆடு.

"அவர்கள் காலம்காலமாக
அப்படித்தானே செய்யிறாங்க..
அதை திடீருன்னு நிறுத்தசொன்னால்
அவர்கள் மனது '
புன்னாகிடுமே.",
என்று இறைவி யோசிக்க,

"அம்...மே....அம் மம் மே.."
என்று ,
நடிகர் வென்னிராடைமூர்த்திப்போல
சவுண்ட் விட்ட தாய் ஆடு

"என் மகனை வெட்டினப்பிறகு
நீயா சாப்பிடப்போறே..?
அங்க வந்தவன் போனவனெல்லாம்
சாப்பிட்டுவிட்டு போகப்போறான்",
என்றது.

"இப்ப நடக்கப்போற கெடாவெட்டை
நிறுத்தி உன் பையனை காப்பாத்தனும்,.
அதானே நீ எதிர்ப்பாக்கிறே",
இறைவிக்கேட்க,

"ஆமாம்...மே..",
என்றது தாய் ஆடு.

பூலோகம்....

மாரியம்மன் கோவில் வாசலில்
கந்தசாமியின் மகனுக்கு காதுக்குத்திவிட்டு
அனைவரும் கெடாவெட்டிற்காக காத்திருந்தனர்.
தேவலோகத்தில் இறைவியுடன்
மன்றாடிய தாய் ஆட்டின் மகனான,
கிடாகுட்டியின் தலை ,
பலிபீடத்தில்
வாட்டமாக வைக்கப்பட்டிருந்தது.

"என்ன பூசாரி...
அப்படியே நிக்கிறீங்க?
சீக்கிரம் கெடாவெட்டுங்க..",
கந்தசாமிக் கூறிய மறுநிமிடமே...

"ஏய்......நான் ஆத்தா வந்திருக்கேன்டா....",
என்று உரக்க சத்தம்மிட்டப்படி,
தனது கூந்தலை விரித்துப்போட்டுக்கொண்டு
ஒருப் பெண் ஆடத்தொடங்கினாள்..

"ஆஹா...ஆத்தாவே வந்திருக்கு...",
அனைவரும் மெய்சிலிர்த்து நின்றனர்.

"இந்தக் கெடாவை எனக்கு பலியிடவேண்டாம்...
இதுமட்டுமல்ல...
இனி எந்தக் கிடாவையும்
எனக்கு பலியிடவேண்டாம்...
என்மீது ஆணையாக...",
என்று அருள்வந்தப்பெண் கூற,

"கந்தசாமி அந்த ஆட்டை
அவிழ்த்து விட்டுருப்பா...
ஆத்தாவே கிடாவெட்டவேண்டாம்னு
சொல்லிட்டாள்...",
அனைவரும் அச்சத்தோடுக் கூற,

மறுகணமே...
அந்த ஆட்டுக்குட்டி பலிபீடத்தில்
இருந்து அகற்றப்பட்டது.


தேவலோகம்.....

பூலோகத்தில் தனது மகனை பலிபீடத்தில் இருந்து
அகற்றியதை கண்டதும்,

"அம்மே....நீதான் என் தெய்வம்..
ஐந்தறிவு ஜீவனான என் கருத்தையும் ஏற்று
கிடாவெட்டை நிறுத்திவிட்டாய்....
என் மகன காப்பாற்றிவிட்டாய்..."
என்று தாய் ஆடு ஆனந்தக்கண்னீர் விடவும்...

"ரொம்ப எமோஷன் ஆகாதே...
அங்கே மேற்கொண்டு
நடக்கப்போவதைப் பாரு...",
என்று பூலோகத்தில் கந்தசாமி குடும்பம் கூடியிருந்த
அம்மன் கோவிலைக்காட்டினாள் இறைவி.

பூலோகம்....

