PDA

View Full Version : இலங்கைச்சிங்கங்கள் Vs இந்தியப்புலிகள் - Finally

Pages : [1] 2 3

ஆதவா
23-03-2011, 09:22 AM
முதலாம் போர் ஆரம்பமாகிவிட்டது... ஆமாங்க.... கிரிக்கெட்டின் அசல் யுத்தம் இன்றிலிருந்து துவங்குகிறது. விண்டீஸ் , பாகிஸ்தான் போட்டி ஆரம்பமாகி களைகட்டிக் கொண்டிருக்கிறது. இதுவரை நிகழ்ந்த லீக் போட்டிகள் எல்லா சும்மா..., ட்ரைலர்.... இனிமேதான் மெயின் பிக்சரே ஆரம்பம்!!!

இதிலிருந்து பைனல் வரை அலசல்கள் ஆரம்பம்!!!!

xavier_raja
23-03-2011, 09:28 AM
முதல் quarter final இன்றைக்கு... எடுத்தவுடன் தெரிந்துவிட்டது மேற்கு இந்திய தீவுகள் காலி என்று... என்னுடைய கணிப்பு இந்தியாவும் பாகிஸ்தானும் செமி final விளையாடும் என்பது...

ஆதவா
23-03-2011, 09:33 AM
முதலாவது சரக்கு முடிவு (குவாட்டர் பைனல்!! :D)

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான்

இந்தியாவுடனான போட்டியில் விளையாடாமலிருந்த கெய்லும் கேமர் ரோச்சும் இம்முறை பங்கேற்றிருக்கின்றனர். பழைய ரெக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்ததில் ஏதோ தப்பித்தவறிதான் பாகிஸ்தான் ஜெயித்திருக்கிறது என்றாலும் குரூப் ஏ பொறுத்தவரையில் இரண்டு பெரிய அணிகளைத் தோற்கடித்த பாகிஸ்தானுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஒரு சுண்டைக்கா டீமாக இருக்கும்!!

எனக்கென்னவோ பாகிஸ்தாந்தான் ஜெயிக்கும் போலத் தெரிகிறது. அதற்கேற்றவாறு மிக முக்கிய வீரர்களான கெயில், ஸ்மித், ப்ராவோ ஆகிய மூன்று பேரும் சீக்கிரமாகவே நடையைக் கட்டினர்!!! கெயிலாவது பரவாயில்லை இரண்டு ஃபோர் அடித்தார்... பிராவோ அதைவிட.... வந்த மூணாவது பாலில் டக்கு!!

பத்து ஓவருக்கு 18 ரன்கள் 3 விக்கெட்..... குவார்டர் பைனல் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு “குவாட்டர்” அடித்து ஆடுகிறார்களா விண்டீஸ்??

ஹஃபீஸ் ஓவரில் திணருகிறார்கள்!! குறிப்பாக சந்தர்பால்... ஏதோ டெஸ்ட் ஆடுவது போல எல்லாபாலையும் ஸ்ட்ரோக்கிக் கொண்டிருக்கிறார்... இன்னும் ஒரு ரன்னும் எடுத்தபாடில்லை!

--------------
22/3 - 12 ஓவ்
-------------

ஆதி
23-03-2011, 09:41 AM
சந்தரப்பால் இன்னும் இருக்கார், அவரும் சர்வாணும் இருக்கும் வரை ஸ்கோர் கணிசமாக உயர அதிக வாய்ப்பிருக்கு.. பார்ப்போம்...

ஆதவா, சந்தரப்பால் டிராவிட் மாதிரி, ரொம்ப பொறுமையா ஆடுவார்..

ஆதவா
23-03-2011, 09:42 AM
35 க்கு 3

சர்வானும் சந்தர்பாலும் ஆடிவருகிறார்கள்...

சந்தர்பால் 27 பாலுக்கு 3 ரன்கள்!!! சார்!! இப்ப நீங்க ஆடிட்டி இருக்கிறது வார்ம் அப் மேட்ச் இல்ல.... குவார்டர் பைனல்!!!! :lachen001:

ஆதி
23-03-2011, 09:45 AM
ஆதவா, இந்த சூழலில் இப்படித்தான் ஆட வேண்டி இருக்கும், பந்து வீச்சாளர்களையும், ஃபீல்டர்களையும் வெறுப்பேத்தி அயர்ச்சியுற வைப்பது, அப்புறம் ஸ்கோர் ஏத்திக்கலாம் :D

அக்தர் வேகமா ஓடி வந்து 150 பந்து எறிந்தால், ஸ்டோக் வச்சு காலுக்கடியில் பம்பரம் சுத்தவிடுவார் டிராவிட் :D

எப்படி இருக்கும் அக்தருக்கு, போங்கடா இவன் எவ்வளவு வேகமா போட்டாலும் அப்படியே அதை ஸ்டாப் பண்ணி, பம்பரம் சுத்தவிடுறான் னு கடுப்பாய்டுவார்...

அடிடா னு டிராவிட்ட முறைப்பார், எந்த ஒரு சம்பவமும் நடக்காத மாதிரியே டிராவிட் முகத்தை வச்சுக்குட்டு, அவரைப்பாப்பார், அப்புரம் அந்த பக்கமா முகத்தை திருப்பிப்பார்....

ஆதவா
23-03-2011, 10:17 AM
சந்தரப்பால் இன்னும் இருக்கார், அவரும் சர்வாணும் இருக்கும் வரை ஸ்கோர் கணிசமாக உயர அதிக வாய்ப்பிருக்கு.. பார்ப்போம்...

ஆதவா, சந்தரப்பால் டிராவிட் மாதிரி, ரொம்ப பொறுமையா ஆடுவார்..

சரிதான் ஆதன்... விக்கெட் அடுத்தடுத்து போய்விட்டது என்பதற்காக இப்படியா???

39/3 - 18 ஒவர்கள்.
ரன்ரேட் மூன்றைக்கூட தொடவில்லை!!! இதற்கு இந்தியாவே பரவாயில்லை!! :D

சந்தர்பாலும் சர்வானும் கொஞ்சம் நேரம் நின்றால் போதும்.. பிறகு சமியும் பொலார்டும் பார்த்துக் கொள்வார்கள்.... ஆனால் சுழலுக்கு விண்டீஸ் ரொம்ப திணறுகிறது!! அப்ரிடியின் முதல் ஓவர் மெய்டன்!!! சயிது அஜ்மலின் ஓவரில் ஒருரன் மட்டுமே!! :eek:

ஆதவா, இந்த சூழலில் இப்படித்தான் ஆட வேண்டி இருக்கும், பந்து வீச்சாளர்களையும், ஃபீல்டர்களையும் வெறுப்பேத்தி அயர்ச்சியுற வைப்பது, அப்புறம் ஸ்கோர் ஏத்திக்கலாம் :D

அக்தர் வேகமா ஓடி வந்து 150 பந்து எறிந்தால், ஸ்டோக் வச்சு காலுக்கடியில் பம்பரம் சுத்தவிடுவார் டிராவிட் :D

எப்படி இருக்கும் அக்தருக்கு, போங்கடா இவன் எவ்வளவு வேகமா போட்டாலும் அப்படியே அதை ஸ்டாப் பண்ணி, பம்பரம் சுத்தவிடுறான் னு கடுப்பாய்டுவார்...

அடிடா னு டிராவிட்ட முறைப்பார், எந்த ஒரு சம்பவமும் நடக்காத மாதிரியே டிராவிட் முகத்தை வச்சுக்குட்டு, அவரைப்பாப்பார், அப்புரம் அந்த பக்கமா முகத்தை திருப்பிப்பார்....

ஸ்டுவர்ட் மெக்கில் என்று நினைக்கிறேன்... ட்ராவிட்டுக்கு பவுலிங் வீசி வெறுப்பாகிவிட்டார். என்னடா இவன் அவுட்டும் ஆகமாட்டேங்கிறான் அடிக்கவும் மாட்டேங்கிறான் என்று பந்தை தரையில் வீசி விட்டு வெறுப்பாகக் கிளம்புவதைப் பார்த்தபொழுது சிப்பு சிப்பா வந்தது... சும்மாவா சொன்னாங்க,, ட்ராவிட் இந்தியாவின் சுவருன்னு... சுவரு மாதிரி நிக்க இன்னொரு ஆள் பொறந்துதான் வரணும்.. :D

-------------------
சர்வான் தப்பிச்சார்!! கேட்ச் ட்ராப்டு!!! :cool:
----------------------
அடுத்த சங்கு ஊதியாச்சு!!! சர்வான் அவுட்!!

58/4 - 24.1 ஓவ்

ஆதி
23-03-2011, 10:25 AM
5 விக்கட்ஸ் டௌன், இனி ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ தான்

ஆதவா
23-03-2011, 10:26 AM
பொலார்டும் போயாச்சு!! விண்டீஸ் ஊ ஊ தான்!!!
சந்தர்பால் தலையில் வெஸ்ட் இண்டீஸின் விதி!!

69/5 - 26.4 ஓவ்

ஆதி
23-03-2011, 10:27 AM
69/6 26.5

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ உறுதி

100 தேருமா ??

Nivas.T
23-03-2011, 10:27 AM
69/6:eek:

ஆதவா
23-03-2011, 10:27 AM
அட போங்கப்பா.... தாம்ஸ் அவுட்டு!!!
69/6
-+++---------------
வெஸ்ட் இண்டீஸின் இந்த ஆட்டம் படுமோசமான ஆட்டம். காலிறுதியில் விளையாடுகிறோம் என்ற நினைப்பில் விளையாடுவதைப் போலத் தெரியவில்லை. நாலாம் தர அணியைப் போல ஆடிக் கொண்டிருக்கிறது!!!

சமியும் சந்தர்பாலும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை! பாகிஸ்தான் அரையிறுதிக்கு உறுதி!!

இந்த உலகக்கோப்பையில் அப்ரிடி 20 விக்கெட்!!!!

Nivas.T
23-03-2011, 10:28 AM
69/6 26.5

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ உறுதி

100 தேருமா ??

கஷ்ட்டம்தான் பாக்கலாம் :frown::frown:

ஆதவா
23-03-2011, 10:31 AM
71/7 - 27.3 ov

சமியும் போயாச்சு

இப்போதான் யூனிஸ்கான் வாழ்க்கை கொடுத்தார்... ஆனால் சமிக்கு வாழ்வு சரியில்லை என்று நினைக்கிறேன்..

வெஸ்ட் இண்டீஸ் எந்தளவுக்கு மெதுவாக விளையாடியதோ அதற்கு நேர்மாறாக சீக்கிரமாகவே விக்கெட்டுகள் விழுகின்றன..

ஆதி
23-03-2011, 10:31 AM
71/7 27.2

10 ரன்னுக்கு ஒரு விக்கட் னு ஆடுறாங்க போல

ஆதி
23-03-2011, 10:34 AM
சூப்பர்

71/8 27.5 ஓவர்...

போங்க்கடா நீங்களும் உங்க கல்யாணமும்...

ஆதவா
23-03-2011, 10:35 AM
சர்தான்....

சந்தர்பால் ஒரு ஓரமா நின்னுட்டே இருக்காரு... விக்கெட் விழுகிறதை வேடிக்கைப் பார்த்துட்டு!!!

71/8

பைஸூ அவுட்+

-----------------------------

இந்த விளையாட்டு ரொம்ப நல்லாயிருக்கு... யார் முதல்ல அவுட்டுனு போடறாங்களோ அவங்களுக்கு பாயிண்டு!!! சரியா???

அடுத்த விக்கெட்டை எதிர்நோக்கி!!

ஆதி
23-03-2011, 10:36 AM
//சந்தர்பால் ஒரு ஓரமா நின்னுட்டே இருக்காரு... விக்கெட் விழுகிறதை வேடிக்கைப் பார்த்துட்டு!!!//

நாளைக்கு யாரும் அவரை குறை சொல்ல கூடாதில்ல... :)

ரொம்ப ரொம்ப சீனியர் ப்லேயராச்சே....

தாமரை
23-03-2011, 10:47 AM
//சந்தர்பால் ஒரு ஓரமா நின்னுட்டே இருக்காரு... விக்கெட் விழுகிறதை வேடிக்கைப் பார்த்துட்டு!!!//

நாளைக்கு யாரும் அவரை குறை சொல்ல கூடாதில்ல... :)

ரொம்ப ரொம்ப சீனியர் பேயராச்சே....

1. வெஸ்ட் இண்டீஸ் டீம் ல ஊதிய பிரச்சனை இருப்பதைக் குட்டறீங்களா?
2. வெஸ்ட் இண்டீஸ்ல கிரிக்கெட் செத்துப் போச்சுன்னு நக்கலடிக்கிறீங்களா?:wuerg019::wuerg019::wuerg019:

ஆதி
23-03-2011, 10:50 AM
1. வெஸ்ட் இண்டீஸ் டீம் ல ஊதிய பிரச்சனை இருப்பதைக் குட்டறீங்களா?
2. வெஸ்ட் இண்டீஸ்ல கிரிக்கெட் செத்துப் போச்சுன்னு நக்கலடிக்கிறீங்களா?:wuerg019::wuerg019::wuerg019:

உங்க பதில பார்த்த உடனே நெனச்சேன் எதுலையோ மாட்டிக்கிட்டோம்னுடு..

என் நெனப்பு பொய்யாகல :D

ஓவியன்
23-03-2011, 10:57 AM
போங்க்கடா நீங்களும் உங்க கல்யாணமும்...

ஆமா இத யாருக்கு சொல்லுறீங்க ஆதன், மதிக்கு இல்லையே....!!! :D:D:D:cool:

ஆதவா
23-03-2011, 11:03 AM
பாகிஸ்தானில் சயித் அஜ்மலும் அப்ரிடியும் ஹஃபீஸும் மிரட்டுகிறார்கள். அதுபோக இன்னும் அப்துல் ரஜாக் இன்னும் வரவேயில்லை.. பாகிஸ்தானின் பவுலிங் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருப்பது போலத் தோணுகிறது.

ஒருவேளை ஆஸியை நாம் வென்றாலும் பாகிஸ்தானை வெல்வதுதான் கடினமாக இருக்குமென்று நினைக்கிறேன்!!!

---------------

ஆமா இத யாருக்கு சொல்லுறீங்க ஆதன், மதிக்கு இல்லையே....!!! :D:D:D:cool:

அவரையே சொல்லிக்கிட்டாரோ என்னவோ?? :aetsch013:

ஹலோ..... அங்கில்..... ஆதிக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க அங்கில் :D

நாஞ்சில் த.க.ஜெய்
23-03-2011, 11:04 AM
தற்போது வெஸ்ட் இண்டீஸ் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது ..91 /8 சந்தர்பால் 32 ( 83 பாலுக்கு ) எதோ இதே நிலையில் சென்றால் 150 ரன்கள் தாண்டுமா

ஆதி
23-03-2011, 11:34 AM
111/9 42.2, ரோச் அவுட்

சந்தரப்பால் இன்னும் இருக்கார்...

