PDA

View Full Version : சூர்யாவும் நானும்கீதம்
25-03-2011, 06:51 AM
பென்சிலை எப்படிப் பிடிப்பது
என்றும் அறிந்திராத வயதில்
அநேக சித்திரம் வரைந்து
அடிக்கடி என்முன் நீட்டுவான்,
என்ன இது கண்டுபிடியென்றொரு
புதிரையும் முன்வைத்து.

கொக்கிபோல் துவங்கியிருந்த
ஒரு கிறுக்கல் பந்திலிருந்து
கோணல்மாணலாய் இழுக்கப்பட்ட
சில கோடுகளைக்கொண்டு
ஏதேனும் ஒரு மிருகமாய் கற்பனை செய்தேன்.

தூக்கிய தும்பிக்கையுடன் யானையோ…
கழுத்துநீண்ட ஒட்டகசிவிங்கியோ…
கட்டாயமாய் இரண்டில் ஒன்று என்றேன்.
அவன் விரித்த விழிகளுடன் என்னைப் பார்த்து
அம்மா! இது நம் வீட்டு நாற்காலி என்றான்.

அடுத்தடுத்த முறைகளிலும்
அவன் உருவகித்தவற்றை
அடையாளங்காண இயலாமல்
முகம் சோரவைத்தேன்.

நீயே சொல்லடா என்றால்
நீதான் கண்டுபிடிக்கணும் என்று
நித்தமும் போராட்டம்.

பழகப்பழக அவன் பாஷை புரிந்தது.
அவன் வரையும் கோடுகளுக்கும்…
வளைவுகளுக்கும்… ஏன், புள்ளிகளுக்கும்
அர்த்தம் கண்டுபிடித்துவைத்தேன்.

அவனுடைய ஓவியங்களை மேயும்
என் கண்களையே பார்த்திருப்பவனின்
கண்களை மகிழ்ச்சியில் மின்னச்செய்தேன்.

அவனுடைய உலகத்தின் சன்னலுக்குள்
அவ்வப்போது எட்டிப்பார்த்ததன் விளைவாய்
சிலந்திமனிதனையும், வெளவால் மனிதனையும்,
ஏலியன்களையும் பென்டென்னின் தசாவதாரங்களையும்,
இரும்புமனிதனையும், இன்னும் சில பிரபலங்களையும்
எளிதில் இனங்கண்டு இன்ப அதிர்ச்சி அளித்தேன்.

இப்போதும் வரைகிறான்.
யாரென்று கேட்டு அதே விளையாட்டை
இன்னமும் தொடர்கிறான்.

அவன் சொல்லும்வரை
கோஸ்ட் ரைடர்களையோ...
ஸ்கேர் க்ரோக்களையோ...
டேர்டெவில்களையோ...
சிவப்பு மண்டையோட்டுக்காரனைப்பற்றியோ..
உண்மையிலேயே எனக்கு
எதுவும் தெரிந்திருக்கவில்லை.
வில்லன்களுக்கும் விசிறியானவனை
விசித்திரமாய்ப் பார்த்து வியக்கிறேன்.

அவன் உலகத்துடனான என் பந்தம்
எப்போது கட்டவிழ்ந்தது என்ற
விவரம் தெரியாமல் விழிக்கிறேன்.
வளர்ச்சி விகிதத்தில் அவனைவிடவும்
வெகுவாய்ப் பின்தங்கிவிட்டேன் என்ற
உண்மை எனக்கு உறைக்க...
எவ்விதத் தயக்கமுமின்றி என் அறியாமையை
அவனிடம் ஒத்துக்கொள்கிறேன்.

அதை ஏற்பதில் மட்டும்
அவனுக்கேன் இத்தனைத் தயக்கம்?

எதுவும் பேசாமல் முகம் சுருங்கி
என்னைவிட்டு விலகிச் செல்பவனைக் கண்டு
சோர்ந்தாலும்.... தேற்றிக்கொள்கிறேன்.

இனி அவனுடைய ஓவியநாயகர்களின்
பிரஸ்தாபங்களைப் பகிர்ந்துகொள்ள
நண்பர்கள் உதவுவார்கள்…

******
சூர்யாவின் ஓவியநாயகர்கள் இங்கே... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26881)

Nivas.T
25-03-2011, 07:10 AM
:lachen001::lachen001:

இதைத்தான் "தலைமுறை இடைவெளி" என்பார்கள்,

குழந்தைகளை புரிந்துகொள்ள நாமும் குழந்தையாய் மாறினாலொழிய இயலாத காரியம். அவர்களின் என்னோட்டமும், ஆர்வமும், கற்பனையும் முதிந்தவர்களை விட அசுரவேகத்தில் பயணிக்கும், அதற்க்கு நாம் ஈடுகொடுப்பது கொஞ்சம் கடினம்தான். அவர்கள் உலகமே வேறு, ஒருமுறை அதனை விட்டு வந்து விட்டால் பிறகு நுழைவது மிகக் கடினம்.

