PDA

View Full Version : உபுண்டு லினக்ஸ்ன் சிறப்புகள்priyan24
24-03-2011, 06:01 AM
அனைவருக்கும் வணக்கம் நான் கடந்த ஒரு வருடமாக உபுண்டுவை உபயோகித்து வருகிறேன், எனக்கு மிகவும் பிடித்துள்ளது, இது முற்றிலும் இலவசம் மேலும் மென்பொருள் துறையில் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்ரசாதம் என்றே கூறலாம், ஏனென்றால் உபுண்டு தொடர்பான எண்ணிலடங்கா மென்பொருட்கள் இலவசமாக (open source) கிடைக்கின்றன மேலும் அவற்றை நமக்கு தேவையான படி மாற்றி அமைத்து கொண்டு உபயோகித்து கொள்ளலாம் அல்லது விற்பனை கூட செய்யலாம். அது மட்டுமல்ல லினக்ஸ் என்பது யுனிக்ஸ்ல் இருந்து உருவாக்கபட்டது அதனால் மிகவும் பாதுகாப்பானது(security) நமது கணினியை வைரஸ்கள் நெருங்குவது அவ்வளவு எளிதல்ல நீங்கள் இணையத்தளத்தில் இருந்து எதை வேண்டுமானால் தைரியம் ஆக இறக்கம் செய்து உபயோகித்து கொள்ளலாம், எந்த இணையதளத்திற்கும் சென்று உலாவலாம், pen drive உபயோகிக்கும் பொழுது பயப்பட வேண்டியதில்லை, மேலும் சாளரம் 7, சாளரம் எக்ஸ்.பி போன்றவற்றை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இதன் வேகம் மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படி இதன் பெருமைகளை சொல்லப்போனால் சொல்லிக்கொண்டே போகலாம் எனக்கு தமிழ் தட்டச்சு பண்ண கொஞ்சம் கடினமாக உள்ளதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.

மேலும் சில தகவல்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று உபுண்டு OS நமது கணினியில் நிருவிதான் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை, உபுண்டு CDயை டிரைவரில் பொருத்தி அதன் மூலம் உபுண்டுவை இயக்கி பார்க்கலாம் இதில் உபுண்டு கூட வரும் அணைத்து சாப்ட்வேர்களையும் இயக்கி பார்க்கலாம். இன்னொரு பயனுள்ள தகவலையும் இங்கு கூற விரும்பிகிறேன் சில நேரங்களை நமது விண்டோஸ் os ஆனது கரப்ட் ஆகி நமது டேட்டாகலை எடுக்கமுடியாத சிக்கல் ஏற்படும் அப்போது இந்த முறையை பயன்படுத்தி நமது விண்டோஸ் டேட்டாவை வெகு ஈஸியாக எடுத்துவிட முடியும்.

இன்னும் ஒரு தகவல் நமது விண்டோஸ் os ஆனது புதிய வெர்சன் வெளியிடும்போது நாம் உடனே அதை நம் கணினியில் நிறுவி விடமுடியாது முதலில் நமது பைல்களை ஒரு பேக்கப் எடுத்து வைத்துவிட்டு நமது பழைய வெர்சனை முழவதுமாக அழித்துவிட்டு அதன்பின் புதிய வெர்சனை நிறுவவேண்டும் அல்லது பழைய வெர்சனை அப்படியே வைத்துக்கொண்டும் புதிய வெர்சனை நிறுவலாம் அவ்வாறு நிறுவினால் நமது ஹார்ட்டிச்கின் ஸ்பெஸ் மிகவும் வீணாகும் மேலும் ஒரு வெர்சனில் இருந்து இன்னொரு வெர்சன் போக ஒவ்வொரு தடவையும் ரிஸ்டார்ட் செய்து உள்ளே போகவேண்டும் இது மிகவும் எரிச்சலான விஷயம், மேலும் இப்பொழுது வரும் விண்டோஸ் வெர்சன்கள் எல்லா கணிணிகளிலும் நிறுவமுடியாது அதாவது பழைய பிராசசர்கலான P4 dualcore போன்றவற்றில் புதிய விண்டோஸ் -7 வெர்சனை நிறுவவேண்டாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனமே அறிவித்துள்ளது, சரி இப்போது லினக்ஸ் உபுண்டுவுக்கு வருவோம் புதிய வெர்சனை நிறுவ நீங்கள் எந்த பேக்கப்பும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களிடம் இன்டர்நெட் வசதி இருந்தால் அல்லது புதிய வெர்சன் அடங்கிய CD இருந்தால் போதும் எளிதில் நிறுவிவிடலாம் நம்முடைய பழைய பைல்களை அப்படியே வைத்துக்கொண்டே புதிய வெர்சனை நிறுவிவிடலாம்.