104 பந்துகளுக்கு 43 ரன்

Nivas.T
23-03-2011, 11:36 AM
111/9

ஓவியன்
23-03-2011, 11:37 AM
111/9 42.2, ரோச் அவுட்

சந்தரப்பால் இன்னும் இருக்கார்...

அவர் எந்த பாலுக்கு அவுட் ஆவாரோ தெரியலையே...?? :wuerg019:

ஆதி
23-03-2011, 11:39 AM
ரவி ராம்பால் அதுக்கு வாய்ப்பு குடுக்கலை :D

112 எல்லோரும் அவுட்

Nivas.T
23-03-2011, 11:41 AM
111 மறுபடியும் விளையாடிடுச்சே

ஆதவா
23-03-2011, 11:42 AM
112 க்கு ஆலவுட்!! சந்தர்பால் மட்டும் அவுட் ஆகாமல் நின்றுகொண்டிருக்கிறார். 106 பாலுக்கு வெறும் 46 ரன்களே எடுத்திருந்த அவர் ஸ்லோயஸ்ட் ஃபிஃப்டிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்... வந்தவரெல்லாம் சென்றுவிட்டால் சந்தர்பால் ரன் அடிக்க இடமேது??

அப்ரிடிக்கு 4 விக்கெட்டுகள்!!
மனுஷன் மேன் ஆப் த சீரியஸ் வாங்கிவிடுவார் போலிருக்கே??

113 ரன்கள் எடுத்தால் வெற்றி!!!
இதைக் கூட எடுக்கவில்லையெனில் பாகிஸ்தான் இவ்வளவுதூரம் வந்திருக்காது இல்லையா???

Nivas.T
23-03-2011, 11:42 AM
ரவி ராம்பால் அதுக்கு வாய்ப்பு குடுக்கலை :D

112 எல்லோரும் அவுட்

43.3 வது பால் ல அவுட்டு :D:D:D:rolleyes:

Nivas.T
23-03-2011, 11:45 AM
112 க்கு ஆலவுட்!! சந்தர்பால் மட்டும் அவுட் ஆகாமல் நின்றுகொண்டிருக்கிறார். 106 பாலுக்கு வெறும் 46 ரன்களே எடுத்திருந்த அவர் ஸ்லோயஸ்ட் ஃபிஃப்டிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்... வந்தவரெல்லாம் சென்றுவிட்டால் சந்தர்பால் ரன் அடிக்க இடமேது??

அப்ரிடிக்கு 4 விக்கெட்டுகள்!!
மனுஷன் மேன் ஆப் த சீரியஸ் வாங்கிவிடுவார் போலிருக்கே??

113 ரன்கள் எடுத்தால் வெற்றி!!!
இதைக் கூட எடுக்கவில்லையெனில் பாகிஸ்தான் இவ்வளவுதூரம் வந்திருக்காது இல்லையா???

பார்க்கலாம் ஆதவா கிரிக்கெட்டில் எதுவும் சொல்வதற்கில்லை :)

Nivas.T
23-03-2011, 12:27 PM
ஆரம்பிச்சாச்சு

பாக் 5/0:sprachlos020:

ஆதவா
23-03-2011, 12:40 PM
பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான தொடக்கத்தைத் தருகிறார்கள். கம்ரான் அக்மலும் ஹஃபீஸும் அடித்தாடுகிறார்கள்.

30 /0 - 3 ஓவர்

ஹஃபீஸ் ஓபனிங் பவுலர் மற்றும் ஓபனிங் பேட்ஸ்மேனாகவும் அச்சுறுத்துகிறார்!!!

Nivas.T
23-03-2011, 12:54 PM
58/0 (10)

பாக்கிஸ்த்தான் வெற்றி உறுதி

நாஞ்சில் த.க.ஜெய்
23-03-2011, 12:59 PM
இதே வேகத்தில் போனால் பதினெட்டு ஓவர் குள் வெற்றிபெற்றுவிடும் பாகிஸ்தான் ...தற்போது 55 /௦ 8 .2 ஓவருக்கு

ஆதி
23-03-2011, 01:02 PM
மன்னிச்சுக்குங்க, 85 னு நெனச்சுட்டேன்..

15 ஓவருக்குள்ளவே ஜெய்ச்சுடுவாங்க...

ஆதவா
23-03-2011, 01:14 PM
வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் பவர்ப்லே எடுக்கவில்லை.... அதற்குப் பதில் பாகிஸ்தான் பேட்டிங் பவர்ப்ளே எடுத்திருக்கலாம். கொஞ்சம் அடித்தாடலாம்.. இன்னும் 40 ரன்கள் எடுத்தால் போதும்.

73/0 12 ஒவ்

ஆதி
23-03-2011, 01:18 PM
வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் பவர்ப்லே எடுக்கவில்லை.... அதற்குப் பதில் பாகிஸ்தான் பேட்டிங் பவர்ப்ளே எடுத்திருக்கலாம். கொஞ்சம் அடித்தாடலாம்.. இன்னும் 40 ரன்கள் எடுத்தால் போதும்.

73/0 12 ஒவ்

அடித்தாட போய், விக்கட் விழுந்துட கூடாது னு மெதுவாவே ஆடுறாங்க போல..

பார்ப்போம், ஒரு நல்ல ஓவர் மாட்டினா, சீக்கிரம் முடிஞ்சிடும்...

Nivas.T
23-03-2011, 01:46 PM
அடித்தாட போய், விக்கட் விழுந்துட கூடாது னு மெதுவாவே ஆடுறாங்க போல..

பார்ப்போம், ஒரு நல்ல ஓவர் மாட்டினா, சீக்கிரம் முடிஞ்சிடும்...

108/0 (20)

விக்கெட் விழாமல் ஜெய்ப்பதுதான் பின் வரும் போட்டிகளுக்கு அவர்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுக்கும்,

இதுவே இந்திய அணியாக இருந்திருந்தால்
ரொம்ப கஷ்ட்டம், இரண்டு மூன்று விக்கெட்டுகளையாவது இழந்து தவித்து போராடி நார்ப்பதவது ஓவரில் தான் வெற்றி பெரும்

ஆதவா
23-03-2011, 01:56 PM
இந்த தோல்விக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் பக்கம் பல மாற்றங்கள் வரலாம்... சிலர் அணியிலிருந்து தூக்கப்படலாம். கேப்டன்கள் மாறலாம்....

வெஸ்ட் இண்டீஸின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தால் நிச்சயம் அதன் ஸ்திரமில்லாத பேட்டிங் தான் முன்னுக்கு வருகிறது. ஸ்மித் மட்டுமே உறுப்படியாக ஆடிய மனுஷன். ஆனால் முக்கியமான இந்த மேட்சில் ஆடாமல் விட்டது மிகப்பெரிய ஏமாற்றம்... லீக் முழுக்க ஆடாமல் காலிறுதியில் ஆடிய சந்தர்பால், இந்த தொடர் முழுக்க ஏமாற்றிய கெய்ல், இடியடி அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட பொலார்ட் சர்வான் போன்ற எந்த முண்ணனி வீரர்களும் ஆடவில்லை... பிறகெங்கே காலிறுதியிலிருந்து முன்னேற??

ஆனால் வெஸ்ட் இண்டீஸின் பவுலிங் டிபார்ட்மெண்ட் மிக அருமையாக இருந்தது. இந்தியாவுக்கெதிராக இறக்கப்பட்ட ரவிராம்பால் ரொம்பவும் சவாலாக இருப்பாரென எதிர்பார்த்தேன். “நானும் பதினொண்ணிலொண்ணு” என்று சொல்வதைப் போல சுத்தமாக எடுபடாமல் போனார்.. ரோச் மற்றும் பென் ஆகியோர் லீக் போட்டிகளில் அசத்தினார்கள். கேப்டனும் நன்றாகத்தான் வீசினார். கேப்டனைச் சொல்லி குறையொன்றுமில்லை. பேட்ஸ்மென்கள் ஒழுங்காக ஆடாததற்கு அவர் என்ன செய்வார் பாவம்!!!

பாகிஸ்தான், பேட்டிங்கை விடவும் பவுலிங்கில் நல்ல பலமாக இருக்கிறது. தவிர, அவர்களது ஸ்பின்னிங் டிபார்ட்மெண்ட் ரொம்பவும் வலுவாக இருப்பதால் அரையிறுதியில் இந்தியா (அல்லது ஆஸி) திணறக்கூடும்... ஆஸ்திரேலியாவாக இருந்தால் ஸ்பின்னுக்கு ரொம்பவும் திணறுவார்கள். அப்ரிடியின் பவுலிங் சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. ஹஃபீஸ், அஜ்மல் போன்றவர்கள் நன்கு பவுல் செய்கிறார்கள். குறிப்பாக அஜ்மல் தூஸ்ராவில் எதிரணியை திணறவைக்கிறார்.

சோ, அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது பாகிஸ்தான்.. இது கடந்தகால கசப்புகளிலிருந்து மனதளவில் அவர்களை மிகவும் தேற்றியிருக்கும். 12 வருடங்களுக்குப் பிறகு அரையிறுதி செல்வதால் கோப்பை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது. நாளைக்கு இந்நேரம் நமது லட்சணம் தெரிந்துவிடும்!!

பார்ப்போம் நண்பர்களே!

ஆதி
23-03-2011, 01:59 PM
இதுவே இந்திய அணியாக இருந்திருந்தால்
ரொம்ப கஷ்ட்டம், இரண்டு மூன்று விக்கெட்டுகளையாவது இழந்து தவித்து போராடி நார்ப்பதவது ஓவரில் தான் வெற்றி பெரும்

விடுங்க..

பப்ளிக்.. பப்ளிக்...

Nivas.T
23-03-2011, 02:07 PM
பாக்கிஸ்த்தானின் சிறப்பான ஆட்டங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது. அணியில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. மனதளவில் நல்ல வலிமை பெற்று விட்டது. நாம் இங்குதான் கொஞ்சம் சரிகிறோம். இருந்தாலும் நமது அணியும் நன்றாக உள்ளது.

நாளை நடக்கும் இந்தியா, ஆஸ்த்ரேலியா இடையேயான ஆட்டம் மிகுந்த எதிர் பார்ப்பை பெற்றுள்ளது.

நாளை இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்:)

Nivas.T
23-03-2011, 02:08 PM
விடுங்க..

பப்ளிக்.. பப்ளிக்...

:D:D:D:D

ஆதவா
23-03-2011, 02:18 PM
108/0 (20)

விக்கெட் விழாமல் ஜெய்ப்பதுதான் பின் வரும் போட்டிகளுக்கு அவர்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுக்கும்,

இதுவே இந்திய அணியாக இருந்திருந்தால்
ரொம்ப கஷ்ட்டம், இரண்டு மூன்று விக்கெட்டுகளையாவது இழந்து தவித்து போராடி நார்ப்பதவது ஓவரில் தான் வெற்றி பெரும்

நாளை இந்நேரம் இந்திய ரசிகர்கள் கண்ணீர் சிந்துவதைப் பார்க்கலாம்...

அது
ஆனந்தக்கண்ணீரா? இல்லை
அழுவாச்சிக் கண்ணீரா???

தெரியலையே!!!

Nivas.T
23-03-2011, 02:50 PM
நாளை இந்நேரம் இந்திய ரசிகர்கள் கண்ணீர் சிந்துவதைப் பார்க்கலாம்...

அது
ஆனந்தக்கண்ணீரா? இல்லை
அழுவாச்சிக் கண்ணீரா???

தெரியலையே!!!

:icon_ush: :shutup:

ஆனந்தக் கண்ணீராய் இருக்க வேண்டும் என்று இறைவனை பிராத்திப்போம் :icon_03:

:icon_hmm:இந்திய வீரர்களே - நம்பிக்கைய விட்ரக்கூடாது :icon_nono:
தீயா விளையாடனும் என்ன? :waffen093::musik010::music-smiley-010::082502now_prv::icon_clap::thumbsup::huepfen024::icon_good::080402cool_prv:
:080402gudl_prv:

ஆதவா
24-03-2011, 05:09 AM
இந்தியா ஆஸ்திரேலியா இன்று ஒரு மினி பைனலுக்காகக் காத்திருக்கிறது. பழைய ஹிஸ்டரிகளைப் புரட்டிப் பார்த்து நேரத்தை வீணாக்கவேண்டாம். இன்றைய ஃபார்ம் என்ன என்பதுதான் கணக்கு. இரண்டுமே பெரிய மலைகள். இரண்டிலொன்று இன்றிரவு வெளியேறுவது நிச்சயம். ஆக, போட்டி மிகவும் சுவாரசியமானது….

கவனிக்கப்படவேண்டியவர்கள்:

சச்சின் : நூறாவது சதம், சிறப்பான ஃபார்ம்
யுவ்ராஜ் : தொடர் முழுக்க நல்ல ஆல்ரவுண்டராக வருவது
அஸ்வின் : கேரம் பால் உத்தி

பாண்டிங் : முக்கிய மேட்சுகளில் முக்கிமுக்கி அடிப்பது
ஹஸி : மிகச்சிறந்த மேட்ச் வின்னர்
ஜான்ஸன் : மிரட்டும் வேகம். சேவாக் கவனம்!!

ஸ்டார்ட் ம்யூஸிக்!!! :icon_b:

அன்புரசிகன்
24-03-2011, 05:31 AM
ஸ்டார்ட் ம்யூஸிக்!!! :icon_b:

அப்புறம் கவுண்டமணிய பூ மிதிக்க கூட்டிட்டுப்போற இசையா...?:D

http://www.youtube.com/watch?v=1Eri7Da32C8

நன்றி யூடப்.

அன்புரசிகன்
24-03-2011, 05:37 AM
இந்தியா ஆஸ்திரேலியா இன்று ஒரு மினி பைனலுக்காகக் காத்திருக்கிறது. பழைய ஹிஸ்டரிகளைப் புரட்டிப் பார்த்து நேரத்தை வீணாக்கவேண்டாம். இன்றைய ஃபார்ம் என்ன என்பதுதான் கணக்கு. இரண்டுமே பெரிய மலைகள். இரண்டிலொன்று இன்றிரவு வெளியேறுவது நிச்சயம். ஆக, போட்டி மிகவும் சுவாரசியமானது….

கவனிக்கப்படவேண்டியவர்கள்:

சச்சின் : நூறாவது சதம், சிறப்பான ஃபார்ம்
யுவ்ராஜ் : தொடர் முழுக்க நல்ல ஆல்ரவுண்டராக வருவது
அஸ்வின் : கேரம் பால் உத்தி

பாண்டிங் : முக்கிய மேட்சுகளில் முக்கிமுக்கி அடிப்பது
ஹஸி : மிகச்சிறந்த மேட்ச் வின்னர்
ஜான்ஸன் : மிரட்டும் வேகம். சேவாக் கவனம்!!

