PDA

View Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:10ராஜாராம்
21-03-2011, 11:55 AM
திருக்குற்றாலம்...மலையருவி..வனப்பகுதி..காலை 9.0மணி...

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTcEQFMyLn7Sld2qznYP3Vryy2vsSpuCyNWSOiP8qTmZGs05v64QDnX-CkA
அன்னை கிருஷ்ணவேனி தியானத்தில் வீற்றிருக்க,அவர் எதிரே
அமைதியாக அமர்ந்திருந்தான் அசோக்குமார்.

"அம்மா..உங்களிடம் ஒருசில விஷயங்களை தெரிந்துக்கொள்ள வந்திருக்கேன்..",
என்று அசோக் கூறியதுமே,
அன்னை சிரித்தபடி,

"இறந்துப்போன பிரியதர்ஷினியைப் பற்றிதானே?",
என்றதும் அசோக்கிற்கு தூக்கிவாரிப்போட்டது.

"ஆமாம்...",
என்றான்,

"என்ன தெரிஞ்சிக்கனும் கேளு",
அன்னைக் கேட்டதும்,'

"கொலையாவதற்கு முன்னர் பிரயதர்ஷினி இங்க வந்தாங்களா?",
என்றான் அசோக்.

"ஆமாம்..",
அன்னை கூற

"பிரியதர்ஷினிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு...",
என்று கேட்டான்.

மெல்ல சிரித்த அன்னை.
"சொல்றேன்...",
என்று மேலும் சொல்லத் தொடங்கினார்.

""பிரியதர்ஷினியின் அப்பா இங்க குற்றாலத்தில் வசித்துவந்தான்.
அருவியில் தவறி விழுபவர்களையும் ,
தற்கொலைசெய்து இறந்தவர்களின் பிரேதங்களையும்
மீட்டு அவரகளது உறவினர்களிடம்
ஒப்படைப்பதுதான் அவன் வேலை.
ஆனால்..அதற்காக இறந்தவர்களின் உறவினர்களிடம்
பணம்காசு அதிகமாக கேட்பான்.
இறந்தவர்களைப் பற்றியோ...
கதறி அழும் உறவினர்களைப் பற்றியோ கொஞ்சம்கூட
இரக்கப்படமாட்டான்...
அப்படியொரு கல்நெஞ்சக்காரன்..",

அவனதுக் குறிக்கோள் எல்லாம்
நிறையக்காசு சம்பாதிக்கனும்..
தனது மனைவி பிள்ளைகளை வசதியாய்
வாழவைக்கவேண்டும் என்பதுதான்"",
என்று அன்னைக் கூறியதும்,

"அவருக்கு குழந்தைகள்".,
அசோக்கின் கேள்வி குறுக்கிட்டது,

"அவனுக்கு ரெண்டுப் பெண்குழந்தைகள் பிறந்தன..
மூத்தவள்தான் இறந்துப்போன பிரியதர்ஷினி.
இரண்டாவது பெண் அபிராமி..
உனக்கு கல்யாணத்திற்கு பெண்பார்க்க
திருச்சிக்குப் போனியே...
அந்தப் பெண் அபிராமிதான் அவனது இரண்டாம் குழந்தை",
என்ர அன்னை சூட்சுமம்மாக சிரித்தார்.

"அப்படியா...????",
என்று அதிர்ச்சியில் வாயைபிளந்தான் அசோக்.

அன்னைமேலும் சொல்லத் தொடங்கினார்,

""பேராசையில் அநியாயமாக பணம்காசு சேர்த்த
அவன் வாழ்வில் ஒருப் பெரிய இழப்பு ஏற்பட்டது..
அவன் தன் மனைவிமேல் அதீத காதல் வைத்திருந்தான்.
ஓர்நாள் அவனது மனைவியே அந்த
அருவியில் தவறிவிழுந்துவிட்டாள்..
அவளை காப்பாற்ற அந்த அருவயில் குதித்தான்,,,
எந்த அருவியில் பணம்சம்பாதிக்க அநியாயமாக
வழிதேடினானோ..
அதே அருவியில் அவனது மனையின் உயிரும் பிரிந்தது..",
என்ற அன்னை சிறிது நேரம்கழித்து,

"மனைவி இறந்த அதிர்ச்சி
அவன மனதைப் பக்குவப்படுத்தியது...
அவன் மனதில் ஞானம் பிறந்தது...
தனது பிள்ளைகள்,பிரியதர்ஷினி..அபிராமி இருவரையும்
அம்போவென விட்டுவிட்டு ஒருப்பைத்தியக்காரன் போல
வனப்பகுதிகளில் சுற்றி திரிந்தான்..
சிவவழிபாடுகளை செய்யத்தொடங்கினான்..
பித்தனாய் திரிந்த அவனை
"சிவனாடிசித்தன்",என்று எல்லாரும் அழைக்கத்தொடங்கினர்...""
என்றார்.