கவிதை மிக அருமை

இதுபோல் எனது அம்மாவையும் நான் பாடாய் படுத்தியதை சொல்வார்கள்
நீங்கள் பரவாயில்லை அவர்கள் பள்ளி பக்கமே போகாதவர்கள், நினைத்துப் பாருங்கள் அவர்களின் நிலைமையை :D:D

முரளிராஜா
25-03-2011, 07:42 AM
அருமை
உங்க மகன் அவன் அப்பாவை போல புத்திசாலி போல
நல்லவேளை உங்களை மாதிரி இல்ல:lachen001:

கீதம்
25-03-2011, 07:55 AM
:lachen001::lachen001:

இதைத்தான் "தலைமுறை இடைவெளி" என்பார்கள்,

குழந்தைகளை புரிந்துகொள்ள நாமும் குழந்தையாய் மாறினாலொழிய இயலாத காரியம். அவர்களின் என்னோட்டமும், ஆர்வமும், கற்பனையும் முதிந்தவர்களை விட அசுரவேகத்தில் பயணிக்கும், அதற்க்கு நாம் ஈடுகொடுப்பது கொஞ்சம் கடினம்தான். அவர்கள் உலகமே வேறு, ஒருமுறை அதனை விட்டு வந்து விட்டால் பிறகு நுழைவது மிகக் கடினம்.

கவிதை மிக அருமை

இதுபோல் எனது அம்மாவையும் நான் பாடாய் படுத்தியதை சொல்வார்கள்
நீங்கள் பரவாயில்லை அவர்கள் பள்ளி பக்கமே போகாதவர்கள், நினைத்துப் பாருங்கள் அவர்களின் நிலைமையை :D:D

நன்றி நிவாஸ்.பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் என்பதை நம்மால் கிரகிக்கவே முடிவதில்லை. எவ்வளவு பெரியவர்களானால் என்ன? பெற்றோரின் கண்களுக்கு அவர்கள் எப்பொழுதும் குழந்தைகள்தானே.

உங்கள் அம்மா மிகவும் பொறுமைசாலிதான். அவர்களைப் பாராட்டவேண்டும்.:)

கீதம்
25-03-2011, 07:58 AM
அருமை
உங்க மகன் அவன் அப்பாவை போல புத்திசாலி போல
நல்லவேளை உங்களை மாதிரி இல்ல:lachen001:

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

நானும் பெரிதுவக்கிறேன்.:)

உண்மையை மறைக்கவேண்டிய அவசியம் இல்லை, கரும் எழுத்துகளாலேயே குறிப்பிடலாம். நன்றி முரளிராஜா.

ஜானகி
25-03-2011, 11:01 AM
வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவமும் ஒரு பாடத்துடன் தான் வருகிறது...அதனைப் புரிந்துகொள்பவன் புத்திசாலி.....நீங்களும் தான் !

ஓட்டப் பந்தய வாழ்வில் பல ருசிகளைத் தவறவிட்டோமோ என்றுகூட சிலசமயம் ஏக்கமாக இருக்கிறது...

நீங்கள் கற்ற பாடங்களைத் தொடர்ந்து எழுதிவரவும்...பலருக்கும் பயனாகலாம் !

நாஞ்சில் த.க.ஜெய்
25-03-2011, 11:48 AM
கவிதை அருமை கீதம் அவர்களே ...காலத்திற்கேற்ற மாற்றம் ...இந்த மாற்றம் அவசியமானது ..மாற்றத்திற்கேற்றவாறு நம்மை மாற்றி கொள்வது என்றும் மகிழ்வாக வைத்திருக்க உதவும்...

அக்னி
25-03-2011, 01:01 PM
இக்கவி என் ஏளனம் ஒன்றை எனக்குணர்த்துகிறது...
கணினியிலிருந்து வருவேன் அதனோடு...

த.ஜார்ஜ்
25-03-2011, 04:35 PM
சூர்யாவின் உலகத்தை நீங்கள் திறந்து வைத்த ஜன்னல் வழியாக நாங்களும் எட்டி பார்த்துக் கொண்டோம் . உங்கள் கவிதைகளைப் படித்து மெல்ல மெல்ல நான் கவிதை புரிந்து கொண்ட மாதிரிதான் உங்கள் நிலையும் போல.
உங்கள் வவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கதையை உணர்கிறேன். தேடலுக்கான தேவையை உணர்கிறேன்.
வாழ்த்துக்கள் கீதம்.. உங்களுக்கும், சூர்யாவுக்கும்.

