PDA

View Full Version : வெயில் நிலவு!



ரசிகன்
27-03-2011, 07:46 PM
*

புணர்ந்து கிழித்த அசதியில்
தாமதமான விடியலை
வஞ்சத்தில்
மல்லாக்கப்போட்டு திணிக்கிறது
ஒரு வரையறை இல்லா வித்தை!

மெய் சிலிர்க்க தீண்டிய
பட்டாம்பூச்சி ஒன்று
கம்பிளிப்பூச்சியாய் ஊர்ந்து
அரிப்பெடுக்க...

இரவுகளை நிராகரித்து
வெயிலில் நிற்கிறது
வாழ்வு சபிக்கப்பட்ட
ஐநூறு ரூபாய் நிலவொன்று!

பிரேம்
28-03-2011, 01:16 AM
புரியல சார்..:confused::confused:

கீதம்
30-03-2011, 05:55 AM
வழியற்று வழியில்!

வலியற்று கொலுவில்!

விலைபெற்று வலியில்!

உச்சு கொட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

கலாசுரன்
31-03-2011, 10:23 AM
மெய் சிலிர்க்க தீண்டிய
பட்டாம்பூச்சி ஒன்று
கம்பிளிப்பூச்சியாய்

அது மிகவும் பிடித்தது சதீஷ் ...!!

Nivas.T
31-03-2011, 11:05 AM
கவிதை அருமை ரசிகரே

lolluvathiyar
31-03-2011, 01:09 PM
கவிதை அருமை. மிக அருமை. பாராட்டுகள்

புரியல சார்
ரொம்ப* ந*ல்ல*து. புரிஞ்சுக்க* முய*ச்சிக்க* வேன்டாம் அது அதை விட* ந*ல்ல*து.

இளசு
12-04-2011, 06:34 AM
முற்றிலும் விளங்கவில்லை என்றாலும் விலைமகளிர் பற்றிய கவிதை என யூகிக்க வைக்கிறது..

அப்படியாயின் ரசிகன் அவர்களின் ஒப்புதல்படி பண்பட்டவர் பகுதிக்கு நகர்த்தலாம்..

பூமகள்
12-04-2011, 08:39 AM
உச்சு கொட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.
ஏனில்லை அக்கா..

விலை போக மறுத்தால்
இந்நிலை இங்கே ஏது?
விலையாக்குவோர் விடுத்தால்
இந்நிலை வந்திராது..

அதற்கேனும் நாம்
முயற்சிப்போம் இன்றே..
அடுத்த தலைமுறை
உரம் போடுவோம் அதற்கே..!!

--

கவிதை நன்று ரசிகரே.
பெரியண்ணாவின் வேண்டுகோளை வழிமொழிகிறேன் நானும்.

ரசிகன்
12-04-2011, 10:53 AM
புரியல சார்..:confused::confused:
இன்னும் ஓரிரு முறை படித்துப்பாருங்க பிரேம் :)

ரசிகன்
12-04-2011, 10:54 AM
வழியற்று வழியில்!

வலியற்று கொலுவில்!

விலைபெற்று வலியில்!

உச்சு கொட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.
நிறைய இருக்கிறது தோழி! ஆனால் எதையும் செயல்படுத்தும் நிலையில் இல்லை.. ஒரு கையாலாகத தனம்! :(

ரசிகன்
12-04-2011, 10:55 AM
மெய் சிலிர்க்க தீண்டிய
பட்டாம்பூச்சி ஒன்று
கம்பிளிப்பூச்சியாய்

அது மிகவும் பிடித்தது சதீஷ் ...!!
நன்றி கலசுரன் :):):)

ரசிகன்
12-04-2011, 10:56 AM
கவிதை அருமை ரசிகரே
நன்றி தோழர்! :-)

ரசிகன்
12-04-2011, 10:58 AM
கவிதை அருமை. மிக அருமை. பாராட்டுகள்

ரொம்ப* ந*ல்ல*து. புரிஞ்சுக்க* முய*ச்சிக்க* வேன்டாம் அது அதை விட* ந*ல்ல*து.
நன்றி லொள்ளுவாத்தியார் :)

ரசிகன்
12-04-2011, 11:00 AM
முற்றிலும் விளங்கவில்லை என்றாலும் விலைமகளிர் பற்றிய கவிதை என யூகிக்க வைக்கிறது..

அப்படியாயின் ரசிகன் அவர்களின் ஒப்புதல்படி பண்பட்டவர் பகுதிக்கு நகர்த்தலாம்..
நன்றி தோழர்! இன்னும் ஒரு கத்துக்குட்டியாகவே இருக்கிறேன்... உங்களின் பின்னூட்டம்.. என்னை ஒரு இன்ச் அளவு நகர்த்தி விடுவது அப்பட்டமான நிஜம் :)

ரசிகன்
12-04-2011, 11:00 AM
ஏனில்லை அக்கா..

விலை போக மறுத்தால்
இந்நிலை இங்கே ஏது?
விலையாக்குவோர் விடுத்தால்
இந்நிலை வந்திராது..

அதற்கேனும் நாம்
முயற்சிப்போம் இன்றே..
அடுத்த தலைமுறை
உரம் போடுவோம் அதற்கே..!!

--

கவிதை நன்று ரசிகரே.
பெரியண்ணாவின் வேண்டுகோளை வழிமொழிகிறேன் நானும்.
நன்றி பூமகள் !

உங்கள் பின்னூட்டத்தை நானும் வழிமொழிகிறேன்.... அப்படியே உங்களின் வழிமொழிதளுக்கு ஒரு நன்றியையும் தெரிவிக்கிறேன்! :)