"அப்படின்னா..அவரு சித்தர் ஆகிவிட்டாரா?",
என்று ஆர்வமாய்க் கேட்டான் அசோக்.

"அவன் சித்தர் ஆகவில்லை..
அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட
துயரங்கள் அவனை அப்படி ஆக்கிவிட்டது..",
என்ற அன்னை,

""ஆதரவற்ற பிரியதர்ஷினியையும்,
அபிராமியையும்,
காசிநாத நம்பூதிரி என்பவர் கண்டெடுத்து
என்னிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார்,..",
எனது சிஷ்யையாக என்னிடம் இருந்த மங்களம்
அவ்விருக் குழந்தைகளையும் பேரப்பிள்ளைகளாய் தத்தெடுத்தாள்",

பெரியவள் பிரியதர்ஷினி 10வயதில்
மங்களத்தைவிட்டுவிட்டு,
சென்னையில் அனாதை இல்லத்திற்கு
சென்றுவிட்டள்...
சென்னையில்
அவளது மதி அவளை நடிகையா ஆக்கியது.
அவளுக்கு பேரும் புகழும் சேர்ந்தது.
ஆனால் விதி அவள் வாழ்வைப் பறித்துக்கொண்டது.."",

"பிரியதர்ஷினியை யார் கொலை செய்தாங்க?'",
அடுத்த அசோகின் கேள்விக்கு,

"அதை நீதான் உன் மதியால் கண்டுபிடிக்கனும்."
என்றுக்கூறிவிட்டு,

""சாவதற்கு முதல்நாள்
அவள் இங்குவந்தாள்.
அவளுக்கு மும்பையில் இருந்து
கொலைமிரட்டல் விடுவதாக
என்னிடம் கூறி அழுதாள்.
அவளது ஆயுள் முடியப்போவதை ஞானத்தால் அறிந்தேன்...
இருப்பினும் அவளை தெம்பேற்றி ஊருக்கு அனுப்பினேன்...",
என்றார் அன்னை.

"தன் அக்காள் பிரியதர்ஷினி என்பது
அபிராமிக்கு தெரியாதா?",
அசோக் கேட்டதும்.

"தெரியாது...
நான்தான் அதை அபிராமியிடம்
சொல்லவேண்டாம்
என்று மங்களத்திடம் கூறினேன்..
ஆனால் இப்போது அதை சொல்லவேண்டிய
நேரம் வந்துவிட்டது..",
என்று முடித்தார்,.

"அபிராமி...செல்ஃபோன்னில் அனுப்பும் மெசேஜ் எல்லாம்
அப்படியே நடக்கிறதே..
அது எப்படி?",
அசோக்கின் முக்கியமானக் கேள்வி வெளிவந்தது,

அதற்கு,

"உனக்கு இப்போது தேவையான தகவல்
பிரியதர்ஷினியைப்பற்றி தான்,
அபிராமியைப் பற்றி விளக்கம் தரமாட்டேன்...
அவளால் ஆகாவேண்டிய நல்லக்காரியங்கள்
நிறையா உள்ளன..
என்னைத்தவிர...அந்த இறைவனைத்தவிர
அவளை யாராலும் புரிந்துக்கொள்ள முடியாது..",
என்றார் அன்னை.

"ஏன் அபிராமியைப் பற்றி சொல்லமுடியாது?",
ஆச்சரியம்மய் கேட்ட அசோக்கிடம்,

""ஒருசில விஷயங்கள்
பிரம்ம ரகசியங்களாய் காக்கப்படும்..
அப்படித்தான் அபிராமியின் வாழ்வும்..
அவளையே அவளால் அறியமுடியாது..
அன்னை பிரத்தியங்கிராகாளிதேவி
இனி அவளுடன் பேசுவாள்....
அனைவரது எதிர்காலங்களையும் அபிராமி அறிவாள்.

அவள் குழந்தையாக இருந்தப்போது பல சித்தர்கள்
அவளது உடல் வழியே கூடுவிட்டு கூடு பாய்ந்தனர்.
அதானலே சித்தர்களின்
பிரம்மஷக்தி அவளுடனே உறைந்துவிட்டது",

இறந்தவர்களின்றஆசைகளைக்கூட அவள் இனி அறிவாள்...
இறந்து தெய்வநிலை அடைந்தவர்கள்கூட
அவளிடம் இனி பேசுவார்கள்..
அவையெல்லாம் காளிதேவியின் அருளால் நடக்கும்"",
என்று அன்னைக்கூற,

"அப்படின்னா அபிராமி சித்தரா?
சராசரி மனுஷியா?
இல்லை மனநோயாளியா?
அவள் இனி எப்போதும் இப்படித்தான் இருப்பாளா?
இல்லை கொஞ்சநாட்கள்தான் இப்படி இருப்பாளா?",
என்று அசோக் கேட்டதும்,

"அதுதான் பிரம்மரகசியம்....
அதை அவளே அவள் வாயால்
கூறும் காலம் வரும்,...
அது என்று என்பது இறைவனுக்குமட்டுமே தெரியும்",
என்றார் அன்னை,

"நீங்க சொல்லும் பிரம்மஷக்தி..
சித்தர்கதை இதெல்லாம் நம்பமுடியவில்லையே",
என்ற அசோக்கிடம்,

"உன்னை நான் நம்பச்சொல்லவில்லையே...
ஆனால் உண்மை அதுதான்..
அது அவரவர்கு ஓர்நாள் புரியும்.
அதை ஒவ்வொருவரும் ஓர்நாள் அறிவார்கள்...
அதுதான் பிரம்மஷக்தி...",
என்று முடித்தார்.

"அபிராமி பிரியதர்ஷினி இவர்களுது
தந்தை அந்த சிவனாடிசித்தர் என்ன ஆனாரு",
அசோகின் கேள்விக்கு,

"அவன் மோட்சம் அடைந்துவிட்டான்..
இருப்பினும் அவன் தவஷக்தி இன்றும்
அழியாமல் உள்ளது.

மோட்சம் அடைந்த சிவானடிசித்தன்
அபிராமியின் உடலிலேயே.,
அவப்போது கூடுவிட்டு கூடு பாய்கிறான்..
அவன் வந்துப்போகும் நேரங்களில்
அவள் ஞானஷக்தி அடைகிறாள்.
அதை நான் என் ஞானசித்தியில் அறிந்தேன்...",
என்று அன்னைக் கூறியதும்.

"ரொம்ப குழப்பமா இருக்கும்மா",
என்றான் அசோக்,.

"எல்லருக்கும் எல்லாம் புரிஞ்சிட்டா
அப்புறம்,
யார் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காதே....
ரகசியங்கள் இருக்கும்வரைத்தான்
வாழ்க்கை ருசிகரமாய் இருக்கும்"
என்ற அன்னை மீண்டும் தன்
குகைக்குள் நுழைந்து தியானம் செய்யத்தொடங்கினார்...

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRW_Fm2LTdeszFhSSt_M5PftFb6p-MlQ6uSFayrxyiIwOaBzyl8pH-FDw
சென்னை....நுங்கம்பாக்கம்...புலனாய்வுத்துறை அலுவலகம்..மத்தியம்.2.10மணி..

"என்னைப்பற்றித் தெரியாமல்...
இங்கு என்னை அழைத்துவந்திருக்கிறீர்கள்,,.
என் செல்வாக்கைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை..",
ஆத்திரமாக பேசினான் சவுகத் இப்ராஹிம்..

"சார்,..உங்களை யாரும் இப்பக் குற்றவாளின்னு சொல்லவில்லை,..
உங்கமீது ஒரு சந்தேகம்மட்டுமே தற்போது உள்ளது.
எங்க விசாரணைக்கு நீங்க ஒத்துழைப்புத் தரனும்...",
புலனாய்வுத்துறை துணைஅதிகாரி கண்ணன் கூற,

"என்னசார்...என்ன சந்தேகம் என்மேல",,

"நீங்கப் பிரியதர்ஷினியை கடைசியாகப் பார்த்ததாக கூறும்
நாள்அன்று அவர்கள் குற்றாலம் போயிருந்தாங்க.".,

"இல்லை நான் இங்குதான் சந்தித்தேன்...",

"சரி...நீங்க பிரியதர்ஷியைப் பார்க்க ரயிலில் வந்தீங்களா?",

"ஆமாம்...",

"எந்த ரயிலில் வந்தீங்க?",

"மும்பை எக்ஸ்பிரஸில்..",

"ரிஸர்வேஷனில் வந்தீங்களா?
இல்லை அன்ரிஸர்வேஷனில் வந்தீங்களா?",

"ரிஷர்வேஷன்..ரிட்டன் டிக்கெட்டுக்கூட போட்டிருந்தேன்...",

"திரும்பப் போகும்போது ரிசர்வேஷன் செய்த
அதே மும்பை எக்ஸ்பிரஸில்தான் போனிங்களா?",

"ஆமாம்...",

"இல்லை...நீங்க சென்னையில் இருந்து
மும்பைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் போயிருக்கீங்க",

"அதெப்படி அவ்வளவு ஊர்ஜினமா சொல்றீங்க",

"கொலை நடந்த இடத்தில் உங்க ரயில்லின்
ரிட்டர்ன் டிக்கெட்டை தவறவிட்டுடீங்க",
என்ற துணைஅதிகாரி,
தனது பாக்கெட்டில் இருந்து டிக்கெட்டை
சவுகத் இப்ராஹிம் முன் நீட்டினார்..

இப்ராஹிம்மின் முகத்தில் வியர்வைதுளிகள் சிந்த ஆரம்பித்தன..
அவனது கைகள் சற்று நடுங்கத்தொடங்கின..

"நோ...நோ...இதை நான் நம்பமாட்டேன்",

"இந்த ரிட்டர்ன் டிக்கெட்டில் உங்கப்
பேருதானேப் போட்டிருக்கு...
கொலையான இடத்தில் எங்களுக்கு கிடைத்த
முக்கியமான தடயமே இதான்..",
என்றவர்,

"நீங்கதான் பிரியதர்ஷினியை கொலைசெய்திருக்கீங்க...",
என்றத்ம்,

"இல்லை இல்லை இல்லவேஇல்லை",
என மறுத்தான்

"நீங்க சத்தம்போட்டு கத்தினால்...
பொய் உண்மையாகது...",

"இப்பசொல்லுங்க ஏன் பிரியதர்ஷினியை கொலை செஞ்சீங்க....",,
என்று வெளிப்படையாகவே அவர்க் கேட்டதும்,

"நான் அந்தக்கொலையை செய்யவில்லை",
அவனது வாய்வார்த்தைகள் தடுமாறின.

"மிஸ்டர்..ஜான்சன்..
சவுகத் இப்ராஹிமை கூட்டிக்கிட்டுப்போயி
முறையாக விஷயங்களைக் கேளுங்க...
நம்ம பாணீயில்...",
என்று துணைஅதிகாரியிடம் கூற,

"என்னசார் மிரட்றீங்களா..?
உங்களால என்னைய ஒன்னும் பன்னமுடியாது..",
சற்றே தடித்தவார்த்தைகளை விட்டன் சவுகத்இப்ராஹிம்.

சிறிது நேரத்தில் கைகால்கள் கட்டப்பட்டவனாய்..
ஒரு படுக்கையில் அவன் கிடத்தப்பட்டான்..
அவைச்சுற்றி பிரகாசமாய் விளக்குகள் மின்னிக்கொண்டிருந்தன.
அவனை மெல்ல நெறுங்கிய மனோதத்துவ டாக்ட்டர்...

"மிஸ்டர்,,,சவுகதிஇப்ராஹிம்...
என்கையில் இருக்கிற இந்தக் கடிகாரத்தைப் பாருங்க...
நல்லா உற்றுப்பாருங்க....
உற்றுப்பாருங்க......
உங்களுக்கு இப்பத்தூக்கம் வரும்....
நீங்க அமைதியா தூங்கப்போறீங்க...",
என்று மென்மையான வார்த்தைகளில் அவனைதன்னிலை மறக்கசெய்தார்....

(கண்ணாமூச்சி ஆட்டம்....தொடரும்...)

(பதிவு செய்யப்பட்டது,TDP.KANNAMOOCHIAATTAM:13654821A0.TAMILNADU FILMCHAMBER/..rajaram..RTD240)

Nivas.T
21-03-2011, 12:32 PM
அப்பாடி இப்பத்தான் ஒரு முடிச்சு அவிழ்ந்திருக்கு:)

சீக்கிரம் ராரா :sprachlos020:

நீங்க ரொம்ப காலம் கடதுறீங்க ஆமா :sprachlos020::sprachlos020:

:D:D

முரளிராஜா
21-03-2011, 02:28 PM
அருமை தொடரட்டும் ரா ரா