கீதம்
25-03-2011, 11:46 PM
வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவமும் ஒரு பாடத்துடன் தான் வருகிறது...அதனைப் புரிந்துகொள்பவன் புத்திசாலி.....நீங்களும் தான் !

ஓட்டப் பந்தய வாழ்வில் பல ருசிகளைத் தவறவிட்டோமோ என்றுகூட சிலசமயம் ஏக்கமாக இருக்கிறது...

நீங்கள் கற்ற பாடங்களைத் தொடர்ந்து எழுதிவரவும்...பலருக்கும் பயனாகலாம் !

மிகவும் நன்றி ஜானகி அவர்களே. பாடம் கற்றேனா என்பது தெரியவில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டேன், போகிற வழியெல்லாம் கவிதைகளை இறைத்துக்கொண்டு. :)

கீதம்
25-03-2011, 11:55 PM
கவிதை அருமை கீதம் அவர்களே ...காலத்திற்கேற்ற மாற்றம் ...இந்த மாற்றம் அவசியமானது ..மாற்றத்திற்கேற்றவாறு நம்மை மாற்றி கொள்வது என்றும் மகிழ்வாக வைத்திருக்க உதவும்...

உண்மைதான். காலத்துக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ஜெய்.

கீதம்
25-03-2011, 11:56 PM
இக்கவி என் ஏளனம் ஒன்றை எனக்குணர்த்துகிறது...
கணினியிலிருந்து வருவேன் அதனோடு...

காத்திருக்கிறேன்.:icon_b:

கீதம்
26-03-2011, 12:01 AM
சூர்யாவின் உலகத்தை நீங்கள் திறந்து வைத்த ஜன்னல் வழியாக நாங்களும் எட்டி பார்த்துக் கொண்டோம் . உங்கள் கவிதைகளைப் படித்து மெல்ல மெல்ல நான் கவிதை புரிந்து கொண்ட மாதிரிதான் உங்கள் நிலையும் போல.
உங்கள் வவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கதையை உணர்கிறேன். தேடலுக்கான தேவையை உணர்கிறேன்.
வாழ்த்துக்கள் கீதம்.. உங்களுக்கும், சூர்யாவுக்கும்.

உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். நன்றி, ஜார்ஜ். சூர்யாவின் சார்பிலும் நன்றி தெரிவிக்கிறேன்.:icon_b:

கலாசுரன்
26-03-2011, 08:06 AM
மிகவும் அருமை கீதம்..

ரசானுபவம் கொண்ட படைப்பு..

வாசிக்கையில் சில நேரம் அச்சிறுவனைப் போன்றே என் மனதும்...!!

ரசித்தேன்..!!!

வாழ்த்துக்கள் :)

சூர்யா நன்றாக வரைகிறான்...!!!

சோம்பல் இல்லாத நாயகர்கள் உலகில் எல்லாமாக அவன்..!

ஓவியத்தின் படிகளை தாண்டும் வல்லமை அவனது பென்சில் கால்களுக்கு உண்டு .

ஊக்கம் கொடுங்கள் :)

அக்னி
27-03-2011, 11:10 AM
மழலையின் பாசை புரிய,
மழலையின் கிறுக்கல் தெரியத்,
தாய்க்கும் காலமெடுக்கும்.

விளங்காத மழலை,
தவிப்பது, இயல்பு...
தாயின் மீது கொள்ளும்
சலிப்பு, ரசிப்பு...

ஆனால்,
வளர்ந்தபின்
“இது கூடத் தெரியாதா...”
எனச் செய்யும் ஏளனம்,
தவறன்றோ...

நிலாச்சோறூட்டியவர்களை,
நிலவிற் சோறூட்டும் காலத்தில்,
ஏளனம் செய்தால்...

நான் அறிந்தவற்றை அறியாத,
மூத்த தலைமுறையின் மீதான
என் ஏளனத்தை
இக்கவிதை நொருக்கிவிட்டது...

எனக்குத் தெரிந்தது
அவர்களுக்குத் தெரியவில்லை என்றானது,
அவர்களுக்குத் தெரிந்தது
எனக்குத் தெரியுமா என்பதாக
ஏன் எனக்குத் தோன்றவில்லை...

“கற்றது கையளவு.., கல்லாதது உலகளவு...”

*****

கவிதையில் ஒரு தாயின் தவிப்பு நன்றாகவே சொல்லப்பட்டிருக்கின்றது.

மழலையின் சலிப்பு என்பதால், தாய்க்கு ரசிப்பான தவிப்பாக இருக்கின்றது...
இதுவே, மழலை வளர்ந்தபின்னர் என்றானால், தாயின் மனத்தவிப்பு ரசிப்பாக இராதுதானே...

இந்த எண்ணம் உணர்த்தியதுதான் எனது மேற்படி பதிவு...

