PDA

View Full Version : இன்று கடைசி நாள்.....



Nanban
06-12-2003, 10:49 AM
இன்று கடைசி நாள்.
மனம் கனக்கிறது.

பார்ப்பவர்கள் எல்லாம்
புன்னகைக்கின்றனர் -
இன்று தான்
நான்
இருப்பதை
அறிந்தவர்களாய்.

சண்டை
போட்டவர்கள் கூட
நல்ல வார்த்தை
சொல்லுகின்றனர்.
செலக்டீவ் அம்னீஷியா...

ஆள் அனுப்பி விட்டனர்
மலர் மாலைகள் வாங்க

ஏற்பாடுகள்
நடக்கின்றன -
வந்தவர்கள்
சாப்பிட

வண்டி கூட
அமர்த்திவிட்டனர் -
இறுதிப் பயணத்திற்கு....

நாளை முதல்
என்ன செய்வாய்?

ஓய்வு தான்
தற்சமயத்திற்கு
சாய்ந்தாடும்
நாற்காலி ஒன்றில்......

சேரன்கயல்
06-12-2003, 10:54 AM
அந்திம நாட்களை எண்ணி வருந்தவென வழங்கப்படும் ஆயுள் தண்டனை...பதவி ஓய்வு என்றப் பெயரில்...

சேரன்கயல்
06-12-2003, 10:58 AM
மரண விளிம்பில் நிற்பவருக்கும் இது போன்ற நிகழ்வுகளை தரிசிக்கும் வாய்ப்புண்டு...
இயல்பாக எழுதும் நண்பனுக்கு....எப்போதும் போல் இயல்பாய் எழும் பாராட்டுக்கள்...

Nanban
06-12-2003, 11:20 AM
நம் நாட்டில், உழைப்பதில் இருந்து ஓய்வு பெறுவதென்பது மரணத்திற்குச் சமானம்........

பல ஆண்களால் இதைத் தாங்க முடிவதில்லை........

பெண்கள் தங்கள் இயல்பினால், எல்லோருடனும் கலந்து இயற்கையான தங்கள் மரணத்தை அடைகிறார்கள்......

ஆண்களோ மனம் புழுங்கி, ஓய்ந்து விடுகின்றனர்.......

இதைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன....

இக்பால்
06-12-2003, 02:33 PM
சிவாஜி படம் ஞாபகம் வருகிறது. நன்றி.-அன்புடன் அண்ணா.

rika
06-12-2003, 05:22 PM
இதைத்தான் சில தர்க்க விவாதங்களுடன் சிகப்பு - நிறமல்ல என்று கதை எழுதி விட்டு வந்திருக்கிறேன்.. அதில் விரிவாக அலசியிருக்கிறேன்..
ஆனால், வேறுவிதமாக..
இங்கு உங்களுடைய பார்வை வேறுவிதமாக..

இக்பால்
06-12-2003, 05:27 PM
ரீகா தங்கை...யாருக்கு உங்கள் பதில்?-அன்புடன் அண்ணா.

Nanban
06-12-2003, 06:29 PM
சிவாஜி படம் ஞாபகம் வருகிறது. நன்றி.-அன்புடன் அண்ணா.

படத்தின் பெயரையோ, கதைச்சுருக்கத்தையோ குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே.........

இ.இசாக்
07-12-2003, 08:37 PM
இப்போதைக்கு
நாற்காலி??????????????????????????????????????????

பாராட்டுகள் நண்பன் அவர்களே!

Nanban
08-12-2003, 09:55 AM
இப்போபாதைக்குத் தான்............

நாற்காலீலேயே வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணமில்லை..............

rakin
08-12-2003, 09:59 AM
கவிதை மிகவும் அருமை. மிகவும் நன்றாக உள்ளது.

Nanban
11-12-2003, 07:16 AM
கவிதை மிகவும் அருமை. மிகவும் நன்றாக உள்ளது.

ரா.கின் மிகவும் நன்றி...... உங்களுடைய முதல் பதிவே இதுதான் என்னும் பொழுது இனிக்கிறது. அறிமுகப்பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.... மற்ற நண்பர்களுக்கும் உங்கள் வருகையை அறிவித்து விடுங்கள்.........

Nanban
12-01-2004, 07:36 AM
இப்போதைக்கு
நாற்காலி??????????????????????????????????????????

பாராட்டுகள் நண்பன் அவர்களே!

நீங்கள் சொன்னவாறு கூட முடிக்கலாம்...... நன்றி இசாக் ..........

அக்னி
02-06-2007, 11:58 AM
ஒரு மரணித்த மனிதனின் ஏக்கமா..?
பிறந்த ஆன்மாவின் குதூகலிப்பா..?

அருமையான கவிதை... பாராட்டுக்கள்...

ஆதவா
02-06-2007, 12:05 PM
இதயம் அவர்களே! நண்பன் கவிதைகள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. கவிதைகள் அனைத்து அருமையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. இனிமேல்தான் படிக்கவேண்டும்...

அக்னி
02-06-2007, 12:08 PM
இதயம் அவர்களே! நண்பன் கவிதைகள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. கவிதைகள் அனைத்து அருமையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. இனிமேல்தான் படிக்கவேண்டும்...

உண்மைதான் திஸ்கி காலக் கவிதைகள் அழகு...
பின்னூட்டங்கள் அழகோ அழகு...

ஆமாம்... இதிலே எங்கே இதயம் வந்தார்?

ஆதவா
02-06-2007, 12:27 PM
நான் பின்னூட்டம் இடும்போது அவரும் உடன் இருந்தார்.. அதனால் தான் அப்படி சொன்னேன்..

அமரன்
03-06-2007, 06:33 PM
இதயம் அவர்களே! நண்பன் கவிதைகள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. கவிதைகள் அனைத்து அருமையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. இனிமேல்தான் படிக்கவேண்டும்...
நிச்சயம் படிக்கவேண்டிய கவிதைகள் ஆதவா. நண்பன் கவிதா போன்றவர்கள் மன்றத்திற்கு வராது இருப்பது நமக்கெல்லாம் பேரிழப்பு.
(மன்னித்து விடுங்கள் ஆதவா. குவாட் என்பதற்குப் பதிலாக எடிட் தவறுதலாக சொடுக்கப்பட்டுவிட்டது.)