PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:12



ராஜாராம்
28-03-2011, 05:09 AM
சென்னை...நுங்கம்பாக்கம்...புலனாய்வு அலுவலகம்...

மயக்கநிலையில் சவுகத் இப்ராஹிம்,
தன்னை மறந்தவனாய் வாக்குமூலம் கொடுக்கத்தொடங்கினான்.

"பிரிதர்ஷினி மாசம் மாசம் உங்களுக்குப் பணம் அனுப்பிருக்காங்க...
ஏன்?எதற்காக?",
புலனாய்வு துணைஅதிகாரி கேட்டதும்,

"பிரபல்யமான நடிகர் நடிகைகளை
என் கஸ்டெடியில் வெச்சுப்பேன்..
அவர்களிடம் இருந்து மாசம் மாசாம்
தண்டல்வசூல் செய்வேன்...",
என்ற இப்ராஹிம்மின் கண்கள் மெல்ல அயர்ந்தன.

"பிரியதர்ஷினியை நீங்கத்தானே கொலை செஞ்சிங்க?".

"ஆ...ஆ.மாம்...",
உலர்ந்துப்போன,அவனது நாவில்
இருந்து உண்மைகள் வரத்தொடங்கின.

"ஏன் கொலை செஞ்சீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?".,

"சிங்கப்பூர் கலை நிகழ்ச்சி ஒன்றினை
எனக்காக நடத்திதரனும்னு அவளிடம் கேட்டேன்..
மேலும் அதில் வரும் வசூல்பணத்தை
என்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் வற்புருத்தினேன்...".,

"பிறகு என்ன ஆச்சு?",

"பிரியதர்ஷினி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை...",

"அதன் பிறகு?",

"எனக்கும் அவளுக்கும்கடுமையான வாக்குவாதம் நடந்தது..",

"ம்ம்ம்ம்...மேல சொல்லுங்க",

"அவளைகொலை செய்திடுவேன்னு மிரட்டினேன்...
ஆனால் அதை அவள் கண்டுக்கொள்ளவில்லை..",

"அப்புறம் என்ன செஞ்சிங்க?",

"எனக்கு மாசம் மாசம் அனுப்பும்
தண்டல்வசூலையும் அவள் நிறுத்திவிட்டாள்..",

"சரி...பிறகு என்ன நடந்தது?",

"அவளை உண்மையிலே கொலை
செய்யத்திட்டம் போட்டேன்...",

"எப்படி திட்டம் போட்டீங்க?",

"மலையாளத்தில் 2வருடங்களுக்குமுன்
வந்த திரைப்படத்தை
ரீமேக் செய்து தமிழிலில் படபிடிப்பு நடத்தினார்கள்..
அதில் பிரியதர்ஷினி நடித்துக்கொண்டிருந்தாள்...",

"ம்ம்ம்ம்...மேல சொல்லுங்க..",

"அந்தப்படத்தின் கதைப்படி பிரியதர்ஷினியை
கொலைசெய்வதுப்போல் காட்சிவரும்...
அதை மனதில் கொண்டு,சென்னைக்கு வந்தேன்..
அந்தத் திரைப்படம் வெளியாகும்
அன்று அவளை கொலைசெய்தேன்...",

"ஏன் அப்படி செய்தீங்க?",

"படத்தில் உள்ள சம்பவம் நிஜத்தில் நடந்தால்...
விசாரணையில் குழப்பம் வரும்னு அப்படி செய்தேன்,,
ஆனால் அந்தப்படம் தாமதமாக வெளியானது,,
சம்மந்தப்பட்ட கொலைக்காட்சி
இடைவேளைக்கு பிறகு வந்ததும்,.
இவையாவும் எனக்கு சாதகமாய்
அமையாமல் போனது",

"இன்னும் வேற யாரவது உங்க கொலைப்
பட்டியலில் இருக்காங்களா?",.

"இப்போதைக்கு யாருமில்லை...",
என்று சவுகத் இப்ராஹிம் கூறியதும்.

சட்டென தனது அருகில் இருந்த அதிகாரியிடம்,

"பிரியதர்ஷினி பெயரில் வாங்கிய
சிம்கார்ட் அபிராமி என்றப்பெண்ணின்
கைகளுக்கு எப்படிப்போனாது?",
என்று உதவிஅதிகாரியிடம் கேட்டதும்

"பிரியதர்ஷினியோட தங்கைதான் அந்த அபிராமி...
தன் தங்கைகாக,
பிரியதர்ஷினி அந்த சிம்கார்டை வாங்கி,
தங்கள் பாட்டி மங்களத்திடம் தந்திருக்காங்க..
தன்னுடைய சகோதரிதான்
அந்த பிரியதர்ஷினி என்பதறியாமல்
அந்த நம்பரை அபிராமியும் இதுநாள்வரை
பயன்படுத்திருக்காங்க....",,
என்றவர்,

"மற்றபடி அந்தப்பெண்ணிற்கும் கொலைக்கும்
எவ்வித சம்மந்தமும் இல்லைசார்..",
என்றார்.