ஆளுங்க
27-03-2011, 11:33 AM
உங்கள் மகனின் பெருமைகளை அழகாக ஒரு பாட்டில் சொல்லி விட்டீர்கள்...
அருமை...

பி.கு:
நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையைப் பற்றி ஒரு பிள்ளைத் தமிழ் எழுதக் கூடாது?

கீதம்
27-03-2011, 11:49 AM
உங்கள் மகனின் பெருமைகளை அழகாக ஒரு பாட்டில் சொல்லி விட்டீர்கள்...
அருமை...

பி.கு:
நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையைப் பற்றி ஒரு பிள்ளைத் தமிழ் எழுதக் கூடாது?

எழுதியிருக்கேனே...

பிள்ளைத்தமிழ் அல்ல, பிள்ளைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கவிதைகள்.

இது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22168) மகளுக்கு, இது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23533) மகனுக்கு.

நன்றி ஆளுங்க.

கீதம்
27-03-2011, 11:53 AM
மிகவும் அருமை கீதம்..

ரசானுபவம் கொண்ட படைப்பு..

வாசிக்கையில் சில நேரம் அச்சிறுவனைப் போன்றே என் மனதும்...!!

ரசித்தேன்..!!!

வாழ்த்துக்கள் :)

சூர்யா நன்றாக வரைகிறான்...!!!

சோம்பல் இல்லாத நாயகர்கள் உலகில் எல்லாமாக அவன்..!

ஓவியத்தின் படிகளை தாண்டும் வல்லமை அவனது பென்சில் கால்களுக்கு உண்டு .

ஊக்கம் கொடுங்கள் :)

உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி கலாசுரன் அவர்களே.

உங்கள் ஊக்குவிக்கும் வார்த்தைகளை சூர்யாவிடம் வழங்கிவிட்டேன். நன்றி.

ஆளுங்க
27-03-2011, 12:00 PM
இரண்டும் அருமை.....

இவ்வளவு கவித்துவம் நிறைந்த தாயைப் பெற்ற வெண்ணிலா, மற்றும் சூர்யாவிற்கு என் வாழ்த்துக்கள்!!

கீதம்
27-03-2011, 12:01 PM
மழலையின் பாசை புரிய,
மழலையின் கிறுக்கல் தெரியத்,
தாய்க்கும் காலமெடுக்கும்.

விளங்காத மழலை,
தவிப்பது, இயல்பு...
தாயின் மீது கொள்ளும்
சலிப்பு, ரசிப்பு...

ஆனால்,
வளர்ந்தபின்
“இது கூடத் தெரியாதா...”
எனச் செய்யும் ஏளனம்,
தவறன்றோ...

நிலாச்சோறூட்டியவர்களை,
நிலவிற் சோறூட்டும் காலத்தில்,
ஏளனம் செய்தால்...

நான் அறிந்தவற்றை அறியாத,
மூத்த தலைமுறையின் மீதான
என் ஏளனத்தை
இக்கவிதை நொருக்கிவிட்டது...

எனக்குத் தெரிந்தது
அவர்களுக்குத் தெரியவில்லை என்றானது,
அவர்களுக்குத் தெரிந்தது
எனக்குத் தெரியுமா என்பதாக
ஏன் எனக்குத் தோன்றவில்லை...

“கற்றது கையளவு.., கல்லாதது உலகளவு...”

*****

கவிதையில் ஒரு தாயின் தவிப்பு நன்றாகவே சொல்லப்பட்டிருக்கின்றது.

மழலையின் சலிப்பு என்பதால், தாய்க்கு ரசிப்பான தவிப்பாக இருக்கின்றது...
இதுவே, மழலை வளர்ந்தபின்னர் என்றானால், தாயின் மனத்தவிப்பு ரசிப்பாக இராதுதானே...

இந்த எண்ணம் உணர்த்தியதுதான் எனது மேற்படி பதிவு...

கவிதை சொல்லும் கருத்து யதார்த்தம்.

வயிற்றினுள் சிசு உதைத்தால்

அங்கமெல்லாம் அடையும் பேரானந்தம்.

அதுவே வெளியில் வந்து உதைத்தால்....

வார்த்தைகளால் சிதைத்தால்...

எங்கிருக்கும் உயிருக்கு உத்திரவாதம்?

அழகான கவிதையுடன் பின்னூட்டமிட்டுச் சிறப்பித்த உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றியும் பாராட்டும், அக்னி.

கீதம்
27-03-2011, 12:03 PM
இரண்டும் அருமை.....

இவ்வளவு கவித்துவம் நிறைந்த தாயைப் பெற்ற வெண்ணிலா, மற்றும் சூர்யாவிற்கு என் வாழ்த்துக்கள்!!

