PDA

View Full Version : கிரிக்கெட்(மட்டை பந்து)



அனுராகவன்
28-03-2011, 12:24 PM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQpBOF3kI7jKzDoIOdTTnG-_KZ76X50zi7hdxmjNCOcScZ_bBd26w
ஒரு பந்து
அதை அடிக்கவோ
ஒருவர்தான்!!
ஆனால் அதை
பிடிக்க பலர்;
அதை பார்ப்பவர் பலர்;
வெற்றியெனில் பட்டாசு
கொளுத்துவர்;
தொல்வியெனில் அவ்வெணியின்
போட்டோவை கொளுத்துவர்;
அதில் இந்த விளையாட்டு
மட்டை பந்து..
அதற்கு சில துட்டோ(பணம்) கண்டு
பலர் மன பதற்றத்தை கொண்டு
சிலர் கிளர்ச்சி ப் பெற்று
ஆடும் ஆட்டம்
எப்ப எப்ப என்று
எதிர்பார்ப்பு.


படிக்கும் மாணவருக்கு
படிப்பில் கவனம்;
என்ன செய்ய மட்டைபந்து
தெர்வையே தொந்தரவு செய்கிறது;
அவர்களோ விளையாடுகிறார்கள்
அவர் பிழைப்பிக்காக;
நம்மவர்கள் படிப்போ
நம் முன்னேற்றத்திற்கு;
விளையாட்டு மீண்டும் பார்க்கலாம்;
தெர்வோ மீண்டும் வருமா!!
மாணவரே சிந்தி!..

Nivas.T
28-03-2011, 12:32 PM
வாங்க அணு எப்டி இருக்கீங்க

கவிதை அருமை

ஆனாலும் என்ன பண்றது
நாங்க அப்படியே பழகிட்டோம்

அனுராகவன்
28-03-2011, 12:33 PM
வாங்க அணு எப்டி இருக்கீங்க

கவிதை அருமை

ஆனாலும் என்ன பண்றது
நாங்க அப்படியே பழகிட்டோம்
நலம் ..
நீங்க எப்படி?

ஆளுங்க
28-03-2011, 01:08 PM
விளையாட்டு மீண்டும் பார்க்கலாம்;
தெர்வோ மீண்டும் வருமா!!
மாணவரே சிந்தி!..

தேர்வு மீண்டும் வராது தான்.. ஆனால்,


நண்பர்களுடன் ஒன்றாய் அமர்ந்து
அரட்டையும் கும்மாளமும் கலந்து
நம் அணிக்குக் கைத்தட்டி
எதிர் அணிக்கு நகைத்தட்டி
ஒவ்வொரு பந்தாய் விவாதிப்பதற்கு
மாணவப் பருவம் தவிர்த்து
வேறுபருவம் உலகினில் உண்டோ?
அதைத் தடுத்தல் நன்றோ?

ஆட்டக் காட்சியை பார்க்கவிடில்
விவாதிக்கும் பொருள் எதில்?
சிறு வாதங்களைத் தடைசெய்வதாலே
குழுவிவாதத்தில் பலர் தோற்பதே!!

மாணவனாய் இருந்தது விடவே
நல்மாதவம் செய்து இடனுமே.
மாணவப் பருவம் முடித்து
பசிக்கு வேலை எடுத்து
தனக்கென வாழ்க்கை அமைத்து
பருவம் முற்றி காய்த்து
வேலைப் பளுவில் மூழ்கியபின்
மட்டை பந்தைத் தான்
அதைப் பார்க்கத் தான்
நமக்கு நேரம் ஏது?
மாணவப் பருவ ஆர்வங்கள்
பிறிதொரு நாளில் என்றேனும் கிட்டுமா?

மாணவப் பருவ இன்பங்கள்
அன்றே நுகரும் பண்டங்கள்
பிறிதோரு நாளில் எட்டா..
என்றும் எளிதில் கிட்டா

பருவத்திலே பயிர் செய்வோம்..
அப்போதே அறுவடையும் செய்வோம்..
அனைவரும் இதைச் சிந்தியுங்கள்
உலகத்தை ஒன்றாய் சந்தியுங்கள்

-இப்படிக்கு
மாணவப் பருவத்தைப் படிப்பிலேயே தொலைத்த பின்
மீண்டும் கிட்டாதா என்று ஏங்குபவரில் ஒருவன்..

பி.கு:
மாணவர்களை ஆட்டத்தைப் பார்க்க விடுங்கள்..
பார்த்தபின் / பார்ப்பதற்கு படிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ..
தடை செய்யவோ, சிந்திக்க சொல்லவோ வேண்டாம்..
பெரியவர்களான பின் பார்க்க அவர்களுக்கு நேரம் ஏது?

அனுராகவன்
28-03-2011, 04:07 PM
நன்றி ஆளுங்க...
விளையாட்டு விளையாட்டா போகக்கூடாது..
அது மக்கள் மகிழ்ச்சிக்குத்தான் பார்க்கிறாங்க...
ஆனால் மாணவர்கள் வெறிதனமாக பார்க்கிறார்கள்..
படிப்பு...அப்பறம் மட்டைபந்து..இல்லை அப்பா கையால் அடி...

ஆளுங்க
28-03-2011, 04:24 PM
நீங்க சொல்றது சரிதான்..
ஆனா, பருவம் மாறினால் வெறியும் தன்னாலே மாறிவிடும்!!

அனுராகவன்
23-05-2011, 05:43 PM
பருவம் மாறினால் மாறுமா...
எல்லா மனிதரும் பார்க்கிறார்கள்........
பதில் லேட்டா வருதா.....:aetsch013:

Ravee
23-05-2011, 07:14 PM
தலை மணியா சார் கண்ணுல மட்டும் படாதீங்க ............அவ்வளவுதான் சொல்லுவேன் ................. :eek:

அனுராகவன்
14-08-2012, 08:40 PM
தலை மணியா சார் கண்ணுல மட்டும் படாதீங்க ............அவ்வளவுதான் சொல்லுவேன் ................. :eek:
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTxGzmcw_6yBQQskM7x5C1ozXmASZMLIpRI1yMBEfyLyqnIXeLE1A



கிரிகெட் இன்னும்
எத்தனை மனம்
கெட்டு போகுமோ..