முரளிராஜா
24-03-2011, 07:52 AM
உங்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே
நீங்கள் உங்களை அறிமுகபடுத்தி கொள்ளளாமே

ஆதி
24-03-2011, 07:58 AM
வாங்க ப்ரியன், தங்களை பற்றிய அறிமுகத்தை, அறிமுகப்பகுதியில் தரலாமே!!!

பகிர்வுக்கு நன்றி..

priyan24
24-03-2011, 08:38 AM
திரு முரளிராஜா மற்றும் ஆதன் தங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி தங்கள் அறிவுரைபடி என்னை அறிமுகபடுத்திவிட்டேன் அறிமுகபடுத்தாமல் உள்ளே வந்தமைக்கு மன்னிக்கவும் :icon_rollout:

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 10:11 AM
அருமையான பதிவு .அறியாத தகவல்கள் .இதன் சிறப்பம்சம் லினக்ஸ்ல் உள்ள அனைத்தும் ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் இதனை விலை கொடுத்து வாங்கவேண்டியதில்லை ..மற்றொன்று இதன் நம்பகதன்மை..ஆனால் இதிலுள்ள நெகடிவ் தன்மை இதனை விண்டோஸ் போன்று பயன் படுத்துவது எளிதல்ல என்பது தான் ...

பாரதி
24-03-2011, 02:42 PM
லினக்ஸ் ஆர்வலருக்கு வணக்கமும் வரவேற்பும்.


லினக்ஸ்ல் உள்ள அனைத்தும் ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் இதனை விலை கொடுத்து வாங்கவேண்டியதில்லை ..மற்றொன்று இதன் நம்பகதன்மை..ஆனால் இதிலுள்ள நெகடிவ் தன்மை இதனை விண்டோஸ் போன்று பயன் படுத்துவது எளிதல்ல என்பது தான் ...

சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள். லினக்ஸில் பழகிப்பாருங்கள். அதுவும் எளிதுதான் என்பதை விரைவில் உணர்வீர்கள்.

priyan24
24-03-2011, 03:53 PM
சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள். லினக்ஸில் பழகிப்பாருங்கள். அதுவும் எளிதுதான் என்பதை விரைவில் உணர்வீர்கள்.

பாரதி கூறியது மிகவும் சரி முதலில் சிறிது கடினம் போல் தோன்றினாலும் உண்மையில் உபுண்டு மிகவும் உபயோகமுள்ளது. இன்னும் செல்ல செல்ல மெல்ல மெல்ல உபுண்டு எல்லதரபினராலும் உபயோகபடுதமுடியும் என்பதில் எள் அளவும் ஐயம் இல்லை.

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 05:40 PM
சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள். லினக்ஸில் பழகிப்பாருங்கள். அதுவும் எளிதுதான் என்பதை விரைவில் உணர்வீர்கள்.
உண்மைதான் நண்பரே .. ஆனால் மனம் அதில் ஒன்றி அதனுடன் பழக ஆகும் காலம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் ...தொடர்ந்து கொடுங்கள் லினக்ஸ் யின் சிறப்பம்சங்களை ....