இத்தனை நண்பர்களின் ஆசிகளைப் பெற்ற என் பிள்ளைகள் உண்மையில் பாக்கியசாலிகள்தாம். மிகவும் நன்றி ஆளுங்க.

அக்னி
27-03-2011, 12:07 PM
வயிற்றினுள் சிசு உதைத்தால்

அங்கமெல்லாம் அடையும் பேரானந்தம்.

அதுவே வெளியில் வந்து உதைத்தால்....

வார்த்தைகளால் சிதைத்தால்...

எங்கிருக்கும் உயிருக்கு உத்திரவாதம்?


:icon_b:
நான் அவ்வளவிலும் சொல்லவிளைந்தது இவ்வளவுதான்...
அற்புதமாகச் சொன்னீர்கள்...

சிவா.ஜி
27-03-2011, 01:40 PM
அழகான கவிதை. அடுத்த தலைமுறையின் ஆக்கமும், நேற்றய தலைமுறையின் தேக்கமும்....ஒரு தாயின் நோக்கமும்(பிள்ளையின் உலகத்துக்குள் ஜன்னல் வழி நோக்கம்) வெகு அழகாய் வெளிப்பட்டுள்லது இக்கவிதையில்.

நல்ல பிள்ளைகள் பெற்றோரின் நிரந்தர சந்தோஷங்கள். சூர்யாவுக்கு என் வாழ்த்துக்கள் தங்கையே.

கீதம்
30-03-2011, 05:58 AM
அழகான கவிதை. அடுத்த தலைமுறையின் ஆக்கமும், நேற்றய தலைமுறையின் தேக்கமும்....ஒரு தாயின் நோக்கமும்(பிள்ளையின் உலகத்துக்குள் ஜன்னல் வழி நோக்கம்) வெகு அழகாய் வெளிப்பட்டுள்லது இக்கவிதையில்.

நல்ல பிள்ளைகள் பெற்றோரின் நிரந்தர சந்தோஷங்கள். சூர்யாவுக்கு என் வாழ்த்துக்கள் தங்கையே.

அழகான பின்னூட்டத்தோடு வாழ்த்துரைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா.

இளசு
10-04-2011, 12:16 AM
இராமன் நல்லவன் - இராவணன் கெட்டவன்...

கருப்பு - வெள்ளை... இரண்டு மட்டும்..
இது ஒரு காலகட்டம்..


இராமனுக்குள்ளும் சில விமர்சிக்கத்தக்க குணங்கள்..
இராவணனிடத்தும் சில மெச்சத்தக்க குணங்கள்...

கருப்புக்கும் வெள்ளைக்கும் நடுவே..
பழுப்பும் பச்சையுமாய் பலப்பல வண்ணங்கள்..


இது பின்னொரு காலக்கட்டம்..


எவன் இராமன்.... எவன் இராவணன்..
எவருக்கு இரசிக மன அரியாசனம்?

எனக்குப் புரிபடாத இன்றையோர் மனவோட்டம்..

கல்நாயக்கும் நாயகனாகும் புதுயுகம் புரியாத பழைய தலைமுறை நான்..


இக்கவிதைப் பொருளோடு ஒன்றி வாசித்தேன்...


இசையும் இரசனையும் மாறினால்தான்
இன்னொரு தலைமுறைக்குத் தனித்துவமாம்..


அடுத்த தலைமுறைக்கு அன்பும் வாழ்த்தும்!


பாராட்டுகள் கீதம்..

கீதம்
14-04-2011, 10:43 PM
நேற்றையத் தலைமுறையினது

அழகான ஆழ்ந்த எண்ணவோட்டம்.

அடுத்த தலைமுறையின் வேகமோ

அடடா.... என்ன ஓட்டம்?

ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கும் இனிய பின்னூட்டம். நன்றி இளசு அவர்களே.

ஜானகி
15-04-2011, 02:33 AM
மழலையின் பாசை புரிய,
மழலையின் கிறுக்கல் தெரியத்,
தாய்க்கும் காலமெடுக்கும்.

விளங்காத மழலை,
தவிப்பது, இயல்பு...
தாயின் மீது கொள்ளும்
சலிப்பு, ரசிப்பு...

ஆனால்,
வளர்ந்தபின்
“இது கூடத் தெரியாதா...”
எனச் செய்யும் ஏளனம்,
தவறன்றோ...

நிலாச்சோறூட்டியவர்களை,
நிலவிற் சோறூட்டும் காலத்தில்,
ஏளனம் செய்தால்...

நான் அறிந்தவற்றை அறியாத,
மூத்த தலைமுறையின் மீதான
என் ஏளனத்தை
இக்கவிதை நொருக்கிவிட்டது...

எனக்குத் தெரிந்தது
அவர்களுக்குத் தெரியவில்லை என்றானது,
அவர்களுக்குத் தெரிந்தது
எனக்குத் தெரியுமா என்பதாக
ஏன் எனக்குத் தோன்றவில்லை...