"அந்தப் பெண் அபிராமி,நடக்கப்போவதை முன்கூட்டியே
சொல்கிறாளமே?அதுவும் நடக்குதாமே..
அது எப்படி?",

"அதான்சார் தெரியலை..
மனநலரீதியா ஏற்பட்ட மாற்றம்னு
டாக்டர்கள் சொல்லுறாங்க...
ஒருசிலரோ...அதை தெய்வசக்த்தின்னு
சித்தர்களின் பிரம்மஷக்தின்னு சொல்றாங்க...",

"நம்ம அசோக்குமாருக்கும்
அந்தப்பெண்ணுக்கும் மேரேஜ் ஆகப்போதா?",

"இல்லைசார்...அந்தப்பெண்ணு பிரகாஷ்னு
ஒருப்பையனை காதலிக்கிறதாம்
அவர்கள் இருவர் திருமணத்தையும் நடத்திவைக்க
அசோக்குமார் இப்ப திருச்சிப் போயிருக்காரு..",

"அந்தப்பொண்ணுக்கு தனக்கு இப்படியொரு ஷக்தியோ
அல்லது மனநலவியாதியோ இருக்குன்னு தெரியுமா?",

"இதுவரைக்கும் தெரியாமல்தான் இருந்தாள்.
ஆனால் இப்ப எல்லாவற்றையும் சொல்லிட்டங்க...",

"ஒகே,,,நல்லபடியா இந்தக்கேஸை,
எல்லாருமா ஹாண்டில் பன்னிட்டீங்க..வெரிகுட்",

"தாங்க்யூ சார்..",


திருச்சி....தெப்பக்குளம்...அபிராமியின் இல்லம்....

"ஏன் அபி இப்படி அழறே,,.
உனக்கு ஒன்னும்மில்லை...நீ நல்லாதான் இருக்கே..",
விம்மிவிம்மி அழுத அபிராமியின் கண்களைத் துடைத்தாள்
அவளது பாட்டி மங்களம்.

"அபிராமிக்கும் பிரகாஷிற்கும் கல்யாணம்
செஞ்சி வெச்சிடுங்கம்மா...",
அருகில் நின்ற அசோக்கூறியதும்..

"இதோப்பாரும்மா...
உனக்கு இருக்கும் இந்த பிராப்ளம்,
மூளையில் அதீதமாய் சுரப்பிக்கள் சுரப்பதால்
ஏற்படும் மாற்றம்.
நான் மருந்து மாத்திரைகளை எழுதி இருக்கேன்.
அதையெல்லாம் ரெகுலராக சாப்பிடு..
கொஞ்ச நாளில் இதுப்போன்று
அசாதியாமான உணர்வு போயிவிடும்",
என்ற அசோக்கின் மாமா ,
பாண்டிச்சேரி டாக்டர் மணி கூற,

"இல்லை டாக்டர்...
சிவனாடிசித்தன்னு ஒருத்தர்
அடிக்கடி என்காதுகளில் வந்துப் பேசுறாரு..
அவரு எங்கப்பான்னு..பாட்டி சொல்றாங்க.
நான் நானாகவே இல்லை..
எனக்குள் என்னை அறியாமலே மாற்றங்கள் ஏற்படுது..",
மீண்டும் அழத்தொடங்கினாள் அபிராமி.

"காதுகளில் பேசுவதுப்போல் உணர்வு,
கண் எதிரே யாரோ நிற்பதுப்போல் ஏற்படும் உணர்வு
இவ்வையெலலாம்,
ஸ்கீசோஃபிரீனியா என்ற மனநல
கோளாறில் ஏற்படுவது,
உனக்கு அதற்கான மாத்திரைகளை தந்திருக்கேன்..",
என்றவர்,

"தைரியமா இரும்மா...
எல்லாம் நல்லபடியா ஆகிவிடும்",

"நாளைக்கு நீயும் உன் பாட்டிமும்
எங்களோடா பாண்டிச்சேரிக்கு வரீங்க.
நீ ஹாஸ்பிட்டலில் 20நாள் இருக்கனும்.
உனக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் தருவாங்க.
பிறகு நீ வழக்கம்போல் திருச்சிக்கே வந்துவிடலாம்..",
என்ற அசோக்குமார்.,

"ட்ரீட்மெண்ட் முடிந்ததும்,
உனக்கும் பிராகாஷிற்கும் கல்யாணம்.
ஜாம்ஜாம்னு '
நாங்க எல்லாருமா சேர்ந்து நடத்திவைப்போம்..",
என்றதும்,

கண்களில் கண்ணீர் குலமாகியவளாய்,
சரியென தலையசைத்தாள்.