ஸ்டார்ட் ம்யூஸிக்!!! :icon_b:
இன்றய மைதானம் துடுப்பாட்டத்துக்கு ஏதுவானதாமே... இந்தியா டொஸ் இல் வென்று 300 க்கு மேலாக வெற்றிவாய்ப்பு இலக்கை அவுஸிக்கு கொடுத்தால் வெற்றிவாய்ப்பு இந்தியா பக்கமே. இந்தியாவில் துடுப்பாட்ட வீரர் அணிவகுப்பு மிக நன்று. தென்னாபிரிக்காவுடன் கவுத்தமாதிரி கவுக்காதுவிட்டால் சரி.

அவுஸில் பந்துவீச்சில் பயமுறுத்துபவர்கள் ஜோன்சன் தான். மற்ற வோட்சன் சிலவேளை பந்துவீச்சில் ஆட்டத்தை மாற்றுபவர். இன்று வாட்சன் மிளிரினால் ஆட்டம் விறுவிறுப்பாகும். இல்லாத பட்சத்தில் 300 ஓட்டம் என்ற இலக்கை இந்தியா கொடுத்தால் அதை துரத்தும் வல்லமை மற்றய கிளார்க் போன்றவர்களால் இயலாது. 250 என்ற இலக்கு என்றால் ஹசியால் மற்றும் யோன்சனால் ஆட்டத்தை மாற்றியமைக்கலாம்.

மொத்தத்தில் பேஸ்மண்டு ரொம்ப ஸ்ரோங் ஆக இருக்க வேண்டும்.

Nivas.T
24-03-2011, 05:40 AM
ஸ்டார்ட் ம்யூஸிக்!!! :icon_b:

இப்டி ம்யுசிக் ஸ்டார்ட் பண்ணித்தான் :sprachlos020:தென்னாப்பரிக்க மேட்ச்சுக்கு கூடி கும்மி அடிச்சோம் :rolleyes:
அது ஊத்திக்கிச்சு:icon_rollout::icon_rollout:

இன்னிக்கு என்ன கதைன்னு பாப்போம் :sprachlos020::sprachlos020:

பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு

:icon_b::icon_b::icon_b:

Nivas.T
24-03-2011, 05:48 AM
எங்க எப்டி விளையாடினாலும்:)

அது என்னமோ இந்தியாவுக்கு எதிரா மட்டும் :sprachlos020:
எல்லாரும் நல்ல பார்முக்கு வந்துடறாங்க :eek:

அது என்னனு எனக்கு புரியல ??? :confused::aetsch013::smilie_abcfra:

ஆதவா
24-03-2011, 06:03 AM
இன்றய மைதானம் துடுப்பாட்டத்துக்கு ஏதுவானதாமே... இந்தியா டொஸ் இல் வென்று 300 க்கு மேலாக வெற்றிவாய்ப்பு இலக்கை அவுஸிக்கு கொடுத்தால் வெற்றிவாய்ப்பு இந்தியா பக்கமே. இந்தியாவில் துடுப்பாட்ட வீரர் அணிவகுப்பு மிக நன்று. தென்னாபிரிக்காவுடன் கவுத்தமாதிரி கவுக்காதுவிட்டால் சரி.

அவுஸில் பந்துவீச்சில் பயமுறுத்துபவர்கள் ஜோன்சன் தான். மற்ற வோட்சன் சிலவேளை பந்துவீச்சில் ஆட்டத்தை மாற்றுபவர். இன்று வாட்சன் மிளிரினால் ஆட்டம் விறுவிறுப்பாகும். இல்லாத பட்சத்தில் 300 ஓட்டம் என்ற இலக்கை இந்தியா கொடுத்தால் அதை துரத்தும் வல்லமை மற்றய கிளார்க் போன்றவர்களால் இயலாது. 250 என்ற இலக்கு என்றால் ஹசியால் மற்றும் யோன்சனால் ஆட்டத்தை மாற்றியமைக்கலாம்.

மொத்தத்தில் பேஸ்மண்டு ரொம்ப ஸ்ரோங் ஆக இருக்க வேண்டும்.

இல்லை அன்பு.... நாக்பூரும் பெங்களூரும் தான் பேட்டிங்கிற்கு ஏற்ற மைதானங்கள். தவிர அஹ்மதாபாத்தில் இந்தியாவின் ஹிஸ்டரி ரொம்பவும் வீக்காக இருக்கிறது. நிறைய தோல்விகள்!!! அதேசமயம் நேர்மாறாக ஆஸியினர் வெற்றி பெற்றிருக்கின்றனர்!!

அஹ்மதாபாத்தில் முன்னூறு அடிப்பது கொஞ்சம் கஷ்டம்... முதல் பேட்டிங் எடுத்து 250 க்கு மேலே 280 வரை அடித்துவிட்டால் வெற்றி நமக்கே!!

இப்டி ம்யுசிக் ஸ்டார்ட் பண்ணித்தான் தென்னாப்பரிக்க மேட்ச்சுக்கு கூடி கும்மி அடிச்சோம்
அது ஊத்திக்கிச்சு

சங்கூதறதுகூட ம்யூசிக் தான்!!!

இந்திய டீம் அவரவர் வீடுகளை எண்ணி எண்ணி பயந்து விளையாடி ஜெயிக்கவேண்டும்!!!

Nivas.T
24-03-2011, 06:16 AM
2:42 மணி நேரம் மட்டுமே :sprachlos020:

ஆதவா
24-03-2011, 06:17 AM
அநேகமாக பாண்டிங் மற்றும் சச்சின் இருவரும் சந்திக்கும் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் அடுத்த உ.கோ வின் போது இருவருக்கும் 40 வயதைத் தாண்டியிருக்கும். (சச்சின் ரிடயர்ட் ஆவார் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை) 2003 பைனலுக்குப் பிறகு இருவரும் மோதுவதாலும், அன்றைக்கு போல இன்றைக்கு பாண்டிங் ஃபார்ம் இல்லாமலிருப்பதாலும் , சச்சின் சதமடித்து பதிலடி தருப்போவதாலும் போட்டி பயங்கர எக்ஸ்பக்டேஷனில் இருக்கிறது!!!

இந்த போட்டியில் தோற்றால் பாண்டிங் தலை உருளும்!! இரண்டுமுறை கப்பு வாங்கிக் கொடுத்தாலும் பப்பு வேகாது என்பது தெரிகிறது!!

லாஸ்ட் சான்ஸ் ஃபார் சச்சின்!!!
மற்றும் ஆஸிக்குக் குத்து - இந்திய அணி!

Nivas.T
24-03-2011, 06:17 AM
இந்திய டீம் அவரவர் வீடுகளை எண்ணி எண்ணி பயந்து விளையாடி ஜெயிக்கவேண்டும்!!!
:eek:
நிச்சயமா
கண்டிப்பா
:D:D

ஓவியன்
24-03-2011, 06:19 AM
இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால் இன்றைய போட்டியில் ஷேவக் விளையாடுவரா, இல்லையா...???

ஓவியன்
24-03-2011, 06:24 AM
இன்று ஷேவக் அணியில் விளையாடினால், ஷேவக் ஆட்டமிழக்காமல் இருக்கும் போது பேட்டிங் பவர் பிளேயை எடுத்து விடுவது உத்தமம்....!! :)

ஆதவா
24-03-2011, 06:37 AM
இன்று ஷேவக் அணியில் விளையாடினால், ஷேவக் ஆட்டமிழக்காமல் இருக்கும் போது பேட்டிங் பவர் பிளேயை எடுத்து விடுவது உத்தமம்....!! :)

ஓவி,,, நான் என்ன சொல்றேன்னா.. பேட்டிங் பவர் ப்ளேயே வேனாங்க்றேன்.... நீங்க ஃபீல்டர்களை வெளியவே நிறுத்திக் கோங்க.. கவ்லையேயில்லை.

ஷேவாக் இரண்டு நாட்களாக பயிற்சியில் இருந்திருக்கிறார். ஆகவே நிச்சயம் வருவார். ஷேவாக் ஒரு 30 ஓவர் நின்றாலே போதும்.... சச்சினின் நூறாவது நூறை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் 2.30 மணி நேரங்களில்....

ஓவியன்
24-03-2011, 06:47 AM
ஓவி,,, நான் என்ன சொல்றேன்னா.. பேட்டிங் பவர் ப்ளேயே வேனாங்க்றேன்.... நீங்க ஃபீல்டர்களை வெளியவே நிறுத்திக் கோங்க.. கவ்லையேயில்லை....

அதுவும் சரிதான், ஒருவேளை பேடிங் பவர் பிளே எடுக்கணும்னா, அதனை பவுலிங் பவர்பிளேமுடிந்த கையுடன் தொடர்ச்சியாக எடுத்து விடுவது நலம். அந்த வேளையில் ஷேவக் இருந்தால் நல்லது, ஷேவக் இல்லாதவிடத்து அதுவும் வேணாம்....

முக்கியமான வேளைகளில் டென்சனாகி சொதப்பும் பதானை விட அனுபவம் வாய்ந்த ரெய்னா பெட்டர் என்பது என் கணிப்பு (இங்கே நாம ரோகித் சர்மாவை மிஸ் பண்ணுறோமோ தெரியலை).

யுவராஜூம் 4வதாகவே ஆடுவது நல்லது...

ஆதவா
24-03-2011, 07:00 AM

சரிதான்.... அப்பவே ஸ்கோர் ஏற்றினால்தான் பின்னால் வருபவர்கள் ஏதோ அவுட் ஆனாலும் 290 வரையிலாவது நீடிப்பார்கள்!!! :D

பதானைவிட ரெய்னா பெட்டர்தான்... பார்ப்போம் யார் இறங்குவார்கள் என்று!!

இன்று இந்தியா நன்கு பேட்டிங் திறத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் ஸ்கோர் 300 தாண்டலாம்!!! :icon_b:

ஆதி
24-03-2011, 08:43 AM
ஆஸி முதலில் மட்டைவீசுகிறது, ரிக்கி டாஸ் செய்து மட்டையாடலை ஏற்வு செய்துவிட்டார்...

இன்று யூசப் இல்லை, சேவக் வந்துட்டார்...

தாமரை
24-03-2011, 08:45 AM
ஆஸி முதலில் மட்டைவீசுகிறது, ரிக்கி டாஸ் செய்து மட்டையாடலை ஏற்வு செய்துவிட்டார்...

இன்று யூசப் இல்லை, சேவக் வந்துட்டார்...

வீசட்டும் வீசட்டும். பந்தை மட்டும் தொடாம வீசட்டும். :lachen001::lachen001::lachen001:

Nivas.T
24-03-2011, 09:07 AM
முதல் ஓவரை அஸ்வின் சிறப்பாக வீசினார்

3 ரன்கள் மட்டுமே

சாகீரின் இரண்டாவது ஓவரும் அருமை :)

Nivas.T
24-03-2011, 09:20 AM
19/0 (5)

இதுவரையில் பந்து வீச்சு கட்டுக்கோப்பாக உள்ளது

விக்கெட் விழுந்தால் நன்று

ஆதவா
24-03-2011, 09:31 AM
டாஸ் ஜெயித்தபோதே இந்தியாவின் 50க்கு 50 % இருந்த வெற்றி வாய்ப்பு 10 % போய்விட்டது எனலாம். வாட்சனும் ஹடினும் நிலைத்தாடுகிறார்கள். இந்த இரு விக்கெட்டுகளையும் இன்னும் ஐந்து ஓவர்களுக்குள் எடுக்கவேண்டும்!!!

பந்து வீச்சு கட்டுக்கோப்பாகச் செல்கிறது என்று சொல்லமுடியாது. ஆஸி, ரன்ரேட்டை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறது!!

Nivas.T
24-03-2011, 09:41 AM
40 / 1

வட்சன் அவுட் :medium-smiley-080:

ஆதவா
24-03-2011, 09:47 AM
40க்கு 1
10.4 over

அஸ்வின் சாதித்தார்... வாட்சன் நடையக்கட்டினார்... வழிச்செடுக்கும் போது பந்து தவறி ஸ்டம்புக்குள் புகுந்தது!!!

40 / 1

வட்சன் அவுட் :medium-smiley-080:

ரொம்பவும் ஆடாதீங்க நிவாஸ்...
லீக் மேட்சில் சொதப்பிய பாண்டிங் நம்முடன் ஆட நிறைய வாய்ப்பு இருக்கிறது. :rolleyes:

இப்பவும் ஸ்கோர் 300 ஐத் தொடுவதற்கான சாத்தியங்களுடன் போகிறது :mad:

Nivas.T
24-03-2011, 09:52 AM
ரொம்பவும் ஆடாதீங்க நிவாஸ்...
லீக் மேட்சில் சொதப்பிய பாண்டிங் நம்முடன் ஆட நிறைய வாய்ப்பு இருக்கிறது. :rolleyes:

இப்பவும் ஸ்கோர் 300 ஐத் தொடுவதற்கான சாத்தியங்களுடன் போகிறது :mad:

இன்னும்

பாண்டிங்
ஹாடின்
கிளார்க்

இவர்களை தூக்கி விட்டால் போதும்

நல்லது பார்க்கலாம் :sprachlos020::sprachlos020:

ஆதவா
24-03-2011, 10:01 AM
முனாபின் முதல் ஓவர்தான் இப்போதைக்கு ஆஸ்திரேலியாவின் ஹை ஓவர். மூன்று பவுண்டரிகள் அடுத்தடுத்து..
இந்த லட்சணத்தில் சென்றால் ஹடினும் பாண்டிங்கும் செஞ்சுரி பார்டன்ஷிப் போடுவது கன்ஃபர்ம்!!

69/1
14.5 ஓவ்

Nivas.T
24-03-2011, 10:08 AM
முனாபின் முதல் ஓவர்தான் இப்போதைக்கு ஆஸ்திரேலியாவின் ஹை ஓவர். மூன்று பவுண்டரிகள் அடுத்தடுத்து..
இந்த லட்சணத்தில் சென்றால் ஹடினும் பாண்டிங்கும் செஞ்சுரி பார்டன்ஷிப் போடுவது கன்ஃபர்ம்!!

69/1
14.5 ஓவ்

இல்லை ஆதவா

இந்த அணியை பொருத்தவரை மிடிலாடார்
பலமானதாய் இல்லை

இத அளவு கூட அடிக்க வில்லை எனில்
இது ஆஸ்திரேலிய அணியே இல்லை

அதுமட்டுமில்லாமல் நமது அண்ணியின் பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் குறைவுதான்

இப்பொழுதுதானே பவர்பிளே முடிந்தது
பார்க்கலாம்

ஆதி
24-03-2011, 10:11 AM
76/1, 17 ஓவருக்கு.. ரொம்ப நல்லாவே விளையாடுறாங்க.. 20 ஒவருக்குள் இன்னொரு விக்கட் விழுந்தால் நன்றாக இருக்கும், இருவரும் நின்றுவிட கூடாது..

ஆதவா
24-03-2011, 10:15 AM
76/1, 17 ஓவருக்கு.. ரொம்ப நல்லாவே விளையாடுறாங்க.. 20 ஒவருக்குள் இன்னொரு விக்கட் விழுந்தால் நன்றாக இருக்கும், இருவரும் நின்றுவிட கூடாது..