“கற்றது கையளவு.., கல்லாதது உலகளவு...”

*****

கவிதையில் ஒரு தாயின் தவிப்பு நன்றாகவே சொல்லப்பட்டிருக்கின்றது.

மழலையின் சலிப்பு என்பதால், தாய்க்கு ரசிப்பான தவிப்பாக இருக்கின்றது...
இதுவே, மழலை வளர்ந்தபின்னர் என்றானால், தாயின் மனத்தவிப்பு ரசிப்பாக இராதுதானே...

இந்த எண்ணம் உணர்த்தியதுதான் எனது மேற்படி பதிவு...

உங்கள் தாபம் நியாயமானதுதான். அதே மகன் / மகள் தானும் ஒரு தாய் / தந்தை ஆகி, இதேபோலொரு சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது, தாய் / தந்தை மீதுள்ள ஏளனம் வியப்பாகவும், பாராட்டாகவும் மாறும்.....சிலர் வெளியில் காட்டிக் கொள்வார்கள்...பலர் ஒப்புக்கொள்ள மறுக்கும் தன்மானத்தால் மனதிற்குள் புழுங்குவார்கள்....காலம் காலமாக நடப்பதுதான் இது...களம் தான் மாறுகிறது... காலம் கடந்த படிப்பினைதான் எப்போதுமே....

அக்னி
22-04-2011, 08:09 AM
காலம் காலமாக நடப்பதுதான் இது...களம் தான் மாறுகிறது... காலம் கடந்த படிப்பினைதான் எப்போதுமே....
உண்மை விளம்பினீர்கள்...

பிள்ளைப் பராயத்தில் பெற்றோரின் அனுபவ எச்சரிப்புக்கள் எரிச்சலைத்தான் தரும்.

முதல்வன் படத்தில் வந்த ஒரு வசனம், அடிக்கடி ஆங்காங்கே குறிப்பிடுவதுமுண்டு.
“வாழ்க்கையில் ஒரு rewind button இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்”

