PDA

View Full Version : வீட்டிலிருந்தே செய்யும் Data Entry வேலை தேவை உதவுங்கள்

archana
23-03-2011, 09:15 AM
ஹாய் நண்பர்களே நான் பஹ்ரைனில் இருக்கேன் என்னிடம் Pc With Internet Connectionஉள்ளது, எனக்கு விட்டிலிருந்து ஏதாவது வேலை பார்க்க ஆசை Data Entry jobs இருந்தால் கூரவும் :traurig001:

archana
24-03-2011, 07:09 AM
ஹாய் நண்பர்களே யாராவது எனக்கு தயவு செய்து உதவுங்கள்.Typing job, Form filling இந்த மாதிரி வேலை இருந்தால் கூறுங்கள் :frown:

ஆதவா
24-03-2011, 07:16 AM
நண்பரே... டேடா எண்ட்ரி போன்ற வேலைகள் யார் கொடுத்தாலும் செய்யாதீர்கள் அல்லது தீர விசாரித்துப் பிறகு செய்யுங்கள்.

நீங்கள் வீட்டிலிருந்தே பணிசெய்ய

Web Designing
Advertisements
Stock Photography

போன்ற உத்திரவாதம் மிக்க வேலைகளைச் செய்யுங்கள்!! டேடா எண்ட்ரி போன்றவைகள் ஏமாற்று வேலைகள்!!! இணையத்தில் அப்படி ஏதும் விளம்பரம் வந்தாலும் நம்பாதீர்கள்!!

பூமகள்
24-03-2011, 08:28 AM
ஆதவா,

Web Designing
Advertisements
Stock Photography

இவை தொடர்பான வேலைகள் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

வர்க் ஃப்ரம் ஹோம் கொடுக்கும் இது தொடர்பான கம்பெனி பற்றி அறிந்திருப்பினும் கூறவும்.

வீட்டிலிருக்கும் பல மகளிருக்கு உபயோகமாக இருக்கும் இல்லையா??

முரளிராஜா
24-03-2011, 09:00 AM
இனிமே இதுக்கெல்லாம் அவசியமில்லை
எங்களுக்கு எல்லாமே இலவசமா கிடைக்க போகுது
நீங்க வெளிநாட்டில் இருந்தா உடனே தேர்தலுக்கு முன் தமிழ்நாடு வந்துடுங்க.
இனிமே வெட்டியா பொழுத போக்கலாம்

priyan24
24-03-2011, 09:18 AM
முரளி ராஜா கூறியது மிகவும் சரி

archana
24-03-2011, 09:35 AM
[QUOTE=ஆதவா;519441]நண்பரே... டேடா எண்ட்ரி போன்ற வேலைகள் யார் கொடுத்தாலும் செய்யாதீர்கள் அல்லது தீர விசாரித்துப் பிறகு செய்யுங்கள்.

நீங்கள் வீட்டிலிருந்தே பணிசெய்ய

அட்மின் சார் Stock Photography
என்றால் என்ன? அதை பற்றி சற்று விவரமாக கூர முடியுமா?

p

ஆதவா
24-03-2011, 09:43 AM
ஆதவா,

Web Designing
Advertisements
Stock Photography

இவை தொடர்பான வேலைகள் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

வர்க் ஃப்ரம் ஹோம் கொடுக்கும் இது தொடர்பான கம்பெனி பற்றி அறிந்திருப்பினும் கூறவும்.

வீட்டிலிருக்கும் பல மகளிருக்கு உபயோகமாக இருக்கும் இல்லையா??

வெப் டிசைனிங் பற்றி அறிந்திருப்பீர்கள். வடிவமைப்பு மென்பொருள்களான ட்ரீம்வீவர், ஃப்ரண்ட்பேஜ், ஜாவா, ஃப்லாஷ் போன்றவற்றில் நல்ல ஞானம் உள்ளவர்கள் நிறைய சாதிக்கலாம்.

விளம்பரங்கள் :

கூகிளின் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கலாம். உங்களது சொந்த தளத்தில் கூகிலின் விளம்பரங்களை நிறுவி, பல வாசகர்களைப் பார்க்க வைப்பது தான் வேலை... கொஞ்சம் சிரமமான காரியம்தான். ஏனெனில் கொஞ்சம் பிசகினாலும் கூகில் அக்கவுண்டை முடித்துக்கொள்ளும். மேலதிக தகவல்களுக்கு :https://www.google.com/adsense/

ஸ்டாக் போட்டோகிராபி அல்லது மைக்ரோ ஸ்டாக் எனப்படுவது,

நீங்கள் ஒரு நல்ல புகைப்பட கலைஞராகவோ, அல்லது நல்ல ஒலிப்பதிவாளரோ, ஒளிப்பதிவாளரோ, அல்லது நல்ல ஓவியராகவோ இருந்தால் உங்களது படைப்புகளை நீங்கள் வீட்டிலிருந்தபடியே விற்கலாம். அதுவும் ராயல்டி முறையில்..

ஆனால் ஸ்டாக் தளங்கள் கேட்கும் தரத்தில் உங்களது படைப்புகள் இருக்கவேண்டும்....

கீழ்கண்ட சில தளங்கள், ஸ்டாக் தளங்களில் முதன்மையானது. இதில் மெம்பர் ஆனபிறகு சில தேர்வுகள் நடக்கும். தேர்வுக்குப் பிறகு நீங்கள் உங்கள் படைப்புகளைத் தரலாம்... மேலதிக விபரங்களுக்கு அந்தந்த தளங்களை அணுகுங்கள்.

iStockphoto.com
ShutterStock.com
Dreamstime.com
123rf.com
Fotolia.com

இன்னும் நிறைய ஸ்டாக் தளங்கள் இருக்கின்றன>..

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 09:51 AM
அருமையான பயன்படும் தகவல்கள் ....

kalaiselvan2
28-03-2011, 12:15 PM
http://www.PaisaLive.com/register.asp?2515752-3824412
நண்பரே இந்த திரியில் சென்று பாருங்கள் என் நண்பர்கள் இதில் பணம் வருவதாக கூறினார்கள், அவர்கள் பணம் அனுப்பிய செக்குகளையும் அத்தாச்சியாக காண்பிக்கின்றனர். வலையிலும் அவர்கள் அதை பதித்துள்ளனர். ஆனால் ஒவ்வொறு சொடுக்கிற்கும் பணம் என்னவோ குறைவாகத்தான் உள்ளது. முயன்று பாருங்கள்

ஆதவா
28-03-2011, 12:26 PM

நண்பரே... இவைகளெல்லாம் தங்களது தளத்தின் traffic எண்ணிக்கை கூடுதலாக்க செய்யப்படும் உத்தி.... இதிலிருந்து உங்களால் ஒரு பைசா கூட சம்பாதிக்க இயலாது. வீணாக நேரத்தை வீணடிக்காதீர்கள்!!

archana
02-04-2011, 08:28 AM
நண்பரே... இவைகளெல்லாம் தங்களது தளத்தின் traffic எண்ணிக்கை கூடுதலாக்க செய்யப்படும் உத்தி.... இதிலிருந்து உங்களால் ஒரு பைசா கூட சம்பாதிக்க இயலாது. வீணாக நேரத்தை வீணடிக்காதீர்கள்!!
Dear aathavaa sir,
Thanks for ur help.
I will try this link.

matheen
17-11-2011, 12:13 PM
இது எதுவுமே இல்லாம ஒரு வேலை இருக்கு......???? சொல்லவா