86 க்கு 1

18.0 ov.

யுவியின் ஓவரில் பாண்டிங் செழிப்புடன் ஆடுகிறார்.. இரண்டு ஃபோர்!!

ஆதி
24-03-2011, 10:17 AM
நின்றுட்டாங்க என்றே சொல்லவேண்டும், இந்த பாட்னர்ஸிப்பை எவ்வளவு சீக்கிரம் உடைக்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது..

Nivas.T
24-03-2011, 10:20 AM
நின்றுட்டாங்க என்றே சொல்லவேண்டும், இந்த பாட்னர்ஸிப்பை எவ்வளவு சீக்கிரம் உடைக்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது..

இம்
விக்கெட் விழவில்லை என்றால்
ரொம்ப கஷ்டம்தான்:frown::mad:

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 10:26 AM
இதேபோல் தொடர்ந்தால் இந்திய அணிக்கு வெற்றி என்பது மதில் மேல் நிற்கும் பூனைதான் ...98/1

Nivas.T
24-03-2011, 10:29 AM
100/1 (21)

:sprachlos020::sprachlos020:

ஆதவா
24-03-2011, 10:29 AM
100/1
21 ஓ

வியாசன்
24-03-2011, 10:33 AM
இந்த வீதத்தில் சென்றால் 280 ஓட்டங்களை எட்டிவிடும்

அன்புரசிகன்
24-03-2011, 10:33 AM
சரி. இந்த ஆட்டத்தில் வெல்லும் நாடு மற்றும் இந்த ஆட்ட நாயகன் பற்றி சரியாக சொல்ல வேண்டும். அடுத்த 5 நிமிட்ச்ங்களில் பதில் வேண்டும். சரியாக பதில் சொல்பவர்களுக்கு 100இபணம். இரண்டையும் சரியாக கூறினால் பணம் 10 மடங்காக்கப்படும்.

வியாசன்
24-03-2011, 10:36 AM
அற்புதமான ஒரு கேட்சை பிடித்து ஹஹாடினை வெளியேற்றியுள்ளார் சுரேஷ் ரெய்னா

Nivas.T
24-03-2011, 10:37 AM
லெக் சைடில் காலுக்கு கீழ் பந்து போடும் பழக்கத்தை
எப்பொழுதுதான் விடுவார்களோ???? :fragend005::mad::sauer028:

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 10:38 AM
இதில் என்ன சந்தேகம் ..வெற்றி தாமதாமாகலாமே தவிர நிச்சய வெற்றி இந்திய அணிக்கு ஆட்டநாயகன் விரேந்திர சேவாக் அல்லது சச்சின் ...

வியாசன்
24-03-2011, 10:38 AM
வெல்லப்போகும் நாடு இந்தியா அநேகமாக இதில் சச்சின்தான் ஜொலிப்பார்

Nivas.T
24-03-2011, 10:38 AM
அப்பாடி ஹாடின் அவுட் :)

யுவி வீழ்த்தினார்

ஆதவா
24-03-2011, 10:40 AM
ஹடின் போயாச்சீ...
யுவிக்கு விக்கெட்... நல்ல அருமையான லோ கேட்ச் பிடித்தார் ரெய்னா!!
112/2

அடுத்த தலைவலி... கிளார்க்.

Nivas.T
24-03-2011, 10:41 AM
மீண்டும் முனாபிர்க்கு கொடுத்து
தவறு செய்கிறார் தோணி :redface::frown:

நல்ல வேலை வெறும் நான்கு ஓட்டங்கள் :smilie_abcfra:

ஆதவா
24-03-2011, 11:01 AM
சச்சின் பவுல்ஸ்!!!!
ரொம்ப நாளைக்கப்பறம்!!

133/2

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 11:01 AM
வந்துட்டாரு தலைவர் சச்சின் பந்துவீச இனி சிக்கல் தான் ஆஸிக்கு

Nivas.T
24-03-2011, 11:06 AM
கிளார்க் அவுட்டு

140/3

ஆதவா
24-03-2011, 11:10 AM
கிளார்க் விக்கெட்டை எடுத்தார் யுவி!!
-----------------
இனி புதுபால் எடுத்தபிறகு ஜாஹீர் மற்றும் அஸ்வினை இறக்கலாம்.

பாண்டிங் 49!!! இந்த டோர்ன்மெண்டில் இவர் எந்த டீமுக்கும் எதிராக 40 கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!!

வந்துட்டாரு தலைவர் சச்சின் பந்துவீச இனி சிக்கல் தான் ஆஸிக்கு

சச்சின் பவுலிங் பண்ணினா, அடுத்த ஓவர் விக்கெட்!!!

(இந்த நம்பிக்கையை பரப்புங்கப்பா!!)

Nivas.T
24-03-2011, 11:14 AM
சச்சின் பவுலிங் பண்ணினா, அடுத்த ஓவர் விக்கெட்!!!

(இந்த நம்பிக்கையை பரப்புங்கப்பா!!)

:D:D:D

ஆதி
24-03-2011, 11:15 AM
மேட்ச் இந்திய கைக்கு வருகிறது பார்ப்போம்...

சச்சினுக்கு இனி பந்து கொடுக்கபாட்டர் என்றே நினைக்கிறேன், மிஞ்சி போன இன்னும் ஒரு ஓவர் தர வாய்ப்பிருக்கு. பார்ப்போம்.........

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 11:17 AM
பாண்டிங் க்கு இந்தியாவத்தான் ரொம்ப பிடுச்சிருக்கு போல ..அடித்தளத்த ரொம்ப வலிமையா போட்டுருக்கார்...சச்சினுக்கு பந்துவீச இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா..கிடச்சா சச்சின் தான் மேட்ச் வின்னர் ...

ஆதி
24-03-2011, 11:20 AM
பாண்டிங் க்கு இந்தியாவத்தான் ரொம்ப பிடுச்சிருக்கு போல ..அடித்தளத்த ரொம்ப வலிமையா போட்டுருக்கார்...சச்சினுக்கு பந்துவீச இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா..கிடச்சா சச்சின் தான் மேட்ச் வின்னர் ...

கொடுக்கலாம், ஆனால் அது பேட்டிங்கின் போது அவருக்கு பிரச்சனையா இருந்துட கூடாது...

ஆதவா
24-03-2011, 11:21 AM
ஹஸியை தூக்கினார் ஜாஹீர்:)

ஆதி
24-03-2011, 11:21 AM
ஹஸி அவுட்...

150/4 33.3

250க்குள் தான் ஸ்கோர் வர வாய்ப்பிருக்கு

Nivas.T
24-03-2011, 11:22 AM
மைக் ஹசி அவுட்

150 /4

Nivas.T
24-03-2011, 11:24 AM
ஹஸி அவுட்...

150/4 33.3

250க்குள் தான் ஸ்கோர் வர வாய்ப்பிருக்கு

இன்னும் பவர்ப்ளே இருக்கு ஆதன்

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 11:24 AM
ஆனால் அது பேட்டிங்கின் போது அவருக்கு பிரச்சனையா இருந்துட கூடாது...
ஆமாமா நமக்கு பேட்டிங் தான் முக்கியம் ..

வந்தார்கள்..சென்றார்கள் ..கலக்கல் ஜாகிர் ...ஹஸ்ஸி அவுட் ..

Nivas.T
24-03-2011, 11:25 AM
வெஸ்ட்இண்டீஸ் சந்தர்பால் நிலைமைதான் பாண்டிங்க்கு என்று நினைக்கிறேன் :eek:

ஆதி
24-03-2011, 11:26 AM
இன்னும் பவர்ப்ளே இருக்கு ஆதன்

உண்மைதான், விக்கட்கள் வேகமாக சரிவதால், பவர்ப்ளே, அவர்ப்ளே வாக இருக்கும் என நினைக்கிறேன்..

ஆதி
24-03-2011, 11:28 AM
வெஸ்ட்இண்டீஸ் சந்தர்பால் நிலைமைதான் என்று நினைக்கிறேன் :eek:

அப்படி நினைக்காதீங்க, ப்ரசரை குறைக்க பாண்டிங் அடித்தாட ஆரம்பிக்கலாம்...

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 11:28 AM
வெஸ்ட்இண்டீஸ் சந்தர்பால் நிலைமைதான் என்று நினைக்கிறேன்
அந்த நெலம மட்டும் இவருக்கு(பாண்டிங்) வரவே கூடாது ..இவரு உடனே போனா அணிக்கு நல்லது ...

Nivas.T
24-03-2011, 11:28 AM
உண்மைதான், விக்கட்கள் வேகமாக சரிவதால், பவர்ப்ளே, அவர்ப்ளே வாக இருக்கும் என நினைக்கிறேன்..

:D:D:D:D

Nivas.T
24-03-2011, 11:34 AM
அப்படி நினைக்காதீங்க, ப்ரசரை குறைக்க பாண்டிங் அடித்தாட ஆரம்பிக்கலாம்...

அந்த நெலம மட்டும் இவருக்கு வரவே கூடாது ..இவரு உடனே போனா அணிக்கு நல்லது ...

பாண்டிங் அவுட் ஆனால் நன்றாகத்தான் இருக்கும்
ஆனால் அவர்தான் முழங்கால் அளவு காலை புத்தைத்து ஊன்றிவிட்டரே :frown::fragend005::sauer028::mad::traurig001:

ஆதி
24-03-2011, 11:36 AM
ஆட்டத்தில் எதுவும் தடுங்கள்லா ??

ஆதி
24-03-2011, 11:37 AM
ஓ.கே ஓ.கே இது கிரிக் இன்ஃபோ பிரச்சனை...

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 11:39 AM
அஸ்வின் வந்தால் விக்கெட்டுகள் வீழலாம் ...

ஆதி
24-03-2011, 11:41 AM
இதுவரை 7 பவுலர்களை இறக்கிவுள்ளார் தோனி, இன்னும் ரெய்னா, சேவக் தான் பக்கி, அவங்களுக்கு 1 அல்லது 2 ஓவர் கொடுத்துப் பார்க்கலாம்...

ஆதவா
24-03-2011, 11:44 AM
இப்ப வரைக்கும் நல்லாத்தான் போய்ட்டு இருக்கு... இனி பவர்ப்ளே எடுத்தாக்கா இருக்கு இந்தியாவுக்கு ஆப்பு.... இன்னும் 11 ஓவர்களில் லட்சணம் தெரிந்துவிடும்!!

-----------------

இதுவரை 7 பவுலர்களை இறக்கிவுள்ளார் தோனி, இன்னும் ரெய்னா, சேவக் தான் பக்கி, அவங்களுக்கு 1 அல்லது 2 ஓவர் கொடுத்துப் பார்க்கலாம்...

ரெய்னாவும் ஓரளவு நல்ல பவுலர்தான்...
யுவியின் கடைசி ஓவர் சற்றே ஏமாற்றம்தான்!!!
இருந்தாலும் நம்பர்ஸ் பரவாயில்லை!!

10 - 0 - 44 - 2

ஆதி
24-03-2011, 11:44 AM
40ஆவது ஓவருக்குள் இன்னும் ஒரு விக்கட் விழுந்தால் நல்லது...

ஆதி
24-03-2011, 11:46 AM
சிக்ஸ்ஸடா... பாண்டிங்...

+ 4 வேற..

ஆதவா உங்க வாக்குல கொள்ளிய வைக்க..

Nivas.T
24-03-2011, 11:49 AM
யுவராஜ் சிங் பந்துவீச்சு அற்ப்புதமாக செய்து தனது பணியை செவ்வனே செய்து முடித்துவிட்டார்

10 ஓவர்கள் வீசி

44 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து

2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

4.40 விகிதத்தில்

முடித்தார்

கடைசி ஓவர் மட்டும் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து

ஆதவா
24-03-2011, 11:50 AM
கிட்டத்தட்ட 200ஐத் தொட்டாச்சு ஆதி... அடுத்த பத்து ஓவரில் விக்கெட்டுகள் விழவில்லை எனில் 300 கன்ஃபர்ம்!!

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 11:50 AM
வெளுக்க ஆரம்பித்துவிட்டார் பாண்டி ...இனிமேல் எப்படி இருக்கும் ஆட்டம்? இடைவேளைக்கு பிறகு ...

ஆதி
24-03-2011, 11:50 AM
பாண்டிங் இன்னக்கி சதம் அடிப்பது உறுதி...

290 வரை ஸ்கோர் உயரலாம்...

ஆதி
24-03-2011, 11:51 AM
கிட்டத்தட்ட 200ஐத் தொட்டாச்சு ஆதி... அடுத்த பத்து ஓவரில் விக்கெட்டுகள் விழவில்லை எனில் 300 கன்ஃபர்ம்!!

நிச்சயமா.......

Nivas.T
24-03-2011, 11:51 AM
பாண்டிங் 80:redface::frown::sprachlos020::eek:

Nivas.T
24-03-2011, 11:53 AM
மீண்டும் சச்சின்

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 11:53 AM
ஹய்யோ மறுபடியும் சச்சின்

ஆதி
24-03-2011, 11:56 AM
சச்சினுக்கு 1 அல்லது இன்னும் 2 ஓவர் தர வாய்ப்பிருக்கு...

ஆதவா
24-03-2011, 11:57 AM
ஜாஹீர் தூக்கினார்.... காட் அண்ட் பவுல்ட்!!

நான் தான் சொன்னேன்ல... சச்சின் போட்டா அடுத்த ஓவர் விக்கெட்டுனு!!!

கேமரன் ஓயிட்.... அவுட்!!

ஆதி
24-03-2011, 11:57 AM
ஜாகிருக்கு இன்னும் 4 ஓவர் இருக்கு, அர்பஜ*னுக்கு 2, அஸ்வினுக்கு 3

இவங்களே போடுவாங்க நு தோணுது...

பார்ப்போம்...

ஆதி
24-03-2011, 11:58 AM
ஜாஹீர் தூக்கினார்.... காட் அண்ட் பவுல்ட்!!

நான் தான் சொன்னேன்ல... சச்சின் போட்டா அடுத்த ஓவர் விக்கெட்டுனு!!!

கேமரன் ஓயிட்.... அவுட்!!

பாண்டிங் இன்னும் இருக்காரே... :(

Nivas.T
24-03-2011, 11:58 AM
ஒய்ட் அவுட் :D

வியாசன்
24-03-2011, 11:59 AM
வைற் வெளியேற்றப்பட்டுள்ளார். ஷாகிர் பந்து வீசி அவரே காட்ச் பிடித்து வைற்றை வேளியேற்றியுள்ளார்

ஆதவா
24-03-2011, 11:59 AM
ஜாகிருக்கு இன்னும் 4 ஓவர் இருக்கு, அர்பகனுக்கு 2, அஸ்வினுக்கு 3

இவங்களே போடுவாங்க நு தோணுது...

பார்ப்போம்...

ஹர்பஜனுக்கு பெயர் வெச்சவங்க இதைப்பார்த்தா உத்திரத்தில தொங்குவாங்க. :lachen001::lachen001:

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 12:00 PM
அடுத்த விக்கெட் ஒயிட் அவுட் ...பாண்டிங் நிக்குற நிலைய பார்த்தால் நூறு போடுவதொடல்லாமல் அணியின் ஸ்கோர் நல்லா கொண்டு வந்துடுவார் போல இருக்கு..