vynrael
11-10-2020, 10:51 AM
масс (http://audiobookkeeper.ru/book/652)955.7 (http://cottagenet.ru/plan/652)Repr (http://eyesvision.ru/bates-medical-articles-study-physiological-optics)Bett (http://eyesvisions.com)Remi (http://factoringfee.ru/t/1109874)Дрон (http://filmzones.ru/t/820344)Соде (http://gadwall.ru/t/795525)Veit (http://gaffertape.ru/t/860479)Geor (http://gageboard.ru/t/901025)Mang (http://gagrule.ru/t/768990)Еник (http://gallduct.ru/t/994658)Сама (http://galvanometric.ru/t/663143)Карв (http://gangforeman.ru/t/820365)Davi (http://gangwayplatform.ru/t/990748)NX04 (http://garbagechute.ru/t/1143453)Sord (http://gardeningleave.ru/t/821371)Stri (http://gascautery.ru/t/1142903)Росс (http://gashbucket.ru/t/472488)Петр (http://gasreturn.ru/t/1044399)Wese (http://gatedsweep.ru/t/568099)
школ (http://gaugemodel.ru/t/1160478)хоро (http://gaussianfilter.ru/t/1152033)Tesc (http://gearpitchdiameter.ru/t/918740)Хоти (http://geartreating.ru/t/836501)Воро (http://generalizedanalysis.ru/t/814584)Kath (http://generalprovisions.ru/t/754232)ИЕПе (http://geophysicalprobe.ru/t/669305)Детс (http://geriatricnurse.ru/t/759311)служ (http://getintoaflap.ru/t/813194)Анто (http://getthebounce.ru/t/301412)Писа (http://habeascorpus.ru/t/855018)ВИНе (http://habituate.ru/t/1089181)Phil (http://hackedbolt.ru/t/653957)Дрыж (http://hackworker.ru/t/1047869)Пушк (http://hadronicannihilation.ru/t/1050782)Defi (http://haemagglutinin.ru/t/1042698)Конс (http://hailsquall.ru/t/671411)Terr (http://hairysphere.ru/t/664480)Aqua (http://halforderfringe.ru/t/570628)Edua (http://halfsiblings.ru/t/676123)
Nive (http://hallofresidence.ru/t/565471)Mons (http://haltstate.ru/t/618012)пись (http://handcoding.ru/t/859128)Tesc (http://handportedhead.ru/t/1028864)серт (http://handradar.ru/t/563134)Сазо (http://handsfreetelephone.ru/t/657909)Абра (http://hangonpart.ru/t/795454)Grea (http://haphazardwinding.ru/t/565952)серт (http://hardalloyteeth.ru/t/565964)Vogu (http://hardasiron.ru/t/567305)Andr (http://hardenedconcrete.ru/t/567825)Lewi (http://harmonicinteraction.ru/t/616214)Eric (http://hartlaubgoose.ru/t/284444)Band (http://hatchholddown.ru/t/623311)семи (http://haveafinetime.ru/t/808929)Бурл (http://hazardousatmosphere.ru/t/439035)Кося (http://headregulator.ru/t/813823)Чуйк (http://heartofgold.ru/t/1226421)Suit (http://heatageingresistance.ru/t/557317)159- (http://heatinggas.ru/t/1183474)
Robe (http://heavydutymetalcutting.ru/t/913265)Prin (http://jacketedwall.ru/t/603923)Osir (http://japanesecedar.ru/t/607394)драм (http://jibtypecrane.ru/t/655353)Niki (http://jobabandonment.ru/t/605997)Quik (http://jobstress.ru/t/605958)Film (http://jogformation.ru/t/638818)Муса (http://jointcapsule.ru/t/908921)Tras (http://jointsealingmaterial.ru/t/1142456)Иллю (http://journallubricator.ru/t/811793)Will (http://juicecatcher.ru/t/830328)Карц (http://junctionofchannels.ru/t/1003374)окон (http://justiciablehomicide.ru/t/883604)Салл (http://juxtapositiontwin.ru/t/837220)Тара (http://kaposidisease.ru/t/835684)Dian (http://keepagoodoffing.ru/t/806294)Rond (http://keepsmthinhand.ru/t/611041)Hein (http://kentishglory.ru/t/937588)Серг (http://kerbweight.ru/t/841814)Fuxi (http://kerrrotation.ru/t/607466)
Росс (http://keymanassurance.ru/t/610007)Тэйл (http://keyserum.ru/t/1050032)Eliz (http://kickplate.ru/t/653077)Juli (http://killthefattedcalf.ru/t/781552)WYSG (http://kilowattsecond.ru/t/607162)Zone (http://kingweakfish.ru/t/610387)Толс (http://kinozones.ru/film/652)Edga (http://kleinbottle.ru/t/662496)кара (http://kneejoint.ru/t/606586)Modo (http://knifesethouse.ru/t/1026516)Zone (http://knockonatom.ru/t/608827)Juds (http://knowledgestate.ru/t/662282)чита (http://kondoferromagnet.ru/t/679256)Zone (http://labeledgraph.ru/t/1193547)Голи (http://laborracket.ru/t/768748)Frit (http://labourearnings.ru/t/1070855)Roub (http://labourleasing.ru/t/898457)Char (http://laburnumtree.ru/t/1091679)неме (http://lacingcourse.ru/t/1174252)Чарн (http://lacrimalpoint.ru/t/1024440)
Zone (http://lactogenicfactor.ru/t/1186021)Кова (http://lacunarycoefficient.ru/t/976949)Pete (http://ladletreatediron.ru/t/830301)Walt (http://laggingload.ru/t/845874)Голь (http://laissezaller.ru/t/1003649)Омет (http://lambdatransition.ru/t/841168)Слав (http://laminatedmaterial.ru/t/854752)Меди (http://lammasshoot.ru/t/847156)чист (http://lamphouse.ru/t/1184198)XVII (http://lancecorporal.ru/t/841075)Tson (http://lancingdie.ru/t/832294)прои (http://landingdoor.ru/t/831808)меня (http://landmarksensor.ru/t/1183857)Tayl (http://landreform.ru/t/1082265)Губе (http://landuseratio.ru/t/955008)Zone (http://languagelaboratory.ru/t/1190254)дост (http://largeheart.ru/shop/1160933)Aris (http://lasercalibration.ru/shop/590067)FLAC (http://laserlens.ru/lase_zakaz/660)поту (http://laserpulse.ru/shop/590309)
