PDA

View Full Version : கென்யாவின் கிரிக்கெட் பிதாமகர் ஓய்வு!



ஆளுங்க
20-03-2011, 05:03 PM
இந்த உலகக்கோப்பைப் போட்டியில் (2011) இதுவரை பல முக்கிய சம்பவங்கள் நடந்து விட்டன!!

இங்கிலாந்து அணி கத்துக்குட்டிகளிடம் தோற்றது..
இந்தியா அடித்த 300+ ஓட்டங்களை பல அணிகலும் எளிதாக நெருங்கியது..
ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்குப் பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது!!

என பல.....

இத்தனை அனல் பறக்கும் சம்பவங்கள் நடந்தாலும், ஓய்வு பெறும் ஒருவரை முறையே வழியனுப்புவதும் நம் கடமையல்லவா...

இன்றைய போட்டியுடன் (20 மார்ச் 2011) கென்யாவின் கிரிக்கெட் பிதாமகர் 'ஸ்டீவ் டிக்கோலோ' சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்..
http://p.imgci.com/db/PICTURES/CMS/113700/113701.jpg

ஜிம்பாவே - கென்யா இடையேயான இறுதி போட்டியில் அவர் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது சோகம் தான்...

கென்ய அணியிலேயே மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் ஸ்டீவ் டிக்கோலோ ஆவார்..

18 பிப்ரவரி 1996 அன்று இந்தியாவுக்கு எதிராக சர்வதேச களத்தில் குதித்தவர்...
முதல் போட்டியிலேயே அரைசதம் (65) அடித்து அனைவர் கவனத்தையும் கவர்ந்தவர்...

கத்துக்குட்டி அணி என்று வர்ணக்கப்பட்ட கென்யா அணியைத் திறமையான வழிநடத்துதலின் மூலம் 2003 உலகக்கோப்பை அறையிறுதி வரை கொண்டு சென்றவர்..

இதுவரை 5 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார்...

இதுவரை கென்ய வீரர்கள் பதிவு செய்துள்ள 6 சதங்களில் 3 இவரையே சேரும்!!

கிரிக்கெட் உலகால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ள பல அணிகளுள் ஒன்றான கென்யாவிற்காக ஆடி இவர் செய்துள்ள சாதனைகள் பெரியவை தான்!!

எத்தனையோ வீரர்கள் பெரிய அணிகளைச் சமாளிக்க முடியாமல் வெளியேறிய போதும், சளைக்காமல் தனது அணிக்காக ஆடிய இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!

அவரை அனைவரும் ஒருசேர வழியனுப்புவோம்...

மூலம்: பல செய்தித்தளங்கள்; espncricinfo

கௌதமன்
20-03-2011, 05:28 PM
முதல் போட்டியில் அவர் அடித்த அரை சதத்தை தொலைக்காட்சியில் கண்டு வியப்புற்றது உண்டு. சர்வதேச விளம்பர கிரிக்கெட் உலகில் கண்டுகொள்ளப்படாத வீரர் டிக்காலோ.

அவரது கிரிக்கெட் அடித்தளம் கென்ய அணிக்கு உரமாக இருக்க வாழ்த்துவோம்.