ஆதி
24-03-2011, 12:02 PM
ஹர்பஜனுக்கு பெயர் வெச்சவங்க இதைப்பார்த்தா உத்திரத்தில தொங்குவாங்க. :lachen001::lachen001:

:D :D :D

கொலக்கேஸ் என்மேல வராம இருந்தா சரி...

இப்பதாங்க "க" "ஜ"வா மாத்திட்டு வந்தேன்..

யாரும் பாத்துட கூடாது நு நெனச்சேன், விதி யாரவிட்டுச்சு.. :D

Nivas.T
24-03-2011, 12:02 PM
பாண்டிங் இன்னும் இருக்காரே... :(

விடுங்க பாத்துக்கலாம்
எவ்வளவோ பாத்துட்டோம்
இதப்பாக மாட்டோமா???

கடைசி தலைவலி வந்துவிட்டது

டேவிட் ஹசி

Nivas.T
24-03-2011, 12:09 PM
ஆஸி இப்பொழுது பவர்ப்ளேயில் :sprachlos020::sprachlos020:

:eek::eek::eek: ஐயய்யோ...

யாரு போட்டாலும் நான்கா போகுது :fragend005::fragend005:

பண்டிங் 93:mad: :icon_rollout:

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 12:21 PM
இரண்டு அருமையான எல் பீ டபிள் யு சண்டாளன் அம்பயர் கொடுக்க வில்லை... பழிவாங்கிட்டான் இதுக்குதான் அந்த டி ஆர் எஸ் சிஸ்டம் வேண்டாமுன்னாங்க போல ...

ஆதவா
24-03-2011, 12:21 PM
226/5
46 o!

மீதி நான்கு ஓவர்கள்தான் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய ஓவர்கள்!!!

வியாசன்
24-03-2011, 12:23 PM
பாண்டிங் அதிஸ்டசாலி அவுட் கொடுக்கமாட்டேன் என்கின்றார் அம்பயர்

ஆதவா
24-03-2011, 12:24 PM
இரண்டு அருமையான எல் பீ டபிள் யு சண்டாளன் அம்பயர் கொடுக்க வில்லை... பழிவாங்கிட்டான் இதுக்குதான் அந்த டி ஆர் எஸ் சிஸ்டம் வேண்டாமுன்னாங்க போல ...

அதில் ஒன்று மிக அருமையானதாகத் தெரிந்தது. ரிப்லே வேற போட்டுகாண்பிக்கவில்லை!!! ஜாஹீரிடம் ஏமாற்றம் தெரிகிறது..

நம்மாட்கள் ரிவ்யூவை வேஸ்ட் செய்ததற்கு அதன் மேல் ஏன் குறை சொல்கிறீர்கள்!!

Nivas.T
24-03-2011, 12:25 PM
பண்டிங் 100 :sprachlos020::confused:

Nivas.T
24-03-2011, 12:30 PM
தனக்கான இறுதி ஓவரையும்

பவர்பிளையின் இறுதி ஓவரையும்

சாகிர் வீசுகிறார் நல்லமுறையில்

ஆதவா
24-03-2011, 12:32 PM
ஆஸ்திரேலியா பேட்டிங் பவர்ப்ளேயில் 44 ரன்கள் விக்கெட் இழப்பின்றி!! இதுதான் இந்த டோர்ன்மெண்டின் அதிக பேட்டிங் பவர்ப்ளே ரன்கள்!!!

--------------

அஸ்வின் பாலில் பாண்டிங் காலி!!

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 12:33 PM
நம்மாட்கள் ரிவ்யூவை வேஸ்ட் செய்ததற்கு அதன் மேல் ஏன் குறை சொல்கிறீர்கள்!!

இது ஒருவகையில் ஏமாற்று தானே நண்பரே இவ்வளவு துல்லியமான விக்கெட் அது ...இது கூட அந்த அம்பயர் கண்ணுக்கு தெரியலையா....
ஹய்யோ பாண்டிங் அவுட்

Nivas.T
24-03-2011, 12:35 PM
பாண்டிங்கை வெளியேற்றினார் அஸ்வின்

எகுருதுங்கோ

ஆதவா
24-03-2011, 12:35 PM
இது ஒருவகையில் ஏமாற்று தானே நண்பரே இவ்வளவு துல்லியமான விக்கெட் அது ...இது கூட அந்த அம்பயர் கண்ணுக்கு தெரியலையா....
ஹய்யோ பாண்டிங் அவுட்

ஒருவேளை ஆஸி தோற்குமானால், பாண்டிங்கின் இந்த இன்னிங்க்ஸ் மறக்கவியலாததாக இருக்கும்@@ ஏனெனில் பாண்டிங்கின் கடைசி உலகக்கோப்பை சதம் இதுவாகத்தான் இருக்கும்!!!

Nivas.T
24-03-2011, 12:36 PM
இறுதி ஓவரை வீசப்போவது யாரு? :sprachlos020::sprachlos020::eek:

ஆதி
24-03-2011, 12:39 PM
ஹர்பஜனுக்கு ஒரு ஓவர் இநருந்ததை கவனிக்கவில்லை...

13 ரன்கள் கடைசி ஓவரில்...

260 சுபலமான ஸ்கோர் தான், ஆனால் நாம அடிக்கனுமே........

Nivas.T
24-03-2011, 12:42 PM
அப்பா 261 எடுத்தால் வெற்றி

அடையக்கூடிய இலக்குதான்
பார்க்கலாம் நம் ஆட்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று

வியாசன்
24-03-2011, 12:59 PM
பாண்டிங் ஒரு பேட்டியில் அம்பயர் அவுட் கொடுக்காமல் போகமாட்டேன் என்றார். தங்களுக்கெதிராக அவுட் கொடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தானா?
முனாப் பட்டேல் அந்த காட்சை தவறவிடாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அக்னி
24-03-2011, 01:08 PM
அப்பா 261 எடுத்தால் வெற்றி

:sprachlos020: :eek: :sprachlos020:
யாரோட அப்பா... :rolleyes:

ஆதவா
24-03-2011, 01:16 PM
260 சுபலமான ஸ்கோர் தான், ஆனால் நாம அடிக்கனுமே........

ஜான்ஸன், டைட், மற்றும் லீ ஆகியோரின் மிரட்டும் பவுலிங்கை சமாளித்தால் சுலபம்தான்!! ஆனால்.......... என்னக்கென்னவோ இந்தியா,............................ சரிவிடுங்க.... சொல்லவே பிடிக்கலை

Nivas.T
24-03-2011, 01:19 PM
:sprachlos020: :eek: :sprachlos020:
யாரோட அப்பா... :rolleyes:

அர்ஜுனோட அப்பா
அர்யவிரோட அப்பா

இந்த ரெண்டு அப்பாவும் தான்

அப்பப்பா உங்ககூட ரொம்ப தொல்லப்பா

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 01:20 PM
ஜான்ஸன், டைட், மற்றும் லீ ஆகியோரின் மிரட்டும் பவுலிங்கை சமாளித்தால் சுலபம்தான்!! ஆனால்.......... என்னக்கென்னவோ இந்தியா,............................ சரிவிடுங்க.... சொல்லவே பிடிக்கலை என்ன நண்பரே இந்திய ஜெயிக்கும்னு தானே சொல்லவந்திங்க ..

Nivas.T
24-03-2011, 01:21 PM
ஜான்ஸன், டைட், மற்றும் லீ ஆகியோரின் மிரட்டும் பவுலிங்கை சமாளித்தால் சுலபம்தான்!! ஆனால்.......... என்னக்கென்னவோ இந்தியா,............................ சரிவிடுங்க.... சொல்லவே பிடிக்கலை

நம்பிக்கைய இழக்காதிங்க ஆதவா

நாம கண்டிப்பா ஜெயிப்போம்

ஆதவா
24-03-2011, 01:36 PM
இந்தியா 21/0

ஏதோ போவுது!!

ஆதி
24-03-2011, 01:44 PM
இதுவரைக்கு நல்லாவே போய்க்கிட்டிருக்கு....

இது தொடரனும்..............

ஆதி
24-03-2011, 01:45 PM
இந்தியா 21/0

ஏதோ போவுது!!

ஆறுங்க ரன் ரேட், இவங்க ரெண்டு பேரும் பொறுமையா ஆடுனாவே போது, ஆஸியால ப்ரஸர் போட இயலாது...

இந்த சேவக் பையன நெனச்சாத்தான் நெஞ்சு பக்கு பக்கு நு இருக்கு...

எப்ப என்ன செய்வாருனே சொல்ல முடியாது........

Nivas.T
24-03-2011, 01:47 PM
30/0

நல்லாவே போகுது :)

Nivas.T
24-03-2011, 01:49 PM
ஆறுங்க ரன் ரேட், இவங்க ரெண்டு பேரும் பொறுமையா ஆடுனாவே போது, ஆஸியால ப்ரஸர் போட இயலாது...

இந்த சேவக் பையன நெனச்சாத்தான் நெஞ்சு பக்கு பக்கு நு இருக்கு...

எப்ப என்ன செய்வாருனே சொல்ல முடியாது........

பரசர் பண்ணிக்க வேண்டாம்

நிதானமாகவே ஆடலாம்

பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று

ஆதி
24-03-2011, 01:49 PM
ஜான்சன் ஓவர் கொஞ்சம் கடினமா இருக்கும் போல, சமாளிக்கனும்....

ஆதவா
24-03-2011, 01:53 PM
இரண்டு பேரும் பொறுமையாகத்தான் ஆடுகிறார்கள்.

34/0 6 ஓவர்

அக்னி
24-03-2011, 01:55 PM
யாரோ ஒருத்தரு சங்கு ஊதினதக் காட்டினாங்க...

யாருக்கு... :cool:

Nivas.T
24-03-2011, 01:58 PM
சச்சின் நைசா ஒரு 4 தள்ளிடுச்சு

40/0 (7)

ஆதி
24-03-2011, 01:58 PM
யாரோ ஒருத்தரு சங்கு ஊதினதக் காட்டினாங்க...

யாருக்கு... :cool:

எப்பவோ ஒரு தடவதான் இந்த மாதிரி கொஞ்சம் நேரம் ஒழுங்க ஆடுறாங்க, அது பிடிக்கலையா ?????

Nivas.T
24-03-2011, 01:59 PM
யாரோ ஒருத்தரு சங்கு ஊதினதக் காட்டினாங்க...

யாருக்கு... :cool:

ஐயயோ அது சேவாக்கா? :eek::eek:

அக்னி
24-03-2011, 02:01 PM
இந்தப் போட்டியில இந்தியா வெல்லவேண்டும் என்பதையே நானும் விரும்புகின்றேன்...

ஏன் தெரியுமா...???
யாராச்சும் சொல்லுங்க பார்க்கலாம்...

ஆதவா
24-03-2011, 02:02 PM
சேவாக்!!???? ஏன்பா???

ஆதி
24-03-2011, 02:02 PM
நல்ல வாயி அக்னி உங்களுக்கு, சேவக் அவுட் :(

44/1 8.1 ஓவர்...

ஆதி
24-03-2011, 02:03 PM
இந்தப் போட்டியில இந்தியா வெல்லவேண்டும் என்பதையே நானும் விரும்புகின்றேன்...

ஏன் தெரியுமா...???
யாராச்சும் சொல்லுங்க பார்க்கலாம்...

ஆஸி அப்பத்தான் செமிக்கு போகாது...........

அக்னி
24-03-2011, 02:07 PM
நல்ல வாயி அக்னி உங்களுக்கு, சேவக் அவுட் :(

:huh: :shutup: :auto003:

ஆஸி அப்பத்தான் செமிக்கு போகாது...........
இது தெரியாதாக்கும்... இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. பார்க்கலாம்...

ஆதவா
24-03-2011, 02:09 PM
ஆதி... அதவிட இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடக்கும்ல....

ஆதி
24-03-2011, 02:09 PM
:huh: :shutup: :auto003:

சொல்லிப்போட்டு எஸ்கேப் ஆகுறீங்களா ??

:auto003: :auto003: :auto003:

நாங்களும் அனுப்போமில்ல ஆட்டோ உங்கள் பிடிக்க :)

Nivas.T
24-03-2011, 02:10 PM
:huh: :shutup: :auto003:

இது தெரியாதாக்கும்... இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. பார்க்கலாம்...

இப்போ வருத்தப்பட்டு புண்ணியமில்ல :mad::redface:

அக்னி
24-03-2011, 02:11 PM
இவுங்க அடிக்கிற இடமெல்லாம் அவுங்க நிக்கிறாங்களா...
இல்ல,
அவுங்க நிக்கிற இடமாப் பார்த்து இவங்க அடிக்கிறாங்களா...

ஆதவா
24-03-2011, 02:11 PM
:huh: :shutup: :auto003:

இது தெரியாதாக்கும்... இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. பார்க்கலாம்...

நிறைய இருக்குங்க அக்னி..

பாண்டிங்கின் கடைசி மேட்ச் (சச்சின் செஞ்சுரியை சமப்படுத்த முடியாது)
சச்சினின் கடைசி உலகக்கோப்பை ஆட்டம்.

பாகிஸ்தானுடனான மேட்ச்
தொடர்ந்து கப்பு வாங்கும் ஆஸியின் மண் கவ்வல்...

ஆதி
24-03-2011, 02:12 PM
ஆதி... அதவிட இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடக்கும்ல....

இந்தியா யார்க்கிட்ட தோத்தாலும் ரசிகர்கள் அமைதியா இருப்பாங்க, பாக் கிட்ட தோத்தா................ ம்ஹூம், ரத்த களரிதான் :D :D :D

அக்னி
24-03-2011, 02:13 PM
பாகிஸ்தானுடனான மேட்ச்

:icon_b: :icon_b: :icon_b:
இது ஒண்ணுதான்... போட்டி சும்மா விறுவிறு சுறுசுறு என்று இருக்குமில்ல...

Nivas.T
24-03-2011, 02:13 PM
50/1 (10)

இன்னும் 211 ரன் தேவை பந்துகளில் 240

9 விக்கட்டுகள் கைவசம் :icon_b:

அக்னி
24-03-2011, 02:17 PM
என்னா நடந்தது... நடக்குது...
கணினி அசையாம நின்னுடுத்து... :frown:

ஆதவா
24-03-2011, 02:19 PM
டெண்டுல்கர் எப்பவும் போல........ ஃபார்ம் போகாத ஒரே பேட்ஸ்மேன் இவர்தான்யா...

60/1

டெண்டுல்கர் மட்டுமே 40 ரன்கள்!!!