"என்னப் பங்காளி இப்படி ஆகிப்போச்சு?
ஆத்தா கெடாவெட்டா வேண்டாம்னு
சொல்லிடுச்சே...
கெடாவெட்டு சாப்பாட்டை
ஒருப்புடி புடிச்சிடலாம்னு நெனச்சேன்...
அது ஏமாற்றமாப் போச்சே...",
என்று கந்தசாமியின் பங்காளிக் கூற,

"கவலைப்படாதே பங்காளி...",
என்ற கந்தசாமி தன் பங்காளியின்
தோள்பட்டையை தட்டிக்கொடுத்து,

"இதே ஆட்டை நாளைக்கு வீட்டில அறுத்து
சுப்பரா,
தலப்பாக்கட்டு பிரியாணிப் போட்டுருவோம்....",
என்றதும்,

"ஆஹா,,,,நல்ல ஐடியா....",
கந்தசாமியின் பங்களி,
மற்ற உறவினரும் மனம்குளிர்ந்தனர்.


தேவலோகம்....

பூலோகத்தில் கந்தசாமிக் கூறியதைக் கேட்டதும்,
திடுக்கிட்ட தாய் ஆடு.

"அம்மேமேமே......
கிடாவெட்டுவதை நிப்பாட்டிப்புட்டு...
இப்ப ,
தலப்பாக்கட்டு பிரியாணிக்கு
மெனுப்போடுறாய்ங்களே....
என் மகனுக்கு
சங்குசங்குதான் போலிருக்கே....",,
என்று பதற,

"இப்ப புரிஞ்சிதா?
கிடாவெட்டு யாருக்குன்னு?
கிடாவெட்டை யார் விரும்புறாங்கன்னு?
படையல் என்ற பெயரில்
சாப்பாட்டிற்காக,
மனிதர்கள் போடும்
மெனுக்கார்டுதான் கிடாவெட்டு...
நான் படைச்ச உயிரை..
நானேக் காவுக் கேட்ப்பேனா..."
என்று இறைவிக் கூற,

"சாகப்போற என் மகனிடம்,
கடைசியா நாலுவார்த்தை பேசவா?".,
என்று தாய் ஆடு கோரிக்கை வைக்க,

"கொஞ்சம் பொறு.
இன்னும் கொஞ்சநேரத்திலே
அவனே இங்க வந்துருவான்...
அப்புறம் நாலுவார்த்தையென்ன?
நாள்முழுதும் அவனோடு நீ பேசலாம்",
என்ற இறைவி பரிதாபமாய்,
தாய் ஆட்டினைப் பார்த்தது,.......

அக்னி
29-03-2011, 01:55 PM
விரைவாக, முதலாகப் போட்டிக்கதையைப் பதிந்து வியப்புக்குள்ளாக்கிவிட்டீர்கள்.
அதுதான், வாசிக்குமுன்னரே, உங்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவிக்கவே இப்பதிவு.
பாராட்டுக்கள்...

இப்போது துடுப்பாட்டம் பார்க்கும் நேரம்... ராரா...

ராஜாராம்
29-03-2011, 02:01 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்னிசார்.

ஜானகி
29-03-2011, 02:09 PM
நாயை ஊறுகாய் போட்டதற்குப் பரிகாரமா....? சபாஷ் !

சிவா.ஜி
29-03-2011, 02:46 PM
வித்தியாசமா இருக்குங்க ராஜாராம். கோவில்ல வேணுன்னா கெடாவெட்ட நிறுத்தலாம்...கசாப்புக்கடையில நிறுத்த முடியுமா? அப்புறம் இந்த இறைவியை சந்திச்ச புத்திசாலி அம்மா ஆடு மாதிரி இருக்கிற பல ஆடுங்களும் பெருகிப்போன பல ஆடுங்களும் சேர்ந்து....ஆட்டம்மனுக்கு மனுஷனை வெட்டும்...ஹி...ஹி...

வாழ்த்துக்கள்.

அக்னி
29-03-2011, 02:52 PM
வாழ்த்துக்கள்.
வாழ்த்திவிட்டு ஓடிப்போகாமல், போட்டிக்கான இரண்டு கதைகளையும் காலாகாலத்தில போட்டுடுங்க... ஓகே...

ஆளுங்க
29-03-2011, 02:57 PM
ஒரு வழியாக ஒரு ஆள் கிடா வெட்டிட்டார்..

என்ன தான் சாமிகிட்ட இருந்து ஆட்டைக் காப்பாத்தி ஆசாமிகிட்ட மாட்டி விட்டாலும்,
எப்படியோ தாயையும் பிள்ளையையும் சேர்த்து வச்சுட்டீங்க!!:lachen001:

கீதம்
29-03-2011, 08:24 PM
முதல் கடாவெட்டுக்குப் பாராட்டுகள் ராஜாராம். நீங்க கதை எழுதியிருக்கிற வேகத்தைப் பார்த்தா நீங்கதான் ஆதவாவுக்கு இந்த ஐடியாவையே கொடுத்திருப்பீங்களோன்னு தோணுது. :)

கதை நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்.

உமாமீனா
30-03-2011, 03:01 AM
வித்தியாசமான கற்பனை - ஆக மொத்தம் பிரியாணி பிரியாணிதான் அப்பு - முதலில் கடா வெட்டியா ராரா வுக்கு வாழ்த்துக்கள்

Nivas.T
31-03-2011, 09:21 AM
மே......
கதை நல்லாருக்கு மே..............
மே.........
ராரா வுக்கு..........மே..........
எங்க சங்கத்துலேருந்து...மே.....
பாராட்டும் நன்றியும் தெருவிச்சிகிரோம் மே...........
மே.............மே...............

பாராட்டுகள் ராரா

ராஜாராம்
31-03-2011, 11:02 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி:-
ஆளுங்க அவர்களுக்கும்,
உமாமீனா அவர்களுக்கும்,
சிவா.ஜீ அவர்களுக்கும்,
ஜானகி அவர்களுக்கும்,
நிவாஸ் அவர்களுக்கும்,
கீதம் அவர்களூக்கும்.

நாஞ்சில் த.க.ஜெய்
01-04-2011, 12:32 PM
போட்டியின் முதல் கதை படையலிட்ட ராஜாராம் அவர்களுக்கு என் வாழ்த்துகள் ...உண்மையினை கூறும் அருமையான கதையினை நகைசுவையின் வாயிலாக கூறிய விதம் மிகவும் அருமை ...

த.ஜார்ஜ்
03-04-2011, 05:08 PM
வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க ராஜாராம்.இதை ஒரு [ஆட்டு] குட்டி நாடகமாக்கி மேடையேற்றலாம் போல.

பாரதி
03-04-2011, 06:10 PM
நகைச்சுவை என முன்பே கூறி இருப்பினும், பல வசனங்களும் திரைப்படங்களை நினைவூட்டியதால் இரசிக்க முடிந்தது.

வெற்றி பெற வாழ்த்து.

dellas
05-04-2011, 07:59 AM
எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க. கதைக்களம் அமைப்பு நன்று .வாழ்த்துக்கள்.

கலையரசி
13-04-2011, 10:57 AM
”இப்ப புரிஞ்சிதா?
கிடாவெட்டு யாருக்குன்னு?
கிடாவெட்டை யார் விரும்புறாங்கன்னு?
படையல் என்ற பெயரில்
சாப்பாட்டிற்காக,

மனிதர்கள் போடும்
மெனுக்கார்டுதான் கிடாவெட்டு...
நான் படைச்ச உயிரை..
நானேக் காவுக் கேட்ப்பேனா..."
என்று இறைவிக் கூற,”

கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு கிடா வெட்டி பிரியாணி சாப்பிடும் மனிதரை எள்ளி நகையாடும் கதை. போட்டியின் முதல் கதையும் கூட. வித்தியாசமான கோணத்தில் எழுதியுள்ளமை பாராட்டத்தக்கது. வெற்றி பெற வாழ்த்துகிறேன் ராஜாராம்!

M.Jagadeesan
13-04-2011, 11:10 AM
ரா.ரா.வின் கற்பனை அபாரம்.தங்களுக்கு முதல்பரிசு உறுதி.