Shel (http://laterevent.ru/shop/1030986)Bosc (http://latrinesergeant.ru/shop/452454)Smil (http://layabout.ru/shop/452213)Alic (http://leadcoating.ru/shop/174912)Черн (http://leadingfirm.ru/shop/105586)Dond (http://learningcurve.ru/shop/462444)сбор (http://leaveword.ru/shop/462832)Trop (http://machinesensible.ru/shop/177061)PJ22 (http://magneticequator.ru/shop/456471)слов (http://magnetotelluricfield.ru/shop/194787)худо (http://mailinghouse.ru/shop/266880)Объе (http://majorconcern.ru/shop/269995)LUBR (http://mammasdarling.ru/shop/180355)SCHE (http://managerialstaff.ru/shop/159953)NISS (http://manipulatinghand.ru/shop/613734)пога (http://manualchoke.ru/shop/598219)поче (http://medinfobooks.ru/book/652)Lati (http://mp3lists.ru/item/652)Gobi (http://nameresolution.ru/shop/574752)треу (http://naphtheneseries.ru/shop/104924)
сбор (http://narrowmouthed.ru/shop/460993)посв (http://nationalcensus.ru/shop/486877)упра (http://naturalfunctor.ru/shop/177365)поли (http://navelseed.ru/shop/101050)язык (http://neatplaster.ru/shop/454841)Aura (http://necroticcaries.ru/shop/175084)Лыко (http://negativefibration.ru/shop/185892)KR-0 (http://neighbouringrights.ru/shop/496021)упак (http://objectmodule.ru/shop/108763)увед (http://observationballoon.ru/shop/96453)Tefa (http://obstructivepatent.ru/shop/98522)серт (http://oceanmining.ru/shop/458113)qMon (http://octupolephonon.ru/shop/571659)Роди (http://offlinesystem.ru/shop/148190)XXIX (http://offsetholder.ru/shop/200975)сроч (http://olibanumresinoid.ru/shop/148228)Райх (http://onesticket.ru/shop/578713)ЛитР (http://packedspheres.ru/shop/580590)ЛитР (http://pagingterminal.ru/shop/683041)Inst (http://palatinebones.ru/shop/681911)
назв (http://palmberry.ru/shop/379060)Spee (http://papercoating.ru/shop/582184)Paga (http://paraconvexgroup.ru/shop/687995)Госу (http://parasolmonoplane.ru/shop/1167330)Иллю (http://parkingbrake.ru/shop/1167376)ловл (http://partfamily.ru/shop/1166395)Libr (http://partialmajorant.ru/shop/1169141)Арха (http://quadrupleworm.ru/shop/1539155)Loui (http://qualitybooster.ru/shop/474591)дире (http://quasimoney.ru/shop/594171)Rose (http://quenchedspark.ru/shop/596103)Ново (http://quodrecuperet.ru/shop/1070468)Анаш (http://rabbetledge.ru/shop/1072582)Воро (http://radialchaser.ru/shop/274755)Джоз (http://radiationestimator.ru/shop/508467)Mikh (http://railwaybridge.ru/shop/515693)Copl (http://randomcoloration.ru/shop/512280)вузо (http://rapidgrowth.ru/shop/884327)(вед (http://rattlesnakemaster.ru/shop/1078063)Tobi (http://reachthroughregion.ru/shop/317855)
Worl (http://readingmagnifier.ru/shop/513085)Лапч (http://rearchain.ru/shop/641162)Deep (http://recessioncone.ru/shop/516039)Vict (http://recordedassignment.ru/shop/879930)Wind (http://rectifiersubstation.ru/shop/1053612)Savi (http://redemptionvalue.ru/shop/1061949)Зуев (http://reducingflange.ru/shop/1678529)Бирю (http://referenceantigen.ru/shop/1693073)Баку (http://regeneratedprotein.ru/shop/1758638)27-4 (http://reinvestmentplan.ru/shop/122175)расс (http://safedrilling.ru/shop/1813992)разв (http://sagprofile.ru/shop/1053943)John (http://salestypelease.ru/shop/1066395)Alle (http://samplinginterval.ru/shop/1433499)Босо (http://satellitehydrology.ru/shop/1462168)Mari (http://scarcecommodity.ru/shop/1488178)Дува (http://scrapermat.ru/shop/1462162)Куба (http://screwingunit.ru/shop/1493627)Pand (http://seawaterpump.ru/shop/1314015)Арно (http://secondaryblock.ru/shop/272366)
чувс (http://secularclergy.ru/shop/1481508)худо (http://seismicefficiency.ru/shop/305106)Поля (http://selectivediffuser.ru/shop/399223)авто (http://semiasphalticflux.ru/shop/400160)Черн (http://semifinishmachining.ru/shop/463061)FLAC (http://spicetrade.ru/spice_zakaz/660)FLAC (http://spysale.ru/spy_zakaz/660)FLAC (http://stungun.ru/stun_zakaz/660)mail (http://tacticaldiameter.ru/shop/482480)Enjo (http://tailstockcenter.ru/shop/489863)Week (http://tamecurve.ru/shop/497889)Щегл (http://tapecorrection.ru/shop/482802)парт (http://tappingchuck.ru/shop/486564)Иван (http://taskreasoning.ru/shop/498652)XVII (http://technicalgrade.ru/shop/1821192)Коно (http://telangiectaticlipoma.ru/shop/1878458)Зани (http://telescopicdamper.ru/shop/652301)Козы (http://temperateclimate.ru/shop/338557)Чуба (http://temperedmeasure.ru/shop/400143)Смир (http://tenementbuilding.ru/shop/979680)
tuchkas (http://tuchkas.ru/)Нефе (http://ultramaficrock.ru/shop/980063)Соло (http://ultraviolettesting.ru/shop/482887)