Nivas.T
24-03-2011, 02:20 PM
பண்டிங்ன் இன்னொரு கேவலமான நடத்தை

கம்பீர் அடித்த பந்து தரையில் விழுந்த பின் பிடித்துவிட்டு அவுட் அப்பீல் செய்கிறார்

11 ஓவரின் இறுதி பந்தில்

ஆதவா
24-03-2011, 02:22 PM
பண்டிங்ன் இன்னொரு கேவலமான நடத்தை

விடுங்க பாஸ்..... :rolleyes:

அதான் தப்பிச்சுட்டோம்ல..... :cool:

Nivas.T
24-03-2011, 02:25 PM
டெண்டுல்கர் எப்பவும் போல........ ஃபார்ம் போகாத ஒரே பேட்ஸ்மேன் இவர்தான்யா...

60/1

டெண்டுல்கர் மட்டுமே 40 ரன்கள்!!!

இதுல யாருக்கும் சந்தேகம் இருக்கா :aetsch013::aetsch013:

Nivas.T
24-03-2011, 02:28 PM
விடுங்க பாஸ்..... :rolleyes:

அதான் தப்பிச்சுட்டோம்ல..... :cool:

அதற்கில்லை ஆதவா

பாண்டிங் புடிக்கும்போது மட்டும் ஒன்பிச் உண்டா என்ன? :icon_rollout:

ஏன்னா? இதுபோல நான் நறைய தடவ பத்திருக்கேன் :eek:

அக்னி
24-03-2011, 02:32 PM
9 விக்கட்டுகள் கைவசம் :icon_b:

யாரோட... :cool: கை வசம்...???

பண்டிங்ன் இன்னொரு கேவலமான நடத்தை

:mad:

Nivas.T
24-03-2011, 02:34 PM
சச்சினின் ஒருநாள் போட்டி ரன்களின் கூடுதல் 18000:)

Nivas.T
24-03-2011, 02:35 PM
யாரோட... :cool: கை வசம்...???

:mad:

விக்கெட் நட்டு வைப்பவர்களின் கைவசம் :aetsch013::aetsch013::aetsch013:

அக்னி
24-03-2011, 02:37 PM
சச்சு 18000... வாழ்த்துக்கள்...

ஆதவா
24-03-2011, 02:43 PM
மக்களே.... நான் கிளம்பரேன்... வீட்டுக்குப் போய் பார்ப்பேன்!!!

நாளை ஒரு இனிய/வருத்தமான செய்தியுடன் சந்திப்போம்...
\

சச்சின் 18000 மற்றும் இந்த வர்ல்ட் கப்பின் ஹை ஸ்கோர்!!!
100 வது சதமடிக்க முன்கூட்டிய வாழ்த்துகள்

Nivas.T
24-03-2011, 02:52 PM
மக்களே.... நான் கிளம்பரேன்... வீட்டுக்குப் போய் பார்ப்பேன்!!!

நாளை ஒரு இனிய செய்தியுடன் சந்திப்போம்...
\

சச்சின் 18000 மற்றும் இந்த வர்ல்ட் கப்பின் ஹை ஸ்கோர்!!!
100 வது சதமடிக்க முன்கூட்டிய வாழ்த்துகள்

நீங்க கவலைபடாம போங்க ஆதவா

வெற்றி நமதே :icon_b:

அக்னி
24-03-2011, 03:00 PM
நீங்க கவலைபடாம போங்க ஆதவா

வெற்றி நமதே :icon_b:

முடியல...

சிவா.ஜி
24-03-2011, 03:18 PM
என்னா சார்...சச்சின்..இந்தமுறையும் நூறைமுடிக்கலையே......ரொம்ப ஆவலா இருந்தேன்....ஆனா.....சந்தேகத்துக்கிடமான முறையில் அவுட் ஆக்கிட்டாங்களே.....

Nivas.T
24-03-2011, 03:31 PM
என்னா சார்...சச்சின்..இந்தமுறையும் நூறைமுடிக்கலையே......ரொம்ப ஆவலா இருந்தேன்....ஆனா.....சந்தேகத்துக்கிடமான முறையில் அவுட் ஆக்கிட்டாங்களே.....

எப்டி இருந்தாலும் நாமதாண்ணா ஜெய்க்கப்போறோம்

ஆதி
24-03-2011, 03:46 PM
என்னா சார்...சச்சின்..இந்தமுறையும் நூறைமுடிக்கலையே......ரொம்ப ஆவலா இருந்தேன்....ஆனா.....சந்தேகத்துக்கிடமான முறையில் அவுட் ஆக்கிட்டாங்களே.....

கவலை படாதீங்க அண்ணா, அவர் வேல்ட் கப் பைனல்ஸ்ல 100 சதத்தை அடித்து இந்தியாவுக்கு கப்பும் வாங்கி தருவார்........... :)

Nivas.T
24-03-2011, 05:10 PM
நாம ஜெயிச்சாச்சு

இந்தியாவின் அற்ப்புதமான ஆட்டம்
முன்னால் சாம்பியன் ஆஸ்த்ரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அறையிருதில் நுழைந்தது

யுவராஜ்சிங் 57(65), ரைனா 34(28) இருவரும் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்
47.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்களை எடுத்து வெற்றிவாகை சூடி ஆஸ்த்ரேலியாவை வீட்டுக்கு அனுப்பியது

இந்தியா தனது அரையிறுதி போட்டியில் பாக்கிஸ்தானை வரும் 30 தேதி சந்திக்கிறது

இந்த வெற்றியின் மூலம் இந்தியா வீரர்களின் மனநிலை வலுவான நிலையை அடைந்துவிடும்
இந்த உலகக் கோப்பையை வெல்ல தகுதியான அணி என்பதை நிரூபித்ததோடு மட்டுமல்லாமல்
வெல்லும் வாய்ப்பையும் பலப்படுத்திக் கொண்டது

அக்னி
24-03-2011, 05:12 PM
வாழ்த்துக்கள் இந்தியா...

இதில தோற்றிருந்தாலும் மக்கள் ஓரளவுக்கு மன்னிச்சிருப்பாங்க...
ஆனா... ஆனா... அடுத்ததில வுட்டுட்டா... டங்குவார அறுத்திடுவாங்க...

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 05:19 PM
ஹய்யோ இந்தியா ஜெயிச்சிடுச்சு .. அன்புரசிகன் அவர்களே வெற்றிபெற்ற அணியின் சார்பில் இணையதொகைய வெற்றிபெற்ற எங்களுக்கு கொடுகிறீங்க ....நண்பர்கள் ஆதவா,அக்னி ,ஆதன் ,வியாசன் ,நிவாஸ் மற்றும் அனைவருக்கும் சீயர்ஸ் ....:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

வியாசன்
24-03-2011, 05:49 PM
இந்தியா ஜெயித்ததில் மகிழ்ச்சி சச்சின் சதம் அடிக்காதது வருத்தம். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடி சதம் எடுத்து பழிவாங்குவார் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம். சுவாரசியமாக வர்ணனை செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். ஜெயிச்சுடுவமில்ல.

சங்கு முழங்கடா தமிழா சாதனை பாடடா தமிழா

அமரன்
24-03-2011, 09:23 PM
நீண்ட காலத்துக்குப் பிறகு முழுப்பலத்துடன் களம் கண்ட அணி.. அனைத்துத் துறையிலும் கலக்கிட்டாங்க.. யூவி பழயபடி ஹீரோ..

உதயசூரியன்
24-03-2011, 09:25 PM
பார்பதற்கு ஆஸ்திரேலியா ஜெயிப்பது போல தோன்றினாலும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..
வாழ்த்துக்கள் இந்தியாவிற்கு..
தமிழர்களின் சார்பில் இந்தியாவிற்கும் சச்சினுக்கும் வாழ்த்துக்கள்..
தமிழக முதல்வர் கலைஞர் சார்பிலும் வாழ்த்துக்கள்

அது சரி காம்பிர் செய்தது சரிதானா>>???
சச்சின் ஆரம்ப ஓட்டங்கள் நம்மாட்களுக்கு தெம்பை தந்தது.. அடுத்து யுவராஜின் பொறுப்பான ஆட்டம்.. ஆனால்

தோணி
சாணி

பந்து வீச்சு இந்தியாவிடம் சரியாக இல்லை என்பது மட்டும் உறுதி..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அன்புரசிகன்
24-03-2011, 11:40 PM
இதில் என்ன சந்தேகம் ..வெற்றி தாமதாமாகலாமே தவிர நிச்சய வெற்றி இந்திய அணிக்கு ஆட்டநாயகன் விரேந்திர சேவாக் அல்லது சச்சின் ...

வெல்லப்போகும் நாடு இந்தியா அநேகமாக இதில் சச்சின்தான் ஜொலிப்பார்

ஹய்யோ இந்தியா ஜெயிச்சிடுச்சு .. அன்புரசிகன் அவர்களே வெற்றிபெற்ற அணியின் சார்பில் இணையதொகைய வெற்றிபெற்ற எங்களுக்கு கொடுகிறீங்க ....நண்பர்கள் ஆதவா,அக்னி ,ஆதன் ,வியாசன் ,நிவாஸ் மற்றும் அனைவருக்கும் சீயர்ஸ் ....:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

தங்கள் இருவருக்கும் தலா 100 இபணம் வந்துசேரும். வராவிட்டால் மன்றத்து நிர்வாகியை நாடுங்கள். பொதுவாக நான் அனுப்பினால் அது தானாக வராது. அறிஞர் வந்து அனுமதிக்கணும். (யாரோ கண்ணுவச்சிட்டாங்க... :D)

முக்கியமான விக்கெட்டுக்களை வீழ்த்திய யுவராஜ் ஐ விட்டுவிட்டீங்களே.....

ஓவியன்
25-03-2011, 03:26 AM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்..!! :icon_b:

உலகக்கோப்பை அணிக்குள் நுளையவே போராடி ஒரு வாறாக நுளைந்த யுவராஜ், அரையிறுதிப் போட்டி வரை இந்திய அணியினை அழைத்து வந்தமைக்கு அவரது உழைப்பும், விடாமுயற்சியும் விட்டுக் கொடுக்கா மன உறுதியும் தான் காரணம், அவருக்கும் என் மனதார்ந்த வாழ்த்துகள். :):)

முக்கியமான வேளைகளில் டென்சனாகி சொதப்பும் பதானை விட அனுபவம் வாய்ந்த ரெய்னா பெட்டர் என்பது என் கணிப்பு..

நம்ம மன்றத்தில தோனி ஒரு மெம்பராக இருப்பார் போல, நான் சொன்னதை அப்படியே கப்புனு பிடிச்சுகிட்டார், இனி நான் சொல்வதையும் கப்புனு பிடிச்சால் கப்பையும் பிடிக்கலாம். :D:D:D:D

ஆதவா
25-03-2011, 05:23 AM
பார்பதற்கு ஆஸ்திரேலியா ஜெயிப்பது போல தோன்றினாலும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..
வாழ்த்துக்கள் இந்தியாவிற்கு..
தமிழர்களின் சார்பில் இந்தியாவிற்கும் சச்சினுக்கும் வாழ்த்துக்கள்..
தமிழக முதல்வர் கலைஞர் சார்பிலும் வாழ்த்துக்கள்

அது சரி காம்பிர் செய்தது சரிதானா>>???
சச்சின் ஆரம்ப ஓட்டங்கள் நம்மாட்களுக்கு தெம்பை தந்தது.. அடுத்து யுவராஜின் பொறுப்பான ஆட்டம்.. ஆனால்

தோணி
சாணி

பந்து வீச்சு இந்தியாவிடம் சரியாக இல்லை என்பது மட்டும் உறுதி..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

காம்பீரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் யுவ்ராஜ்!! சோ, இந்த பிரச்சனையை விடுங்க.. ஜெயிச்சாச்சுல்ல....

தோனி இனி வரும் ஆட்டத்திலாவது ஆடணும்/

நேற்று இந்தியாவின் பவுலிங்கில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது. ஃபீல்டிங்கிலும்!! மொத்தமாக சரியாக இல்லை என்று சொல்லிவிடமுடியாஹு!

வாழ்த்துக்கள் இந்திய அணீ!!

அன்புரசிகன்
25-03-2011, 06:13 AM
ஃபீல்டிங்கிலும்!! மொத்தமாக சரியாக இல்லை என்று சொல்லிவிடமுடியாஹு!

இதென்னையா??? சரியாக இல்லையா? களத்தடுப்பு மிக நன்றாக இருந்ததை ஆட்டத்தை பார்த்த யாரும் கவனித்திருப்பார்கள்.

அதிலும் ரெய்னாவின் களத்தடுப்பு மற்றும் விக்கட்டை நோக்கிய பந்து பரிமாற்றம்....

சாகீருக்கு இணையாக பந்துவீச இன்னொருவர் அவசியம். முனாவ் அந்த இணையாக தெரியல. இர்பார் பதானுக்கு என்ன ஆச்சு? ஆளயே காணல???

நல்ல ஒரு சகலதுறை ஆட்டக்காரராக யுவராஜ் வந்துள்ளார். ஆனால் அந்த பெருமை அவர் முகத்தில் தெரிகிறது. அதை அவர் தான் நிவர்த்திசெய்ய வேண்டும்.

தோனியின் ஆட்டம் கொஞ்சம் பிசகுகிறது. மூன்றாவது ஆட்டக்காரராக அவனை களம் இறக்கி பார்க்கலாம்.

ரெய்னாவும் முன்பு பந்துவீசியதாக ஞாபகம். கொடுத்துப்பார்த்திருக்கலாம்.

அப்ரிடி மற்றும் யுவராஜ் இந்த உலகக்கோப்பையில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். (பந்துவீச்சாளர்களிலும்)

துடுப்பாட்டம் அபாரமாக இருக்கும் வரையில் பாக்கியை பார்த்து கவலைப்பட அவசியமில்லை. 280+ என்றால் நினைச்சும் பார்க்காது பாக்கி.

ஆதவா
25-03-2011, 06:44 AM

அன்பு.... நான் என்ன சொன்னேனென்றால், எப்பொழுதும் போல ஃபீல்டிங்கில் சறுக்காமல் முன்னேற்றம் உண்டு என்கிறேன். இருப்பினும் ஆஹா ஓஹோ ரகமெல்லாம் கிடையாது. நான் கிட்டத்தட்ட 80 % பார்த்தேன். அதேசமயம் அத்லெடிக் ஃபீல்டர்ஸ் என்று அழைக்கப்படும் அவர்களது ஃபீல்டிங் இன்னும் அப்படியே இருக்கிறது. (ஒரேயொரு கேட்ச் மிஸ் தவிர)

இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை நமக்கு!!!

Nivas.T
25-03-2011, 07:00 AM

உண்மைதான்

இதுவரை நடந்த போட்டிகளில் ரைனா மட்டும்தான் புலப்ப்டுகிறார். யுவர்ஜ் சிங் பந்து வீச்சிலும், மட்டை வீச்சிலும் சிறப்பாக இருந்தாலும், அவரின் தனித்தன்மையாக இருந்த களப்பணி அவரிடம் இப்போது இல்லை. கோலி பரவாயில்லை, இருப்பினும் இன்னும் முனேற்றம் தேவை.