அபிராமியின் பாட்டி மங்களத்தினை தனியே அழைத்த
டாக்டர் மணி,
"ட்ரீட்மெண்ட் முடிந்ததும்,..
அபிராமிக்கு பழைய விஷயங்களை
நினைவுப்படுத்தும்வன்னம்
எதையும் பேசாதீங்க...
குறிப்பா...
சித்தர்...
கிருஷ்ணவேனி அன்னை,
குற்றால சிவனாடி சித்தன்,
காசிநாத நம்பூதிரி,
இவற்றைப் பற்றியெல்லாம் பேசாவேக் கூடாது",
என்றதும்,

"சரிங்க.....",
தலையசைத்தாள் மங்களம்...

மனநலமருத்துவர் மணியும்,அபிராமியும் ,
அவளதுப்பாட்டியும்
மருத்துவமனை ஆம்புலன்சில் ஏறி அமர்ந்தனர்.
"அபிராமியை நாங்க ஹாஸ்ப்பெட்டலுக்கு
கூட்டிக்கிட்டு போரோம்..
20நாட்கள் கழித்துஅவள் புது அபிராமியாய் இங்க வருவாள்..
இது மருத்துவத்தால்மட்டுமே சரியாக்கூட்டியக்காரியம்.",
என்று மணி கூறியதும்,

"ஒகே சார்,..யூ கேரியான்..",
என்றான் அசோக்குமார்.

சிறிது நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ்..........
பாண்டிச்சேரி......
சாராதா மனநலமருத்துவமனைக்குள் நுழைந்தது...............

அங்கு
தன்னையும் மறந்து ,
வாய்வந்த வார்த்தைகளை புலம்பிக்கொண்டும்,,,
திரிந்துக்கொண்டிருந்த மனநோயாளிகளைக் கண்டு...
சற்றே...
அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்
அபிராமி...

(கண்ணாமூச்சி ஆட்டம்....இறுதிபாகம் நாளை மறுநாள்....)


(பதிவு செய்யப்பட்டது,TDP.KANNAMOOCHI AATTAM:13654821A0.TAMILNADU FILM
CHAMBER/..rajaram..RTD240)

Nivas.T
28-03-2011, 06:52 AM
என்ன ராரா இப்படி டக்ன்னு முடிச்சுட்டீங்க

நான் இன்னும் என்னெனவோ எதிர் பார்த்தேன் போங்க?

சும்மா சொல்லக் கூடாது, நீங்க கத சொன்ன விதம் இருக்கே அடடா!!!! கொஞ்சநாள் எல்லாரையும் கண்னக் கட்டி கண்ணாமூச்சு ஆட விட்டீங்க போங்க..

இருந்தாலும் இறுதி பாகத்த படிச்சுட்டு முழசா பேசலாம்

பாராட்டுகள் ராரா

ராஜாராம்
28-03-2011, 11:34 AM
நன்றி நிவாஸ் அவர்களே.
கண்ணாமூச்சி ஆட்டம் மெக சீரியலுக்கு எழுதப்பட்டக் கதை.மன்றத்தில் அதை அப்படியே தந்தால் 30எப்பிசோட்வரைப் போகும்.
மக்கள் பொறுமை இழந்திருவாங்க.
அதான் சற்று சுருக்கமாக முடிக்க செய்துள்ளேன்.

Nivas.T
28-03-2011, 11:38 AM
நன்றி நிவாஸ் அவர்களே.
கண்ணாமூச்சி ஆட்டம் மெக சீரியலுக்கு எழுதப்பட்டக் கதை.மன்றத்தில் அதை அப்படியே தந்தால் 30எப்பிசோட்வரைப் போகும்.
மக்கள் பொறுமை இழந்திருவாங்க.
அதான் சற்று சுருக்கமாக முடிக்க செய்துள்ளேன்.

:eek::eek::eek::eek::sprachlos020::sprachlos020::sprachlos020:

sarcharan
29-03-2011, 07:34 AM
சட்டர இழுத்து சாத்துனது போல சட்டுன்னு முடிச்சிட்டீங்க..

நாஞ்சில் த.க.ஜெய்
29-03-2011, 10:00 AM
ரொம்ப நன்றாக இருக்கிறது உங்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ...தொடருங்கள் உங்கள் இறுதி பாகத்தை ....

முரளிராஜா
29-03-2011, 10:08 AM
கதையின் முடிவு எப்படி இருக்கும் என்ற ஆவலில் உள்ளேன் ரா ரா