PDA

View Full Version : ஹோண்டா தொழிற்சாலையில் 1500 பேருக்கு வேலை வாய்ப்பு



முகம்மது ஹுமாயூன்
23-03-2011, 02:43 PM
டெல்லி: ராஜஸ்தானில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலையில் புதிதாக 1,500 பேரை வேலைக்கு அமர்த்த இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா(எச்எம்எஸ்ஐ)நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஹோண்டா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதையடுத்து, உற்பத்தி திறனை அதிகரிக்கும் பணிகளில் ஹோண்டா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஹரியானா மாநிலம், மானேசரில் ஆண்டுக்கு 16 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யும் திறன் படைத்த ஹோண்டா தொழிற்சாலை உள்ளது .

தேவை அதிகரித்து வருவதையடுத்து, ராஜஸ்தானில் இரண்டாவது தொழிற்சாலையை ஹோண்டா அமைத்து வருகிறது . வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தியை துவங்க உள்ள இந்த தொழிற்சாலையில், புதிதாக 1500 பேருக்கு வேலை கொடுக்க இருப்பதாக ஹோண்டா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தி்ன் தலைவர் கூறியதாவது:

"ராஜஸ்தான் மாநிலம், தபுகராவில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது தொழிற்சாலை வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி துவங்கும். இதற்காக, நிரந்தர மற்றும் தற்காலிகமாக பணியாற்றுவதற்காக 1500 பேரை நியமிக்க உள்ளோம்.

ரூ.600 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய தொழிற்சாலை, ஆண்டுக்கு 6 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கும் திறனை பெற்றிருக்கும். பின்னர் படிப்படியாக ஆண்டுக்கு 12 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையாக இது மாற்றப்படும். இதுதவிர, மேலும் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.
நன்றி ஒன் இந்தியா.

Nivas.T
23-03-2011, 02:54 PM
:aktion033::aktion033::aktion033:
:smartass::sport-smiley-018::medium-smiley-088::medium-smiley-080::music-smiley-009::musik010::icon_clap::icon_b:

அன்புரசிகன்
24-03-2011, 03:21 AM
வேலைவாய்ப்பு சந்தோசமான விடையம். பொருளாதார ரீதியில் இந்தியா உயரலாம்.

ஹொண்டா என்பது இந்தியா தொழிற்சாலை அல்லவே. அதாவது இந்திய பணம் லாபம் என்ற ரீதியில் வெளியேறுகிறது. அதே நேரம் ஊதியம் என்ற வகையில் உள்ளே வருகிறது. ஓரளவு சமப்பட்டாலும் வாகன அதிகரிப்பால் காபன் பெறுமதி அதிகரிக்கப்போவது வருத்தமே...

காரணம் அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவில் ஜப்பானில் வாகன உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் காபன் வரி என்ற ஒன்றை அறிமுகம் செய்கிறார்கள். இந்தியாவில் ஏற்கனவே இருப்பதாக கூறினாலும் அது மக்களுக்கு விலைவாசி உயர்வு என்ற மாயைத்துணியால் மறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது வேற்று நாடுகளில் ஏற்படும் லாப பாதிப்பை இந்தியா போன்ற நாடுகளில் சரிக்கட்டப்பார்க்கிறார்கள்.

சூழலா கஞ்சியா என்றால் கஞ்சி என்பதில் மாற்றுக்கருத்தில்லைத்தானே... மொத்தத்தில் விலைவாசி அதிகரிக்கப்போவது உறுதி.