நேற்று ஆஸி நம்மிடம் தோற்றிருந்தாலும், அந்த அணி ஒரு சிறப்பாகவே காணப்படுவதன் காரணம், அனைத்திலுமே அவர்கள் அருமையாக பணியாற்றுவதுதான்.

எனினும் பாக்கிஸ்த்தனை நாம் குறைத்து மதிப்பிட இயலாது, அறையிருதியும் நமக்கு ஒரு கடினமான போட்டியாகவே அமையும், சுவாரசியம் குறையாது.

இருப்பினும் வெற்றி பெறுவது நாமாகவே இருப்போம் என்பதில் துளியும் ஐய்யமில்லை

ஓவியன்
25-03-2011, 07:50 AM
அதேசமயம் அத்லெடிக் ஃபீல்டர்ஸ் என்று அழைக்கப்படும் அவர்களது ஃபீல்டிங் இன்னும் அப்படியே இருக்கிறது. (ஒரேயொரு கேட்ச் மிஸ் தவிர)

இல்லையே ஆதவா, மூன்று முறை சந்தர்பம் கொடுத்த பின்னர்தானே கம்பீரை ஆட்டமிழக்க வைக்க முடிந்தது அவர்களால்....

இரண்டு முறை சொதப்பினார்கள் தானே..!! :cool:

ஆதவா
25-03-2011, 07:54 AM
இன்று தென்னாப்பிரிக்காவுக்கும் நியூஸிலாந்துக்குமிடையே போட்டி..

ஏற்கனவே பல இடங்களில் அடிவாங்கி தக்கி முக்கி வந்திருக்கும் நியூஸிலாந்தை புரட்டியெடுக்க தென்னாப்பிரிக்காவும், பவுலிங்கில் பலமான பாகிஸ்தானை மரண அடிமூலம் தோற்கடித்து, எதிர்பாராத வெற்றியைத் தரும் நியூஸிலாந்தும் ஒன்றோடொன்று போரிடக் காத்திருக்கின்றன.

தென்னாப்பிரிக்காவின்

ஆம்லா,
டீவில்லியர்ஸ்,
டுமினி
ஸ்டெயின்
இம்ரன் தாஹீர்
மோர்கல்

ஆகிய அனைவரும் சிறப்பான ஃபார்மிலும் இந்தியாவைத் தோற்கடித்த தெம்பிலும் இருப்பதால் வாய்ப்பு அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

நியூஸிலாந்து தரப்பில்,
ரோஸ் டெய்லர்,
ப்ரண்டன் மெக்கலம்
கப்டில்
சவுதி
ஓரம்
கேப்டன் வெட்டோரி,

ஆகியோர் ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.

பொதுவாக இரண்டு அணியிலும் உள்ள குறைகள், தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை முக்கியமேட்சுகளில் தோற்றுவிடுவார்கள். இது அவர்களுக்கு ராசியில்லை என்று சொல்லப்படுகிறது.
நியூஸிலாந்தின் பேட்டிங், ஸ்திரமில்லாமல் இருக்கிறது. குறிப்பாக மிடில் ஆர்டர்... ரோஸ் டெய்லர் விதிவிலக்கு என்றாலும் தொடர்ந்து அவர் அடிப்பாரா என்பது சந்தேகமாக இருக்கிறது..

எனது கணிப்பு தென்னாப்பிரிக்கா ஜெயிக்கும் என்பது...
ஆனால்
நியூஸிலாந்துக்கு ராசி இருக்கிறது. பார்ப்போம்!!

ஆதவா
25-03-2011, 07:59 AM
இல்லையே ஆதவா, மூன்று முறை சந்தர்பம் கொடுத்த பின்னர்தானே கம்பீரை ஆட்டமிழக்க வைக்க முடிந்தது அவர்களால்....

இரண்டு முறை சொதப்பினார்கள் தானே..!! :cool:

இருக்கலாம் ஓவி!! ஆனாலும் சிங்கம் சிங்கம்தான்!! தோற்றாலும் ஆஸி பலமிழந்த அணியாக நினைக்க முடியவில்லை...

ஒருசில ஃபீல்டிங் குறிப்பாக ஜான்ஸன் அல்லது ப்ரட் லீ என்று நினைக்கிறென் தர்ட் மேனாக நின்று கொண்டிருந்தார்.. யுவி அடித்த ஸ்வீப் ஷாட்டை பவுண்டரி லைனில் தடுத்து ஒரு டைவ் அடித்து பின் சடாரென எழுந்து பந்தை கீப்பருக்கு வீசினார்.... நிச்சயம் இதை நம் மக்கள் செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் கஷ்டம்தான்..

இருப்பினும் நேற்று நமது ஃபீல்டிங்கில் நல்ல முன்னேற்றம்.. ரெய்னா பிடித்த லோ கேட்ச் ஒன்றே போதும்... அஸ்வின் லாங்கில் நின்றுகொண்டு பந்துகளை சாமர்த்தியமாகத் தடுத்துக் கொண்டேயிருந்தார்... நம் மக்கள் விழுந்து விழுந்து பிடித்ததைப் பார்க்கும் பொழுது இதையெல்லாம் ஏன் மற்ற போட்டிகளில் செய்வதில்லை என்று தோணியது.

ஓவியன்
25-03-2011, 07:59 AM
தென்னாபிரிக்கா நல்ல பலத்துடன் இருந்தாலும், எனக்கென்னவோ நியூசிலாந்து அணியினர் சாதிப்பார்களென தெரிகிறது...

இன்று வெற்றி பெறும் அணி - நியூசிலாந்து.

பிரண்டன் மேக்கலம் அதி வேகமாக ஒரு அரைச்சதத்தினை விளாசுவார், ரோஸ் டெயிலர் ஒரு சதத்தினை அடிப்பார்....

வேணும்னா பாருங்களேன்..!! :cool: :D:D

ஆதவா
25-03-2011, 08:33 AM

தென்னாப்பிரிக்கா ஜெயிக்குது!!!

100 இ பணம் பெட்டு!!:icon_b:

(யார் யாரோ பெட்டிங் கட்டிறாங்க... நாம இத்தனை பணத்தை வெச்சுகிட்டு கட்டினா தப்பா??:rolleyes:)

ஓவியன்
25-03-2011, 08:41 AM
[COLOR="DarkRed"]பிரண்டன் மேக்கலம் அதி வேகமாக ஒரு அரைச்சதத்தினை விளாசுவார், :D:D

அதிவேகமாக அரைச்சதம் அடிக்கணும்னா, அதற்கு அவரை விடணும்ல...!! :D:D:D
அவசரப்பட்டு விக்கெட்டை புடுங்கினா எப்படி...??? :confused::confused::confused:

ஓவியன்
25-03-2011, 08:49 AM
தென்னாப்பிரிக்கா ஜெயிக்குது!!!

100 இ பணம் பெட்டு!!:icon_b:

சரி, நானும் தயார் தான்...

மேக்கலம் போனா என்ன டெய்லர் இருக்கிறார்ல...!! :cool::cool:

Nivas.T
25-03-2011, 08:56 AM
அதிவேகமாக அரைச்சதம் அடிக்கணும்னா, அதற்கு அவரை விடணும்ல...!! :D:D:D
அவசரப்பட்டு விக்கெட்டை புடுங்கினா எப்படி...??? :confused::confused::confused:

:D:confused:

கப்டில்லும் போயாச்சு

17/2

ஆதவா
25-03-2011, 08:59 AM
அதிவேகமாக அரைச்சதம் அடிக்கணும்னா, அதற்கு அவரை விடணும்ல...!! :D:D:D
அவசரப்பட்டு விக்கெட்டை புடுங்கினா எப்படி...??? :confused::confused::confused:

இப்படி எத்தனை பேருங்க கிளம்பியிருக்கீங்க....??? :D:D

சரி, நானும் தயார் தான்...

மேக்கலம் போனா என்ன டெய்லர் இருக்கிறார்ல...!

நியூஸிலாந்து தோத்துட்டா, டெய்லருக்கு அவங்க ஊர்ல முக்கியமான வேலை இருக்காம்... வேறென்ன... ”கிழிஞ்சது கிழியாதது..... தெச்சது வெச்சது தெய்க்காதது” :D:D

அக்னி
25-03-2011, 10:08 AM
பந்தயத் தொகை இப்போ எந்தப் பக்கம் அதிகமா இருக்கு...

சொன்னா அதுக்கேத்தமாதிரி அடிக்க வேண்டிய இடத்தில அடிச்சு, ஆட்டத்த மாத்தி அமைச்சு, தொகையை நம்ம கைக்கு எடுக்கலாமுன்னுதான்...

இ-பணம் என்றாலும் பணம் தானே...

ஆதவா
25-03-2011, 10:14 AM
பந்தயத் தொகை இப்போ எந்தப் பக்கம் அதிகமா இருக்கு...

சொன்னா அதுக்கேத்தமாதிரி அடிக்க வேண்டிய இடத்தில அடிச்சு, ஆட்டத்த மாத்தி அமைச்சு, தொகையை நம்ம கைக்கு எடுக்கலாமுன்னுதான்...

இ-பணம் என்றாலும் பணம் தானே...

இப்போதைக்கு

100 ரூவா பெட்,

தென்னாப்பிரிக்கா

தோற்கும் - ஓவியன்
ஜெயிக்கும் - ஆதவா.

நீங்க கலந்துகிறீங்களா???

நியூஸிலாந்துக்கு நல்ல அடித்தளம் போட்டுட்டு இருக்காங்க... ஜெஸி ரைடர் மற்றும் ரோஸ் டைலர்..
ரெண்டுபேரும் நின்னுட்டா, தென்னாப்பிரிக்கா அப்பறம் தென் ஆப்பு ரிக்கா...தான்

ஓவியன்
25-03-2011, 10:28 AM
நியூஸிலாந்துக்கு நல்ல அடித்தளம் போட்டுட்டு இருக்காங்க... ஜெஸி ரைடர் மற்றும் ரோஸ் டைலர்..
ரெண்டுபேரும் நின்னுட்டா, தென்னாப்பிரிக்கா அப்பறம் தென் ஆப்பு ரிக்கா...தான்

கொஞ்ச நேரத்துக்கு முன்னர் யாரோ டைலரை நக்கலடிச்சிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு..!! :D:D:cool:

ஓவியன்
25-03-2011, 10:30 AM
சொன்னா அதுக்கேத்தமாதிரி அடிக்க வேண்டிய இடத்தில அடிச்சு, ஆட்டத்த மாத்தி அமைச்சு, தொகையை நம்ம கைக்கு எடுக்கலாமுன்னுதான்....

நம்ம இ-பணத்துக்கு ஆட்டத்தை மாத்த அந்த ஸ்மித் பையன் ஓகே என்பாரா என செக் பண்ணுங்க, முதல்ல...!! :icon_wink1:

அக்னி
25-03-2011, 10:37 AM
எல்லாரும் என்னோட இ-கணக்குக்கு பந்தயப் பணத்தை அனுப்பி வையுங்க...

போட்டி முடிவைப் பார்த்து 90% அனுப்பி வைக்கலாம்...

10% பந்தய அமைப்பாளரான எனக்கு...

டீலா... நோ டீலா...

ஆதவா
25-03-2011, 10:39 AM
கொஞ்ச நேரத்துக்கு முன்னர் யாரோ டைலரை நக்கலடிச்சிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு..!! :D:D:cool:

சரி சரி விடுங்க..... இதெல்லாம் ஜகஜம்!!!
ரெய்டர் 71
டெய்லர் 34

ஸ்கோர் 116/2

(வடை போச்சா?:confused:)

நாஞ்சில் த.க.ஜெய்
25-03-2011, 11:00 AM
தங்கள் இருவருக்கும் தலா 100 இபணம் வந்துசேரும். வராவிட்டால் மன்றத்து நிர்வாகியை நாடுங்கள். பொதுவாக நான் அனுப்பினால் அது தானாக வராது. அறிஞர் வந்து அனுமதிக்கணும். (யாரோ கண்ணுவச்சிட்டாங்க... :D)

முக்கியமான விக்கெட்டுக்களை வீழ்த்திய யுவராஜ் ஐ விட்டுவிட்டீங்களே.....

அப்பப்ப இதே மாதிரி கொடுத்திங்கனா ரொம்ப நல்லா இருக்கும்...யுவராஜ் அந்த வீரரின் ஆட்டம் மிகவும் சிறப்பு இனிவரும் போட்டிகளில் அவர் மீதான எதிபார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும் அதற்கேற்றவகையில் அவருடைய ஆட்டம் இருந்தால் மிகவும் நன்றாயிருக்கும்..

தென்னாப்பிரிக்கா ஜெயிக்குது!!!

100 இ பணம் பெட்டு!!:icon_b:

பரவாயில்ல போட்டி களம் சூடாதான் இருக்கு ..ஆனால் வெற்றி பெரும் அணியினை பார்த்து பந்தய தொகை கட்டியிருப்பது தான் சரியில்லை ....நானும் தென் ஆப்ரிக்க அணிதான் வெற்றி பெரும் என நினைக்கிறேன் ....இந்த அணியினை பொறுத்தவரையில் மினிமம் கியரண்டி ரன் குவிப்பாளர்கள் உள்ளது எவ்வித இலக்கையும் எளிதா எடுத்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது ..மற்றொன்று உலககோப்பை போட்டிகளில் தங்கள் மீதுள்ள அவநம்பிக்கையை நீக்க கடுமையாக போராடுவார்கள்..
நியூஸ் லேன்ட் அணியின் ஆட்டம் மெதுவாக ஒரு நிலையான ரன் குவிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இதில் ரைடர் ஆட்டம் பராவாயில்லை ....மற்றவீரர்கள் அவர்களது பங்களிப்பை முடிந்த அளவில் அளித்து கொண்டிருக்கிறார்கள்...147/3 35.4

ஆதி
25-03-2011, 11:13 AM
154/4 38 ஓவர்கள்...

230 வரை அடிக்கலாம், நியூஸ்லேன்ட் பந்துவீச்சு இந்தியாவைவிட பலமானது என்பதால், 230 எனும் இலக்கு கடினமானதகாவே இருக்கும்..

பார்ப்போம்.......

ஆதவா
25-03-2011, 11:28 AM
இன்னும் எட்டு ஓவர்கள்தான் இருக்கின்றன. 240 வரைக்கும் எதிர்பார்க்கலாம். அதுவும் சிரமமானதுதான்....

ரெய்டர் டெய்லர் கூட்டணி இன்னும் கொஞ்சநேரம் நிலைத்திருக்கணும். ஸ்டைரிஸாவது இருநூறு வரை நீடித்திருக்கலாம்!!

169/5

ஆதவா
25-03-2011, 11:34 AM
பரவாயில்ல போட்டி களம் சூடாதான் இருக்கு ..ஆனால் வெற்றி பெரும் அணியினை பார்த்து பந்தய தொகை கட்டியிருப்பது தான் சரியில்லை ....

