PDA

View Full Version : மரணம் பயணிக்கும் சாலை!



ரசிகன்
21-03-2011, 10:18 AM
தலை நசுங்கிக்கிடந்தவனின்
செருப்பொன்று
சாலையை வெறித்துக்கொண்டிருக்க
ரத்தம் உறைந்த தார் ரோட்டை
தேய்த்துக்கொண்டிருக்கின்றன
மரணம் சுற்றும் சக்கரங்கள்!

மாண்டவனின் கடைசி நிமிட
முனகல்களை
பதிவு செய்ய தவறிவிட்டன
வண்டிகளின் ஹாரன் சத்தமும்
ஆம்புலன்ஸின் சைரன் சத்தமும்!

நிராசைகளாய் போய்விட்ட
வாழ்க்கையின் இறுதிப்படிவம்
சொந்தக்காரனின் கையெழுத்துக்காய்
பிணவறையின் வரவேற்பறையில்...

மீண்டும் பருகத்துடிக்கும்
மரணத்தின்
சாலையை ஒட்டிய மரத்தடியில்
அவன் கனவுகள்
அனாதையாய் விசும்பும் சத்தம்
என்னை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறது!

கவனமாய் செல்லுங்கள்!

அக்னி
21-03-2011, 10:28 AM
தடுமாறி விழுந்தவனோ...
தடம்மாறிச் சிதைந்தவனோ...

எவனாயிருந்தால் என்ன???

விடுப்புப் பார்க்கத்
தள்ளிப்போடப்படுகின்ற
அவசர நேரங்கள்..,
அவன் மரண நேரத்தை
தள்ளிப்போடுவதிற் தயங்கித்
தவறி விடுகின்றன...

மரித்துக்கொண்டிருக்கின்ற
மனித்னைப் பார்த்துக்
கவலைப்பட்டது..,
மரித்துப்போய்விட்ட
மனிதம்...

சாலையில் மரணித்தால்,
மரணித்த இடத்தில் பூச்செண்டு வைக்கும் உலகிற்தான்,
இரத்தக் கறைகள் காய்ந்துகிடக்கும் நம் நாட்டுச் சாலைகளும் நிறைந்திருக்கின்றன...

lolluvathiyar
21-03-2011, 10:45 AM
ஒரு நகரம் உருவாகி மிதமான வளர்ச்சியால் நிதானமாக வளர்ந்து வந்தது அந்த காலம்.
ஆனால் இப்போது தீடிர் புதிய தொழில் புரட்சி நகரங்களை எதிர்பாராத அளவுக்கு வளர்த்து விட வசதிகளும் வளர ஆனால் சாலைகளின் அளவு மாற்றி அமைக்க முடியாது வாகனங்களும் பெருக அதுவும் வேகங்களும் பெருக பராமரிக்க போக்குவரத்து துரையாலும் முடியாது அளவுக்கு நிலமை சீர் கெட நாம் அனைவரும் காரனம் அதில் ஒரு மரனம் நிகழ வேடிக்கை பார்த்து விட்டு அவசரமாக பணம் தேட ஓடுகிறோம். நாளை இன்னொரு மரனத்தையும் கான்போம் தினமும் கான்போம். ஆனாலும் சப் கொட்டி சென்று கொன்டே இருப்போம். இதுதான் இன்றைய நாகரீகம் படைத்த மனித குணம்.
கவிதை மிக அருமை. உருக்கி விட்டது. ரசிகனையே ரசிக்க வைத்து விட்டது.

dellas
21-03-2011, 10:48 AM
உங்களின் கவிதைகள் நன்று. எதையோ சொல்லத்துடிக்கும் அதரங்களின் துடிப்பை அதில் நான் உணர்கிறேன்.
கவனம் என்ற ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பொருள்படமுடியுமா? வாழ்த்துக்கள் ரசிகன்.

அக்னி
21-03-2011, 10:55 AM
ஆனால் சாலைகளின் அளவு மாற்றி அமைக்க முடியாது வாகனங்களும் பெருக அதுவும் வேகங்களும் பெருக பராமரிக்க போக்குவரத்து துரையாலும் முடியாது
இதனை ஒத்துக்கொள்ளமுடியாது.

சாலைகளப் பெருப்பிக்கவோ, பராமரிக்கவோ முடியாது என்றால்,
நம் நாடுகளில் இது தொடர் பிரச்சினையாகத்தான் இருக்கும்.

வேகத்தாற் தான் விபத்துக்கள் எனவும் முழுமையாகக் கூறிவிட முடியாது.
சாலைவிதிகளைக் கடைப்பிடிக்காத காரணம் தான் முதன்மையானது.


அளவுக்கு நிலமை சீர் கெட நாம் அனைவரும் காரனம்
இது முற்றிலும் ஏற்புடையது.
நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து, சாலைவிதிகளைப் பூரணமாகக் கடைப்பிடித்தால்,
விபத்துக்கள் குறைந்துவிடும்.

Nivas.T
21-03-2011, 11:34 AM
கவிதை மிக அருமை ரசிகரே

கலாசுரன்
21-03-2011, 11:39 AM
மீண்டும் பருகத்துடிக்கும்
மரணத்தின்
சாலையை ஒட்டிய மரத்தடியில்
அவன் கனவுகள்
அனாதையாய் விசும்பும் சத்தம்
என்னை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறது!

கவனமாய் செல்லுங்கள்!


நன்றாக உள்ளது சதீஷ் ..:)

உண்மையிலேயே அது பலரைப் பின்தொடரும் ....
கவனம் ...!!!

முரளிராஜா
21-03-2011, 11:46 AM
சமுதாய அக்கறையுடன் எழுதபட்ட கவிதை
வாழ்த்துக்கள் ரசிகன்

ஆளுங்க
21-03-2011, 01:54 PM
மிகவும் நல்ல கவிதை..

சாலையில் காணும் மரணம்
பயத்தைப் புகுத்தும் தருணம்

ரசிகன்
27-03-2011, 07:42 PM
பின்னூட்டமளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் :-)

பிரேம்
28-03-2011, 01:17 AM
கவிதை அருமை..சார்..

ஜானகி
28-03-2011, 04:59 AM
மனதைக் கனக்கவைக்கும் உண்மைகளையும் ரசிக்கும்படி கவிதையாக வடித்துள்ளிர்கள்...!

கீதம்
30-03-2011, 05:44 AM
மரணம் பயணிக்கும் சாலையில் மனதை உருக்கும் ஒரு கவிதைப் பயணம்.

கவிதை மிக நன்று, ரசிகன்.

ரசிகன்
12-04-2011, 10:50 AM
நன்றி
பிரேம்/ ஜானகி / கீதம்! :-)