ஏங்க இது என்ன அநியாயமா இருக்கு... யாராவது தோற்கிற அணிகூடயா பந்தயம் கட்டுவாங்க... :confused:

நியூஸிலாந்து சளைச்ச டீம் இல்லைங்க. நல்லா எதிர்ப்பு தருவாங்க!! :cool:

ஆதி
25-03-2011, 11:46 AM
ஓரம் வந்திருக்கார், என்னக்கென்னனு ஓரமா ஒதுங்கிடாம இருந்தால் 220 வந்திடும்....

189/6 46 ஓவ*ர்க*ள்

ஆதி
25-03-2011, 11:52 AM
47 ஓவர்களுக்கு 196/6, ஓரமுக்கு அதிக வாய்ப்பு கிடைச்சால் ஸோர் அதிகமாக ஏற வாய்ப்பிருக்கு....

230 அடிச்சுடுவாங்க* நு தோன்றுது, பார்ப்போம்

நாஞ்சில் த.க.ஜெய்
25-03-2011, 11:54 AM
ஏங்க இது என்ன அநியாயமா இருக்கு... யாராவது தோற்கிற அணிகூடயா பந்தயம் கட்டுவாங்க... :confused:

நியூஸிலாந்து சளைச்ச டீம் இல்லைங்க. நல்லா எதிர்ப்பு தருவாங்க!!

நடக்குற ஆட்டத்த பார்த்தா எனக்கு அப்படி தோணல ....

202/6 47.5

நாஞ்சில் த.க.ஜெய்
25-03-2011, 11:58 AM
ஒரத்த ஓரங்கட்டிடார் மோர்கல்...204/7 48.1

ஆதவா
25-03-2011, 12:03 PM
220 ஆ? என்னங்க சொல்றீங்க?

210/8

நியூஸியின் பவுலிங் அட்டாக்கில் இருக்கிறது!!!

நாஞ்சில் த.க.ஜெய்
25-03-2011, 12:10 PM
220 ஆ? என்னங்க சொல்றீங்க?

202 பதில் 220 என தவறுதலாக பதிவாகிட்டது ... முடிவில் 221 /8

ஆதி
25-03-2011, 12:11 PM
தெ.ஆவின் இலக்கு 222..

நியூஸி 221/8

நியூஸிக்கு ஜெய்க்க வாய்ப்பிருக்கு....

அக்னி
25-03-2011, 12:11 PM
முடிவா என்ன நிலவரம்?

நாஞ்சில் த.க.ஜெய்
25-03-2011, 12:23 PM
முடிவா என்ன நிலவரம்?
யாரு ஜெயிப்பா? நிலவரம் ஒண்ணுமே தெரியல ..நியூஸ் லேன்ட் பந்துவீச்சு எப்படியோ அதபொறுத்து இருக்கு ...

ஆதவா
25-03-2011, 01:28 PM
யாரு ஜெயிப்பா? நிலவரம் ஒண்ணுமே தெரியல ..நியூஸ் லேன்ட் பந்துவீச்சு எப்படியோ அதபொறுத்து இருக்கு ...

தென்னாப்பிரிக்கா

54/1
11 ஓவர்..

எனக்கென்னவோ நியூஸி ஜெயிப்பது சிரமம்னு நினைக்கிறென்..

ஆதவா
25-03-2011, 01:46 PM
ஸ்மித் போயாச்சு!!! இனி டிவில்லியர்ஸ்!!!!
153 ரன்கள் எடுத்தால் போதும் தெ. ஆவுக்கு

69/2
14.2 ஓவர்

நாஞ்சில் த.க.ஜெய்
25-03-2011, 02:14 PM
எனக்கென்னவோ நியூஸி ஜெயிப்பது சிரமம்னு நினைக்கிறென்.
ஆமாம் கலிஸ் நிக்குற நிலைய பார்த்தா அணியை ஜெயிக்க வச்சுட்டுதான் மறுவேலங்குற மாதிரி இருக்கு...

ஓவியன்
25-03-2011, 02:44 PM
டுமினியும் ஆட்டமிழந்தார்...

121/4 28வது ஓவர்...

நியூசிலாந்தினர் சாதிப்பார்களா..??

ஓவியன்
25-03-2011, 02:49 PM
அட்ரா சக்கை..!!

121/5 28வது ஓவர்...

வில்லியர்ஸூம் ரனவுட்டாகி வெளியேறுகிறார்..!! :)

ஆதவா
25-03-2011, 03:02 PM
அட்ரா சக்கை..!!

121/5 28வது ஓவர்...

வில்லியர்ஸூம் ரனவுட்டாகி வெளியேறுகிறார்..!! :)

ஏதேது... எனக்கு 100 ரூவா போய்டும் போல இருக்கே??? :eek:
-----------------------

நியூஸிலாந்துக்கு கிடைத்த “டபுள் ஸ்ட்ரைக்”.. கிட்டத்தட்ட 10 நிமிடங்களில் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது. டுமினி மற்றும் டிவில்லியர்ஸ்தான் தெ.ஆ வின் மேட்ச் வின்னர்ஸ்!!!

என்னால் நம்பமுடியவில்லை... இருப்பினும் இன்னும் ஐந்து விக்கெட்டுகள் இருப்பதால் தொடர்ந்து நம்பிக்கையுடன்!!!

இதுவரை இரண்டு அணிகளுமே UDRS ஐ உபயோகப்படுத்தவில்லை.... எனில் கிட்டத்தட்ட எல்லா பந்துகளும் பேட்டுடனே முத்தமிட்டிருக்கிறது!! காலிலில்லை!! நல்ல பவுலிங் மற்றும் பேட்டிங்.

+--------------------------

தென்னாப்பிரிக்காவுக்கு முன்பைப் போல ஏழாவது பேட்ஸ்மென் ஆல்ரவுண்டராகவோ அல்லது 9ம் இடம் வரை ஆடக்கூடியவர்களாகவோ இல்லை. மிகத் திறமையான அணியாக இருந்த பொழுதே அதனால் இறுதிப் போட்டிக்குச் செல்லமுடியவில்லை..... இப்பொழுது மட்டும் என்ன விதிவிலக்கா!!!

6வது விக்கெட்!! போத்தா.... போயிந்தா...

ஓவியன்
25-03-2011, 03:13 PM
7 வது விக்கெட்டும் (பீட்டர்சன்) காலி ஆதவரே..!! :):):)

ஓவியன்
25-03-2011, 03:29 PM
8 வது விக்கெட்டும் போச்சே...!!, இன்னைக்கு 100 ரூபா நமக்கு இலாபம் தான்..!! :)

ஆதி
25-03-2011, 03:36 PM
நம்ம கணிப்பு சரியாத்தான் போய்க்கிட்டு இருக்கு..........

தெ.ஆ தோற்பது உறுதியாகிடுச்சு.........

நீயூஸி உள்ளே வருது..

அந்த பக்கம் இலங்கை ஜெய்க்கும், நியூஸி *- இலங்கை

இலங்கை - இந்தியா இறுதி போட்டிக்கு வரும் என்று நினைக்கிறேன், பார்ப்போம்...........

ஆதி
25-03-2011, 03:43 PM
மார்கெல் விக்கட்டை வீழ்ந்த டார்கட் செய்வதுதான் இப்போதைக்கு நல்லது, நியூஸிக்கு....

ஆதி
25-03-2011, 04:01 PM
சாபம் தொடரவே செய்கிறது ஆதவா..

ஆல் அவுட் தெ.ஆ..

172/10 43.2 ஓவர்களுக்கு..............

இந்தியாவுக்கு உலக கோப்பையை வெல்லும், வெற்றி வாய்ப்பு தற்போது அதிகமாகவே உள்ளது......... பார்ப்போம்.........

ஓவியன்
25-03-2011, 04:24 PM
ஆதவா 100 ரூவாவ வெட்டுங்க சீக்கிரம்..!! :D:D:cool:

நாஞ்சில் த.க.ஜெய்
25-03-2011, 05:16 PM
போச்சே போச்சே இந்த தடவையும் வடை போச்சே....

ஆதவா
26-03-2011, 04:19 AM
ஆதவா 100 ரூவாவ வெட்டுங்க சீக்கிரம்..!! :D:D:cool:

:traurig001:

சாபம் தொடரவே செய்கிறது ஆதவா..

ஆல் அவுட் தெ.ஆ..

172/10 43.2 ஓவர்களுக்கு..............

இந்தியாவுக்கு உலக கோப்பையை வெல்லும், வெற்றி வாய்ப்பு தற்போது அதிகமாகவே உள்ளது......... பார்ப்போம்.........

இதுவரை நாக் அவுட் மேட்ச்களில் தென்னாப்பிரிக்கா ஜெயித்ததே இல்லை.... அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பதே இல்லைங்க... ரொம்ப நல்ல டீம்.

ஆம்லா, டீவில்லியர்ஸ், காலிஸ், மார்கல், ஸ்டெயின் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் ஜெயிக்க முடியாமல் போனது யாரோ கொடுத்த சாபமாகத்தான் இருக்க முடியும்!!!

அடுத்தமுறை பார்ப்போம் ஆப்பிரிக்காஸ்!!!:mad:

ஓவியன்
26-03-2011, 05:03 AM
நேற்றைய போட்டியில் களத்தடுப்பில் அமர்க்களப்படுத்தியிருந்தது நியூசிலாந்து அணி, இந்திய வீரர்கள் களத்தடுப்பில் அவர்களிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்ளலாம்...

காலிஸ் கொடுத்த பிடியினை ஓடி வந்து பிடித்த ஓரம்,
கப்டில் தடுத்த எத்தனையோ பவுண்டரிகள்...
வில்லியர்ஸின் ஆட்டமிழப்பு....

என களத்தடுப்பில் அமர்க்களப்படுத்தியமையாலேயே இந்த வெற்றி அவர்களுக்கு கிடைத்தது, இதனைக் கவனத்திற் கொள்வார்களா இந்திய அணியினர்..?? :confused:

ஓவியன்
26-03-2011, 05:08 AM
அடுத்தமுறை பார்ப்போம் ஆப்பிரிக்காஸ்!!!:mad:

அவர்களுக்கு பாடகி ஷாகிரா ஒரு பாட்டுப் பாடிக் கொடுக்கணும்...

`நெக்ஸ்ட் டைம் பார் ஆபிரிக்கா` னு... :D:D:D :lachen001:

ஆதவா
26-03-2011, 05:09 AM
நேற்றைய போட்டியில் களத்தடுப்பில் அமர்க்களப்படுத்தியிருந்தது நியூசிலாந்து அணி, இந்திய வீரர்கள் களத்தடுப்பில் அவர்களிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்ளலாம்...

காலிஸ் கொடுத்த பிடியினை ஓடி வந்து பிடித்த ஓரம்,
கப்டில் தடுத்த எத்தனையோ பவுண்டரிகள்...
வில்லியர்ஸின் ஆட்டமிழப்பு....

என களத்தடுப்பில் அமர்க்களப்படுத்தியமையாலேயே இந்த வெற்றி அவர்களுக்கு கிடைத்தது, இதனைக் கவனத்திற் கொள்வார்களா இந்திய அணியினர்..?? :confused:

ஓரம் பிடித்த இரண்டு கேட்சுகளும் மிக அற்புதமானவை.

இந்தியா மேட்சிலும் சரி, நியூஸி மேட்சிலும் சரி, வெற்றிக்கு களத்தடுப்பும் மிக முக்கிய காரணமாக இருந்தது!!! இன்று இங்கிலாந்தும் தொடரும் பட்சத்தில் வாய்ப்பு அதிகமிருக்கிறது!!!

ஓவியன்
26-03-2011, 08:40 AM
நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளனர்....

இங்கிலாந்து அணியில் மாற்றமில்லாத வேளை, இலங்கை அணியினர் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகின்றனர் இன்று, நுவான் குலசேகரவிற்கு பதில் ரங்கன ஹேரத் விளையாடவிருக்கின்றார்...

அமரன்
26-03-2011, 09:32 AM
மூன்று சுழல்கள்.
ஒரு பகுதிநேரச் சுழல்.
ஒரு வேகம்.
ஒரு சகலதுறை வேகம்..

இலங்கை வியூகம் பலமறிந்து அமைக்கப்பட்டிருக்கு. பலவீனம் கவனிக்கப்பட்டிருக்கா...

முதலாவது விக்கட் வீழ்தப்பட்டது டில்ஷானால்.

ஆதவா
26-03-2011, 09:46 AM
நன்றாக யோசித்துப் பார்த்தால், Group B யில் மிக நல்ல டீம் இங்கிலாந்துதான். பெரிய அணிகளான வெஸ்ட் இண்டீஸ் (?), தென்னாப்பிரிக்காவை ஜெயித்தது. இந்தியாவை 339 க்கும் சேஸிங் செய்து டை செய்தது… (கிட்டத்தட்ட ஜெயித்த மாதிரிதானே?) அதேசமயம் சின்ன அணிகளான பங்களாதேஷிட்மும் அயர்லாந்திடமும் தோற்றது… சோ, இங்கிலாந்து ஜெயிப்பதெல்லாம் பெரிய அணிகளோடுதான்!!! பேட்டிங்கைப் பொறுத்தவரை, ஜோனதன் ட்ராட் மிகச்சிறப்பான வெளிப்பாட்டுடன் பேட்டிங் செய்கிறார். ஆடவந்தால் ஒரு அரைசதம் உறுதி என்பது போல 6 போட்டிகளில் 4 அரைசதங்கள்… ஒரு போட்டியில் கிட்டத்தட்ட அரைசதம்… இவரை அவுட் ஆக்கினால் இங்கிலாந்திடம் ஆளில்லை எனச் சொல்லலாம். பவுலிங்கில் ஸ்வான் மிரட்டுகிறார். ப்ரஸ்னன், ஆண்டர்ஸன் போன்றவர்கள் சுமார் ரகம் தான்

சோ, இலங்கைக்கு சமமான அணியாகத்தான் இங்கிலாந்து இருக்கிறது..

இங்கிலாந்தின் பலவீனம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்புவதும், வேகப்பந்து எடுபடாததும்தான். இருப்பினும் ஆண்டர்ஸின் ஸ்விங் பால்களையும் ஸ்வானின் சுழலையும் சமாளித்துவிட்டால் இலங்கை சுலபமாக ஜெயித்துவிடலாம்.

என்னங்க ஓவியன்... இந்தமுறை பெட்டிங்???

35/2

தேவையில்லாத ஷாட்.. பெல் போயாச்சு!!

இப்ப பொறுப்பு, ட்ராட்டுக்கும் பொபாராவுக்கும்......

ஓவியன்
26-03-2011, 10:01 AM
ஹ்ஹா ஆதவரே, நாம ஒரு தடவை ஜெயித்தால் ஜெயித்ததுதான் இனி பெட்டிங்கிற்கு எல்லாம் வரமாட்டமிலே... !!:D:D

__________________________________________________________________________________

இங்கிலாந்து அணியினர் டில்சான் மற்றும் ஹேரத்தின் சுழற்பந்து வீச்சுக்கே திணறுவதாகத் தெரிகிறது, மெண்டிஸையும் முரளியையும் எப்படித்தான் சமாளிக்கப் போகிறார்களோ..?? :confused: